ஐ.
நா. குழு அறிக்கை:
அடுத்து என்ன?
இலங்கை
ராணுவத்திற்கும்
விடுதலைப் புலிகளுக்கும்
நடைபெற்ற போர்
2009-ஆம் ஆண்டு மே
19 அன்று முடிவுக்கு
வந்ததாக இலங்கை
அரசு அறிவித்தது. வன்னி பகுதி
யில் சுமார் 3 லட்சம்
பேருக்கு சொல்லொணாத்
துயரங்களை ஏற்படுத்திய
கொடூரமான போராக
இது நடந்தது.
போர் துவங்கிய
2008 செப்டம் பரிலிருந்து
போரின் இறுதி வரை
கடுமை யான போர்க்
குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
அப்பாவி மக்கள்
படுகொலை, மனித
உரிமை மீறல்கள்
ஏராளமாக நிகழ்ந்துள்ளன.
சர்வதேச மனிதநேய
சட்டங்கள் மற்றும்
மனித உரிமை சட்டங்களை
மீறும் வகையில்
இழைக்கப் பட்ட
இத்தகு குற்றங்களை
ஐக்கிய நாட்டு
மன்றத்தின் நிபுணர்குழு,
தனது அறிக்கை யில்
தொகுத்துள்ளது.
2009, மார்ச் மாதம்
இலங்கை யின் ஜனாதிபதி
ராஜபக்சேவும்,
ஐ.நா. தலை மைச்
செயலரும் கையெழுத்
திட்ட ஒரு பிரகட
னம் அடிப்படையில்
இந்த அறிக்கை தயாரிப்பு
பணியில் மூன்று
பேர் கொண்ட ஐ.நா.
குழு ஈடு பட்டது.
இந்த அறிக்கை
ஒரு உண்மை அறியும்
குழுவினால் உருவாக்கப்பட்ட
புலனாய்வு அறிக்கை
அல்ல. அந்தப் பணி
இந்த மூன்று பேர்
கொண்ட குழுவிற்கு
நிர்ணயிக்கப்பட
வில்லை. நம்பகத்தன்மை
கொண்ட ஆதாரங் களோடு
கூடிய குற்றச்சாட்டுகள்
எவை என் பதை வரையறுத்து,
ஐ.நா. செயலருக்கு
அறிக்கை அளிக்க
வேண்டும் என்று
கேட்டுக் கொண்ட
அடிப்படையில்
மூவர் குழு செயல்பட்டுள்
ளது. இந்த அறிக்கையின்
பரிந்துரைகளை
அமலாக்கிட இலங்கை
அரசிடம் ஐ.நா.
அறி வுறுத்தும்.
நேரடியாக நடவடிக்கை
எடுக்க ஐ.நா. விற்கு அதிகாரம்
இல்லை. ஆனால்,
இலங் கையில் உள்ள
குற்ற நடவடிக்கைகளை
விசா ரிக்கும்
அமைப்புகளில்
ஏராளமான குறைபாடு
கள் உள்ளன. இவற்றையும்
அறிக்கை தெளி வாக்கியுள்ளது.
ஆதாரங்கள்
மிகுந்த குற்றச்
சாட்டுக்கள் மீது
சரியான நடவடிக்கை
எடுக்கும் வகையில்,
இலங்கையின் குற்ற
வியல் நீதித்துறையில்
உள்ள குறைபாடுகள்
அகற்றப்பட வேண்டும்.
அறிக்கை முன்வைத்
துள்ள குற்றச்சாட்டுக்களுக்கும்
அவற்றின் மீதான
சரியான தொடர் நடவடிக்கைகளுக்கும்
இலங்கை அரசு பொறுப்பேற்க
வேண்டும் என்பதே
இந்த அறிக்கையின்
அடிப்படை யான உள்ளடக்கம்.
ஆதாரங்கள்
கொண்ட குற்றச்சாட்டுக்கள்
எவை என்பதை, அறிக்கை
தெளிவாக விளக்
குகிறது. அந்தக்
குற்றச்சாட்டுக்களுக்கான
ஆதாரங்களை எந்த
வகையில் மூவர்
குழு சேகரித்தது
என்பதும் அறிக்கையில்
தெளி வாக விளக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் இணையதளத்தில்
குற்றச்சாட் டுக்களை
பதிவு செய்ய வேண்டுகோள்
விடுக் கப்பட்டது.
