Contact us at: sooddram@gmail.com

 

யாழ்ப்பாணத்தில் மேதின கூட்டமைப்பு 

(தமிழ்நேசன், கனடா)

 தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது   இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான யு.என்.பியுடன் இணைந்து இம்முறை யாழ்ப்பாணத்தில் மேதினத்தைக்கொண்டாட இருக்கின்றார்கள். இவர்களின் உறவு இன்றைக்கு நேற்று ஏற்பட்டது அல்ல அன்று  யு.என்.பி அரசு ஆட்சியில் இருந்தபோது அதன் பங்காளிக்கட்சியாக பங்கெடுத்த தமிழரசுக்கட்சி அமைச்சுப்பதவியையும் ஏற்றுக்கொண்டது அன்றில் இருந்து இன்றுவரைஇந்த பிரதான சிங்களக்கட்சியுடன்  தமிழ்த்தேசிய கூட்டமைப்பு  இறுக்கமான உறவை ஏற்படுத்தி வருகின்றது.  

இலங்கையில் தமிழ்மக்களுக்கு பிரச்சினை இருக்கின்றது கட்டாயமாகத் தீர்க்கப்படவேண்டும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது துணிந்து கூறியவர் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்கள்.  ஏனைய சிங்களத்தலைவர்கள் போன்று அல்லாது உதட்டளவில் கூறாமல் தனது உள்ளத்தினால் சிங்கள மக்கள்மத்தியில் பகிரங்கமாகக்கூறி  ஆட்சியைகைப்பற்றி ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக புலிகளுடன் யுத்தநிறுத்தத்தை மேற்கொண்டு பின்னர் புலிகளின்  தாக்குதலினால் யுத்தம் முறிவடைந்து சண்டை ஏற்பட்டபோதும் பலத்த சவால்களுக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்குரிய அரசியல் தீர்வை முன்வைத்தபோது யு.என்.பி  தலைவர் ரணில் விக்கிரசிங்கா அதனை கடுமையாக எதிர்த்ததுமட்டுமல்ல அதன் நகலை பாராளுமன்றத்திலேயே வைத்து எரித்து ஓரு சிங்கள அபிமானியாகவும் இனவாதியாகவும் தனது சுயரூபத்தைக் காட்டிக்கொண்டார் என்பது முழு இலங்கை மக்களுக்கும் தெரிந்தவிடயம். இப்படியான இனவாத நஞ்சை நெஞ்சினில் வைத்திருப்பவரிடம் எப்படி தமிழ்தேசியகூட்டமைப்பு கைகோர்த்து அதுவும் யாழ்ப்பாணத்தில் மேதினத்தை கொண்டாட முன்வந்திருக்கின்றார்கள் என்ற விடயம் பலத்தகேள்விகளை எழுப்பியுள்ளது.                                

இன்றைய ஜனாதிபதி மகிந்த அவர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வை இழுத்தடிக்கின்றார், தமிழ்ப்பகுதியில் இராணுவ ஆக்கிரமிப்பு புத்தவிகாரைகள் கட்டப்படுகின்றன, மற்றும் சிங்களக்குடியேற்றங்கள் போன்ற குற்றச்சாட்டுக்கள் தமிழ்த்தேசியகூட்டமைப்பினால் முன்வைக்கப்படுகின்றன இதில் உண்மை இருக்கின்றது.  

ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் அவர்கள் நியாயமான ஒரு கேள்வி ஒன்றை பகிரங்கமாக யு.என்.பி கட்சியிடமும் ஜே.வி.பி கட்சியிடமும் கேட்டிருந்தார் அந்தக்கேள்வி என்னவென்றால் அதுசரி தமிழர்களுக்கான இனப்பிரச்சினைத் தீர்வில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன? என்பதுதான் கேள்வி அதற்கு இன்றுவரை இந்தக்கட்சிகளிடம் இருந்து பதில் இல்லை. இவர்களும் தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கத்தயார் இல்லை என்பது இவர்களின் மௌனங்களில் இருந்து தெரியவருகின்றது.                                     

யாழ்ப்பாணம் வரும  ூட்டமைப்பின் கூட்டாளிக்கட்சியான யு.என்.பி கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவிடம்  தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது பகிரங்கமாக இரண்டு கேள்விகளை கேட்பார்களா?  

(1) ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ அரசு இலங்கை--இந்திய ஒப்பந்தத்தின் மூலம் தமிழர் மாகாணங்களுக்க  வழங்கப்பட்ட காணி பொலிஸ் அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கமுடியாது என்று திட்டவட்டமாகக் கூறுகின்றது  இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?. இந்த அதிகாரங்களை அரசாங்கம் தமிழ்மக்களுக்கு வழங்கவேண்டும் அதற்கு யு.என்.பியின் ஆதரவு உண்டு  என்பதை பகிரங்கமாக கூறுவீர்களா?                                                  

(2) தமிழ்ப்பகுதியில் இராணுவ ஆக்கிரமிப்பு புத்தவிகாரைகள் கட்டப்படுகின்றன  மற்றும் சிங்களக்குடியேற்றங்கள் போன்ற குற்றச்சாட்டுக்கள் தமிழ்த்தேசியகூட்டமைப்பான உங்களால் முன்வைக்கப்படுகின்றன.  எனவே மேற்குறிப்பிட்ட மூன்று விடயங்களையும் யு.என்.பி கட்சியின் தலைவர் ரணிலிடம் மகிந்த அரசு இந்த தழிழர் விரோதபோக்குகளை கைவிட்டுவிட்டு தமிழ்ப்பகுதிகளில் தமிழர்கள் சுதந்திரமாக வாழவழி செய்யவேண்டும  என்பதை பகிரங்கமாக அறிக்கை விடும்படிகேட்பீர்களா?                                                            

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒன்றை மட்டும் தெரிந்துகொள்ளவேண்டும். ரணில் யாழ்ப்பாணத்திற்கு வந்து தமிழர்களின் உரிமைகளைப்பற்றியோ இராணுவ அரசியல் விடயங்கள்பற்றியோ மூச்சுவிடமாட்டார். தமிழ் மக்களுக்கு ஆதரவானவர் போல நடித்து தமிழர்களை திருப்திப்படுத்தவும் நாசுக்காக சில விடயங்களை கூறிவிட்டு, கூட்டமைப்பினராகிய நீங்கள  இழிச்சவாயர்கள் என்பதை உள்ளத்தில் நினைத்து தான் நினைத்ததை சாதித்துவிட்டதாகவும் பெருமிதம் கொள்ளுவார். இந்தக்கூட்டத்தினால் நன்மை அடைவது ரணிலும் யு.என்..பி கட்சியும்தான் தமிழர்கள் அல்ல என்பதைத் புரிந்து கொள்வீர்கள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com