Contact us at: sooddram@gmail.com

 

புங்குடுதீவின் மகள்

ஜனநாயகத்தில் மக்கள் எழுச்சி போராட்டங்களே பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. மன்னர் ஆட்சியை மட்டுமல்ல ராணுவ ஆட்சியையும் அடிபணிய வைக்கும் சக்தி மக்கள் சக்தியே. எவ்கையான் ஆட்சியானாலும் அவை மக்களுக்கு எதிராக செயல்படும் போது தூக்கிவீசப்படுகின்றன. இங்கு மக்கள் நியாயமாக போராடும்போது வெற்றி நிச்சயம். அராஜகத்தை அரவணைத்தால் அது மிக மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். அது சந்தர்பவாதிகளுக்கு சாதகமாகிவிடும்.

அண்மையில் புங்குடுதீவு மகள் மிலேச்சதனத்திற்கு பலியானார்.அவரின் இழப்பு இரும்பு இதயத்தயும் உருக்கும். அந்த அவலச்சாவு அனைவரையும் கதிகலங்க செய்தது. மனிதாபிமானம் செத்துவிட்ட மிருகங்களின் செயல்பாடு அனைவரையும் சீண்டிவிட்டது. என்வீட்டில் இருக்கும் என் பெண் பிள்ளைக்கும் இது ஏற்படலாம் என்ற பயம் எல்லோரையும் வீதிக்கு வரவைத்தது.

காவல் நிலையம் நீதிமன்றம் இவை இரண்டுமே சட்டத்தை நடைமுறை படுத்தவேண்டியவை. சம்பவம் நடந்த பின் காவல்துறை காட்டிய காலதாமதம் விளைவை விபரீதமாக்கியது. மேலதிகமாக குற்றம் சட்டபட்டவரை காப்பாற்ற முயன்ற சட்டத்துறை பீடாதிபதியின் செயல் நீதி மன்றத்தில் நம்பிக்கை இழக்க செய்தது. நீதி கிடைக்காது என்ற சந்தேகம் போராட்டமாக மாறியது.

முளையில் கிள்ளாவிட்டால் விருட்சமான பின் வெட்டுவது என்பது இந்தியாவின் மகள் டெல்லியில் கற்றபாடம். தன் நண்பனுடன் இரவு பஸ்ஸில் பயணித்த பெண் சந்தித்த கொடூரம் மக்களின் எழுச்சியால் தலைநகரை ஸ்தம்பிக்க வைத்தது மட்டுமல்ல இந்திய குற்றவியல் சட்டத்துக்கும் மாற்றத்தை தந்தது. அதனால் தான் கடுமையான தண்டனைகள் கிடைக்க வழி பிறந்தது.

இருந்தபோதும் தம்மை மனிதஉரிமை வாதிகள் என காட்டும் சிலரின் செயல் மனிதம் செத்தவர்கள் செய்யும் செயலை நியாயப்படுத்த அவர்கள் செயலுக்கு பலியானவரே தூண்டுதல் என கூற முற்படுவது வேதனையானது. டில்லி மருத்துவ மாணவி கொடூரம் பற்றி ஆவணப்படம் எடுத்து அதற்கு இந்தியாவின் மகள் என பெயரிட்டு வக்கிரத்துக்கு வக்காலத்து வாங்கும் சிலரின் பேட்டிகளையும் போட்டு மனித மிருகங்களின் செயலை நியாயபடுத்துவதாக அது அமைந்தது என்ற குற்றசாட்டு எழுந்தது.

பெண்கள் அணியும் ஆடைகள், அவர்தம் நடை உடை பாவனை என்னை குற்றம் புரிய தூண்டியது என கூறுபவன் தன் தாய் படுத்திருக்கும் பொது விலகிய சேலை காட்சியை, சகோதரி உடை மாற்றும்போதுதவறுதலாக காணும் அரை நிர்வாணத்தை பார்த்து அதே தவறை அவர்களுக்கு செய்வான என கேள்வி கேளுங்கள்.