இதில் 4000க்கும்
மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள்
பதிவு செய்யப்பட்டன.
இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கான
பின்னணி ஆதாரங்கள்
சேகரிக்கப்பட்டன.
இலங்கை ராணுவம்
மற்றும் அமைச்சகங்களின்
அறிக் கைகள், ஊடகங்களில்
வந்த செய்திகள்,
படங் கள், போர்
நடக்கும் போது
அங்கிருந்த ஐ.நா.
வின் உதவிக்குழுக்கள்,
செஞ்சிலுவை சங்கத்
தின் குழுக்கள்
போன்றவற்றின்
பதிவு செய்த ஆவணங்கள்
என பல வகை ஆதாரங்க
ளையும் ஒப்பிட்டு
குற்றங்கள் ஆராயப்பட்டன.
இந்த ஆய்வுக்குப்
பிறகு, உண்மையான
குற்றச்சாட்டுக்கள்தான்
என்று மூவர் குழு
முடிவுக்கு வந்த
குற்றச்சாட்டுக்கள்
இந்த அறிக்கையில்
தொகுக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழு
இலங்கைக்கு சென்று
போர் நடந்த இடங்களை
ஆராயவில்லை. இதற் கான அனுமதியை
இலங்கை அரசு வழங்க
வில்லை. இந்த
அறிக்கையில் இலங்கைக்குச்
செல்ல அனுமதிக்காதது
சரியல்ல என்று
சொல்லப்பட்டுள்ளது.
அங்கு செல்லவில்லை
என்றாலும், குற்றச்சாட்டுக்களை
வரையறுக்க மேற்கண்ட
ஆதாரங்கள் போதுமானவை
என்று அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக,
இந்தக் குற்றச்
சாட்டுக்கள் போதுமான
ஆதாரங்கள் கொண்ட
வையாக இருப்பினும்,
உரிய தண்டனை நடவ
டிக்கைகளை மேற்கொள்ளவும்,
பொறுப்பான வர்கள்
கண்டறியப்பட்டு
தண்டனைக்கு உள்
ளாக்கிடவும் முழு
விசாரணை இலங்கையில்
நிகழ்ந்த வேண்டியுள்ளது.
இலங்கையில்
உள்ள மனித உரிமை
ஆணையம், புலனாய்வு
அமைப்புகள், நீதிமன்றங்கள்
உள்ளிட்ட பல அமைப்புகள்
இப்பணியை மேற்கொள்ள
வேண்டும்.
மற்றொரு பிரச்சனையும்
முக்கியமானது.
நடைபெற்ற போரில்
ஐ.நா. தொகுத்துள்ள
குற்றச்சாட்டுக்கள்
மட்டுமல்லாது,
இன்னும் ஏராளமான
குற்றங்கள் நிகழ்ந்திருப்பதற்கான
சாத்தியக்கூறுகள்
இருந்தன. இலங்கையில்
உள்ள அமைப்புகள்
முழு விசாரணை மேற்
கொண்டால்தான்
இவற்றைத் தொகுக்க
இயலும்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள
‘கற்றுக் கொண்ட
படிப்பினைகள்
மற்றும் நல்லிணக்
கக்குழு’ இந்தக்
குற்றங்களை முறையாக
சேகரிக்கும் பணியில்
தீவிரமாக ஈடுபட
வேண்டும். இந்த அமைப்பில்
குறைபாடுகள் இருந்தாலும்
குற்றங்களை ஆய்வு
செய்ய “இது ஒரு
பயனுள்ள, சக்தி
வாய்ந்த அமைப்பு”
என ஐ.நா. நிபுணர்குழு
அறிக்கை கூறுகிறது.
இலங்கையில் உள்ள
விசாரணை அமைப்
புக்கள் முறையாக
செயல்படாதது, இன
ரீதி யான பாரபட்ச
அணுகுமுறை உள்ளிட்ட
பல முக்கிய குறைபாடுகளை
அறிக்கை சுட்டிக்
காட்டியுள்ளது.
