Contact us at: sooddram@gmail.com

 

தொடரும் ஆபிரிக்கா மீதான ஆக்கிரமிப்பும் பலியாகிப் போன லிபியாவும்

(நல்லையா தயாபரன் )

ஈராக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் போர்வையின் கீழ் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் 2003 மார்ச் 19ல் ஈராக்மீது விமானக் குண்டுவீச்சை ஆரம்பித்தார். சரியாக எட்டு வருடங்கள் கழிந்தநிலையில் 2011 மார்ச் 19ல், லிபியாமீது குண்டுமழை பொழிய ஆரம்பித்தது. ஜனநாயகத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இது இடம்பெறுகின்றதென்று மீண்டும் கூறப்படுகின்றது. அமெரிக்க மனிதாபிமானத்தின் கந்தக நெடியை லிபியர்களுக்குப் பரிசளிக்கும் விதமாய் நோபல் சமாதானப் பரிசை வென்ற அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஜனநாயகத்தை நிலைநாட்டவே நீர்மூழ்கிகளிலிருந்து டொமஹாக் ஏவுகணைகள் செலுத்தப்படுவதாகத் தெரிவிக்கின்றார். ஆழமான அரசியல் மற்றும் பொருளாதார நலன்களால் உந்தப்பட்டுள்ள அமெரிக்க மனிதாபிமான தலையீடென்பது மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் இராணுவ தலையீடு செய்வதற்கான ஒரு போர்வை மட்டும் தான்.

உண்மையில் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே அமெரிக்கா இருக்குமானால், அமெரிக்க நீர்மூழ்கிகளிலிருந்து ஏவுகணைககளின் முதல் இலக்கு பஹ்ரைனாகவோ சவூதியாகவோ தான் இருந்திருக்க முடியும். அமெரிக்கா தன்னை உலகப் பொலிசாகவும் நியமித்துக் கொண்டு. யேமனிலும், பஹ்ரெய்னிலும், சவூதியிலும் நடந்து வரும் அரச எதிர்ப்பு எதிர்ப்புப் போராட்டங்களை அந்தந்த நாடுகளின் அமெரிக்க ஆதரவு பெற்ற அடிவருடிகள் மிருகத்தனமாக ஒடுக்கிவரும் நிலையில், லிபியாவின் மேல் அமெரிக்கா அக்கறை கொள்வதன் உண்மையான நோக்கம் ஜனநாயகம் அல்ல. மூழ்கிக்கொண்டிருக்கும் தமது பொருளாதாரங்களுக்குப் புத்துயிரளிக்குமென்ற நோக்கில் ஆபிரிக்காவில் சந்தேகத்துக்கிடமான யுத்தங்களைத் தூண்டி உலகத்தினை மீண்டும் மறுபங்கீடு செய்து கொள்ள ஏகாதிபத்தியவாதிகளின் நவீன முயற்சிதான் லிபியா ஐவரிகோஸ்ட் போன்ற நாடுகளில் இன்று நடக்கும் யுத்தங்கள்.

லிபியாவுக்குப் பின்னர் மேற்குலகக் கூட்டணி அல்ஜீரியாவை ஆக்கிரமிக்குமென்பது இப்பொழுது அதிகரித்தவகையில் பிரத்தியட்சமாகவுள்ளது. ஏனெனில் அந்த நாடு தனது பாரிய சக்தி மூலவளங்களுக்கு மேலதிகமாக, சுமார் 150  ில்லியன் யுரோ பண ஒதுக்கீடுகளையும் கொண்டுள்ளது. லிபியாமீது குண்டுவீச்சுத் தாக்குதல்களை மேற்கொள்ளும் நாடுகளைக் கவர்ந்திழுப்பது இதுவேயாகும். அவையனைத்துக்கும் பொதுவான ஒரு விடயமுள்ளது. அவையனைத்துமே நடைமுறையில் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளன.

அமெரிக்கா மாத்திரம் ஒருவரைத் திகைக்கவைக்கும் 14,000 பில்லியன் அமெரிக்க டாலர் கடனில் மூழ்கியுள்ளது. பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இத்தாலி ஒவ்வொன்றும் 2,000 பில்லியன் அமெரிக்க டாலர் வரவு-செலவுப் பற்றாக்குறையில் சிக்கியுள்ளன. இவற்றுடன் ஒப்பீடாக 45 ஆபிரிக்க நாடுகளின் ஒட்டுமொத்தப் கடன் 400 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறைவானதாகும். ஸ்பெயினில் அரச ஊழியர்களுக்கு இனிமேல் ஊதிய உயர்வு கிடையாது என அரசு அறிவித்திருக்கிறது. வேலையற்றோருக்கான உதவித் தொகை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. கிரேக்கம், அயர்லாந்து போன்ற நாடுகளைத் தொடர்ந்து போர்ச்சுக்கல் அரசு மீளமுடியாத கடன் நெருக்கடிக்கு உள்ளானது. உடனடித் தேவையாக 80 பில்லியன் யூரோக்கள் வழங்கப்படாவிட்டால் போர்ச்சுக்கல் நாடு நிலைகொள்ள முடியாது உருக்குலைந்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உழைக்கும் மக்கள் போராடிப்பெற்ற சமூகப் பாதுகாப்பு மற்றும் உதவித் திட்டங்களை அந்த நாட்டின் கூட்டரசாங்கம், ஒவ்வொன்றாக அழித்து வருவதற்கு எதிராக ஒவ்வொரு நாளும் எங்காவது ஒரு மூலையில் மக்கள் போராடுகிறார்கள். சுகாதார சேவை தனியார் மயமாக்கப்படுகிறது, மக்களின் உயிர் பொருளாதார நெருக்கடிக்குள் ஊசலாடுகிறது. உயர்கல்வி கற்றுக்கொள்ள இனிமேல் பணம்படைத்தவர்களால் தான் இயலும் என கூட்டரசாங்கம் கூச்சமின்றி ஒத்துக்கொள்கிறது. மோசமான சமூக பதட்டங்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள நெருக்கடியால் திணறிவரும் ஆட்சிகளுக்கு அரசியல்ரீதியாகவும் இன்று நடக்கும் யுத்தங்கள் ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கிறது.