காமம் கண்ணில் இல்லை மனதில் தான். வக்கிரம் பார்வையில் இல்லை நெஞ்சில்தான். பார்க்கும் மோசமான படங்கள்,படிக்கும் மூன்றாம் தர சஞ்சிகைகள் ,கேட்கும் கழிசடை செய்திகள் அவன் மனதில் பதிந்து நெஞ்சில் நிறைந்தது மதிகெட்டு அந்த வக்கிரங்களுக்கு தவறுகளை, தப்புகளை செய்ய தூண்டுகிறது. கறந்த இடத்தை கண் நாடலும் பிறந்த இடத்தை தேடலும் பட்டினத்தார் பாடலில் உண்டு.

பாலியல் வன்முறைகள் காலா காலமாக நடந்து வருகின்ற போதும் கூட்டு பாலியல் வன்முறைகள் எம் மண்ணில் அண்மை காலமாக தான் இடம்பெறுகின்றன. கிரிசாந்தி இராணுவத்தினரால் வல்லுறவுக்கு உட்பட்டபின் எம்மவரே எம்மவர் மீது வக்கிரங்களை தீர்க்கும் பெரும்பாலான சம்பவங்கள் யாழ்மாவட்டத்தில் இடம்பெற்றதை இங்கு மீண்டும் நினைவூட்டுகிறேன். சாவகச்சேரி சம்பவத்தில் இறுக்கமாக இருந்த நீதிபதியை இடமாற்றம் செய்யும் அளவிற்கு அரசியல் அராஜக நிலை காணப்பட்டது. தீவுப்பகுதியில் பல கொடூரங்கள் கிணறுகளில் போட்டு மறைக்கபட்டதாக அண்மையில் பாராளுமன்றத்தில் குரல் எழும்புகிறது.

 முன்பும் அதே தமிழ் பெண் உறுப்பினர் ஆட்சி பங்காளி தமிழ் கட்சி உறுப்பினர்களை பார்த்து தீவு பகுதியில் உங்களுக்கு எத்தனை மனைவிகள் என நேரடியாக கேட்க அப்போது எதிர்கட்சியில் இருந்த யு என் பி உறுப்பினர் கைகொட்டி நகைத்தனர்( யு ரியுப்பில் பார்க்கலாம்).இத்தனைக்கும் மேலாக வடமாகாண முதலாவது எதிர் கட்சி தலைவர் தன கட்சி பிரதேச சபை தலைவரையே அவர் மனிவி உடனான தொடர்பின் காரணமாக சுட்டு கொன்றதும் நடந்தேறியது. இன்று எதிர்கட்சி தலைவராக வந்திருப்பவர் கூட லண்டன் சென்று அரசியல் தஞ்சம் பெற்று பல ஆண்டுகளின் பின் தலைவருடன் சமாதானமாகி மீண்டுவந்தவர். தான் லண்டன் சென்ற காரணத்தை மறைத்து வைத்தியத்துக்காக சென்றதாக கூறும் இவர் வைத்தியம் பெற லண்டனில் தஞ்சம் பெற தேவை இல்லை என்பதை அறியாத காதில பூ கந்தசாமிகள் வடபகுதி மக்கள் என எண்ணுகிறார்.

அரசியல்வாதிகளால் விதைக்கபட்ட விதைகளே இன்று வித்தியா என்ற மொட்டை கசக்கி எறிந்திருக்கின்றன. நான் இந்த கட்சி உறுப்பினர் என் தலைவருக்கு நாட்டின் தலைமையுடன் , இராணுவத்துடன் ,காவல்துறையுடன் நெருங்கிய தொடர்புண்டு அவரை அதிகாரத்தில் அமர்த்தினால் நான் எதை செய்தாலும் அவர் கரம் என்னை காக்கும் என்ற மனநிலை வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் பலகாலமாக காணப்படுகிறது.

அண்மையில் பல வாள்வெட்டு சம்பவங்கள் நடந்தபோது அவர்களின் பின்னணியில் பல இளம் சட்டத்தரணிகள் இருந்ததாக மக்கள் சந்தேகித்தனர். தம்மை சுற்றி ஒரு அடியாள் கூட்டத்தை வைத்திருக்கும் தேவை புதிதாக மாகாண அரசியலில் நுழைந்தவர்களுக்கும் சில சட்டதரணிகளுக்கும் தேவைபடுகிறது.

யுத்தத்தின் பின் வடக்கில் காணப்படும் அதீத நிதி நிறுவனங்களின் செயல்பாடு இளைஞர்களின் குறுக்கு சிந்தனைக்கு வடிகால் அமைக்கிறது. முன்பு ஒரு வாகனம் வாங்குவதென்றல் பெரிய தொகை முன்பணம் 2 சாட்சிகள் பல ஆவணங்கள் தேவை. தற்போது அடையாள அட்டை விலாசம் சிறிய முன்பணம் போதும் ஸ்கூட்டி, மோட்டர் சயிக்கில், ஓட்டோ சில மணி நேரத்தில் இவர்கள் கையில். மேலதிகமாக புலம்பெயர் உறவுகள் அனுப்பும் பணத்தில் ஸ்மாட் போன்கள் போதும் இவர்கள் வேட்டையாடி திரிய.
போதாக்குறைக்கு சந்து போந்து என எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மதுபான விற்பனை நிலையங்கள்,தங்கி மது அருந்தும் விடுதிகள்,மாதகல் கரை மூலம் வரும் கேரளத்து கஞ்சா, கூடவே மாவா எனும் போதை மருந்து இவர்களை துள்ளி விளையாட செய்கிறது.

தேர்தல்களை வெல்லுதல் பதவிகளை தக்கவைத்தல் தவிர வேறெந்த நோக்கமும் இல்லாத அரசியல்வாதிகள் இந்த பாதை மாறும் இளைஞர்கள் பற்றியோ அவர்களின் சமூகவிரோத செயல்பற்றியோ அக்கறை படுவதில்லை. அடுத்த தேர்தலில் இவர்களின் பங்களிப்பு தேவை என்பதால் கண்டும் காணாத போக்கில் செயல்படுகின்றனர்.

2015 ஆடசிமாற்ரம் வரை நடந்த விடயங்களை ராணுவத்தின்மீதும் அவர்கள் அனுசரணையுடன் செயல்பட்டவர் மீதும் போட்டு முதல்பக்க செய்தியாக பகிரங்கபடுத்தினர். அவற்றில் உண்மை இல்லாமல் இல்லை. நெருப்பில்லாமல் புகையவில்லை. ஆனால் 2015 நல்லாட்சியை அமைத்தவர்கள் அதன்பின் நடந்தவை பற்றி ஏன் பேசமறுக்கின்றனர்.
வவுனியாவில் பல பாலியல் லஞ்சம் பெற்ற பிரதேச சபை தலைவர் யார் ? கனகராயன் குளத்தில் பள்ளிமாணவியை கூட்டு பலாத்காரம் செய்தவர் யார் ? இன்று புங்குடுதீவு மகள் சம்பவத்தில் மக்களால் பிடித்து கொடுக்கபட்ட சந்தேகநபரை வெள்ளவத்தை தப்பிசெல்ல உதவியது யார்?

மனித உரிமை பற்றி பேசுவதானால் மனிதாபிமான மற்றசெயலை செய்ததாக சந்தேகிக்கபடுபவரை விசாரணைக்கு முன் நாட்டை விட்டு தப்ப உதவியவர் யார்? இதுபற்றி பகிரங்கமாக எழுதாமல் தமிழ் பத்திரிகைகள் சிரேஸ்ட சட்டத்தரணி என்றும் விரிவுரையாளர் என்றும் மட்டுமே பூடகமாக எழுதின. காரணம் தேர்தலில் த தே கூ அவரை வேட்பாளராக களம் இறக்க உள்ளது. அதே புங்குடுதீவு மகள் வித்தியாவின் மண்ணில் பிறந்தவர் தான் இந்த கொழும்பு சட்டத்துறை பீடாதிபதி திரு தமிழ்மாறன். அவரை நம்பித்தான் மக்கள் சந்தேகநபரை ஒப்படைத்தனர். அவர்தான் பொலிசில் ஒப்படைப்பதாகா கூட்டிசென்றார். அந்த நபர் தான் வெள்ளவத்தை வரை தப்பி சென்றவர்.

