Contact us at: sooddram@gmail.com

 

யார் வென்றாலும் பலஸ்தீனர்கள் தோற்கும் இஸ்ரேல் தேர்தல்

இஸ்ரேலில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. நாட்டின பாதுகாப்பு, சலுகைகள், பொரு ளாதார வளர்ச்சி என்று வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அள்ளி வழங்குகிறார்கள். ஆனால் எவரும் பலஸ்தீனர்களுடனான “அமைதி” பற்றி உறுதியாக வாக்குறுதி அளித்ததாக தெரியவில்லை. “ஒரு கறுப்பு ஓநாய், அப்படி இல்லை என்றால் ஒரு வெள்ளை ஓநாயின் கதைதான் இது. இந்த இரண்டுமே வஞ்சகத்துடன் வேட்டையாடுபவைதான்” என்று காசாவில் கழுதை வண்டி ஒன்று ஓட்டிச் சென்றுகொண்டிருந்த 85 வயது ஹுஸைன் அப்துல்லாஹ் போகிற போக்கில் இஸ்ரேல் தேர்தல் பற்றி விமர்சித்தார். அப்துல்லாஹ்வுக்கு இஸ்ரேலின் 67 வருட வரலாற்றில் நடந்த எல்லா தேர்தல் பற்றியும் அத்துப்பிடி. தேர்தலில் போட்டியிடுவபர்கள் இடதுசாரி, வலதுசாரி என்றெல்லாம் பெரிதாக சொல்வார்கள். இதுவரை எந்த மாற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

கடந்த 2014 நவம்பர், டிசம்பர் மாதங் களில் இஸ்ரேலின் ஆளும் கூட்டணிக்குள் ஏற்பட்ட குழப்பம் முற்றியதால் சமாளிக்க முடியாமல்தான் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு பாராளுமன்றத்தை கலைத்து முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். ஏற்கனவே 2013இல் தான் தேர்தல் நடந்து நெதன்யாகு கூட்டணி ஆட்சி அமைத்திருந்தார். இப்படி இருக்க இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி தேர்தல் நடக்கிறது.

இஸ்ரேலின் அரசியலைப் பொறுத்தவரை தேர்தல்களும் அரசியல் இழுபறிகளும் வழமையானதுதான். ஆனால் எந்த ஓர் அரசியல் குழப்பமும் ஒடுக்கப்பட்டு வாழும் பலஸ்தீனர்களுக்கு சாதகமானதாக இருந்ததில்லை. பொதுவாகச் சொல்வதென் றால் ஒவ்வொரு தேர்தலிலும் யார் வெற்றிபெற்றாலும் தோற்கப்போவது என்னமோ பலஸ்தீனர்கள்தான்.

தேர்தல் பிரசாரத்தின் முக்கியமான அங்கமாக முன்னணி அரசியல் கட்சிகளது தலைவர்கள் தொலைக்காட்சியில் தோன்றி சூடு பறக்க விவாதித்துக் கொண்டார். இஸ் ரேலின் கொள்கைகள் பற்றி பரபரப்பான அந்த விவாதம் 90 நிமிடங்கள் வரை நீடித்தது. சமூகப் பிரச்சிரனகள், பொருளா தாரம் ஏன் பலஸ்தீனர்களுடனான முரண்பாடு குறித்து ஒருவருக்கு ஒருவர் விவாதித்துக் கொண்டார்கள். ஆனால் இந்த விவாதம் முழுவதிலும் “சமாதானம்” என்ற வார்த்தை ஐந்து தடவைகள் மாத்திரம்தான் உச்சரிக்கப்பட்டிருந்தது. அதிலும் விவாதத்தில் பங்கேற்றங அரபு வேட்பாளரே மூன்று தடவைகள் சமாதானம் என்ற வார்த்தையை உச்சரித்திருந்தார். மத்தி கிழக்கு பிரச்சினைக்கு அமைதித் தீர்வுபற்றி உலகமே வாய்கிழிய கத்தும்போது இஸ்ரேலுக்குள் அமைதிக்கான கிராக்கி இந்த இலட்சணத்தில்தான் இருக்கிறது.

இஸ்ரேல் பாராளுமன்றம் நெஸ்ஸட் என்று அழைக்கப்படுகிறது. இம்முறை 20 ஆவது பாராளுமன்றத் தேர்தலே வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கிறது. இஸ்ரேல் பாராளுமன்றம் மொத்தம் 120 ஆசனங்கள் கொண்டது. இஸ்ரேல் பாராளுமன்றத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் எவருக்கும் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாத அரசியல் சூழலே இருக்கிறது. ஆட்சி அமைக்க வேண்டுமானால் ஐந்தாறு கட்சிகள் கூட்டுச் சேர வேண்டும். கூட்டுக்குள் குழப்பங்கள் இருக்கும். ஆனால் இஸ்ரேல் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினையில் அனைவரிடமும் அசைக்க முடியாத ஒற்றுமை இருக்கும். குறிப்பாக பலஸ்தீனர்களை ஒடுக்குவதில் இந்த ஒற்றுமை இரட்டிப்பாக இருக்கும்.

அந்த வகையில் 2015 இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலிலும் மொத்த 26 கட்சிகள் போட்டியில் குதித்திருக்கின்றது என்றாலும் கிட்டத்தட்ட 10 கட்சிகள்தான் ஒரு ஆசனத்தையேனும் பெற்று பாராளுமன்றத்திற்குள் நுழையும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது. இஸ்ரேலில் ஆயிரம் அரசியல் கட்சிகள் இருந்தாலும் அவை அனைத்தையும் நான்கு முகாமாக பிரித்து அடையாளப்படுத்திவிட முடியும். ஒன்று வலதுசாரி முகாம், மற்றையது மதச்சார்பு முகாம், அடுத்தது மையச்சார்பு முகாம், கடைசியாக இடதுசாரி முகாம்.

இதிலே வலதுசாரி முகாம் பலம்மிக்கது. தற்போதைய இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சி இந்த முகாமைச் சேர்ந்தது. பொருளாதார அமைச்சர் நப்தாலி பென்னட்டின் ஜுஸ் ஹோம்ஸ் கட்சி, வெளியுறவு அமைச்சர் அவிக்டோர் லிபர்மன் தலைமையிலான யிஸராயெல் பெய்டனு கட்சி இந்த முகாமில் முக்கிய கட்சிகளாகும்.

மதச்சார்பு முகாமில் ஷாசா, ஐக்கிய தோரா யூதம் போன்ற கட்சிகள் முக்கயமானவை. இவை தனியாக ஆட்சியமைப்பதில்லை. ஆட்சி அமைக்கும் கூட்டணியோடு ஒட்டிக்கொண்டு தனது தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளும். மையச்சார்பு முகாமில் சியோனிசவாதிகளின் கூட்டணி ஒன்று நிறுவப்பட்டிருக்கிறது. இதன் தலைவர்களாக யிட்சாக் ஹர்சொக் மற்றும் நீதி அமைச்சராக இருந்த சிப்பி லிவினி ஆகியோர் செயற்படுகிறார்கள். இந்த கட்சிதான் இம்முறை நெதன்யாகு கட்சிக்கு கடும் சவாலாக இருக்கிறது. தவிர யெஷ் அடிட், குலானு ஆகிய கட்சிகளும் மையச்சார்பு முகாமில் அடங்கும். நான்காவது இடதுசாரி முகாமில் சஹாவா கால் தலைமையிலான மெரெட்ஸ என்ற கட்சி உள்ளடங்குகிறது.

இஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தலில் பலஸ்தீனர்களுக்கு வாக்களிக்க முடியாது. பலஸ்தீனர்கள் இஸ்ரேலுக்குள் உள்ளடங்கும் என்பதுதான் சுவாரஸ்யமான தத்துவம். ஆனால் அரபு இஸ்ரேலியர் என்ற பிரஜையினருக்கு இஸ்ரேல் தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் உரிமை இருக்கிறது. 1967 ஆம் ஆண்டுக்கு முந்தைய இஸ்ரேல் எல்லைக்குள் வாழ்ந்த அரபு மக்களே இஸ்ரேல் பிரஜைகளாக கருதப்படுகிறார்கள். இன்னும் புரியும் படி சொல்லப்போனால் 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது தனது பூர்வீக நிலத்தில் இருந்து வெளியேறாத பலஸ்தீனர்கள்தான் இந்த இஸ்ரேல் அரபு பிரஜைகள். இவ்வாறான சூழலில் ஒரு பலஸ்தீனர் இஸ்ரேலில் வாழ்கிறார்.

இப்படி வாழும் அரபு இஸ்ரேலியர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவ்வாறு போட்டியிடும் கட்சிகளை இஸ்ரேல் தேர்தலில் போட்டியிடும் ஐந்தாவது முகாமாக பிரித்து அடையாளப்படுத்த முடியும். இந்த அரசியல் கட்சிகளால் இஸ்ரேல் அரசியலில் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது. இஸ்ரேலின் ஆளும் கட்சியில் இந்த அரபு இஸ்ரேலியர்களின் அரசியல் கட்சிகள் கூட்டுச் சேர்ந்ததும் இல்லை, சேர்த்ததும் இல்லை. 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் பிறந்தது தொடக்கம் 33 அரசுகளில் சுமார் 600 அமைச்சர்கள் தோன்றியிருக்கிறார்கள். இவர்களில் வெறுமனே இருவர் மாத்திரம்தான் யூதர் அல்லாதவர் அமைச்சர் பொறுப்பில் ஏற்றிருக்கிறார்கள். அதிலும் இந்த இருவரும் மொத்தமாக அமைச்சுப் பொறுப்பில் இருந்த காலம் மூன்று ஆண்டுகள்தான்.

இஸ்ரேல் தேசிய அரசியலில் இந்த அரபுக் கட்சிகள் பெரிதாக ஒன்று செய்ய முடியாதபோதும் இஸ்ரேலுக்குள் வாழும் அரபு பிரஜைகளுக்கு வாக்களி க்க கட்சி ஒன்று தேவை என்ற வகை யிலாவது இந்த கட்சிகள் முக்கியமா னவை. இப்படி இம்முறைத் தேர்தலில் முன்னணி அரபு கட்சிகள் சேர்ந்து கூட் டணி ஒன்றை அமைத்திருக்கின்றன. அவை ஹதஷ், பலத், தால் மற்றும் இஸ்லாமிய முன்னணி ஆகிய கட்சிக ளாகும். இந்த கட்சிகள் ஒன்று சேர்ந்து போட்டியிட்டாலும். ஒவ்வொன்றும் சம்பந்தமில்லாத சிந்தனைகளை கொண் டிருக்கின்றன. ஹதஷ் கட்சி தீவிர இடது சாரி கொள்கை கொண்டது. இஸ்லாமிய முன்னணி தாம் முஸ்லிம் சகோதரத்துவ கொள்கையை பின்பற்றுவதாக குறிப்பிடுகிறது. என்றாலும் அரபுக் கட்சிகள் கடந்த முறை பாராளுமன்றத்தில் 11 ஆசனங்களை வென்றிருந்தன.

இம்முறை தேர்தலில் நெதன்யாகுவுக்கும் சியோனிஸ கூட்டணியின் தலைவரான யிட்சாக் ஹர் சொக்கிற்கும் இடையிலேயே கடுமையான போட்டி நிலவி வருகிறது. நெதன்யாகு மனது தேர்தல் பிரசாரத்தில் ஈரானை பூச்சாண்டியாக எடுத்துக் கொண்டுள்ளது. ஈரான் சர்வதேச நாடுகளுடன் மேற்கொண்டுவரும் அணு சக்தி தொடர்பான பேச்சுவார்த்தை ஒரு பொய் நாடகம் என்றும் ஈரான் எப்படியும் ஆணு குண்டை தயாரித்து அதனை இஸ்ரேலுக்குள் போட காத்திருப்பது போன்றும் தான் நெதன்யாகுவின் தேர்தல் பிரசாரம் அமைந்திருக்கிறது.

நெதன்யாகு தனது தேர்தல் பிரசாரத்தை அண்மையில் அமெரிக்காவிலும் போய் செய்து வந்ததுதான் சுவாரஸ்யமானது. அமெரிக்க எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி அழைப்பு விடுத்து ஒரு வாரத்திகு முன் அமெரிக்கா சென்ற நெதன்யாகு அங்கு பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அதில் அமெரிக்கா ஈரானுடன் பேச்சு வார்த்தை நடத்துவதை தவறு என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவையே குற்றம் சாட்டி அமெரிக்காவுக்குள்ளே அரசியல் சண்டையை மூட்டிவிட்டு வந் தார். ஈரானின் அணு ஆயுத முயற்சியில் இருந்து நாட்டு மக்களை தன்னால் மாத்திரமே காப்பாற்ற முடியும் என்று பயமுறுத்தும் நெதன்யாகு பிராந்தியத்தில் தோன்றியிருக்கும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) குழுவை காட்டியும் இஸ்ரேல் மக்களை பயமுறுத்தி வாக்கை வாங்க முயற்சிக்கிறார்கள்.

என்றாலும் நெதன்யாகு நான்காவது முறை பிரதமர் தவணைக்கு போட்டியிடுகிறார். அவர் ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார். இப்படி நீண்டகாலம் அதி காரத்தில் இருப்பதை உதாரணம் காட்டி மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தி யிட் சாக் ஹர்சொக் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதுதவிர சமூக, பொருளாதார பிரச்சினைகள் மற்றியும் அவர் வாக்களிப்பவர்களிடம் பேசுகிறார்.

கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்களின் படி பார்த்தால் இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவு கின்றபோதும் நெதன்யாகுவுடன் கூட்டுச் சேர அதிக கட்சிகள் இருப்பது அவருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் அவதானிகளின் கணிப்பாகும். இஸ்ரேல் பலஸ்தீனர்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகின்ற போதும் அங்கு ஆட்சியை மாற்றக்கூடிய தேர்தல் பற்றி பலஸ்தீனர்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. “அனைவருக் கும் மோசமானவர்கள். அவர்களுக்கு இடையில் எந்த வித்தியாசமும் இல்லை” என்கிறார் பலஸ்தீன அதிகார சபையின் தலைநகராக இயங்கும் மேற்குக் கரை ரமல்லா நகரில் மளிகைக் கடை ஒன்றை நடத்தும் 34 வயது நாஸிர் அப்துல் காதிர்.

இஸ்ரேலியருக்கு நெதன்யாகுவா அல்லது ஹர்சொக்கா பிரதமராவார் என்ற பெரிய கேள்வி இருந்தபோதும் பலஸ்தீனர்களைப் பொறுத்தவரை இஸ்ரேலின் பொருளாதார தடைக்கு மத்தியில் எப்படி தமது குடும்பத்தினருக்கு அடுத்த நாள் உணவை வழங்குவது என்ற பிரச்சினைதான் பெரிதாக இருக்கும். சற்று மிதவாத கொள்கை கொண்ட ஹர்சொக் பலஸ்தீனத்துடன் அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் என்று தனது தேர்தல் பிரசாரத்தில் குறிப்பிட்டபோதும் அது தனக்கு அநாவசியமானது என்கிறார் அப்துல் காதிர் “இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் எல்லாம் பொய்யானது.

ஆக்கிரமிப்புகள் தான் தொடரும்” என்கிறார். பலஸ்தீனம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைய கடந்த ஜனவரியில் விண்ணப்பித்ததை அடுத்த இஸ்ரேல் பலஸ்தீனத்திற்குச் சேர வேண்டிய வரி வருவாயை முடக்கிவிட்டது. இதனால் பலஸ்தீனத்தின் 150,000க்கும் அதிகமான பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பலஸ்தீன அதிகார சபை திண்டாடுகிறது. இந்த நெருக்கடியில் பலஸ்தீனர்களுக்கு மளிகைக் கடை நடத்தும் அப்துல் காதிர் குறிப்பிடும்போதும், “மக்கள் குறைவாகத்தான் பொருட்களை வாக்குகிறார்கள். கொள்வனவாளர்களுக்கு கடனுக்கு பொருட்களை கொடுக்கிறேன்.

ஆனால் எனக்கு பொருள் தருபவர்கள் பணத்தை தரும்படி வலியுறுத்துகிறார்கள். எனது மாமாவிடம் பணம் கடன் வாங்கி இருக்கிறேன். எனவே இப்போதைக்கு கடையை மூடவேண்டிய தேவை ஏற்படாது” என்கிறார். இப்படித்தான் பலஸ்தீனர்களின் அன்றாடப் பிரச்சினை இருக்கிறது. இந்த நிலையில் இஸ்ரேலில் எவன் வென்றால் எவன் தோற்றால் என்ன என்று பலஸ்தீனர்கள் நினைப்பதில் நியாயம் இருக்கிறது. எப்படி இருந்தபோதிலும் இஸ்ரேல் தேர்தல் பலஸ்தீனர்களின் வாழ்வில் தாக்கம் செலுத்துவது போல் பலஸ்தீனர்களுக்கு வேறு எந்த தேர்தலும் தாக்கம் செலுத்துவதில்லை. குறிப்பாக பென்ஜமின் நெதன்யாகுவின் அரசில் பலஸ்தீன மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்திருக்கிறார்கள்.

சர்வதேசத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலத்தில் யூதக் குடியேற்றங்கள் என்றும் இல்லாதவகையில் அதிகரித்தது நெதன்யாகுவின் ஆட்சியில் என்பதை கடந்த ஓரிரு ஆண்டு தரவுகளை புரட்டிப்பார்த்தாலே புரிந்துவிடும். கடந்த ஆண்டின் கடைசியில் காசா மீது 50 நாட்கள் மோசமாக தாக்குதல் நடத்தி அந்த பகுதியை சின்னபின்னமாக்கிய நெதன்யாகு அரசு இன்றும் அங்கு ஒடுக்கமுறைகளை கையாண்டு வருகிறது. பலஸ்தீனத்துடனான அமைதிப் பேச்சுவார்த்தையை நீடிப்பதிலும் நெதன்யாகு அரசு அதிக கரிசணை காட்டுவதில்லை.

இஸ்ரேல்-பலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வாக இஸ்ரேலுக்கு அருகில் இறைமை கொண்ட பலஸ்தீன தேசம் ஒன்றை உருவாக்குவது பற்றி அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் கூறி வருகிறது. ஆனால் இஸ்ரேலின் இப்போதைய அரசு திட்டமிட்ட முறையில் இந்த தீர்வுத் திட்டத்தை மறக்கடிக்க வேலை செய்கிறது. இந்த நிலையில் இஸ்ரேல் தேர்தல் பலஸ்தீனர்களுக்கு முக்கியமானது என்கிறார் பலஸ்தீன அதிகார சபையின் முன்னாள் அமைச்சராக இருந்த கஸ்ஸான் காதிப், “நெதன்யாகு மீண்டும் ஒருமுறை வெற்றிபெற்றால் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் இரு நாட்டு தீர்வொன்றை எட்டும் வாய்ப்பு நடைமுறைச் சாத்தியம் இல்லாமல் போய்விடும். ஹர்சொக் வென்றால் மீண்டும் ஒரு முறை வாய்ப்பு ஏற்படும்” என்கிறார்.

நெதன்யாகு வெல்லும் பட்சத்தில் பலஸ்தீன பகுதிகளில் சட்டவிரோத யூத குடியேற்றங்கள் தீவிரம் அடையும். அமைதி பேச்சுவார்த்தைகள் தொடராது, மேலும் பலவீனம் அடைந்து பலஸ்தீன அதிகார சபையே வீழ்ச்சி காணும் அபாயம் இருக்கிறது என்பதுதான் கஸ்ஸான் காதிப்பின் கணிப்பு. தாம் வென்றால் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க முயற்சிப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். எதிர்த்துப் போட்டியிடும் ஹர்சொக். அதேபோன்று இஸ்ரேல் குடியேற்றங்களையும் நிறுத்துவது குறித்தும் ஹர்சொக் தனது தேர்தல் பிரசாரத்தில் பட்டும் படாமலும் கூறியிருக்கிறார்.

நெதன்யாகு அரசு இஸ்ரேலை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.நெதன்யாகுவின் அரசில் பலஸ்தீனர்கள் மீதான ஒடுக்குமுறையால் இஸ்ரேல் மீது சர்வதேசத்தின் கண்டனங்கள் அதிகரித்திருந்தமை ஒரு பக்கத்தில் பலஸ்தீனத்திற்கு சாதகமாகவும் இருந்தது. குறிப்பாக கடந்த ஒரு சில மாதங்களுக்குள் பலஸ்தீனத்தை பல ஐரோப்பிய நாடுகளும் அங்கீகரித்திருந்தன. எந்த தர்க்கத்தை சொன்னபோதும் இஸ்ரேலின் பொதுத் தேர்தல் என்பது பலஸ்தீனர்களை பொறுத்தவரை கறுப்பு ஓநாய் க்கும் வெள்ளை ஓநாய்க்கும் இருக்கும் வித்தியாசம் மாத்திரம்தான். யார் வந்தாலும் தாம் வேட்டையாடப்படுவது அவர்களுக்கு தெரியும்.

எஸ். பிர்தௌஸ் ...

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com