சமீப வருடங்களாக உலகெங்கும் ஒரு பொதுப் போக்காக இருக்கும் உணவுப் பொருட்கள் விலை உயர்வு, மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளில் மக்களிடையே சர்வாதிகாரத்திற்கான எதிர்ப்புணர்வு உருவாகியுள்ளது.  இராணுவ நடவடிக்கையை அனுமதிக்கும் ஐ.நா. சட்டவரைவின் 7ஆம் பிரிவின்கீழ் இருக்கும் "அமைதியின் மீது அச்சுறுத்தல்கள்", "தாக்குதல் நடவடிக்கைகள்" குறித்த தீர்மானங்கள்,  ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் சியாரா லியோனில் நடத்தப்பட்ட இராணுவ தலையீடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டது. “பாதுகாக்கும் உரிமை" (Right to Protect - R2P)என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இராணுவ நடவடிக்கைக்கு ஐ.நா. சபை அங்கீகாரம் அளித்திருப்பது இதுவே முதல்முறையாகும்."பாதுகாப்பதற்கான உரிமை"  என்ற கோட்பாட்டு ஏகாதிபத்திய சக்திகளின் ஆயுதமாகி உள்ளது. ஏகாதிபத்திய கைப்பற்றல் மற்றும் ஏகாதிபத்திய சூறையாடல் போன்றவற்றின் ஒரு அங்கமாக இத்தாலி ஆக்கிரமித்த பிராந்தியமே பின்னர் லிபியாவாக மாறியது.

எகிப்திலும், துனீசியாவிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றம் வெறுமனே ஆட்சியாளர்களின் பெயர் மாற்றம் மட்டும் தான். துனீசியாவில் பென் அலிக்கு பதிலாக பதவிக்கு வந்துள்ளமுகம்மது கன்னோசியும் அவரது கூட்டாளிகளும் இவர்களைத் தாங்கி நிற்கும் இராணுவமும் அமெரிக்க அடிவருடிகள் தான். அதே போல் எகிப்தில் முபாரக்கை அடுத்து அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் இராணுவமும் அமெரிக்க ஆதரவு இராணுவம் தான். இந்நாடுகளில் தன்னெழுச்சியாகத் துவங்கிய மக்கள் போராட்டங்களின் திசைவழி இன்னதென்பத  அமெரிக்காவே தீர்மானிப்பதாகவே அமைந்தது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்ட அட்டூழியமான குற்றங்களில் மிகவும் மோசமான ஒன்றாக 2003 ஈராக் மீதான அமெரிக்காவின் படையெடுப்பு இருந்தது.  ஓர் ஆக்கிரமிப்பு யுத்தம் தொடங்குவதும், திட்டமிடுவதும் யுத்தக்குற்றங்களிலேயே முதன்மையானதும், முக்கியமானதுமாகும் என்றும், அத்தகைய நடவடிக்கைகளில் இருந்துதான் மனிதயினத்திற்கு எதிரான ஏனைய குற்றங்கள் இரக்கமின்றி உருவாகின்றன என்றும் நூரெம்பேர்க் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறிப்பிட்டது.  அதன்படி, ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரதம மந்திரி டேவிட் கேமரோன், ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி ஆகியோர் கடாபி செய்துள்ள எவ்வித குற்றங்களையும் விட அதிகமான குற்றங்களைச் செய்துள்ள குற்றவாளிகளாக உள்ளனர்.   இலட்சக்கணக்கான ஈராக்கியர்களை பலியெடுத்த பின் தற்போது ஜனநாயகத்தின் பெயரால் ஒபாமா இன்று லிபியாவைக் குறிவைத்துக் கிளம்பியிருக்கிறார். 

ஏகாதிபத்திய நாடுகள் மற்றைய நாடுகளை வலிய யுத்தத்துக்கு அழைத்து அழிக்க முயலும் சரித்திரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  இந்த மறுபங்கீடுக்கான முயற்சிகளில் ஏகாதிபத்தியங்கள் தோல்வியைத்தான் முடிவில் சந்திக்க போகின்றன. 1930களில் யப்பான் பெற்றோலியம், இறப்பர், தாதுப் பொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய இங்கிலாந்தும் அமெரிக்காவும் தடை விதித்து, அதன் மூலம் யப்பானை வலிந்து யுத்தத்துக்கு அழைத்து, இறுதியில் யப்பான் மீது அணுகுண்டுகளை வீசி யப்பானை அழித்தனர். ஆனால் அதிலிருந்து யப்பான் மீண்டும் தளைத்து உலகின் பெரிய பொருளாதார தொழில்நுட்ப நாடாக மலர்ந்தது.

தற்போது சீனாவின் பெற்றோலிய தேவைகட்கு தடைகளை ஏற்படுத்து சீனாவை யுத்தத்துக்கு அமெரிக்கா வலிய அழைக்கிறது. லிபியாவின் கிழக்கு பகுதியில் இருக்கும் சீனாவின் உதவியோடு தற்போது நடக்கும் பெற்றோலிய அகழ்வுகளை நிறுத்தி சீனாவுக்கும் லிபியாவுக்கும் இடையேயான பெற்றோலிய ஏற்றுமதி உடன்படிக்கைகளை ரத்து செய்யவே தற்போது லிபியா மீது தாக்குதல்களை அமெரிக்கா நடாத்துகின்றது. ஆபிரிக்க பெற்றோலியம  உயர்தரமானவை மட்டுமல்ல அதை எடுப்பதும் சுலபமானதாகும். பெரும்பாலும் கடற்கரைக்கு அண்மையிலான படுகைகளில் இருந்தே எடுக்க முடியும் என்பதோடு, ஏற்கனவே இருக்கும் கடற்வழிகள் மூலமாகவே அதனை வினியோகிக்கவும் முடியும்.

சீனாவின் தேசிய பெட்ரோலிய கார்பொரேஷனும் லிபியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது மட்டுமல்ல 30,000 சீனத் தொழிலாளிகள் லிபியாவில் உள்ளனர். ஈரானுக்கும் சீனாவுக்கும் இடையேயான பெற்றோலிய ஏற்றுமதி உடன்படிக்கைகளை ரத்து செய்யவே ஈரான் மீதும் தாகுதல்களை மேற்கொள்ள அமெரிக்கா முஸ்தீபுகளை செய்து வருகின்றது. ஆனால் 1930களில் யப்பானை போருக்கு வலிய இங்கிலாந்தும் அமெரிக்காவும் அழைத்த போது யப்பானிடம் அணுகுண்டு இருக்க வில்லை. ஆனால் தற்போது சீனாவிடம் அணுகுண்டுகளும் உண்டும். அண்மையில் பாரிய ஹைட்ரஜன் குண்டு ஒன்றை சீனா வெற்றிகரமாக பரிசோதித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

லிபியாவோடு எண்ணை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த செவ்ரான், ஓக்ஸிடென்டல் பெட்ரோலியம் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் லிபியாவில் இருந்து சென்ற 2010 அக்டோபர் மாதம் வெளியேற ஆரம்பித்துவிட்டன. சர்வதேச ஊடகங்கள் மூலம், லிபியாவில் நடந்து கொண்டிருப்பது துனீசியா, எகிப்து போன்ற அமைதி வழிப் போராட்டம் அதை கடாபி ஆயுதம் கொண்டு கொடூரமாக ஒடுக்குகிறார் என ஒரு திட்டமிட்ட ரீதியில் பீதியூட்டும் பிரச்சாரங்களை அமெரிக்கா கட்டவிழ்த்து விடுகிறது. தொடர்ந்து “மனிதாபிமானத்தின்” அடிப்படையில் தாம் லிபிய விவகாரத்தில் தலையிடுவதாகச் சொல்லிக் கொண்டு மார்ச் 19-ஆம் தேதி துவங்கி தொடர்ந்து விமானத் தாக்குதலையும் ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தி வருகிறது. லிபியாவின் 80% எண்ணையைக் கொண்டுள்ள சிர்ட்டே வளைகுடா பிராந்தியத்தில் இருக்கும் சைரென்னிகா, பெங்காஸி டோப்ருக் போன்ற கலவரக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் இராணுவ ஆலோசகர்களும், உளவுப்பிரிவு அதிகாரிகாரிகளும் வந்திறங்கியுள்ளனர்.

ஈராக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் சாட்டில் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் 2003 மார்ச் 19இல் அந்த நாட்டில் விமானக் குண்டுவீச்சை ஆரம்பித்தார். சரியாக எட்டு வருடங்கள் கழிந்தநிலையில், 2011 மார்ச் 19இல் லிபியாவில் குண்டுமழை பொழிய ஆரம்பித்தது. ஜனநாயகத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இது இடம்பெறுகின்றதென்று மீண்டும் கூறப்படுகின்றது. நோபல் சமாதானப் பரிசை வென்ற அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சர்வாதிகாரியை அகற்றி, ஜனநாயகத்தை நிலைநாட்டவே நீர்மூழ்கிகளிலிருந்து ஏவுகணைகள் செலுத்தப்படுவதாகத் தெரிவிக்கின்றார்.

தமது ஜனநாயக அந்தஸ்துகுறித்துப் பேசிக்கொண்டு, லிபியாமீது குண்டு வீசத் தமக்கு உரிமையுண்டென்று தெரிவிக்கும் பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி, நோர்வே, டென்மார்க் மற்றும் போலந்து என்பவை உண்மையில் ஜனநாயக நாடுகளா? அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜனநாயத்தை ஏற்றுமதிசெய்வதாகக் கூறும் ஏனைய நாடுகளைவிடக் கடாபியின் லிபியா கூடுதலான ஜனநாயகத் தன்மையைக் கொண்டதாகும். மக்களை வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்வதற்கு முன்னராக, ஒவ்வொருவரும் ஏனைய ஒவ்வொருவர் குறித்தும் நன்கு அறிந்திருப்பதை உறுதிசெய்தல் வேண்டும். இல்லையெனில், வாக்களிப்புக்கு எவ்வித ஜனநாயக அடிப்படையும் இருக்கமாட்டாது. அது ஒரு சர்வாதிகாரியைத் தெரிவுசெய்யும் ஜனநாயகத்தின் போலித் தோற்றமாகவே அமையும்.

லிபிய அரசு ஒரு பழங்குடிகள் கூட்டிணைவு முறைமை அடிப்படையில் அமைந்ததாகும். அது அதன் வரைவிலக்கணத்தின் பிரகாரம் மக்களைச் சிறிய தனியமைப்புகளாகக் குழுநிலைப்படுத்துகின்றது. ஒரு குல மரபுக்குழு அல்லது ஒரு கிராமம் ஒரு தேசத்தைவிடக் கூடுதலான ஜனநாயக உணர்வைக் கொண்டதாகும். இதற்கான மிக எளிமையான காரணம் மக்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருப்பதும், அங்கத்தவர்களின் தாக்கங்களும், பிரதித் தாக்கங்களும் குழுமீது விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவகையில் ஒருவகையான சுய-பிரமாணப்படுத்தலையும், சுய-தணிக்கையையும் கொண்டிருக்கும் ஒரு பொதுவான வாழ்க்கை ஒத்திசைவு நயத்தைப் பகிர்ந்துகொள்வதுமாகும்.

அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய  ோன்ற நாடுகளில் உள்ள சமூகங்கள் அனைத்தும் பெருமளவுக்கு நகர்மயப்படுத்தப்பட்டவை என்பதோடு, அனேகமான அயலவர்கள் இருபது வருட காலம் அருகருகே வசித்தபோதிலும் ஒருவரையொருவர் அறியாதவர்களாக, பேசாதவர்களாக உள்ளனர் என்பதே யதார்த்த நிலையாகும். இந்த நாடுகள் 'வாக்கு' எனப்படும் அடுத்த படிநிலைக்குப் பாய்ந்து வந்தவையாகும். வாக்கு என்பது புனிதநிலைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வாக்காளர் ஏனைய பிரஜைகளை அறிந்திராவிடில், நாட்டின் எதிர்காலம்குறித்து வாக்களிப்பதில் புண்ணியமில்லையென்ற விடயம் தெளிவாக மழுங்கடிக்கப்பட்டுள்ளது. இது வெளிநாடுகளில் வசிப்போருக்கும் வாக்குரிமை வழங்குமளவுக்கு எள்ளிநகையாடும் அளவுக்குச் சென்றுள்ளது. தேர்தலொன்றுக்கு முன்னர் இடம்பெறும் எந்த ஜனநாயக விவாதத்துக்கும் ஒருவரோடொருவரும், ஒவ்வொருவரிடையிலும் தொடர்பாடல் என்பது ஒரு முக்கியமான முன்நிபந்தனையாகும்.

ஒரு பெரிய, சிக்கலான சமூகத்தில் தவிர்க்கமுடியாதவாறு எழக்கூடிய ஆயிரக்கணக்கான நலன் முரண்பாடுகளைக் கையாளும்வகையில் எழக்கூடிய சட்ட மற்றும் நீதிசார் நடவடிக்கைமுறைகளை விவாதிப்பதற்குச் செலவழிக்கவேண்டிய பெருமளவிலான நேரத்தைச் சேமிக்கவேண்டுமாயின், வழங்கங்கள் மற்றும் நடத்தைப் பாங்குகளில் எளிமை அவசியமாகும். மேற்குலக நாடுகள் தம்மை மேலும் சிக்கலான சமூகக் கட்டமைப்பைக்கொண்ட நாகரிகமடைந்த தேசங்களென்று அழைத்துக் கொள்ளுகின்றன. அதேவேளையில் லிபியா ஓர் எளிமையான வழக்கங்கள் தொகுதியைக் கொண்ட, நாகரிக முதிர்ச்சியற்ற பழங்காலச் சமூகமாகக் கருதப்படுகின்றது.

இந்த அம்சம்கூட லிபியா ஜனநாயகத்தில் பாடம் வழங்க முயலும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் மேலும் சிறந்தமுறையில் ஜனநாயகம்குறித்த அளவுகோல்களுடன் பொருந்தியமைகின்றது என்பதைக் காட்டுகின்றது. சிக்கலான சமூகங்களில் எழும் முரண்பாடுகளில் அனேகமான சந்தர்ப்பங்களில் அதிகார வலுக்கொண்டவர்களே வெற்றியடைகின்றனர். இதனாலேயே பணக்காரர்கள் சிறைவாசத்தைத் தவிர்த்துக் கொள்வதற்கு மிகச்சிறந்த வழக்கறிஞர்களை அமர்த்திக்கொள்ளுகின்றனர். வங்கியொன்றை நாசமாக்கிய நிதியியல் குற்றவாளியொருவர் தப்பிச்செல்வதற்கும், சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வாழைப்பழமொன்றைத் திருடியவர்மீது அரச அடக்குமுறையைப் பிரயோகிப்பதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உதாரணமாக, நியூயோர்க் நகரத்தின் ஜனத்தொகையில் 75%ஆனோர் வெள்ளையினத்தோராவர். 80%ஆன முகாமைத்துவப் பதவிகளில் அவர்களே உள்ளனர். ஆயினும் சிறைகளிலுள்ளவர்களில் 20%ஆனோர் மாத்திரமே வெள்ளையர்களாகவுள்ளனர். அந்தஸ்திலும், செல்வத்திலும் மக்களிடையே பாரிய வேறுபாட்டை உடைய நாடுகள்தான் தற்போது லிபியாவில் குண்டுவீசிக்கொண்டிருக்கின்றன, ஜனநாயகத்தைக் கொண்டுவருவதாகப் பீற்றிக்கொள்ளும் நாடுகளைவிட லிபியா கூடுதலான அளவுக்கு ஜனநாயகத்தைக் கொண்டதாகும்.

உண்மையான ஜனநாயகம் இருக்கவேண்டுமாயின் ஆடம்பரப் பொருட்கள் இருத்தலாகாது. 'சுகபோகப் பொருட்கள் செல்வத்தை அவசியப்படுத்துகின்றன. இதனால் செல்வம் தன்னளவிலேயே ஒரு தகுதியாகின்றது. இதனால் மக்களின் நலன் என்பது என்ன விலை கொடுத்தும் வாங்க வேண்டிய ஒரு விடயம் அல்லவென்னும் நிலை ஏற்படுகின்றது. ஆடம்பரப் பொருட்கள் செல்வந்தர்களையும், ஏழைகளையும் ஊழல் நிலைக்குத் தள்ளிக் கெடுக்கின்றன. செல்வந்தர்கள் ஆடம்பரப் பொருட்களை வைத்திருப்பதாலும், ஏழைகள் பொறாமையாலும் கெட்டுப்போகின்றனர். அது தேசத்தின் வலிமையைக் குறைக்கின்றது. வீண் ஆடம்ப உணர்வுக்கு அடிமையாக்குகின்றது. அது மக்களை அரசிலிருந்து தொலைவுக்குத் தள்ளி, அவர்களை அடிமையாக்குகின்றது. அவர்கள் அபிப்பிராயங்களின் அடிமைகளாகின்றனர்.அரசாங்க மற்றும் அரச நிறுவனங்களில் அதியுயர் பதவியில் இருக்கும் ஒரு சிலரின  ஆடம்பர வாழ்வுக்காக, இலாபங்களை அதியுயர்வாக்குதல் என்ற பெயரில், மனப்பதற்றம் ஏற்படுத்தும் மோசமான வேலை நிலைமைகள் காரணமாக ஊழியர்கள் தற்கொலைசெய்யும் அறிக்கைகள் மேற்குலக நாடுகளில் வெளிவருகின்றன. இவை லிபியாவில் இடம்பெறுவதில்லை.

பதினொரு வருடங்களுக்கு முன்னர் டோகோளிஸ் குடியரசில் நடைபெற்ற லோம் உச்சிமாநாடு ஆபிரிக்க யூனியனின் குறிக்கோள்கள், கோட்பாடுகள் மற்றும் அங்கங்களைக் குறித்துரைக்கும் ஆபிரிக்க யூனியன் அமைப்பியல் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. இச்சட்டத்தில் 27 ஆபிரிக்க நாடுகள் கையொப்பமிட்டிருந்தன. இது பரந்த வகையிலான பல நிறுவனங்களை ஏற்படுத்துவதற்கு வழிசெய்திருந்தது. தனி ஆபிரிக்கப் பாராளுமன்றம், நீதிமன்றம், ஆபிரிக்க மத்திய வங்கி, ஆபிரிக்க நாணய நிதியம் மற்றும் ஆபிரிக்க முதலீட்டு வங்கி என்பவை இவற்றுள் அடங்கும். 2005இல் ஆபிரிக்க யூனியன் எதியோப்பியா, அடிஸ் அபாபாவில் இந்த மூன்று நிறுவனங்கள் சம்பந்தமாக ஆபிரிக்க யூனியன் ஆணைக்குழு(AUC)வினால் தயாரிக்கப்பட்ட கருப்பொருள் அறிக்கைகள் மற்றும் வரைபு மரபுடன்படிக்கைகளை ஆய்வு செய்வதற்கான நிபுணர்களின் கூட்டமொன்றை நடத்தியது. ஆபிரிக்க யூனியன் ஆபிரிக்க மத்திய வங்கி (நைஜீரியா), ஆபிரிக்க முதலீட்டு வங்கி (லிபியா) மற்றும் ஆபிரிக்க நாணய நிதியம் (மத்திய ஆபிரிக்கா) ஆகிய நிதியியல் நிறுவனங்களுக்கான ஆசனங்களையும் தீர்மானித்தது.

ஆபிரிக்க நாணய நிதியம், காலப்போக்கில் அதன் பொறுப்புகள் ஆபிரிக்க மத்திய வங்கிக்கு மாற்றப்படுமென்றபோதிலும், ஓர் ஆபிரிக்க யூனியன் நிதி நிறுவனமாக விளங்கும் இந்த நிறுவனம் எதிர்கால ஆபிரிக்க யூனியனின் மூன்று நிதி நிறுவனங்களுள் ஒன்றாகும். இது கமரூனில், யாவோன்டேயைத் தளமாகக் கொண்டு இயங்கும். ஆபிரிக்க மத்திய வங்கி (ACB) ஆபிரிக்க நிதி நிறுவனங்கள் மூன்றில் ஒன்றாகும். இது காலப்போக்கில் ஆபிரிக்க நாணய நிதியத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும்.

1991 அபூஜா சர்வதேச உடன்படிக்கையில் ஆபிரிக்க மத்திய வங்கியின் உருவாக்கம்குறித்து உடன்பாடு காணப்பட்டிருந்தது. இது 2028இல் நிறைவடைதல் வேண்டும். 1999 சேர்ட்டி பிரகடனம் இச்செயல்முறை விரைவுபடுத்தப்பட்டு 2020 அளவில் உருவாக்கம் இடம்பெற வேண்டுமென்று அழைப்புவிடுத்தது. தனி ஆபிரிக்கப் பாராளுமன்றச் சட்டவாக்கத்தினூடாக இது பூரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டதும், ஆபிரிக்க மத்திய வங்கியே ஆபிரிக்கத் தனி நாணயத்தை வெளியிடும் நிறுவனமாகவும், ஆபிரிக்க அரசாங்கத்தின் வங்கியாளராகவும், ஆபிரிக்காவின் தனியார் மற்றும் பொது வங்கித்தொழில் நிறுவனங்களின் வங்கியாளராகவும் விளங்குவதோடு, ஆபிரிக்க வங்கிக் கைத்தொழிலைப் பிரமாணப்படுத்தி, மேற்பார்வை செய்யும் அமைப்பாகவும் விளங்கும். அது உத்தியோகபூர்வ வட்டி மற்றும் பரிவர்த்தனை வீதங்களை நிர்ணயிக்கும். இது ஆபிரிக்க அரசாங்கத்தின் நிர்வாகத்துடன் இணைந்து இக்கருமங்களை மேற்கொள்ளும்.

ஆபிரிக்க முதலீட்டு வங்கி AIB ஆபிரிக்க யூனியனின் மூன்று நிதி நிறுவனங்களுள் ஒன்றாகும். ஏனைய இரண்டும் ஆபிரிக்க நாணய நிதியமும், ஆபிரிக்க மத்திய வங்கியுமாகும்.  ஆபிரிக்க முதலீட்டு வங்கி லிபியாவில், திரிப்பொலியில் தனது தலைமையகத்தைக் கொண்டிருக்கும். அது 2007 ஏப்ரில் முதல் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஒபாமாவினால் முடக்கப்பட்டிருக்கும் 30 பில்லியன் அமெரிக்க டாலர்களும் லிபியன் மத்திய வங்கிக்குச் சொந்தமானதாகும். இத்தொகை ஆபிரிக்க சமஷ;டி அமைப்புக்கு இறுதி வடிவம் வழங்கும் மூன்று முக்கிய கருத்திட்டங்களுக்கு லிபியாவின் பங்களிப்பாகுமென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இவை லிபியா, சேர்ட்டியிலுள்ள ஆபிரிக்க முதலீட்டு வங்கி, யாவோன்டேயில் 42 பில்லியன் அமெரிக்க டாலர  ூலதன நிதியுடன் 2011இல் தாபிக்கப்படவிருந்த ஆபிரிக்க நாணய நிதியம் மற்றும் நைஜீரியா, அபூஜாவிலுள்ள ஆபிரிக்க மத்திய வங்கி என்பவையாகும். ஆபிரிக்க மத்திய வங்கி ஆபிரிக்க நாணயத்தை அச்சிடத் தொடங்கும்போது அது பாரிஸ் கடந்த 50 வருட காலமாகச் சில ஆபிரிக்க தேசங்கள்மீது தனது பிடியைப் பேணுவதற்கு உதவிகரமாகவிருந்த Colonies françaises d'Afrique  FRANC பிராங் மீது விழும் மரண அடியாகவிருக்கும். இதிலிருந்து கடாபிமீது பிரான்சுக்குள்ள கோபத்தைப் புரிந்துகொள்வது இலகுவானதாகும்.

சர்வதேச நாணய நிதியம் 25 பில்லியன் அமெரிக்க டாலர்தொகையை மாத்திரம் வைத்துக்கொண்டு ஒரு முழுக் கண்டத்தை முழந்தாழிட வைத்துள்ளது. அது ஆபிரிக்க தேசங்களை அரச ஏகபோக நிறுவனங்களைத் தனியார் ஏகபோக நிறுவனங்களாக மாற்றுவதுபோன்ற கேள்விக்கிடமான தனியார்மயமாக்கல்களுக்குச் சம்மதிக்க வைத்துள்ளது. ஆகவே, 2010 டிசம்பர் 16–17இல் ஆபிரிக்க நாடுகள் மேற்குலக நாடுகள் ஆபிரிக்க நாணய நிதியத்தில் இணைந்துகொள்ள மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஏகமனதாக எதிர்ப்புத் தெரிவித்தமை ஆச்சரியமூட்டுவதன்று. அந்த உரிமை ஆபிரிக்கத் தேசங்களுக்கு மாத்திரமே உரியதென்று அவை கூறிவிட்டன.

இன்றைய நவீன யுகத்தில் முழு ஆபிரிக்கக் கண்டத்தையும் தொலைபேசி, தொலைக்காட்சி, வானொலி ஒலிபரப்பு மற்றும் தொலைமருத்துவம் மற்றும் தொலைக்கல்வி போன்ற வேறு பல தொழில்நுட்பப் பிரயோகங்கள்மூலம் முன்னேற்றியது கடாபியின் லிபியா ஆகும். Worldwide Interoperability for Microwave Access எனப்படும் மைக்ரோவேவ் பிரவேசத்துக்கான உலகளாவிய சர்வநிலைச் செயற்பாடு வானொலிப் பாலத்தின் காரணமாக கிராமியப் பிரதேசங்கள் உள்ளடங்கும் வகையில் முழு ஆபிரிக்கக் கண்டத்தின் மக்களுக்கும் குறைந்த செலவிலான இணைப்பு வசதிகள் கிட்ட வழி செய்தது கடாபியின் லிபியாவேதான்.

1992இல் 45 ஆபிரிக்கத் தேசங்கள் Regional African Satellite Communication Organization (பிராந்திய ஆபிரிக்க செய்மதித் தொடர்பாடல் அமைப்பு) அமைப்பைத் தாபித்ததே இதற்கு வழி கோலியது . இதன்மூலம் ஆபிரிக்காவுக்குத் தனது சொந்தச் செய்மதி கிடைப்பதோடு, ஆபிரிக்கக் கண்டத்தில் தொலைத்தொடர்பு செலவுகளும் வெகுவாகக் குறைவடைந்தன . கடந்த காலங்களில் ஆபிரிக்காவிலிருந்து வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் தொலைபேசி அழைப்புகள் உலகிலேயே மிகவும் செலவு நிறைந்தவையாகவிருந்தன. தொலைபேசி உரையாடல்களுக்காக, உள்நாட்டு தொலைதூர தொலைபேசி உரையாடல் உள்ளிட்டவகையில் INTELSAT  ோன்ற ஐரோப்பிய செய்மதிகளின் பயன்பாட்டுக்கு ஐரோப்பிய நிறுவனங்கள் வருடாந்தம் 500  மில்லியன யுரோவை அறவிட்டுக் கொண்டிருந்ததே இதற்கான காரணமாகும்.

ஓர் ஆபிரிக்கச் செய்மதியின் கிரயம் ஒரு தடவை மாத்திரம் செலுத்தப்படும் 400  ில்லியன் யுரோ மாத்திரமேயாகுமென்பதோடு, ஆபிரிக்கக் கண்டம் இதற்குமேலும் 500  மில்லியன யுரோவை வருடாந்தக் குத்தகையாகச் செலுத்தவேண்டிய அவசியமும் இல்லாதுபோய்விடும் கருத்திட்டத்துக்கு நிதியுதவி வழங்க ஒரு வங்கி கூட முன்வரவில்லை. உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும், அமெரிக்காவும், ஐரோப்பாவும் 14 வருட காலமாகத் தட்டிக்கழிக்கும்விதமான வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கிவந்தது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல. மேற்கத்தைய கடூர வட்டியில் கடன் கொடுப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட இக்கெஞ்சல்களுக்கு கடாபி முற்றுப்புள்ளி வைத்தார். லிபியா 300  ில்லியன யுரோவை வழங்கியது. ஆபிரிக்க அபிவிருத்தி வங்கி மேலும் 50 மில்லியன யுரோவை வழங்கியது. மேற்கு ஆபிரிக்க அபிவிருத்தி வங்கி மேலும் 27  ில்லியன யுரோவை வழங்கியது. இவ்வாறாகவே ஆபிரிக்கா தனது முதலாவது தொடர்பாடல் செய்மதி RASCOM-QAF1ஐ 2007 டிசம்பர் 26ஆந் திகதி பெற்றுக்கொண்டது.

சீனாவும், ரஷ்யாவும் இதைத்தொடர்ந்து ஆபிரிக்காவுடன் தமது தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்துகொண்டதோடு, தென்னாபிரிக்கா, நைஜீரியா, அங்கோலா மற்றும் அல்ஜீரியாவுக்குச் செய்மதிகளை விண்ணில் செலுத்த உதவின. 2010 ஜுலையில் ஆபிரிக்கா தனது இரண்டாவது செய்மதி RASCOM-QAF1Rயும் விண்ணில் செலுத்தியது. முழுக்க முழுக்கச் ஆபிரிக்க சுதேசிகளால் உருவாக்கப்பட்டதும், அல்ஜீரியாவில் ஆபிரிக்க மண்ணில் தயாரிக்கப்பட்டதுமான முதலாவது செய்மதி 2020இல் விண்ணில் ஏவப்படவுள்ளது. இச்செய்மதி உலகிலுள்ள மிகச்சிறந்த செய்மதிகளுடன் போட்டியிடுமென்றும், அதன் ஆகுசெலவு அவற்றைவிடப் பத்து மடங்கு குறைவாக இருக்குமென்றும் இருக்கும் எதிர்பார்ப்பு சவால்நிறைந்த ஒன்றாகும்.

இவ்வாறுதான் வெறுமனே 300 மில்லியன யுரோவைக்கொண்ட ஓர் அடையாள நகர்வு ஒரு இருண்ட கண்டத்தின் வாழ்வையே மாற்றியமைத்தது. கடாபியின் லிபியா மேற்குலகத்துக்கு வருடாந்தம் 500 மில்லியன யுரோவை மாத்திரம் இல்லாமற்செய்யவில்லை. ஆரம்பக்கடன் வரவிருக்கும் பல வருட காலங்களுக்கு கடன் என்றவகையிலும், வட்டியென்றவகையிலும் பிறப்பிக்கும் பல பில்லியன் கணக்கிலான டொலர்களையும், ஆபிரிக்கக் கண்டத்தைக் கொள்ளையடிப்பதற்கு மறைவியலான ஒரு முறைமையைப் பேணுவதற்கான உதவியையும் கடாபி  எடுத்துக்காட்டானவகையில் இல்லாமற்செய்துள்ளார்.

மேற்குலக நாடுகளைப் பொறுத்தவரையில் மிகவும் அபாயகரமானமுறையில் கடாபியின் வழிகாட்டலின்கீழ் ஓர் ஆபிரிக்க ஐக்கிய இராச்சியத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் ஆபிரிக்க யூனியனின் ஸ்திர நிலையைக் குலைத்து, அதை அழிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முதலில் மத்தியதரை (மெடிற்றரேனியன்) யூனியன  ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டபோதிலும், அது வெற்றியளிக்கவில்லை. வட ஆபிரிக்காவை எந்த வழியிலேனும் ஆபிரிக்காவின் ஏனைய நாடுகளிலிருந்து பிரிக்கவேண்டியிருந்தது. இதற்கு அரபு வம்சாவளி ஆபிரிக்கர்கள் ஏனைய ஆபிரிக்கர்களைவிடப் பரிணாம வளர்ச்சியிலும், நாகரிகத்திலும் உயர்ந்தவர்களென்று தெரிவிக்கும் பழைய, 18ஆம் மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளின் சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டன. கடாபி இதை நிராகரித்தமையால் இது தோல்விகண்டது. மெடிற்றரேனியன் குழுவில் இணைந்துகொள்வதற்கு ஆபிரிக்க யூனியனுக்கு அறிவிக்காதநிலையில் ஒருசில ஆபிரிக்கத் தேசங்களே அழைக்கப்பட்டிருந்ததாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சகல 27 தேசங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாலும் எத்தகைய விளையாட்டு இடம்பெறுகின்றது என்பதை அவர் புரிந்துகொண்டார்.

ஆபிரிக்க சம்மேளனத்தை முன்னேசெலுத்தும் சக்தி இல்லாதநிலையில் மெடிற்றரேனியன்) யூனியன் ஆரம்பிக்கு முன்னரே தோல்வியைத் தழுவியது. பிரான்சின் ஜனாதிபதி சார்க்கோஸியைத் தலைவராகவும், எகிப்தின் ஜனாதிபதி முபாரக்கை உப-தலைவராகவும் ஏற்றநிலையில் அது குறைப்பிரசவமானது. பிரான்சின் வெளிநாட்டமைச்சர் அலெயின் ஜுப்பே, கடாபி வீழ்ந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இந்த யோசனையை மீண்டும் முன்னெடுக்க முயற்சிக்கின்றார். ஆபிரிக்க யூனியனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியளிப்பது தொடரும்வரையில் தற்போதுள்ள நிலையே தொடரும் என்பதையும், உண்மையான சுதந்திரம் இருக்காது என்பதையும் ஆபிரிக்கத் தலைவர்கள் புரிந்துகொள்ளத் தவறுகின்றனர். இதனாலேயே ஐரோப்பிய ஒன்றியம் ஆபிரிக்காவில் பிராந்தியக் குழுக்களுக்கு ஊக்குவிப்பும், நிதியளிப்பும் வழங்கிவருகின்றது.

பிரசல்ஸில் ஒரு தூதரகத்தைக் கொண்டுள்ளதும், நிதியளிப்புக்குப் பெருமளவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்கிநிற்பதுமான மேற்கு ஆபிரிக்க பொருளாதார சமூகம  ஆபிரிக்க சமஷ்டி அமைப்பை எதிர்த்துக் குரல் கொடுப்பது பிரத்தியட்சமானதாகும். இத்தகைய ஒரு காரணத்துக்காகவே ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்கப் பிரிவினை யுத்தத்தில் போராடினார். ஒரு குழுவான நாடுகள் ஒரு பிராந்திய அரசியல் அமைப்பினுள் ஒன்றுசேர்ந்ததும், அது பிரதான குழுவைப் பலவீனப்படுத்துவதே இதற்கான காரணமாகும். இதையே ஐரோப்பாவும் விரும்பியது.  போன்ற பெரும் எண்ணிக்கையிலான COMESA, UDEAC, SADC பிராந்தியக் கூட்டுகளை உருவாக்கும் ஆபிரிக்கர்கள் இந்தத் திட்டத்தை ஒருபோதும் அறிந்துகொள்ளவில்லை. பாரிய வட ஆபிரிக்க கூட்டு என்பது கடாபியின் மதிநுட்பத்தால் தோற்றம்பெறவேயில்லை.

ஆபிரிக்கர்களைப் பொறுத்தவரையில் கடாபி ஒரு தயாள சிந்தையும், மனிதாபிமானமும் உள்ள, தென்னாபிரிக்க இனவெறி ஆட்சிக்குழுவுக்கு எதிரான போராட்டத்தில் தன்னலம்பாராது ஆதரவு வழங்கிய ஒருவராவார். அவர் ஒரு சுயநலவாதியாக இருந்திருப்பின் நிறவெறிக்கெதிரான போராட்டத்தில் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸுக்கு இராணுவரீதியாகவும், நிதியியல்ரீதியாகவும் உதவிசெய்து மேற்குலகத்தின் கோபம் என்னும் இடர்வரவை ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார். இதனால்தான் நெல்சன் மன்டேலா தனது 27 வருடகாலச் சிறைவாழ்க்கையிலிருந்து விடுதலையடைந்ததும், 1997 அக்டோபர் 23ஆந் திகதி ஐ.நா. தடையையும் மீறி லிபியாவுக்குப் பயணஞ்செய்யத் தீர்மானித்தார். இத்தடை காரணமாக 5 வருடகாலமாக எந்த விமானமும் லிபியாவில் தரையிறங்க முடியவில்லை. ஒருவர் டுனீசிய நகரமாகிய ஜெர்பாவுக்குப் பயணஞ்செய்து, வீதியால் 5 மணித்தியாலங்கள் பிரயாணம்செய்து, பென் கார்டெனுக்குச் சென்று, எல்லையைக் கடந்து பாலைவன வீதியில் 3 மணித்தியாலங்கள் பிரயாணம்செய்து திரிப்பொலியை அடைதல் வேண்டும். இன்னுமொரு வழி மோல்ட்டாவினூடாகச் சென்று, மோசமான படகுகளில் இரவில் பாதைச் சேவையில் லிபியன் கரையை அண்மிக்கவேண்டும்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் இந்த விஜயம் 'வரவேற்கத்தக்க ஒன்றல்ல' என்று கூறியபோது, மன்டேலா அதற்குத் தக்க பதிலை வழங்கினார்.'எந்த நாடுமே தான் உலகின் பொலீஸ்காரன் என்று கூறுவதற்கு உரிமை கிடையாது. ஓர் அரசு என்ன செய்யவேண்டுமென்று கூறும் உரிமையும் இன்னுமோர் அரசுக்குக் கிடையாது'. மேலும் அவர், 'நேற்று எமது எதிரிகளின் நண்பர்களாக இருந்தவர்கள் இன்று துணிவுடன் நான் எனது சகோதரன் கடாபியைப் போய்ப் பார்க்கக்கூடாதென்று சொல்லுகின்றனர். எம்மை நன்றியற்றவர்களாகவும், எமது கடந்தகால நண்பர்களை மறந்தவர்களாகவும் இருக்குமாறு புத்திமதி கூறுகின்றனர்' என்று கூறினார்.கடந்தகாலத்தில் மன்டேலாவின் எதிரிகளுக்கு ஆதரவளித்தமைகுறித்து மேற்குலகம் உண்மையில் வருந்தினால், அவரின் பெயரைத் தெருக்களுக்கும், இடங்களுக்கும் நேர்மையாக வழங்குவதாகவிருந்தால், மன்டேலாவும் அவரின் மக்களும் போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு உதவிய கடாபிமீது தொடர்ச்சியாகப் போர் புரிவது எவ்வாறு?

போர்களின் ‘நன்மைகளை’ ஏகாதிபத்தியங்களும் அதன் பன்னாட்டுக் கம்பெனிகளும் அறுவடை செய்து கொள்ளும் அதே வேளையில் அதன் சுமை உலகம் மொத்தமும் உள்ள உழைக்கும் சாதாரண மக்களின் தலையில  ிலைவாசி உயர்வு என்ற பெயரில் சுமத்தப்படுகிறது.ஒவ்வொரு முறை பெட்ரோலிய உற்பத்தி நாடுகள் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் போதும் உலகளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை  உயர்த்துவதன் மூலம் ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க வெறியின் செலவு மறைமுகமாக உலக மக்கள் அனைவரின் தலைமேல் சுமத்தப்படுகிறது. மறைமுகமாக எங்களுடைய செலவில் கொல்லப்படும் ஒவ்வொரு லிபியனின் உயிருக்கும் பதில் சொல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com