குற்றம் செய்தவரை விட குற்றம் செய்ய தூண்டியவரே தண்டனைக்குரியவர். இங்கு மீண்டும் டெல்லி மாணவி விடயத்தை நினைவூட்ட வேண்டு. ஆரப்பத்தில் அந்த சம்பவம் பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை. 12மணிக்கு ஒரு பெண் ஆண் நண்பனுடன் போனாள் என்ற விதமாகவே பார்க்கபட்டது. ஆனால் பல்கலை கழக மாணவர்கள் பொது அமைப்புகள் பேரணியால் டெல்லி அதிர்ந்தபோதுதான் பிரதமர் மன்மோகன்சிங் தலையை சொறிந்தார். அந்த பேரெழுச்சி நடந்திராவிட்டால் அதிரடி நடவடிக்கைகள் புதியசட்ட விதிகள் நிறைவேறியிருக்க மாட்டாது. பத்தோடு பதினொன்றாக அது மறக்கடிக்கபட்டிருக்கும்.
அதே போன்ற எழுச்சிதான் புங்குடுதீவிலும் நடந்தேறியது. நீண்ட நாட்களாக பத்தோடு பதினொன்றாக பலசம்பவங்கள் தீவக கிணறுகளிலும் பற்றை காடுகளிலும் மறைக்கப்பட்டபோது தம் உயிர் பயத்தில் மௌனம் காத்த மக்களுக்கு ஆட்சிமாற்றம் புதிய தென்பை தந்திருக்கிறது. ராணுவகெடுபிடிகள் அவர்களின் அனுசரனையாளரின் சண்டித்தனம் புதிய ஆட்சிகாலத்தில் உறங்குநிலையில் இருப்பதால் மக்கள் விளித்து கொண்டார்கள்.

பிடிபட்டவர்களை பொலிசார் முறைப்படி தடுத்து வைத்திருந்தால்,அவ்வாறே நடவடிக்கை எடுக்கப்படும் என தனது வாகனத்தில் கூட்டி சென்ற சட்ட பீடாதிபதி செயல்பட்டிருந்தால் மக்கள் ஆத்திரம் அடைந்திருக்க மாட்டார்கள். தாம் பிடித்து கொடுத்த நபர் நாட்டை விட்டு தப்ப போகிறார் என்ற ஆவேசத்தில் பீடாதிபதியை சுற்றி வளைத்தவர்கள்
அவருக்கு பாதுகாப்பு கொடுத்த பொலிசாரை தாக்கவில்லை. அவர்களது வாகனங்களை சேதமாக்கவில்லை. தப்பி சென்றவரை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்பதே அவர்களின் போராட்டம். அந்த அதிகாரிகளில் தமிழ்மாறனின் மாணவரான வட மாகாண உயர் பொலிஸ் அதிகாரி (மனித உரிமைகள் சட்டம் படித்தவர்). இருந்துள்ளார். பலமணி போரட்டத்தின் பின் அவர் கொடுத்த எழுத்து மூல உறுதி மொழியால் மக்கள் கலைந்து சென்றனர். இந்த நிகழ்விற்கு முழுக்க முழுக்க பீடாதிபதியும் பொலிசாருமே காரண கர்த்தாக்கள் . மக்கள் அல்ல. ( என்ன நடந்ததோ தெரியவில்லை இன்று பல பொலிஸ் அதிகாரிகள் உடனடி இடமாற்றம் பெற்றுள்ளனர்.)

இந்த சிறு நெருப்பு தான் பெரும் தீயாக யாழ் நீதிமன்றில் மூண்டது. பொலிசாரின், சட்டபீடதிபதியின் நடவடிக்கையால் சந்தேகம் கொண்ட மக்கள் யாழ் நீதிமன்றம் முன் நீதி வேண்டி ஆற்பாட்டம் செய்தனர். குற்றவாளிகள் எந்தவழியிலும் தப்பிக்க கூடாது, நல்லாட்சியில் கூட கடந்தகால அனுபவங்கள் பாடமாக கொள்ளப்படவேண்டும் என்ற அவர்களின் உள்ளக்கிடக்கையே கோசங்களாக வெளிபட்டன.

மக்களுக்காக போராட போனவர்களே தம் அதிகாரத்தை மக்கள் மீது செலுத்தி பல ஆண்டுகளாக அவர்களை அடக்கி வைத்திருந்தனர். அந்த அமுக்கமே பேரிடியாக இப்போது முழங்குகிறது. இது ஆரம்பம் முடிவல்ல. முன்பு யாழ் பலகலை கழக சமூகம் பொங்குதமிழ் நடத்திய போது வளாகத்துள் மட்டுமே நடத்தலாம் ஊர்வலம் போகமுடியாதென தடைவிதித்தனர். அப்போது இருந்த அமைச்சரிடம் அவரது நண்பர் தொடர்புகொண்டு
நீங்கள் முன்பு நடத்திய போராட்டத்தைதானே அவர்களும் நடத்த போகிறார்கள் ஊர்வலத்துக்கு அனுமதித்தால் என்ன என கேட்க அவர் அனுமதிக்கலாம் ஆனால் ஊர்வலம் திடீரென சிறீதர் தியட்டர் பக்கம் திரும்பினால் நாமெல்லாம் ஹெலிகொப்டரில் தான் தப்பி கொழும்பு செல்லவேண்டி வரும் என கூறினாராம்.

அன்று ராணுவ பிரசன்னத்தில் அடங்கிகிடந்த மக்கள் பிரவாகம் இன்று நீதிமன்றத்தை முற்றுகையிட்டதற்கு குற்றவாளிகள் தப்பிக்க விடப்படுவார்கள் என்ற பயம் தான் காரணம்.ஆனால் அவர்களின் நியாயமான போராட்டத்தில் புகுந்த சில சில்லறைகளின் செயல் மொத்த யாழ் சமூகத்தையுமே தலைகுனிய வைத்துவிட்டது. படித்தவர்கள், நீதியை மதிப்பவர்கள் என பெயர்கொண்டவர்களே நீதிமன்றத்தை சேதப்படுத்தினர் எனும் செயல் யாழ் மக்களுக்கு மட்டுமல்ல புங்குடுதீவு மகளுக்கும் இழைக்கப்பட்ட அவமானம்.
அரசியல் லாபம் கருதி தன் தலைவனின் பெயருடன் கட்சிபெயரையும் இணைத்து செயல்படுபவரும், நகை திருட்டில் பிடிபட்டு கட்சியில் இருந்து கழட்டி விடப்பட்டு புதிய கட்சி தொடங்கியவர்களும்,வேறு சில புல்லுரிவிகளும் மக்கள் எனும் வெள்ளாட்டு கூட்டத்தில் புகுந்து குழப்பத்தை தூண்டியவர்கள் என்பது பலருக்கு தெரியும். அவர்கள் ஆரப்பித்து வைக்க கும்பலில் கோவிந்தா போட்ட 100க் கணக்கானவர் இன்று அனுராதபுரம் சிறையில்.

விடுதலை போராட்டம் இதயசுத்தியுடன் ஆரப்பிக்கபட்டது. அதில் வீழ்ந்து பட்டபலர் இன்று வைத்தியர்களாக விஞ்ஞானிகளாக,சமூக அக்கறை உள்ளவர்களாக உருவாகியிருக்க வேண்டியவர்கள். சகோதர படுகொலைகளால் பல நாடுகளில் தஞ்சம் அடைந்த பெரும்பாலோர் அந்த நாடுகளில் எம் இனத்திற்கு பெருமை சேர்க்கின்றனர். உழைத்து வாழும்,தாம் வாழும் நாட்டை உயர்த்தி வாழும் சமூகம் என பிரித்தானிய கனடா பிரதமர்கள் உட்பட பல நாட்டு தலைவர்களால் பாராட்டப்படும் ஈழ தமிழ் சமூகத்தவர் விட்டு சென்றவர்களில் ஒரு சில எச்ச சொச்சங்கள் இங்குவாழும் அனைத்து தமிழருக்கும் தலைகுனிவை ஏற்படுத்துகின்றனர். அவர்களால் தம் அரசியலுக்கு வரும் நன்மை கருதி ஓடும் புளியம் பழமும் போல் இருக்கும் அரசியல் தலைமைகளை என்னவென்று சொல்வது.
சகோதரி முறையானவரை மணமுடிப்பதும், தமையனின் மகளை மனைவியாக்குவதும்,அண்ணன் மனைவியே மைத்துனருக்கு அசிற் அடிப்பிப்பதும்,பிரமச்சாரி என கூறிக்கொண்டு தன நெருங்கிய நண்பருக்கு தன் மகன்களை அறிமுகம் செய்வதும் பண்பாட்டு பிறழ்வுகள் தான்.

புலிகளின் காலம் போல் உடன் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கேட்பவர்கள் ஒன்றை கவனத்தில் கொள்ளவேண்டும். விடுதலை போராட்டகாலத்தில் சட்டம் ஆயுதங்களின் கையில் மாறியது. அப்போது மின்கம்ப தண்டனை சர்வசாதாரணம். செத்தவன் துரோகி அல்லது சமூக விரோதி. கொன்றதர்க்கான காரணம் நடந்த விசாரணை, நிரூபிக்கபட்ட உண்மை எதுவுமே கொன்றவருக்கு மட்டுமே தெரியும். மக்கள் அதனை விடுதலை போர் என்ற நிகழ்ச்சிக்குள் மௌனித்தார்கள். ஆரம்பத்தில் சில நியாயப்படி நடந்திருந்தாலும் நடந்தவை அனைத்தும் அவ்வாறானதல்ல. விஜிதரன்,விமலேஸ்வரன்,செல்வி,,ரஜனி, அகிலன் என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். அந்த காலத்துள் மீள்பிரவேசிக்கும் அளவிற்கு நம்முள் மனிதம் செத்துவிடவில்லை.இன்று வாய்திறக்க, போராட மக்கள் தொடங்கிவிட்டதே அதற்க்கான நல்ல சகுனமாக கொண்டு சட்டபடி எந்த அரசியல் தலையீடும் இன்றி தீர்ப்புகள் வழங்க வழி சமைப்போம்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதவராக சட்டத்தரணிகள் ஆஜராக கூடாது என்பது ஏற்புடையதல்ல. ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே சாட்சியாக முடியாது. ஆஜராகும் சட்டத்தரணிகள் அவர்களை தப்பவைக்கும் நோக்கில் அல்லாமல் சகல உண்மைகளையும் வெளிக்கொணர்ந்து சட்டபடியான தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும். பல லட்சங்களுக்காக தப்பிபோக விடக்கூடாது. மேலதிகமாக தற்போதுள்ள குற்றவியல் சட்டத்தில் கூட்டு பலாத்காரத்துக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.

எல்லாவற்றிக்கும் மேலாக இங்கு காணப்படும் கணக்கற்ற மதுபான சாலைகள்,கேளிக்கை விடுதிகள்,கஞ்சா,போதைபொருள் என்பவற்றில் எந்தவித அரசியல் தலியீடும் இன்றி பொலிசார் செயல்பட பூரண சுதந்திரம் வழங்க வேண்டும். பொதுமக்கள் தாம் வாழும் பிரதேசங்களில் இடம்பெறும் சமூகவிரோத செயல் பற்றி பொலிசாருக்கு தகவல் வழங்கி ஒத்துழைக்க வேண்டும். இல்லை என்றால் இன்று புங்குடுதீவு மகளுக்கு நிகழ்ந்தது நாளை உங்கள் ஊர் ஏன் உங்கள் மகளுக்கும் நடக்கலாம். வித்தியா மிருகங்களை ஆசையுடன் அரவணைத்து வளர்த்தாராம் ஆனால் அவரை மனிதர்கள் வேட்டையாடிவிட்டனர்.

(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com