Contact us at: sooddram@gmail.com

 

21ம் நூற்றாண்டிலும் காலணித்துவ ஆதிக்கம் தொடர வேண்டுமா?

தென் அமெரிக்க நாடுகளில் கொலம்பியா, பெரு, சிலி போன்றவை மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்படக் கூடியவை என்கிற கருத்து இருக்கிறது. வெனிசூலா, பொலிவியா ஆகியவை பற்றிக் கேட்கவே வேண்டாம். அமெரிக்காவுக்கு நேரடியாகச் சவால் விடுபவை. ஆர்ஜென்டினா நீண்டகாலமாக எந்தப் பக்கமும் சாராமல் இருந்தது. அமெரிக்காவைப் பகைத்துக் கொள்ளவும் விரும்பியதில்லை. ஆனால், கிறிஸ்டினா கிச்னர் அதிபராகப் பதவியேற்ற பிறகு வெனிசூலாவுடனும் பெருவுடனும் குறிப்பிடத்தக்க அளவுக்கு நெருங்கினார். மேற்கத்திய நாடுகளை எரிச்சலூட்டும் வகையில் ஈரானைப் புகழ்ந்து தள்ளினார். இதன் தொடர்ச்சியாக ஒரு பழைய பிரச்சினையை ஆர்ஜென்டினா மீண்டும் கையிலெடுத்திருக்கிறது. அது ஃபாக் தீவுகள் எனப்படும் மால்வினாஸ் தீவுக் கூட்ட உரிமையைப் பற்றியது.

அண்மையில் கொலம்பியாவில் நடந்த அமெரிக்க நாடுகள் தொடர்பாக மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, மால்வினாஸ் என்பதற்குப் பதிலாக மாலத்தீவு என்று கூறினார்.

தாம் தவறாக என்ன பேசினோம் என்று கூட அவரால் புரிந்து கொள்ள முடியவில்லையாம். அந்த அளவுக்கு பெரும்பாலான நாடுகளுக்கு எந்த அக்கறையும் இல்லாத ஒரு விவகாரம் மால்வினாஸ் பிரச்சினை.

ஆனால், ஆர்ஜென்டினாவுக்கும் பிரிட்டனுக்கும் இது கெளரவப் பிரச்சினை. இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் உரிமைப் பிரச்சினை.

ஆர்ஜென்டினாவை ஒட்டிய அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 500 கி. மீ. தொலைவில் இருக்கிறது. ஃபாக் தீவுக் கூட்டம், பிரிட்டனுக்கு இங்கிருந்து சுமார் 13 ஆயிரம் கி. மீ. தூரம் ஸ்பெயின் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டபோது அந்தத் தீவுக் கூட்டமும் தங்களுக்குச் சொந்தமாகிவிட்டது என்பது ஆர்ஜென்டினாவின் வாதம். ஆனால், ஃபாக் தீவுகளை ஸபெயின் கைவிட்டுச் சென்ற பிறகு 1833 ஆம் ஆண்டு முதல் அதைத் தாங்களே "நியாயப்படி" நிர்வகித்து வருவதாக பிரிட்டன் கூறுகிறது.

இந்தத் தீவுக்காக 1982 ஆம் ஆண்டில் அப்போதைய ஆர்ஜென்டினாவின் இராணுவ அரசும் பிரிட்டனும் நேரடியாக யுத்தம் செய்தன. ஃபாக் தீவுகளில் இரு நாட்டு இராணுவங்களும் மோதிக் கொண்டதில் பிரிட்டனைச் சேர்ந்த 225 வீரர்களும், ஆர்ஜென்டினாவின் 650 வீரர்களும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. முடிவில் பிரிட்டிஷ் இராணுவத்திடம் ஆர்ஜென்டினா சரணடைந்தது.

போர் முடிந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், ஆர்ஜென்டினாவின் சுயமரியாதை மீது அந்தப் போர் ஏற்படுத்திச் சென்ற வடு மட்டும் இன்னும் ஆறவில்லை. போருக்குப் பிறகு எல்லாவிதமான உறவுகளையும் இரு நாடுகளும் புதுப்பித்துக் கொண்டன. ஆயுத உடன்பாடுகள் கூட செய்து கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், ஃபாக் தீவுப் பிரச்சினை மட்டும் அவ்வப்போது எழுவதும் மறைந்து போவதுமாக இருந்து வருகிறது.

இப்போதைக்கு இந்தத் தீவுக் கூட்டம் பிரிட்டனின் பிற காலனி ஆதிக்கப் பிரதேசங்கள் செயல்பட்டு வருவதைப் போல சுயாட்சி முறையிலேயே இயங்கி வருகிறது. அதாவது பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் தலைமையிலான காலனி. இங்கு பொருளாதார நடவடிக்கைகளும் தன்னிச்சையானவை. மீன் பிடிப்பது, சுற்றுலா போன்றவையே பிரதானத் தொழில்.

இரு நாடுகள் சண்டையிட்டுக் கொள்ளும் அளவுக்கு பொருளாதார முக்கியத்துவம் ஏதும் இந்தத் தீவுகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எண்ணெய் வளங்கள் இருக்கலாம் என்று கருதப்பட்டாலும், அவற்றைத் தோண்டுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடக்கவில்லை.

ஃபாக் தீவுகளில் வாழும் மக்களில் பெரும் பகுதியினர் பிரித்தானியர்கள். அதனால் இயல்பாகவே பிரிட்டனுடன் சேர்ந்திருப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், ஆர்ஜென்டினா அப்படி அவர்களின் போக்கிலேயே விட்டு விட விரும்பவில்லை. நிலம் எங்களுடையது என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது.

இப்போது திடீரென இந்தப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கிடைத்திருப்பதற்குக் காரணம் ஃபாக் போரின் 30 ஆண்டு நினைவு தினம் கடந்த 2 ஆம் திகதி ஆர்ஜென்டினாவின் அனுசரிக்கப்பட்டதும், அதையொட்டிய நிகழ்வுகளும் தான். ஃபாக் தீவுக்குச் செல்லும் கப்பல்களை ஆர்ஜென்டினா தடுப்பதாக சில காலமாகவே பிரிட்டன் குற்றம் சாட்டி வந்தது. இது பொருளாதாரத் தடையை ஏற்படுத்துவதற்கான முயற்சி என்றும் அந்த நாடு கூறியது.

இதைத் தடுக்கும் வகையில், தனது போர்க் கப்பலை ஃபாக் தீவுகளை ஒட்டிய அட்லாண்டிக் கடல் பகுதியில் பிரிட்டன் நிறுத்தியது. இதையடுத்து பிரச்சினையை ஐ. நா. வுக்கு கொண்டு சென்றது ஆர்ஜென்டினா. ஃபாக் தீவுகளைக் கைப்பற்றுவதற்காக போர் தொடுக்கப்படும் வாய்ப்புகள் மிகக் குறைவு தான். வாய்ப்பே இல்லை என்று கூடக் கூறலாம். ஒருவேளை போர் நடந்தால் கூட ஆர்ஜென்டினா ஜெயிப்பதற்கான சாத்தியம் கிடையாது. 30 ஆண்டுகளுக்கு முன் இராணுவ ஆட்சியின் போது இருந்த ஒப்பீட்டளவிலான ஆயுத பலம் ஆர்ஜென்டினாவிடம் இல்லை என்பது தான் உண்மை.

அண்டை நாடான பராகுவேயுடன் போர் புரிந்தால் கூட ஆர்ஜென்டினாவால் ஒரு நாளுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள். தானே விரும்பித்தான் இந்த ஆயுதக் குறைப்பு நடவடிக்கைகளை ஆர்ஜென்டினா மேற்கொண்டது என்பது இங்கு விவரிக்க இயலாத தனிக்கதை.

ஃபாக் தீவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு ஆர்ஜென்டினாவும் பிரிட்டனும் எத்தனையோ வாதங்களை முன் வைக்கின்றன. ஆனால், ஒரு தரப்பு விட்டுக் கொடுக்காத வரை, எந்த சர்வதேச அமைப்புக்குப் போனாலும் இதற்குத் தீர்வே கிடைக்கப் போவதில்லை என்பது தான் நிஜம். விவகாரம் அவ்வளவு சிக்கலானது.

21 ஆம் நூற்றாண்டிலும் காலனி ஆதிக்கங்கள் தொடர வேண்டுமா என்கிற விவாதத்தை உருவாக்கியிருப்பது ஒன்று தான் இப்போதைக்கு இந்தப் பிரச்சினையால் ஆர்ஜென்டினாவுக்குக் கிடைத்திருக்கும் ஒரே நன்மை என்று கூறலாம். அந்த வகையில் தாம் ஒரு வழக்கமான அதிபர் இல்லை என்பதை கிறிஸ்டினா கிச்னர் காட்டிவிட்டார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com