Contact us at: sooddram@gmail.com

 

முடிவுறும் லீக் போட்டிகள்

காலிறுதிக்கு தகுதிபெறும் அணிகள் எவை?

11வது உலகக் கிண்ணப் போட்டி லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவுக்கு வருகின்றன. இன்றைய ஆட்டத்தின் முடிவுகளின்படி ‘பி’ பிரி விலிருந்து எவ்வணிகள் காலிறுதிக்குத் தெரிவாகும் எனத் தீர்மானிக்கப்படும். ஏற்கனவே இப்பிரிவிலிருந்து 1ம், 2ம் இடங்களுக்கு இந்திய, தென்னாபிரிக்க அணிகள் தெரிவாகியுள்ளன. மற்றைய இரு இடங்களுக்குமான போட்டியில் இன்று நடைபெறும் மேற்கிந்தியதீவுகள் - ஐ. அ. இராச்சியம், அயர்லாந்து - பாகிஸ் தான் அணிகளுக்கிடையில் நடைபெறும் போட்டிகளின் முடிவுகளுக்காகக் காத்தி ருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பிரிவில் அயர்லாந்து - பாகிஸ்தான் போட்டியில் வெற்றி பெறும் அணி 8 புள்ளிகளுடன் நேரடியாக காலிறுதிக்குச் செல்லும். இன்று நடைபெறும் மற்றைய போட்டியில் மே. இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றால் அவ்வணியும் 6 புள் ளிகளைப் பெறும். அயர்லாந்து - பாகி ஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி யில் தோல்வியுறும் அணியும் 6 புள் ளிகளுடன் இருப்பதால் நிகர ஓட்ட அடிப்படையில் காலிறுதிக்குச் செல்லும் அணி தெரிவாகும்.

‘ஏ’ பிரிவில் ஏற்கனவே லீக் சுற்றில் ஓரிரு ஆட்டங்கள் மீதமிருக்கையிலேயே சிக்கலின்றி நியூசிலாந்து, அவுஸ்திரே லியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நான்கு அணிகளும் காலிறுதிக்குத் தெரி வாகியுள்ளன. அப்பிரிவில் 12 புள்ளிகளு டன் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளதால் ‘பி’ பிரிவில் 4ம் இடம் பெறும் அணியுடன் முதல் காலிறுதியில் அவ்வணி மோதும். இம்முறை முதன் முதலாக பங்களாதேஷ் அணியும் காலிறுதிக்குத் தெரிவாகியுள்ளன.

மேலும் இம்முறை வேகப் பந்து வீச்சுக்கும், பவுன்சர் மற்றும் சுவீங் பந்துகளுக்கு பிரபல்யமான ஆஸி., நியூசிலாந்து மைதானங்களில் ஆசிய அணிகள் வெகுவாக எடுபடப்போவதில்லை என்றும், அவர்களின் சுழல் பந்து வீச்சு இம்மைதானங்களில் அவ்வணிகளுக்குக் கைகொடுக்கப் போவதில்லை என்றும் மேலைத்தேய கிரிக்கெட் வல்லுநர்களாலும், விமர்சகர்களாலும் எதிர்வு கூறப்பட்டிருந்தது. ஆனால் அவை அனைத்தையும் பொய்யாகியது. ஏற்கனவே மூன்று ஆசிய அணிகளான இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணிக்கும் காலிறுதி வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.

நடப்பு உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இதுவரை பெறப்பட்ட சதங்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. அதிக சதங்கள் அடிக்கப்பட்ட உலகக் கிண்ணப் போட்டித் தொடர் இதுவாகும். இதற்கு முன்பு 2011ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் 24 சதங்கள் பெறப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும். மேலும் உலகக் கிண்ணத் தொடரொன்றில் 1979ம் ஆண்டு தொடரின் போதுதான் ஆகக் குறைந்த சதங்கள் பெறப்பட்டிருந்தன. அத்தொடரின் போது 2 சதங்களே பதிவாகியிருந்தது.

சதம் பெறும் சாதனை லீக் சுற்றின் போதே முறியடிக்கப்பட்டுள்ளது. இவ் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை 8 சதங்களும் தென்னாபிரிக்கா 5 சதங்களும், அவுஸ்திரேலியா 4 சதங்களும், மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா தலா 3 சதங்களும், இங்கிலாந்து 2 சதங்களும், ஐ.அ.இராச்சியம், சிம்பாப்வே, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து, பங்களாதேஷ் தலா ஒரு சதமும் பெற்றுள்ளனர்.

இம்முறை எல்லா லீக் சுற்று ஆட்டங்களிலும் வெற்றிபெற்று முன்னணியில் திகழும் நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் அணி வீரர்கள் எவரும் இன்னும் ஒரு சதம் கூட பெறவில்லை. ஆனால் இலங்கை வீரர் குமார் சங்கக்கார பங்களாதேஷ¤க்கு எதிராக (பெப்ரவரி 26), இங்கிலாந்துக்கு எதிராக (மார்ச் 1), அவுஸ்திரேலியாவுக்கு எதிராக (மார்ச் 6) ஸ்காட்லாந்துக்கு எதிராக (மார்ச் 11) உலகக் கிண்ணத் தொடரொன்றில் தொர்டச்சியாக நான்கு சதங்கள் அடித்து சாதனைபடைத்துள்ளார். மேலும் இந்திய வீரர் ஷிகர் தவானும், இலங்கை வீரர் திலகரத்ன டில்ஷானும் இப்போட்டித் தொடரில் இதுவரை இரு சதங்களை விளாசியுள்ளனர்.

இலங்கை அணிக்கு எதிராக அஸி. வீரர் கிளென் மெக்ஸ¤வல் 51 பந்துகளில் சதம் கடந்து உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டாவது அதிவேக சாதனையைப் படைத்துள்ளார். இது அவரின் கன்னி சதமாகும். உலகக் கிண்ண வரலாற்றில் மெக்ஸ¤வலின் சதம் 150 சதமாகவும் பதிவாகியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக பங்களாதேஷ் வீரர் முஹம்மதுல்லா பெற்ற கன்னிச்சதமானது பங்களாதேஷ் வீரர் ஒருவர் உலகக் கிண்ணப் போட்டியில் பெற்ற முதல் சதமாகும்.

மேலும் இவ்வுலகக் கிண்ணத்தில் ஷகீட் அப்ரிடி ஐ. அ. இராச்சியத்துக்கு எதிரான போட்டியின் போது 8000 ஓட்டங்கள் என்ற மைல் கல்லைக் கடந்தார். இது குறைந்த பந்துகளில் 8000 ஓட்டங்களைக் கடந்த சந்தர்ப்பமாகப் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு இந்திய வீரர் விரேந்திர சேவாக் 8000 ஓட்டங்களை 7658 பந்துகளில் கடந்திருந்தார். ஷகீட் அப்ரிடி இவ்விலக்கை 6857 பந்துகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். இவ்வுலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியின் போது ஷகிட் அப்ரிடி 350வது ஆறு ஓட்டங்களை அடித்தார். இதுவே ஒருநாள் போட்டியில் வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச ஆறு ஓட்ட எண்ணிக்கையாகும்.

எம்.எஸ்.எம். ஹில்மி
அரநாயக்க

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com