விசாரணைகளை தாமதப்
படுத்துவது, புகார்
அளிப்பவர்களை
மிரட்டு வது, துன்புறுத்துவது
போன்றவற்றால்
இலங் கையின் குற்றவியல்
நீதித்துறை நம்பகத்
தன்மை இழந்திருப்பதாக
அறிக்கை கருது
கிறது. இந்தக்
குறைபாடுகளை அகற்றுவ
தற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்ள அறிக்கையின்
வழிகாட்டுதல்களும்
உத விடும். ஆனால் இந்த அமைப்புகளின்
குறை களை அகற்றும்
வேலையை அரசு மேற்
கொள்ள வேண்டுமானால்,
வலுவான மக்கள்
இயக்கத்தின் நிர்ப்பந்தம்
அவசியமானது.
வான்வழியே குண்டு
மழை பொழிந்து அப்
பாவி மக்களை படுகொலை
செய்வது, மருத்
துவமனைகள் மீது
குண்டு வீச்சு
நடத்துவது, மக்களை
உள்நாட்டிலேயே
அகதிகளாக்கி, எவ்வித
அடிப்படை வசதியும்
இல்லாத முகாம்களில்
தங்க வைப்பது,
துன்புறுத்துவது,
சித்ரவதை செய்வது,
பெண்களை பாலியல்
பலாத்காரம் செய்வது,
குழந்தைகளை கட்டா
யப்படுத்தி போரில்
ஈடுபட வைப்பது,
தலை மையைக் காப்பாற்ற
அப்பாவி மக்களை
கேடயமாக பயன்படுத்துவது,
குழந்தைகளை கொல்வது,
தீவிரவாதிகள்
என்ற பெயரில் பிடித்து
வைத்துள்ள அப்பாவிகளை
சிறையில் அடைத்து
துன்புறுத்துவது,
அரசை விமர்சிப்ப
வர்களை கடத்திச்
செல்வது, பலரை
காணா மல் செய்வது
போன்ற கொடூர குற்றங்கள்
இலங்கையில் மட்டுமல்ல,
எங்குமே நிகழா
மல் தடுப்பதற்கு,
இந்தக் குற்றங்கள்
ஆதாரப் பூர்வமாக
தொகுக்கப்பட்டு,
உரியவர்கள் தண்டிக்கப்பட
வேண்டும்.
ராணுவமும், அரசு
அதிகாரமும் தங்கள்
கைவசம் உள்ள நிலையில்,
இலங்கை அரசு தான்,
நடைபெற்ற குற்றங்களுக்கு
அதிகமாக பொறுப்பேற்க
வேண்டும் என்பதை
அறிக்கை சுட்டிக்
காட்டுகிறது. இந்தப்போரில்
படு கொலை செய்யப்பட்ட
பொதுமக்களின்
எண் ணிக்கையை அரசாங்கம்
வெளிப்படைத் தன்மையோடு
இன்னமும் அறிவிக்க
வில்லை. அரசு,
எண்ணிக்கையை குறைத்துக்
காட்ட முயற்சிக்கிறது.
போர் நிகழ்ந்த
போது வன்னிப் பகுதியில்
சிக்குண்டவர்கள்
3,30,000 பேர் எனவும்
விடுதலைப்புலிகள்
ஆக்கிரமித் திருந்த
பகுதியில் சிக்குண்டவர்கள்
35,000 பேர் எனவும் கணக்கிடப்படுகிறது.
போர் முடிந்து,
வெளியே வந்தவர்கள்
எண்ணிக்கை 2,90,000 என மதிப்பிடப்படுகிறது.
ஆக 75,000 பேர் உயிரிழந்திருக்கலாம்
என்ற மதிப்பீடு,
ஊக அடிப்படையில்
சொல்லப்படுவதாக
அறிக்கை கூறுகிறது.
நம்பத்தகுந்த
ஆதாரங் களோடு
சொல்லப்படும்
மதிப்பீடு அடிப்படை
யில் பார்க்கும்
போது, உயிரிழந்தோர்
40,000 பேருக்கு குறைய
வாய்ப்பில்லை
என்று கூறுகிறது.
உறுதியான உண்மையான
விபரங் களை அரசு
சேகரித்தால்தான்
சரியான முடி வுக்கு
வர முடியும் என்று
அறிக்கை வலியு
றுத்துகிறது.
