|
||||
|
மூன்றாவது தமிழியல்
மாநாடு – ரொறன்ரோ
தமிழியலா? அல்லது புலிகளுக்கு
LOBBY இயலா?
(Nadchathran Chev-Inthiyan )
7 ஆவது தமிழியல்
மாநாடு இந்த மே
மாதம் 11, 12 Toronto இல் கூட்டப்படுகிறது.
2009 ம்
ஆண்டுவரை
(புலிகள் அழிவதுவரை)
இதனை "லொக்கா" சேரன் எவ்வாறு
புலிகளுக்கு
வக்காலத்து
வாங்க பயன்படுத்தினார்
என்பதை நான் 2008 இல்
விளக்கி எழுதிய கட்டுரை.
நட்சத்திரன் செவ்விந்தியன்.
கனடாவின்
வின்சர் பல்கலைக்கழக
சமூக மானுடவியல்
துறையினரும்
கனடாவின்
ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின்
தென்னாசிய
கற்கைநெறிகளுக்கான
அமையமும்
இணைந்து நடத்தும் வருடாந்த கல்விசார்
தமிழியல்
மாநாடு என்ற கோதாவில்
2006, 2007 ஆகிய ஆண்டுகளில்
இரண்டு மாநாடுகள்
ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில்
நடத்தப்பட்டுள்ளன.
குறித்த அதன் அமைப்பாளர்களே
மூன்றாவது
மாநாட்டை
எதிர்வரும்
மே 16 ம்
திகதி வெள்ளிக்கிழமை
ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில்
கூட்டுகிறார்கள்.
இம்மாநாட்டின் அமைப்பாளர்களையும்
அவர்களது
உள்நோக்கங்களையும்
இக்கட்டுரை
அலசி ஆராய்கிறது.
இம்மாநாடுகளின் அமைப்பாளர்களாக
ரொறன்ரோ பல்கலைக்கழக
ஆங்கிலப்பேராசிரியர்
செல்வா கனக நாயகம்,
வின்சர் பல்கலைக்கழக
விரிவுரையாளர்
(Assistant Professor) சேரன்
மற்றும் தர்சன் அம்பலவாணர்
ஆகியோர் இருக்கின்ற
போதும் அமைப்பாளர்களில்
உண்மையான
அதிகாரம்
பெற்றவராக
இனங்காணப்படுபவர்
சேரனே. செல்வா கனக நாயகம்
ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில்
ஆங்கிலப்
பேராசிரியராக
இருந்தாலும்
அவரது கல்விசார்
சாதிப்புக்கள்
சர்வதேச தரத்தில் சிறப்பானவையாகச்
சொல்லும்
படியானவையாக
இல்லை. அண்மையில்தான் கலாநிதிக்கற்கை
நெறியை முடித்து வந்திருக்கும்
தர்சன் அம்பலவாணர்
Academic standards படி ஒரு சின்னப்பொடியன்
(Naive). வட அமெரிக்கப்
பல்கலைக்கழகங்களில்
வலன்ரைன்
டானியல், சுரேஷ் கனகராஜா, காதிரி இஸ்மாயில்
போன்ற திறமையான பேராசிரியர்கள்
இருக்கின்ற
போதும் அவர்களை அமைப்பாளர்கள்
குழுவுக்குள்
போடாமல் அம்பலவாணரையும்
கனகநாயகத்தையும்
போட்டமையானது
பின்னவர்கள்
சேரன் போடுகிற தாளத்திற்கு
ஏற்ப ஆடுவார்கள்
என்பதனாலேயே
ஆகும்.
ஏந்தவொரு
மாநாட்டின்
அமைப்பாளர்கள்
குழுவும்
மாநாட்டைக்கூட்டுவது
தொடர்பாகவும்
மாநாட்டில்
வாசிக்கப்படவேண்டிய
கட்டுரைகளின்
தெரிவிலும்
ஜனநாயக நடைமுறைகளையும்
Transparency பின்பற்றவேண்டும்.
இம்மாநாட்டின் அமைப்புக்குழு
சேரனின் இரும்புப்பிடிக்குள்
இருப்பதால்
மேற்கூறியவைகள்
பின்பற்றப்படுவதில்லை.
பேராளர்களிடமிருந்து
கட்டுரைகளை
எதிர்பார்ர்பதற்கு
பதிலாக அமைப்பாளர்கள்
தாங்கள் தெரிவு செய்த “பேராளர்களிடம்”
தனிப்பட்ட
ரீதியில்
தொடர்பு கொண்டு மாநாட்டில்
கட்டுரை சமர்ப்பித்து
கலந்து கொள்ளுமாறு
கேட்பார்கள். கல்வியாளர்கள்
(Academics), பத்திரிகையாளர்கள்
பக்கஞ்சாராது
சுயாதீனமானவர்களாக
இருக்கவேண்டும். துரதிஸ்ட வசமாக பெருமளவான
தமிழ் கல்வியாளர்கள்
சுயாதீனமானவர்கள்
அல்லர்.
2001 ம் ஆண்டுவரையும்
சுயாதீனமானவராக
இருந்த சேரன் 2002 ம் ஆண்டுக்குப்பின்னர்
புலிகளின்
பாஸிச அரசியலின்
பிரச்சாரகராக
( Advocate) சீரழிந்தது
ஏற்கெனவே
ஆவணப் படுத்தப்பட்டுள்ளது.
(1. க.மகாதேவன்இ
2006 ஏப்ரல் தேனி இணையம்.
2. நட்சத்திரன்
செவ்விந்தியன்,
தேசம் இதழ் 31 மார்ச்-
மே 2007) செல்வா கனகநாயகம்
அறியாமை காரணமாகவோ
ஆர்வக் கோளாறு காரணமாகவோ
நீண்ட காலமாக புலிகளின்
அனுதாபியாக
இருப்பவர்.
1999ம் ஆண்டு
ரொறன்ரோவில்
புலியாதரவு
இயக்கர்கள்
( LTTE Lobbyists) கூட்டிய
அரசியல் மாநாட்டின்
ஆலோசகர்களில்
ஒருவராக கனகநாயகம்
இருந்தவர்.
சேரன் மற்றும்;
கனகநாயகத்தின்
புலிச்சார்பினாலும்
அமைப்பக்குழுவுக்குள்
ஜனநாயகம்
இன்மையாலும்
வருடாந்தம்
நடந்துவரும்
இம்மாநாடுகளுக்கு
பின்வரும்
புலிகளையும்
விமர்சிக்கும்
அல்லது நடுநிலமையான
சிறப்புக்குரிய
பேராசிரியர்களும்
கல்விமான்களும் வேண்டுமென்றே
தவிர்க்கப்படுகின்றனர்.
1.
சுமதி சிவமோகன் (பேராதனைப்பல்கலைக்கழக
சிரேஷ்ட ஆங்கில விரிவுரையாளர்,நாடகவியலாளர்)
2.
காதிரி இஸ்மாயில்
(இலங்கையைச்
சேர்ந்தவரான
இவர் மினசோட்டா
பல்கலைக்கழக
ஆங்கில இணைப்பேராசிரியர்)
3.
மைக்கேல்
ரொபேட்ஸ்
(தென் ஆஸ்திரேலிய
பல்கலைக்கழகத்தைச்
சேர்ந்தவர்.
தமிழியல்
துறைக்குள்
வரக்கூடிய
குறிப்பிடத்தக்க
பல மானுடவியல்
ஆய்வுகளை
செய்தவர்)
4.
ரட்ணஜீவன்
கூல் (எந்திரவியல்
துறைப் பேராசிரியர்
என்றாலும்
கலிபோர்ணிய
Harvey Mudd college
இல் சமுக
மானுடவியல்
துறையின்
Adjunct Professor ஆக இருந்தவர்.
சமூக மானுடவியல்;
கட்டுரைகளையும்
புத்தகங்களையும்
எழுதியுள்ளார்)
5.
அகிலன் கதிர்காமர்
(லைன்ஸ் என்ற கல்விசார்
சஞ்சிகையின்
ஆசிரியர்)
6.
தயா
சோமசுந்தரம்
7.
ராஜன் ஹ_ல்
8.
எஸ்.எம்.எம்.பஷீர்
(இலண்டன்)
9.
ராம்
மாணிக்கலிங்கம்
10.
கே.சிறிதரன்
11.
சரிகா திராணகம
12.
சுவேந்திரினி
பெரேரா
13.
மைக்கல் ஒந்தாச்சி
(Booker prize winner, Technically ஒரு தமிழரான
ஒந்தாச்சி
கனேடிய பல்கலைக்கழகங்களில்
கற்பித்திருக்கிறார்)
முதல் மாநாட்டில்(2006) வலன்ரைன் டானியல்இ சுரேஷ் கனகராஜா ஆகிய நடுநிலமையான
பேராசிரியர்கள்
கலந்துகொண்டாலும்
இம்மாநாட்டின்
அரசியல் தெரிந்தோ என்னவோ அடுத்தடுத்த
மாநாடுகளில்
அவர்கள்
கலந்துகொள்ளவில்லை.
மறுபக்கத்தில் புலிகளையும்
அவர்களது
அரசியலையும்
கண்மூடித்தனமாக
ஆதரிக்கும்
பல்கலைக்கழகஆசிரியர்கள்
அதிகளவில்
இம்மாநாடுகளில்
வலிந்து அனுமதிக்கப்படுகிறார்கள். கல்விசார் கட்டுரை
என்ற திரைமூடி
புலிகளின்
அரசியலுக்கு
துணைபோகும்
பிரச்சாரக்கட்டுரைகள்
வாசிக்கப்படுகின்றன.
2006 மாநாட்டில்
வாசிக்கப்பட்ட
மார்க் விற்றேக்கரதும்;
யமுனா சங்கரசிவத்தினதும்
கட்டுரைகள்
மேற்கூறிய
வகைக்குள்
வருகின்றன.
மார்க் விற்றேக்கர்
புலிகளின்
உத்தியோகப்
பற்று அற்ற பிரச்சாரகரும்
மனித உரிமை
மீறல்களில்
ஈடுபட்டவருமான
தாரகி சிவராமை உன்னதமான பத்திரிகையாளராகப்
புனைந்து
எழுதி வாசித்த கட்டுரை ஒரு மோசமான
அறிவுத்துறை
மோசடி. 2007 மாநாட்டில்
யமுனா சங்கரசிவமும்
ஹாரிணி சிவலிங்கமும்
வாசித்த கட்டுரைகள்
புலி அரசியலுக்கான
lobbying என்பதற்குள்
வரக்கூடியவை.
இம்மாநாடுகளில் பங்குபற்றிய
அல்லது பங்குபற்ற
இருக்கும்
பீட்டர் ஷால்க், ஜோசப் சந்திரகாந்தன்,
செல்வா கனகநாயகம்,
சேரன், யமுனா சங்கரசிவம்,
வி.அரசு, டாக்மர் ஹெல்மன் ராஜநாயகம்,
என். சிறிஸ்கந்தராஜா
ஆகியோர் பின்வரும்
ஒன்று அல்லது ஒன்றுக்கு
மேற்பட்ட
காரணங்களால்
புலிகளின்
ஆதரவாளர்களாக
இருக்கிறார்கள்
1.
புலிகளுக்கு
வெளிப்படையாக,
மறைமுகமாக
அல்லது இரண்டு வழியிலும்
lobbying செய்பவர்கள்.
2.
புலிகளின்
மீதான அனுதாபமும்
பக்கச்சார்பும்
காரணமாக தங்களின் ஆய்வுக்கட்டுரைகளில்
அறிந்தோ அறியாமலோ புலிகளின்
பாசிஸ அரசியலை வலிதற்ற வாதங்கள் மூலம்
நியாயப்படுத்தியவர்கள்.
இரண்டு இலட்சத்திற்கும்
அதிகமான புலம்பெயர்ந்த
ஈழத்தமிழர்கள்
வாழும் ரொறன்ரோ மாநகர் தமிழ்தேசியவாத
மோகத்திற்கு
ஆட்பட்டிருக்கிறது. இந்த மோகம் உன்னதமான
ஒரு அரசியல்
விஞ்ஞானி
என உலக
தரத்தில்
புகழப்பட்ட
ஏ.ஜே. வில்சனையே காய்தல்
உவத்தலுடன்
பக்கஞ்சார்ந்து
Sri Lankan Tamil Nationalism. Its origins and development in the 19 th and 20 th centuries (London:
Hurst and Company,2000) என்ற
புத்தகத்ததை
ஒருபாற்கோடலுடனும்
பலவீனமான
வாதங்களுடனும்
எழுதவைத்தது.
கத்தோலிக்க
பாதிரியும்
புலிகளின்
Lobbyist ம் ஒரு
மூன்றாந்தர
பல்கலைக்கழக
ஆசிரியருமான
ஜோசப் சந்திரகாந்தனை
ஒரு பக்த
கோடிக்கே
உரிய உருக்கத்துடன்
மேற்கூறிய
தனது புத்தகத்தில்
ஒன்பதாவது
அத்தியாயத்தை
எழுதவிட வில்சனால்
முடிகிறது.
வில்சனின்
புத்தகத்துக்கு
மதிப்பரை
எழுதிய மதிப்புக்குரிய
மைக்கேல்
ரொபேட்ஸ்
"இப்புத்தகத்தை
எழுதியதன்மூலம்
வில்சன் தன்னுடைய இதுகாலவரையான
அப்பழுக்கற்ற
வித்துவச்
சாதனைகளுக்கு(Scholarship) ஒரு களங்கத்தை
ஏற்படுத்தியுள்ளார்”
என்று முடிக்கிறார்.(Narrating
Tamil Nationalism: Subjectivities& Issues, Vijitha
Yapa Publications)
மேலே கூறப்பட்ட
ரொறன்ரோவின்
தேசிய மோகம் மட்டுமே
சேரனின் தற்போதைய சீரழிவுக்கு
காரணமல்ல.
வில்சனைப்போல
அல்லாது சேரன் தமிழ்
தேசியவாதத்தின்
சீரழிவுகளை
அனுபவித்து
அறிந்தவர்.
மேலும் நீண்ட காலப்போக்கில்
தன்னுடைய
தற்போதைய
பக்கஞ்சார்ந்த
நிலைப்பாடு
தன் கல்விசார்
சாதிப்புக்களை
நாறப்பண்ணும்
என்பதையும்
அறிவார்.
சேரனின் தற்போதைய நிலைக்கான
காரணத்தை
விளக்கும்
ஒரு கோட்பாடு
அவரது Narcissistic உளக்குறைபாடு. இக்குறைபாட்டின்
குணங்குறிகள்
தன்னை முன்னிலைப்படுத்தும்
Grandiose மாயை, அதீதமான கவன ஆர்வத்தை
வேண்டுதல்,
மற்றவர்களின்
உணர்வுகளைப்
புரியமுடியாமை,மற்றவர்களில்
பொறாமை கொண்டிருத்தல்
அல்லது மற்றவர்கள்
தன்னில் பொறாமை கொண்டிருப்பதாக
நம்புதல்
முதலியனவாகும்.
2001 ம் ஆண்டுக்கு
முன்னிருந்ததைப்போல
விடுதலைப்புலிகளை
விமர்சிக்கும்
நடுநிலமையாளராக
சேரன் இருந்தால்
முழு ரொறன்ரோ
வாழ் மக்களினதும்
கவனத்தைப்
பெற்று அவரது நாசிசிஸ்ரிக்
நோய்க்குத்
தீனிபோட்டிருக்கமுடியாது.
Lobbying
என்பது இன்றைய பாராளுமன்ற
ஜனநாயங்களில்
குறிப்பாக
வட அமெரிக்காவில்
ஒரு முக்கியமான
அரசியல் நடவடிக்கை. புதிய
ஒரு சட்டத்தை
உருவாக்க
அல்லது இருக்கும்
ஒரு சட்டத்தை
இல்லாதொழிக்க
அரசியல்வாதிகளுக்கு
பல்வேறு வழிகளில் ஊக்கமும் அழுத்தமும்
கொடுத்தலே
lobbying ஆகும். பணத்துக்காக lobbying செய்யும்
டுழடிடிலளைவ
இன்று அமெரிக்காவில்
ஒரு அதிக
பணமீட்டும்
உத்தியோகம்.
இந்திய அரசாங்கம்
சில ஆண்டுகளுக்கு
முதல் தனது அணு
ஆயுத உற்பத்திகளை
தொடர்ந்து
முன்னெடுத்துச்செல்வதற்கு
அமெரிக்காவின்
ஆதரவைப்பெற
தொழில்முறைசார்
அமெரிக்க
Lobbying நிறுவனங்களிடம்
அதிக பணம்
செலவு செய்து அவற்றின் சேவைகளைப்பெற்றிருந்தது.
சேரன் புலிகளுக்கான
ஒரு தொழில்முறைசார்
Lobbyist ஆக இயங்குகிறாரா
என்ற சந்தேகம்அவரது
நடவடிக்கைகளைப்
பார்ப்பவர்களுக்கு
எழும். தன்னுடைய
இதுகாலவரையான
நம்பகத்தன்மைக்கு
தானே மண்ணள்ளிப்போட்டுக்கொண்டு
எதிர்த்துருவமாக
புலிகளின்
பிரச்சாரகராக
மாறுகிறார்.(தீராநதி
பேட்டி 2002: திசைகள் பேட்டி 2005). மனச்சாட்சியின்
கைதிகளான
புத்திஜீவிகளும்
நடவடிக்கையாளர்களும்
புலிகளால்
தொடர்ந்து
கொல்லப்பட்டுக்கொண்டிருக்க
புலிகளின்
ஹிட் லிஸ்ரிலிருந்த
சேரன் வன்னிக்குப்போய்
புலிகளைச்சந்தித்து
திரும்புகிறார்.
ஜோசப் சந்திரகாந்தன்,புதுவை இரத்தினதுரை
போன்றோரையே
மிஞ்சிப்போய்
"தெளிவும்
செறிவும்
சாரமும் காரமும் பொருந்தியதாக
அமைந்திருந்தது
பிரபாகரன்
அவர்களின்
உரை. தளராத
படைத்திறன்,
போர்வலு என்பவற்றின்
மீது உறுதியாகக்
கட்டப்பட்ட
நம்பிக்கையும்
பெருமிதமும்
அவருடைய பேச்சினூடக
வெளிப்பட்டன.”
(கனடா ஈழநாடு.
2006)என்று தலைவரின்
2005 ம் ஆண்டு
மாவீரர்தின
உரையைப்புகழ்ந்து
தலைவரை பப்பா மரத்தில்
ஏற்றுகிறார்
சேரன். இப்போது தான் நடத்திவரும்
மாநாட்டுக்கு
தப்பித்தவறியேனும்
புலிகளை விமர்சிக்கிற
நடுநிலமையான
கல்வியாளர்கள்
பங்குபற்றக்கூடாது
என்பதில்
கவனமாக இருக்கிறார். சேரனின்
மேற்கூறிய
நடவடிக்கைகளைப்
பார்க்கிற
போது பணத்துக்காகவோ
அல்லது புலிகளின்
Lobbyist ஆக இருப்பதால்
கிடைக்கக்கூடிய
அதிகார போதையை அனுபவிப்பதற்கோ
அவர் புலிகளின்
Lobbyist ஆக இருக்கிறாரா
என்ற சந்தேகம்
எழுவது தவிர்க்க இயலாததே.
(
Thesamnet.co.uk,
2008 May) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |