|
||||
|
தமிழ்த் தேசியமும் தமிழ்
சினிமாவும் ”துப்புக்கெட்ட தமிழர்களே, டெல்லியிடம் படியுங்கள். கடுகு அளவும் அன்போ, நேர்மையோ, பொதுநலமோ இல்லாத அய்யாக்களின், அம்மாக்களின் அலப்பறைகளின் பின்னால்போய், அவர்கள் தரும் இலவசங்களுக்காககக் கையேந்தி, 200 ரூபாய்க்கு ஓட்டை விற்று உங்களையும் கொச்சைப்படுத்தி, உங்கள் குழந்தைகளையும் காட்டிக்கொடுக்கும் கேவலமானவர்களே…. டெல்லி மக்களைப் பாருங்கள். இனியாவது மூளையும், முதுகெலும்பும் பெற முயற்சி செய்யுங்கள். உங்கள் நலனுக்கான அரசியலைத் தேடுங்கள்!” அண்மையில் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஊழலுக்கு எதிரான பிரசாரங்கள் மூலம் புரட்சிகரமாக ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி பற்றி ஆனந்த விகடன் சஞ்சிகைக்கு கருத்து வெளியிட்ட அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சுப உதயகுமாரன், தமிழ்நாட்டு தமிழர்களை நோக்கி விடுத்திருக்கும் அறைகூவல் இது. ஆனால், தமிழ்நாட்டிலோ, ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகவேண்டும் என்று கட்சி விசுவாசி ஒருவர் தன்னைத்தானே சிலுவையில் அறைந்துகொண்டதாக(இயேசுவின் பாடுகளை எப்படி ஏளனம் செய்கிறார்கள் பாருங்கள்) செய்தி வெளியாகியிருக்கிறது. “ஏன்டா தமிழ்நாட்டு தமிழங்களெல்லாம் சென்டிமென்டல் இடியட்சா இருக்கீங்க…….?” என்று, விஜய்காந்தின் ரமணா படத்தில் ஒரு சீக்கியப் பொலிஸ்காரர் தமிழ்நாட்டு இளைஞரைப் பார்த்துக் கேட்கும் காட்சியையே இது நினைவூட்டுகிறது. இது ஏதோ தமிழ்நாட்டுடன் முடிந்துபோன விடயம் என்று நாம் மூடிவிட்டுப் போய்விட முடியாதபடி, இப்போதெல்லாம் எங்களுடைய தமிழ் அரசியல் தலைமைகளின் செயற்பாடுகளும், அவர்களுக்கு மக்கள் அளித்துவரும் ஆதரவும் அமைந்து வருகிறது. தென்னிலங்கையில் பல முற்போக்கு சிந்தனைகளுடன் முன்வைக்கப்பட்ட மாற்றம் என்ற கோரிக்கைக்கு மக்களெல்லாம் ஆதரவளித்து வெற்றியீட்டி தாம் எதிர்பார்த்த அந்த உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவது பற்றி விவாதித்துக்கொண்டிருக்க, இங்கே அதற்குள் மீண்டும் ஆவேச போராட்டங்கள் ஆரம்பமாகிவிட்ட சூழ்நிலை, இந்த சென்டிமென்டல் இடியட்ஸ் குணாம்சத்தைத்தானே நினைவுபடுத்துகிறது? தமிழ் அரசியல்வாதிகள் உணர்ச்சிகரமான செயற்பாடுகளை விட்டுவிட்டு இனியேனும் அறிவுபூர்வமாகச் சிந்தித்து தமக்கு வாக்களித்த மக்களுக்காகச் செயற்பட முன்வரவேண்டும் என்று நண்பர் ஒருவர் அண்மையில் முகப்புத்தகத்தில் போட்டிருந்த ஒரு பதவைப் பார்த்தபோது, உண்மையிலேயே இந்த அரசியல்வாதிகளெல்லாம் அப்படி உணர்ச்சிவசப்பட்டவர்கள்தானா என்றதொரு சந்தேகம் எழுந்தது? உண்மையில் அவர்கள் உணர்ச்சிவசப்படுகிறார்களா அல்லது அப்படி உணர்ச்சிவசப்படுவதுபோல் பாவ்லா காட்டி எம்மை உணர்ச்சிவசப்படுத்துகிறார்களா….? இந்த அரசியல்வாதிகள் தாம் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருந்திருந்தால், அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு(அல்லது