அப்பாவி மக்கள்
படுகொலை குறித்து
அரசுத் தரப்பு
மீது ஆதாரங்களோடு
பல குற்றச்சாட்டுக்களை
ஐ.நா. அறிக்கை
தெளி வாக எடுத்துரைக்கிறது.
வன்னிப் பகுதியில்
விடுதலைப் புலிக
ளோடு நடந்த இறுதிப்போரின்
போது அப்பாவி மக்களுக்கு
மனிதாபிமான, பாதுகாப்பு
நட வடிக்கைகளை
செய்திட அரசு தவறியுள்ளது.
யுத்தப் பகுதியிலிருந்து
இடம் பெயர்ந்த
மக்கள், தங்களது
குடும்பத்தினர்,
உற்றார் உறவினரை
இழந்து தாக்குதலுக்கு
ஆளாகி, உடல் உறுப்
புக்களை இழந்து
கொடூரமான நிலைக்குத்
தள்ளப்பட்டனர்.
பெண்களும்,
குழந்தைகளும்,
முதியவர்களும்
கடுமையாக பாதிக்கப்பட்
டனர். உணவு,
மருந்துகள், குடிநீர்
இல்லாத நிலையில்
பலர் உயிரிழந்தனர்.
பெண்கள் பாலியல்
பலாத்காரத்திற்கு
ஆளாயினர்.
யுத்தப்பகுதியிலிருந்து
அரசின் கட்டுப்
பாட்டு பகுதிக்கு
வந்தாலும் ராணுவத்தின்
கடுமையான பரிசோதனைக்கு
ஆளாக வேண்டியிருந்தது.
பலர் விடுதலைப்புலிகள்
என சந்தேகிக்கப்பட்டு
தனி முகாம்களுக்கு
அழைத்துச் செல்லப்பட்டு
சித்ரவதை செய்யப்பட்டனர்.
இதில் கணிசமானோர்
பெண்களும், குழந்தைகளும்
ஆவர்.
ஐந்து பிரிவுகளில்
அறிக்கை இந்தக்
குற்றங்களை தொகுக்கிறது.
வான்வழி குண்டு
மழை பொழிந்து அப்பாவி
மக்களை கொன்றது;
மனிதநேய நடவடிக்கைகளை
மேற்கொள் ளும்
சர்வதேச, உள்நாட்டு
அமைப்புகளை செயல்படவிடாமல்
தடுத்ததோடு, மருத்துவ
மனைகள் மீதும்
குண்டு வீச்சு
நடத்தியது; பாதிக்கப்பட்டோருக்கு
நிவாரண உதவிகளை
செய்யாதது; குண்டுவீச்சில்
பாதிக்கப் பட்டோர்,
இடம் பெயர்ந்து
முகாம்களுக்கு
வந்தவர்கள் ஆகிய
அனைவரையும் மனித
உரிமைகள் மீறலுக்கு
உள்ளாக்கியது;
மோதல் பகுதியல்ல
என்று ராணுவத்தால்
அறிவிக்கப் பட்ட
இடங்களில் கூட
குண்டு வீச்சு
நடத்தி, அங்கு
தப்பி வந்த மக்களைப்
படுகொலை செய்தது
போன்றவை இந்தப்
பிரிவுகளில் அடங்கிடும்.
அத்துடன் ஊடகத்தின்
மீதான அடக்குமுறையை
இலங்கை அரசு கட்ட
விழ்த்ததையும்
அறிக்கை விவரிக்கிறது.
விடுதலைப்புலிகள்
தரப்பில் வைக்கப்
பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை
ஆறு பிரிவுக ளின்
கீழ் தொகுத்துள்ளனர்.
அப்பாவி மக்களை
கேடயமாகப் பயன்படுத்தி
போரில் ஈடுபட்டது;
புலிகள் ஆதிக்கத்தில்
இருந்த பகுதிகளி
லிருந்து வெளியேறிய
அப்பாவி மக்களை
சுட்டுக் கொன்றது;
மனித வெடி குண்டு
களைப் பயன்படுத்தியது.
தமிழர்களை தங்க
ளது போர் தேவைகளுக்காக
கட்டாயப்படுத்தி
வேலை வாங்கியது;
குழந்தைகளை கட்டாயப்
படுத்தி போரில்
ஈடுபடுத்தியது;
தற்கொலை படை மூலம்
அப்பாவி மக்களைக்
கொன்றது போன்ற
குற்றங்களை விடுதலைப்புலிகள்
நிகழ்த்தியுள்ளனர்
என அறிக்கை கூறுகிறது.
வெளிநாடுகளில்
வசிக்கும் புலம்
பெயர்ந்த தமிழர்களும்,
வெளிநாடு வாழ்
தமிழர்களும் செயல்படுகிற
பல அமைப்புகளின்
செயல் பாடுகளை
அறிக்கை கடுமையாக
விமர்சிக் கிறது.
இவர்களின் கண்மூடித்தனமான
விடுத லைப் புலி
ஆதரவுப் பிரச்சாரங்கள்,
தமிழ் தேசியவாத
வெறியை தூண்டியது,
இத்தகு செயல்பாடுகளுக்காக
பெரும் நிதியைத்
திரட்டி செலவிட்டது
ஆகியன அனைத்தும்
இலங்கை தமிழ்ச்
சமூகத்தில் பிளவை
ஏற்ப டுத்தியது.
அத்துடன் சிங்களத்
தீவிரவாதம் வலுப்பெறவும்
உதவியுள்ளதாக
அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
விடுதலைப்புலிகள்
சேகரித்து வைத்துள்ள
பெரும்நிதி இலங்
கைக்குள் கொண்டு
வரப்பட வேண்டு
மெனவும் தற்போது
பாதிக்கப்பட்ட
தமிழர் களுக்கு
உதவிட அதனை பயன்படுத்த
வேண்டுமென்றும்
அறிக்கை கூறுகிறது.
ஐ.நா.நிபுணர்குழு
அறிக்கையில் இனி
செய்ய வேண்டுவன
குறித்த பரிந்துரைகள்
மிக முக்கியமானவை.
இந்தப் பரிந்துரைகளை
“இலங்கை அரசு, ஐ.நா.
மற்றும் இதரத்
தரப்பினர் இணைந்து
அமலாக்க வேண்டு
மென” அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறிக்கை யில்
குறிப்பிட்டுள்ள
குற்றச்சாட்டுக்களை
நியாயமான, பாரபட்சமற்ற
முறையில் புல னாய்வு
செய்திட வேண்டும்.
மனித நேய மற்
றும் மனித உரிமைச்
சட்ட மீறல்கள்
எனும் வகையில்
ராணுவமும், விடுதலைப்புலிகளும்
செய்த குற்றங்களை
முறையாக பதிவு
செய்திட வேண்டும்.
இறுதிகட்ட
போர் நடைபெற்ற
வன்னிப் பகுதியில்
தற்போது வசித்து
வருவோருக்கும்,
பாதிக்கப்பட்டோருக்கும்
கவுரவமான வாழ்க்
கையை உறுதி செய்ய
வேண்டும். அவர்களது வாழ்வாதார
உரிமைகளை பாதுகாத்திட
இலங்கை அரசு முழுக்கவனம்
செலுத்திட வேண்டும்.
எந்த வடிவத்திலும்
வன்முறை நிகழாமல்
தடுத்து நிறுத்திடும்
வகையில் அரசு தனது
“இணை ராணுவம் உள்ளிட்ட
அரசு இயந்திரங்களை
கட்டுக்குள் வைத்திருக்க
வேண்டும்”. இறப்புச்
சான்றிதழ்கள்
வழங் குவது, பாதிக்கப்பட்டோரின்
மன நலன் காக் கும்
நடவடிக்கைகள்,
இடம் பெயர்ந்தோர்
மீண் டும் தங்களது
சொந்த இடங்களில்
குடியேறு வதற்கான
ஏற்பாடுகள், அவர்களது
மறுவாழ் வுக்கான
நடவடிக்கைகள்,
அவர்களுக்கு இடைக்கால
உடனடி நிவாரணம்
வழங்குவது, ‘காணாமல்
போனவர்கள்’ என்று
அறிவிக்கப் பட்டவர்கள்
பற்றிய விபரங்களை
உடன் வெளி யிடுவது,
அவசரகால சட்டங்கள்
மற்றும் அடக்குமுறை
நடவடிக்கைகளுக்கான
சட் டங்களை விலக்கிக்
கொள்வது, விடுத
லைப்புலிகள் என்று
சந்தேகிக்கப்பட்டு,
சிறையில் இருப்போர்
பற்றிய முழு விபரங்
களை வெளியிடுவது,
குற்றம் புரிந்தோர்
என்ப தற்கான போதுமான
ஆதாரங்கள் உள்ளவர்
களைத் தவிர்த்து,
மற்ற அனைவரையும்
விடு தலை செய்வது
- போன்றவற்றை உடனடி
குறுகியகால நடவடிக்கைகளாக
அறிக்கை பரிந்துரை
செய்துள்ளது. இத்தகு பரிந்துரைகள்
அனைத்தும் உடன்
அமலாக்குவது அவசியம்.
இவ்வாறு உடனடி
நிவாரணங்கள் பற்றி
அளிக்கப்பட்டுள்ள
பரிந்துரைகளை
தாமதிக் காமல்
அமலாக்கிட, இந்தியாவில்
உள்ள மத்திய அரசு
இலங்கை அரசிடம்
அழுத்தமாக வலியுறுத்த
வேண்டும். இலங்கையில்
உளள் தமிழ்ச் சமூகத்தை
பாதுகாக்க இந்திய
அரசு பொறுப்புணர்வோடு
செயலாற்றிட வேண்டும்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள்
தமிழ் மக்க ளின்
அனைத்து உரிமைகளையும்
உறுதிப் படுத்துவது,
சுயாட்சி அதிகாரங்கள்
கொண்ட தமிழ் மாகாணங்களை
அமைப்பது எனும்
வகையில் தமிழ்
இனப் பிரச்சனைக்கு
நிரந் தரத் தீர்வு
காண வேண்டும்.
தற்போது தமிழ்
தேசிய கூட்டமைப்பிற்கும்
அரசிற்கும் பேச்சு
வார்த்தை நடைபெற்று,
நான்கு கட்டங்கள்
முடிந்துள்ளன.
இதனை விரைவுபடுத்துவது
முக்கியமானது.
இரத்தம் தோய்ந்த
இன்றைய இலங்கை,
நல்லிணக்கம் தவழும்
பூமியாக மாறிட,
அரசியல் தீர்வு
ஒன்றே வழி. அங்குள்ள
முற்போக்காளர்கள்,
மனித நேயம் கொண்
டோர், உழைப்பாளி
மக்கள் அனைவரும்
அதிகாரப் பகிர்வுக்காகவும்,
அரசியல் தீர்வுக்
காகவும் ஒன்றுபட்டு
போராட வேண்டிய
தருணம் இது.
இன்று, இலங்கை
நிகழ்வுகள் உலகத்
தாக் கத்தை ஏற்படுத்தியுள்ளன.
கொடூரமான காலனியாதிக்கமும்,
இரண்டு உலகப் போர்க
ளும் நிகழ்ந்த
காலக்கட்டத்தில்
அமெரிக்கா உள்ளிட்ட
ஏகாதிபத்திய நாடுகள்
கோடிக் கணக்கான
அப்பாவி மக்களை
கொன்று குவித்
தன. அமெரிக்கா
மற்றும் ஐரோப்பிய
நாடுக ளின் படைகள்,
நேட்டோ போன்றவை
இராக், ஆப்கானிஸ்தான்,
வியட்நாம் மற்றும்
இலத்தீன் அமெரிக்க
நாடுகளில் இழைத்துள்ள
குற்றங் கள் இதுவரை
முறையாக விசாரிக்கப்பட்டு
குற்றவாளிகள்
தண்டிக்கப்படவில்லை.
ஆனால், தற்போது
மனித உரிமைகள்
பற்றி ஏகாதிபத்தியவாதிகள்
தீவிரமாகப் பேசு
கின்றனர். அவர்களது உள்நோக்கம்,
இலங் கையை தங்களது
ஆசிய மேலாதிக்கத்தின்
தளமாக பயன்படுத்துவதுதான்.
எனவே இலங்கை
இனப்பிரச்சனைக்கு
அரசியல் தீர்வு
காண்பது சர்வதேச
முக்கியத்துவம்
வாய்ந்த கடமையாகும்.
என். குணசேகரன்