Contact us at: sooddram@gmail.com

 

சுரண்டலுக்கு எதிரான பேரெழுச்சி

(ஏ.கே. பத்மநாபன்)

சுரண்டலற்ற உலகை நோக்கிய பயணத் தில் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களின் தவிர்க்க இயலாத தன்மை யினை மே தினம் மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவூட்டியிருக்கிறது. சிகாகோவில் 1886இல் தூக்கிலிடப்பட்ட மே தினத் தியாகிகள், எங்கள் மௌனம் ஒடுக்கப்பட்ட மக்களின் வலுவான குரலாக மாறிடும் என்று பிர கடனம் செய்தார்கள். 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொழிற்மயமாக்கப்பட்டிருந்த உலகத்தில் ஆரம்பித்த போராட்டம் உலகம் முழுவதும், உழைக்கும் மக்களுக்கு நீதி வழங் கிடக் கோரி, வெவ்வேறு வடிவங்களில் இன் றளவும் தொடர்கிறது. சிகாகோ போராட்டத் தில் அடிப்படைக் கோரிக்கையாக விளங்கிய எட்டு மணி நேர வேலை என்பது இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் கோடிக் கணக்கான மக்களுக்கு கனவாகவே இன் றும் தொடர்கிறது. இந்தியாவைப் பொறுத்த வரை, சுதந்திரத்திற்கு முன்பே இது தொடர் பாகப் பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்த போதிலும், நடைமுறைக்கு இன்னமும் வர வில்லை.

சென்ற மே தினத்திற்குப் பின்னர், உலகத் தின் அனைத்து முனைகளிலும் மக்கள் பெரும் திரளான முறையில் அணிதிரண்டு, வலுவாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதைப் பார்த்தோம். உலகப் பொருளாதார நெருக்கடியானது இனியும் நீடித்திருக்க முடியாத இந்த முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராகப் போராட்டங்கள் தவிர்க்க முடியாதவை என்பதை மீண்டும் ஒருதடவை அடிக் கோடிட்டிருக்கிறது. ஆயினும், கிளர்ச் சியாளர்களின் குரல் - அரபு வசந்த நாடுக ளாக இருந்தாலும் சரி, அல்லது வால்ஸ்டி ரீட்டைக் கைப்பற்றுவோம் போராட்டமாக இருந்தாலும் சரி, இம்முதலாளித்துவ முறையை மாற்றியமைக்கக் கூடிய விதத்திலான ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் அப்போராட் டங்கள் அமைந்திடவில்லை.

இப்போராட்டத்தைத் தொடர்ந்து முன் னெடுத்துச் செல்லக்கூடிய எந்த அமைப்பும் இவ்வியக்கங்களை நடத்திடவில்லை. ஆயி னும், ஏகாதிபத்திய சக்திகளின் கோட்டை களாக விளங்கும் இந்நாடுகளில் நடைபெறும் மக்கள் எழுச்சியைக் குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த ஓராண்டில் உலகின் பல பகுதிகளிலும் விரிவான முறையிலும் வீரியத் துடனும் இப்போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டங்களில் சில, பல விதங்களில் வரலாறு படைத்தவைகளாகும். ஜோஹன் னஸ்பர்கில் இரு மாதங்களுக்கு முன் நடை பெற்ற உலகத் தொழிற்சங்கங்கள் சம்மே ளனத்தின் (றுகுகூரு-றுடிசடன குநனநசயவiடிn டிக கூசயனந ருniடிளே) பிரசிடெண்சியல் கவுன்சில் கூட்டத் தில் தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள் நன்கு தொகுக்கப்பட்டுள்ளன.

‘‘உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க் கத்தின் போராட்டங்கள் முன்பைவிட உக்கிர மாகவும், மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நம்பிக்கையூட்டக்கூடிய விதத்திலும் நடந் திருக்கின்றன. தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்கள் ஒவ்வொரு நாளும் உக்கிர மடைந்து கொண்டிருக்கின்றன. நைஜீரியா வில் பலரை பலிகொண்டுள்ள மாபெரும் வேலைநிறுத்தம், பல மாதங்கள் நடைபெற்ற எஸ்எம்இ (ளுஆநு) எனப்படும் மெக்சிகோ மின் ஊழியர்களின் போராட்டம், கிரீஸ் நாட்டில் நடைபெற்ற வீரஞ்செறிந்த உருக்காலைத் தொழிலாளர்களின் போராட்டம், கஜகஸ் தானில் நடைபெற்ற தொழிலாளர்கள் போராட் டம், பனாமா நாட்டில் நடைபெற்ற வாழைத் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம், பனாமா கால்வாயில் நடைபெற்ற தொழிலாளர் கள் போராட்டம், போர்ச்சுக்கல், இந்தியா, தாய் லாந்து, இத்தாலி, போலந்து, பல்கேரியா, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போராட்டங்கள், தென் ஆப்பிரிக்காவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களிலும், உலோகத் துறை (அநவயட ளநஉவடிச)யிலும் நடைபெற்ற போராட் டங்கள், கொலம்பியாவில் உணவுத் துறை யில், பெரு நாட்டில் சுரங்கத் துறையில், இங் கிலாந்தில் பொதுத்துறையில் என எண்ணற்ற போராட்டங்கள், சிலியில் நடைபெற்ற இளை ஞர்களின் போராட்டம், ‘வால்ஸ்டிரீட்டைக் கைப்பற்றுவோம்கிளர்ச்சி- என எண் ணற்றப் போராட்டங்கள். இவை அனைத்தும் உலகில் அனைத்துக் கண்டங்களில் உள்ள தொழிலாளர்களும் நவீன தாராளமயம் மற்றும் சமூக ஜனநாயக அரசாங்கங்களால் கட்ட விழ்த்துவிடப்படும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மிகப் பெரிய அள வில் தொழிலாளர்கள் அணிதிரண்டு வருகி றார்கள் என்பதையே மெய்ப்பிக்கின்றன. இன்றைய தினம், முதலாளித்துவ நெருக்கடி ஆழமாகியுள்ள நிலைமைகளின் கீழ், முத லாளித்துவ அமைப்புமுறை அழுகி அழிந்து கொண்டிருக்கக்கூடிய நிலையில், தொழி லாளர்கள், விவசாயிகள், இளைஞர்களின் போராட்டங்கள் நம்பிக்கை ஒளிக்கீற்றை அளிக்கின்றன.’’

உலகில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட மான போராட்டங்களில் மேலே குறிப்பிடப் பட்டவை ஒருசிலதான்.

கார்ப்பரேட் ஊடகங்கள் தொழிலாளர் களின் போராட்டங்களில் பலவற்றை மூடி மறைத்துவிட்டபோதிலும், ஐரோப்பாவிலும் மற்றும் பல கண்டங்களிலும் தொழிலாளர்கள் பங்கேற்கும் போராட்டங்கள் மிகப் பிரம்மாண் டமான அளவில் தொடர்ந்து கொண்டிருக் கின்றன.

அமெரிக்காவில், ‘வால்ஸ்டிரீட்டைக் கைப்பற்றுவோம்போராட்டம் தொடர்வ துடன், அங்குள்ள பல்வேறு அமைப்புகள் வரும் 2012 மே முதல் நாளன்று, ‘‘தொழிற் சாலைகளில் வேலைநிறுத்தம், பள்ளிக் கூடங்கள் நடக்காது, கடைகள் மூடப்பட் டிருக்கும், வங்கிகள் மற்றும் வர்த்தகம் எதுவும் நடைபெறாது’’ என்ற பிரகடனத்துடன் பிரம் மாண்டமான பொது வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கின்றன.

இந்த பூமண்டலத்தில் உள்ள மக்கள் தெருக்களில் அணிதிரளும் அதே நாளில்’, அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களும் இந்நடவடிக்கையில் முழுமையாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரகடனம் அறை கூவல் விடுத்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள அதிகாரப்பூர்வ தொழிற்சங்கங்கள் மே தினத்தைக் கொண்டாடுவதில்லை என்பது இங்கு நாம் குறித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் வேறொரு தினத்தில் உழைப்பாளர் தினத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

நெருக்கடியில் மிகவும் ஆழமாகச் சிக்கித் தவிக்கும் ஏகாதிபத்தியவாதிகள் மிகவும் மோசமான முறையில் தாக்குதல் தொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஜனநாயகத்தின் பேரில் எந்தெந்த நாடுகளில் எல்லாம் தலை யிட முடியுமோ அங்கெல்லாம் தலையிடத் தொடங்கி இருக்கிறார்கள். நேட்டோ தலையீட்டை அடுத்து, லிபியா மிகவும் தத் தளித்துக் கொண்டிருக்கிறது. பல்வேறுபட்ட மக்களின் மீதும் கொடூரமான தாக்குதல்கள், கொலைகள், கொள்ளைகள் என்று நடக்காத நாளே இல்லை. ஜனநாயகத்தைக் காப் போம்என்று சொல்லிக்கொண்டு, சிரியா வில் ஆயுதங்களும், பணமும் கொட்டப்படு கின்றன. ஈரான் முற்றுகைக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறது. உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் ஏகாதிபத்தியவாதிகளின் கட்டளை களைக் கேட்க வேண்டும் என்று பணிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவிலும் இதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆட்சி அதிகாரத்தி லிருக்கும் நவீன தாராளமயக் கொள்கையின் தூதுவர்கள் நிதி மூலதனத்தின் கட்டளைக் கிணங்க நவீன தாராளமயக் கொள்கையை மிகவும் வேகமாக அமல் படுத்தத் துடிக்கிறார்கள்.

இவ்வாறு ஆட்சியாளர்கள் கடைப்பிடிக் கும் கொள்கைகளால் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு மேல் பிரச் சனைகளால் தள்ளப்பட்டு, நாட்டில் ஒரு கொந்தளிப்பான நிலைமை பரவிக் கொண் டிருக்கிறது.

நாட்டில் உள்ள மத்தியத் தொழிற்சங்கங் கள் மற்றும் தேசிய சம்மேளனங்களின் அறை கூவலுக்கிணங்க பிப்ரவரி 28 அன்று நடை பெற்ற மாபெரும் வேலை நிறுத்தத்தில் உழைக்

கும் மக்களின் கோபம் நன்கு வெளிப்பட்டது.

இவ்வாறான நாட்டு மக்களின் மத்தியில் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, ஒன்றுபட்ட போராட்டங்களை மேலும் மேலும் வலுவாக நடத்திட வேண்டியது இந் தியத் தொழிலாளர் வர்க்கத்தின் பொறுப்பாகும்.

நாட்டின் பல பகுதிகளிலும், கிராமப்புற இந்தியாவில் விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள் விவசாய நெருக்கடியின் காரண மாக தற்கொலைப் பாதையில் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலை யில், தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங் கள் இவ்வாறு பரிதவித்துக் கொண்டிருக்கிற விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர் களையும் அணிதிரட்டக்கூடிய விதத்திலும் அமைந்திருக்க வேண்டும்.

இத்தகைய பணிகளைச் செய்திடக் கூடிய வகையிலும் நம் அனைத்து முயற்சி களும் அமைந்திட வேண்டும்.

மே தினம், இந்தியத் தொழிலாளர் வர்க்கத் தின் ஒற்றுமையை வலுப்படுத்தும் பணியை யும், நாட்டுப்புற மக்களின் பிரச்சனைகளைக் கையில் எடுத்துக்கொண்டு தொழிலாளி - விவசாயி ஒற்றுமையை வலுப்படுத்தும் பணி யையும், உலகம் முழுவதும் போராடிக் கொண் டிருக்கும் நம் சகோதர, சகோதரிகளுக்குத் தார்மீக ஆதரவைத் தெரிவிக்கும் பணியையும் மே தினம் நம் அனைவருக்கும் நினைவூட் டுகிறது. உலகின் பல பகுதிகளிலும் போரா டும் தொழிலாளர்கள் அந்த நாடுகளின் ஆட்சி யாளர்களால் மிகவும் கருணையற்ற முறை யில் பழிவாங்கப்படுகிறார்கள், தாக்கப்படுகி றார்கள், ஏன், பல நாடுகளில் கொல்லவும்பட் டுள்ளார்கள்.

இவர்களுக்கு ஆதரவாக வலுவான தார்மீகநடவடிக்கைகள்எடுக்கவேண்டி யது மிகவும் முக்கியமாகும்.

உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்து ஆளும் வர்க்கங்கள் சொரணையற்றி ருப்பது தொடர்வதால், இவையும் மிகவும் முக் கியமானவைகளாக மாறுகின்றன.

மே தினத்தின் சாராம்சம், வர்க்கப் போராட் டங்களைத் தீவிரப்படுத்துவதும், சுரண்டலற்ற சுதந்திரமான உலகைப் படைப்பதை நோக்கி, தார்மீக ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளை வலுவாக முன்னெடுத்துச் செல்வதுமே யாகும்.

சர்வதேச தொழிற்சங்க அமைப்புகளில் வர்க்கப் பார்வை கொண்ட ஒரே அமைப்பான உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனம் (றுகுகூரு), பொது எதிரிகளுக்கு எதிராக ஒருங் கிணைந்து போராடக் கூடிய நிலைமைகளை உருவாக்குமாறு சர்வதேச தொழிலாளர் வர்க் கத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது.

உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத் தின் பிரசிடென்சியல் கவுன்சில் அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது:

‘‘இந்த சமயத்தில், சர்வதேச தார்மீக ஒரு மைப்பாடு இயக்கங்கள் மிகவும் அவசிய மாகும். ஒரு பக்கத்தில், தொழிலாளர் வர்க்கம் தங்கள் நாடுகளில் போராடும் அதே சமயத் தில், சர்வதேச தொழிற்சங்கக் கடமையை ஆற்றிடவும் முன்வர வேண்டும். பிற நாடு களில் நடைபெறும் போராட்டங்களுக்கு வலு வான முறையில் தார்மீக ஒருமைப்பாட் டினை வெளிப்படுத்திட வேண்டும். இத்த கைய ஒருமைப்பாடு நடவடிக்கைகள் அனைத்துத் தொழிற்சாலைகளிலும், பணி யிடங்களிலும் பேசப்படும் பொருளாக இருந் திட வேண்டும். இவை தொடர்பாக அனைத் துத் தொழிலாளர்களுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும், அவர்கள் மத்தியில் தைரியத்தை ஏற்படுத்த வேண்டும், போராட்டத்தில் அவர் கள் தனிமைப்படவில்லை. மாறாக உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கம் அவர் களுக்கு உறுதுணையாக நிற்கிறது என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கவேண்டும். சர்வ தேச அளவிலான இத்தகைய தொழிலாளர் வர்க்க ஒற்றுமை உணர்வு ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்திடும்.’’

இந்த ஆண்டு மே தினத்தன்று வீதி களில் நாம் அணிவகுத்திடும்போது, மேலே குறிப்பிட்ட பணிகள் அனைத்தையும் நம் மன தில் இருத்தி, வரவிருக்கும் காலங்களில், சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல சபதமேற் போம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com