அப்படிக் காட்டி) தனிநாட்டுப் பிரகடனம் செய்தபோது, அவர்களுக்கு இரத்தத் திலகமிட்ட இளைஞர்களின் செயலால் இன்னுமின்னும் உணர்ச்சி உச்சிக்கேறி பெரும் போராட்டங்களிலல்லவா ஈடுபட்டிருப்பார்கள்? மாறாக, தமக்கு இரத்தத் திலகமிட்டவர்களை ஆயுதமேந்தி இரத்தம் சிந்திவிட்டு தாம் வியர்வைகூடச் சிந்தாமல் எங்கோ வெளிநாடுகளில் போயல்லவா ஒழித்துக்கொண்டார்கள்? முள்ளிவாய்க்காலில் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துக்கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் கருணாநிதி ஒப்புக்கேனும் உண்ணாவிரதம் இருந்தார். நமது அரசியல்வாதிகள் இலங்கை பாராளுமன்றத்துக்கு முன்னால் தீக்குளித்திருக்கவேண்டுமல்லவா………? அப்படி எதுவுமே நடக்கவில்லையே…….? எல்லாம் முடியும்வரையில் பொறுமையாக தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் காத்திருந்துவிட்டு, பிறகு வந்து முள்ளிவாய்க்கால் அவலங்களுக்கான போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தப்படவேண்டும் என்று மீண்டும் தீர்மானங்களை நிறைவேற்றி கர்ஜித்துக்கொண்டிருக்கிறார்கள். சினிமாப் படங்களில் கதாநாயகனும், நாயகியும் கட்டிப்புரண்டு காதல் செய்வதைப் பார்த்து நம்மில் எத்தனை பேர் ஜொள்ளு விட்டிருப்போம்…….? அந்தக் காட்சியைப் படமாக்கி முடிந்ததும் அவர்கள் இரண்டு பேரும் தமது நடிப்புக்காக கோடிக்கணக்கான பணத்தை வாங்கிக்கொண்டு அடுத்த பட சூட்டிங்குக்குப் போன பின்னரும், அந்தக் காட்சியையே மீண்டும் மீண்டும் நினைத்து உருகும் பலரையும் போல…… எமது அரசியல்வாதிகள் மக்களுடைய பிரச்சினைகளைப் பார்த்து தாம் கொதிப்படைந்திருப்பதாக பிரசார மேடைகளில் முழங்கித் தீர்க்க………., இதை நமது பத்திரிகைகளும் தப்பாமல், மாவை சூளுரை!, சம்பந்தன் கர்ஜிப்பு!, சுரேஷ் போர்க்கொடி! என்றெல்லாம் அலங்காரமாக செய்தி எழுதி கூட்டத்துக்கு போகாதவர்களுக்கும் உணர்ச்சியூட்ட…… நாமெல்லாம் மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உணர்ச்சி ஆவேசப்பட்டு, ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்று கொடி பிடிக்கப் போய்விடுகிறோம். இந்தப் போராட்ட நாடகங்களுக்குப் பிறகு வரும் தேர்தல்களில் தப்பாமல் எமது வாக்குகளை இவர்களுக்கு அளித்துவிட்டு எல்லாம் வெற்றிகரமாக முடிந்துவிட்ட திருப்தியோடு வீடுகளுக்குத் திரும்புகிறோம். ஏன் நாமெல்லாம் இப்படி சென்டிமென்டல் இடியட்சாக………………. என்று, ரமணா படத்தில் பொலிஸ்காரர் கேட்ட அதே கேள்வியைத்தானே இன்று எம்மை நாமே கேட்டுக்கொண்டாகவேண்டியிருக்கிறது? அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சுப. உதயகுமார் தமிழ்நாட்டுத் தமிழர்களைப் பார்த்துக் கூறியதுபோல், நாம் எங்களையும் கொச்சைப்படுத்தி, எங்கள் குழந்தைகளையும் காட்டிக்கொடுக்கும் செயல்களைத்தானே செய்துகொண்டிருக்கிறோம்….? அவர் கூறுவதுபோல் மூளையும், முதுகெலும்பும் பெற்று, நமக்கான அரசியலை நாம் தேடப்போவது எப்போது..……? (Rushangan Kodeeswaran shared சொல்லாத சேதி's post) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |