Contact us at: sooddram@gmail.com

 

ஒபாமாவின் ஒருபால் திருமண அங்கீகாரத்தால் அமைதியிழக்கும் அமெரிக்கா, ஐரோப்பா?

அமெரிக்காவின் எல்லையில்லாத தனிமனித சுதந்திரம் இறைவனின் ஏற்பாடுகளை கட்டமைப்புகளை உடைத்துச் செல்லுமளவு அல்லது உதாசீனம் செய்யுமளவிற்கு போய்விடுமோ என்பதே இன்றைய மத தலைமைகளின் அங்கலாய்ப்பும் ஆதங்கமும். காதல் என்றாலும், கல்யாணம் என்றாலும் ஆணுக்கும், பெண்ணுக்குமிடையில்தான் நடக்கும். உலகத்தைப் படைத்த ஆண்டவன் ஆதமையும், ஏவாளையும் சோடியாகப் படைத்து, குடும்பமாக்கி மனித குலம் பெருகச் செய்தான். இதை அடிப்படையாகக் கொண்டே எல்லா வேதங்களும் ஆணையும், பெண்ணையும் சடங்குகள் செய்து சம்பிரதாய முறையிலான திருமணங் களை நடத்துகின்றன.

மனித வரலாறு ஆரம்பமானது தொட்டு இன்று வரை இதுவே பொது வான முறையாகவும் உள்ளது. புதிதாக மேற்குலகிலும் அமெரிக்காவிலும் முளைத்துள்ள தனிமனித உரிமைவாதம் ஒருபால் திருமணத்தை அங்கீகரிக்கு மாறு ஆர்ப்பாட்டம் செய்கின்றது.

ஒரு பெண் இன்னொரு பெண்ணையும், ஒரு ஆண் மற்றொரு ஆணையும் திருமணம் செய்து குடும்பம் நடத்த அனுமதிக்க வேண்டுமாம் எப்படியிருக்கு தனிமனித உரிமை சிந்தனையின் உச்சக்கட்ட வளர்ச்சி. ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலனவற்றில் இந்த நடைமுறை சட்டத்திலுள்ளது.

கனடா, தென்னாபிரிக்கா போன்றவையும் இந்த ஒருபால் திருமணங்களை ஏற்றுள் ளன. அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி யும் இந்த வினோதமான மனித உரி மைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார். கிறிஸ்தவ மத அமைப்புகள் இது குறித்து இன்னும் வாய்திறக்கவில்லை. தென்னமெரிக்க நாடுகளிலுள்ள பழமை பேணும் கிறிஸ்தவ அமைப்புகள் கடுமையாக இதைக் கண்டித்துள்ளன.

இந்த தீய நடைமுறைக்கு தென்ன மெரிக்க நாடுகள் இடமளிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ அமைப்புகள் கள த்தில் குதித்துள்ள போதும் 2010 ஆம் ஆண்டு ஆர்ஜன்டீனா ஒருபால் திருமணத்தை அங்கிகரித்தது.

தென்னமெரிக்க நாடுகளில் ஆர்ஜன்டீனாவே முதலாவதாக இந்த ஒருபால் திருமணத்தை அங்கீ கரித்ததென்பதால் கிறிஸ்தவ மத அமைப்புக்களின் எதிர்ப்பையும் அதி ருப்தியையும் சம்பாதித்துக் கொண்டது.

ஏனய தென்னமெரிக்க நாடுகள் எல்லாவிடயத்திலும் அமெரிக்காவை எதிர்ப்பதைப் போல் இந்த ஒருபால் திருமண விடயத்திலும் அமெரிக்காவை ஆட்சேபிக்கின்றன. மதம், கலாசாரம் ஒரு காரணமாக இல்லாவிடினும் அரசியலே இதற்குப் பின்னணியாயுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பாராளுமன்றத்தில் மூன்று வகையான சட்டமூலங்கள் இந்த ஒருபால் திருமணம் சம்பந்தமாக முன்வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் ஜுலியட் கிலாட் இது தொடர்பான தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறிவிட்டார்.

ஒபாமா நடைமுறையை தான் பின்பற்றமாட்டாராம். தனது கட்சி எம்.பிக்கள் பல பேர் இந்த ஒருபால் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கும்படியும் அனுமதிக்கும்படியும் கோரியுள்ள நிலையில் தன்னால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார். ஒபாமா இதை அங்கீகரித்திருந்தால் அவரது தனிப்பட்ட நிலைப்பாட்டின் வெளிப்பாடு. இயற்கை உணர்வின் அடிப்படையில் எழுவதே திருமணம் இதில் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதே மானிட வரலாறு. ஒருசிலர் இதை வேறு வகையில் எதிர்பார்ப்பதால் அதையும் பிழையென்று சொல்ல முடியாத நிலையுள்ளது என்கிறார் அவுஸ்திரேலிய பெண் பிரதமர் ஜூலியட்கிலாட். பிரேஸில் இந்த ஒருபால் திருமணத்தை சிவில் சமூகங்களின் கையில் ஒப்படைத்து விட்டு அந்த அமைப்புக்களின் ஆலோசனை அங்கீகாரங்களுடன் செய்யலாமென்கிறது. ஆனால் அங்குள்ள மத அமைப்புகள் இதைச் சட்டமாக்கக் கூடாது என்று தொடர்ந்தும் போர்க்கொடியிலுள்ளன. பிரான்ஸ் ஜனாதிபதியாகவிருந்த நிக்கலஸ் சர்கோஸி இந்த ஒருபால் திருமணத்தை கடுமையாக எதிர்த்தார். சென்ற தேர்தல் பிரச்சாரங்களிலும் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த நடைமுறையை ஒழிப்பதாகவும் ஒருபால் திருமணத்தை சட்டமாக்கப்போவதில்லை என்றும் மேடைகளில் சூளுரைத்தார். ஆனால் தேர்தலில் தோற்றுப்போய்விட்டார். இப்போது புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஹோலண்ட் அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்குள் இதை சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்கிறார்.

பெரும்பாலும் ஜூன் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் விரைவில் பிரான்ஸிலும் இது சட்டமாகலாம். பிரான்ஸைப் பொறுத்தவரை ஒருபால் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு இருந்த மையால் 48 விதமான வாக்குகளையாவது சர்கோஸி பெற்றுவிட்டார். இல்லாவிட்டால் இதையும் விட மோசமான தோல்வியையே சர்கோஸி பெற்றிருப்பார் என்கின்றனர் ஆய்வாளர்கள். சர்கோஸியைவிட பொருளாதார இராணுவ கட்ட¨மைப் புகள் குறித்து கவர்ச்சியான திட்டங் களை முன்வைத்ததாலே ஹோலண்ட் வெற்றி பெற்றுள்ளார். எனவே ஒருபால் திருமணம் சம்பந்தமாக பிரான்ஸ் மக்கள் அவ்வளவாக அலட்டிக்கொள்ள வில்லை என்கின்றனர் பலர்.

இப்போது அமெரிக்காவின் பக்கம் வருவோம். நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எப்படியாவது மீண்டும் வெற்றி பெற வேண்டுமென்ற ஆசை ஒபாமவை பாடாய்ப்படுத்துகிறது. ஏற்கனவே பல வெளிநாட்டு இராணுவ நடவடிக்கைகளால் பொருளாதாரம் பாரிய சுமையாக மாறியுள்ளன. எனவே, ஒருபால் திருமணத்தை அங்கீகரித்தாவது வாக்குகளைப் பெறலாமென்று ஒபாமா நினைத்திருப்பார். இதனால் ஆணும், ஆணும், பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்வதை சட்டமாக்கியுள்ளார். அமெரிக்காவிலுள்ள அதிகமான மானிலங்கள் இந்தச் சட்டத்தை எதிர்க்கின்றன.

சுமார் 30 மாநிலங்கள் குறிப்பாக கரோலினா, புலோரிடா, கொலரொடோ, வேர்ஜினியோ, நிவாடோ, ஒஹியோ, வளிகொன்ஸன் போன்ற மாறிலங்கள் இந்த இயற்கைக்கு மாறான ஒருபால் திருமணத்தை எதிர்த்துள்ளன. ஒட்டுமொத்தமாக 61% வீதமானோர் இந்த இயற்கைக்கு முரணான திருமணத்தை எதிர்க்கின்றனர். இதற்கிடையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள மிற்ரொமினி ஒருபால் திருமணத்தை எதிர்த்து கடுமையாக பிரச்சாரம் செய்யவுள்ளாராம்.

ஒபாமாவுக்கும் இரண்டு பெண்பிள்ளைகள் உள்ளனர்.என்னை ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தால் அப்பெண்ணை என்ன முறை சொல்லி அழைப்பீர்கள் என்று ஒபாமாவின் மகள் தனது தந்தையைப் பார்த்துக் கேட்டபோதுவாய் பிளந்தாராம். மகளை ஆண் முடித்தால் மருமகன் என்று சொல்லலாம் பெண்ணே பெண்ணை முடித்தால் எவ்வாறு உறவு சொல்லி அழைப்பது. மேற்குலகில் இவையெல்லாம் பெரிதாக எடுபடப்போவதில்லை. வெள்ளைமாளிகையில் வேலை செய்யும் பலபேர் ஒருபால் நாட்டமுள்ள பெற்றோரை கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு பெற்றோர்களின் அன்பு, பராமரிப்பு விடயத்தில் எதுவித பாரபட்சமும் காட்டப்படுவதில்லை என்பதை அவ்வூழியர்கள் சொல்லத் தான் கேட்டிருக்கிறேன் என்று கூறும் ஒபாமா அரசியலுக்காக இயற்கை முறையை மாற்றுவது தப்பில்லை என்கிறார்போல. ஒபாமாவின் வாதம் சரியென்றால் ஆண்டவன் ஒரு ஆதமையும் ஒரு ஏவாளையும் படைத்திருக்க தேவையில்லையே! இரண்டு ஏவாள் அல்லது இரண்டு ஆதத்தைப் படைத்திருக்கலாமே என்கின்றனர் மத அமைப்பினர். இவை எல்லாவற்றையும் கிறிஸ்தவவர்களின் உயர் மத பீடமான வத்திக்காண் பார்த்துக் கொண்டிருக்கிறது. வத்திக்கானின் அறிக்கைகள் வெளிவந்த பின்னரே மேற்குலகம் அமெரிக்கா என்பன தடுமாறப் போகின்றன. வத்திக் கானும் இதை அங்கீகரிக்கமாட்டா தென்பதே பலரின் கருத்து.

காதலென்றால் ஆணும், பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ.......

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com