Contact us at: sooddram@gmail.com

 

அமெரிக்க உளவுப்படை துப்பு துலக்கிய விதமும் பின்லேடன் வீழ்ந்த கதையும்!

அன்னிய மண்ணில் 4 ஹெலிகாப்டர்களுடன் நுழைந்து பாகிஸ்தான் ராணுவத்தின் கண்ணில் மண்ணை தூவி விட்டு அமெரிக்க படையினர் சாதித்துகாட்டிய இந்த துணிச்சல் வேறு எந்த நாட்டு ராணுவத்துக்கும் வருமா என்பது கேள்விக்குறியே! அசகாய சூரர்களாக மாறி ஓசாமாவை வீழ்த்திய கமாண்டோ படையினரை அதிபர் ஒபாமா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது தீவிரவாதத்தின் தலையை துண்டித்துவிட்டோம் என்று வர்ணித்துள்ளார்.இதற்காக அமெரிக்காவுக்கே தேவைப்பட்ட காலம் ஓரிரு ஆண்டுகள் அல்ல! 10 ஆண்டுகள்!! காலம் கடந்தாலும் பின்லேடனை பழி தீர்த்து தனக்கு ஏற்பட்ட களங்கத்தை அமெரிக்கா துடைத்துக் கொண்டது பாராட்டுக்குரியது.

பின்லேடன் இருப்பிடத்தை மோப்பம் பிடித்தது முதல் அவனை சுட்டு வீழ்த்தியதை அதிபர் ஒபாமா நேரடி சாட்சியாக பார்த்தது வரையிலான சம்பவங்களை பிரபல எழுத்தாளர் பாப் உட்வர்ட் என்பவர் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் விவரித்துள்ளார்.

அல்ஜசீரா தொலைக்காட்சி பேட்டியில் மட்டும் பின்லேடனை பார்த்திருந்த அமெரிக்க உளவுத்துறைக்கு அவர் கருப்பா? சிவப்பா? எத்தனை அடி உயரம் இருப்பார் என்பதெல்லாம் துல்லியமாக தெரியாது. ஆனால் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் தனது கழுகு கண்களை அமெரிக்கா படர விட்டது.

அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை எல்லாம் பயன்படுத்தி பார்த்தார்கள். ஆனால் எதிலும் பின்லேடன் பதுங்கி இருக்கும் இடம் பற்றியசிக்னல்விழவில்லை. ஆனாலும் அமெரிக்க உளவுப்படை சோர்ந்து போகவில்லை.

பின்லேடனின் மிக நெருங்கிய நண்பர் அபு அகமது அல்குவைதி. பின்லேடனின் நட்பு வட்டாரத்தையும், நெருங்கிய வட்டாரத்தையும் துப்பறிந்து வைத்திருந்த உளவுத்துறையினர் அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்தனர். இதற்கு ஒசமா பின்லேடனும் சளைத்தவன் அல்ல. போன், செல்போன், இன்டர்நெட் என்று எதையாவது வைத்திருந்தால் கேபிள் வழியாக கூட அமெரிக்க உளவு படை துப்பறிந்துவிடும் என்று நினைத்து இதை எதையுமே தனது பங்களாவில் வைத்திருக்கவில்லை.

தனது நண்பர் அல்குவைதி மூலம் தகவல்களை பரிமாறியதிலும் புதிய யுக்தியை பின்லேடன் கடைபிடித்தான். அல்குவைதி செல்போன் பேட்டரியை கழட்டிவிட்டுத்தான் பின்லேடன் பங்களாவிற்கு வருவார். யாருக்காவது தகவல் கொடுக்க வேண்டுமென்றால் அல்குவைதி பங்களாவில் இருந்து வெளியே வந்து கால்போன போக்கில் ஓரிரு கிலோ மீட்டர் தூரம் செல்வார். பின்னர் செல்போனுக்கு பாட்டரியை பொருத்தி உயிர் கொடுத்து பேசுவார்.

அப்படி ஒருநாள் அல்குவைதி தனது நண்பருடன் பேசிய தொலைபேசி உரையாடல்தான் அமெரிக்க உளவு படைக்கு துப்பறிய உதவியது. தொலைபேசியில் பேசிய அல்குவைதியின் நண்பர், என்னப்பா, இப்போ நீ எங்கே இருக்கிறாய்? ரொம்ப நாட்களாகவே உன்னை பார்க்க முடியவில்லையே? என்ன நடக்கிறது உன் வாழ்க்கையில்? இப்போது என்ன செய்கிறாய்? என்று கேட்டார்.

அதற்கு சுரத்தே இல்லாமல் அல்குவைதி பதில் சொன்னார். முன்னால் இருந்த அதே மக்களுடன்தான் இப்போதும் இருக்கிறேன் என்றார். அதன்பிறகு சிறிது நேரம் மவுனம் நிலவியது. பின்னர் அப்படியா, கடவுள் எல்லாம் நல்லபடியா இருக்க உதவட்டும் என்றார்.

இந்த பதில் தான் அமெரிக்க உளவுப்படைக்கு பொறியில் தட்டியது. யாரோ ஒரு முக்கிய பிரமுகருடன்தான் அல்குவைதி தங்கி இருக்கிறான் என்பதை உறுதி செய்தனர்.

உளவுப்படை கண்டு பிடித்து விடக்கூடாது என்பதால் சங்கேத வார்த்தைகளாலே பேசிய அல்குவைதியின் பேச்சை கூட உளவுப்படை கண்டுபிடித்து அபோதாபாத்தில் பின்லேடன் பதுங்கி இருந்த மாளிகையையும் கண்டுபிடித்தார்கள்.

அதன்பிறகு அந்த வீட்டருகே வேறு ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தி அமெரிக்க உளவுப்படையினர் தங்கி இருந்து கண்காணித்து வந்தனர். அந்த வீட்டில் சூழ்நிலைக் கைதி போல் ஒருவர் அடைபட்டு கிடந்ததை பார்த்தார்கள். அவர் எப்போதாவது வெளியே வந்து உலாவுவார்.

அவருடைய உயரத்தை அறிந்து கொள்ள செயற்கைகோள் உதவியை நாடினார்கள். செயற்கை கோளும் அந்த வீட்டை அங்குலம் அங்குலமாக ஊடுருவி படம் பிடித்தது. அந்த நபரின் உயரமும் சுமார் 6 அடி என்று கணக்கிட்டு கொடுத்தது.

இப்படி ஒவ்வொரு விஷயமாக தொகுத்துதான் பின்லேடன் பங்களாவை உறுதிபடுத்தினார்கள். பின்லேடன் பங்களாவில் புகுந்து சுட்டுக் கொன்ற அமெரிக்க வீரர்கள் பின்லேடனின் உயரத்தை அளவிட கையில்டேப்இல்லாமல் சுற்றும் முற்றும் பார்த்தனர்.

பின்னர் வேறு வழியின்றி 6 அடி உயரம் உள்ள ஒரு வீரரை பின்லேடன் உடல் அருகே படுக்க வைத்தனர். அதை வைத்து பின்லேடனின் உயரத்தை கணக்கிட்டு குறித்துக் கொண்டார்கள். இந்த காட்சியை வெள்ளை மாளிகையில் உயர் அதிகாரிகளுடன் அமர்ந்து நேரடியாக பார்த்து கொண்டிருந்தார் ஒபாமா.

ராணுவ வீரர் ஒருவர் பின்லேடன் உடல் அருகே படுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை ஒபாமாவால் சகிக்க முடியவில்லை. அருகில் இருந்த அதிகாரிகளிடம் 600 லட்சம் டாலர் மதிப்புள்ள ஹெலிகாப்டரையே அங்கேயே அழிய விட்டிருக்கிறோம். அற்பவஸ்தான ஒரு சிறிய இஞ்ச் டேப்பை கையோடு எடுத்து போயிருக்ககூடாதா? என்று கேட்டார். எந்தவித பின்னணி குரலும், ஓசையும் இல்லாமல் வீடியோ காட்சிகள் பின்லேடன் பங்களாவில் இருந்து நேரடியாக ஒளிபரப்பாகியது. இமை மூடாமல் அந்த காட்சிகளை பார்த்து கொண்டிருந்த ஒபாமாவும் அதிகாரிகளும் மட்டும் பொருள் பொதிந்த விமர்சனங்களை அவ்வப்போது தங்களுக்குள் பேசி கொண்டிருந்தார்கள்.

பின்லேடனை
சுட்டு வீழ்த்திவிட்டு அமெரிக்க படையினர் அவனது உடலுடன் வெளியேறியதை பார்த்த பிறகுதான் அதிபர் ஒபாமாவும் அங்கிருந்து எழுந்து சென்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com