Contact us at: sooddram@gmail.com

 

கேட்டிருப்பீர்கள் தோழர் கே. பொன்னுத்துரை பற்றி . . .

சிந்தனைக்கும் தமிழனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனக் கடந்த நான்கு சகாப்தங்கள் வியாபித்திருந்த இருள் எம்மைவிட்டு மெல்ல விலகிக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தன்னுடைய 96 வயதைப் பூர்த்தி செய்துகொண்டு மேதினமன்று தன் இறுதி ஊர்வலத்தை நடத்தும் வகையில் ஒரு வாய்ப்பைப் பெற்ற தோழர் பொன்னுத்துரை மாக்ஸியத்தில் இறுகிய பற்றாளனாகவும் நடைமுறையாளனாகவும் வாழ்ந்தவர். தென் இலங்கையில் நீர்கொழும்பு, கம்பகா, மினுவாங்கொட பகுதிகளைப் போல வட புலத்திலும் வடமராட்சியை அடுத்து நல்லூர் மாக்ஸியத்தின் நாற்றுப் பாத்தியாக மிளிர்ந்தது. அந்த நல்லூரில் அவதரித்த நாற்றுத் தான் தோழர் பொன்னுத்தரை.

1943 காலப்பகுதியைத் தொடர்ந்து வடபுலத்து மக்களைச் சிந்திக்க வைக்கவும், செயற்பாடுகளை முன்னின்று ஆற்றவும், போராட்டங்களுக்குத் தோள்கொடுக்கவும் ஒரு புனிதக் கூட்டம் உருவானது. அந்தப் பேரலைக்குள் தன்னை இணைத்துக்கொண்டு படிப்படியாக வளர்த்துக்கொண்டு வந்தார். முதலில் லங்கா சமசமாஜக் கட்சியின் அங்கத்தவர்ராகவும், தொழிற்சங்கவாதியாகவும் செயற்பட்ட இவர். அதைவிடக் கொள்கை வளர்ச்சி தேடிக் 1950 களில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்டார். அன்றிலிருந்து பொதுப் பணிகளோடு தன்னை முழுமையாக ஈடுபடுத்தினாலும் ஒரு மாக்ஸ்ட் கும்ப வாழ்விலும் எப்படி வாழவேண்டும் என்பதன் 100 வீத எடும்துக்காட்டாளன்.

இவரது பணிகள் செயற்பாடுகள் பல்வேறு தளங்களிற் பயணித்த போதும் ஒரு உதாரணத்தை இங்கு சொல்லியே ஆகவேண்டியுள்ளது. தழிழ் காங்கிரஸிலிருந்து தமிழரசுக்கட்சி பரிணமித்த காலத்தில் யாழ் நகரத்தில் தமிழரசுக் கட்சி பிரச்சாரக் கூட்டம் போடுவதற்கு மேடையமைத்தது.  அவர்களின் மேடை காங்கிரஸ் காடையர்களால் அடித்து நெருக்கப்பட்டது தந்தை செல்வா, இரும்பு நாகநாதன் உட்பட  தலைவர்கள் ஓடி ஒளிந்துகொண்டனர்.

நிலமையைக் கேள்விப்பட்டதும் கட்சி பேதம் மறந்து காரிய இடத்துக்கு விரைந்து ஒலிபெருக்கியில் ஒளிந்த தமிழ்த் தலைவர்களை வருமாறு அழைத்துக் கூட்டம் முடியும் வரை அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்து.  தழிரசுக்கட்சி முளைத்து வேறூன்ற விதைக்கு நீருற்றிய முன்னோடிகளில் ஒருவர். இது இன்றைய கூட்டமைப்புப் பிரபலங்களுக்கோ கொத்தமைப்பு மிருக ஆதரவாளர்களுக்கோ யாருக்கும் தெரியாத ஒன்று

தினசரி குடும்ப வாழ்க்கையில் கூட இவரிடம் திட்டமிடல் இருக்கும். மனைவியின் சகோரர்களோ, பெற்ற பிள்ளைகளோ, அவரது சகோதரரின் பிள்ளைகளோ, மனைவியின் உறவுக்காரரோ எல்லோருமே ஒரு முற்றத்தில் கூடும் கூட்டுக் குடும்ப உறவுக்கு ஒரு இணைப்பு அலுவலராகவும் தோழமை மிக்கவராகவும் நடந்து காட்டியவர். இப்படியொரு தோழமையும் முழுமை யாராலும் இயலாது அது பொன்னுத்துரை என்ற புனிதனுக்கு மட்டுமே இயல்பானது. மாசுகளற்ற நடைமுறை மாக்ஸிஸ்ட்.

இவர் வாழ்ந்த காலத்தில் இவரோடு கட்சியிலும் தொழிற் சங்க அலுவல்களிலும் இணைந்து செயற்பட்டவர்கள் என்று பட்டியலிட்டால் கட்டுரை நீண்டுவிடும். இருந்தும் கார்த்திகேசன், ராமசாமி ஜயர், இராசையா, பொன் கந்தையா, கந்தசாமி, துணை மேயர் துரைராஜசிங்கம், உசா நடராஜா, அளவையாளர் தேவராஜர் இப்படி மனித குல அக்கறையாளர்களோடு தோழமையும் தோள்கொடுத்து செயற்பட்ட வரலாறும் கொண்ட தோழர் பொன்னுத்துரை நாம் கற்றுக்கொள்ள முன்னுதாரணமானவர்.

யாழ் வைத்தியசாலை வரலாற்றில் ஆகக் கூடிய முதியவர் இரத்தானம் செய்தவர் என்ற பதிவைத் தோழர் பொன்னுத்துரையின் படத்தோடு நாம் பார்த்தபோது தோழமை பற்றிய பெருமிதம் எம்மைப் புளகாங்கிதப் படுத்தியது.

வடபுலத்தில் நாம் இழந்த மாக்ஸிஸ வைரங்களின் வரிசையில் இவர் தான் இறுதி என்ற ஏக்கம்? ஏனென்றால் வடபுலத்தின் அண்மை வரலாறு அறிவைத் தொலைத்துவிட்டுத் தேடுகிறது! மாக்ஸியத்தை வளரவிடாமல் நசித்தது, மாக்ஸியம் விரும்பிகளும் மௌனித்திருக்கும் சூழலை உருவாக்கியது என்ற கசப்பான சூழ்நிலையை எமக்குச் சொந்தமாக்கிவிட்டது.

எனது மரணத்தின் பின் ஜயர் வேண்டாம், கிரிகைகள் வேண்டாம், செய்ய விரும்பும  ெலவுகளை  அனாதை இல்லங்களுக்கு கொடுங்கள், பட்டு வேண்டாம் என் சிவப்புக் கொடியை மட்டும் மேலே பேர்த்தாலே போதும்! என்ற மரண சாசன வார்த்தைகளைத் தம் மக்களோடு பகிர்ந்துகொண்டு மறைந்த அந்த மாமனிதரைப் பின்பற்றி வாழும் வாய்ப்பே மகத்தானது தான்.

தோழர்கள் ஜெயபாலன், லோகநாதன். 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com