|
||||
|
மக்களை நேசித்த
உண்மைப் போராளி பத்மநாபா
(மோகன் சிவராஜா)
தமிழ் மக்களின்
அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக
சாத்வீக வழிகளில் நடந்த போராட்டங்களில்
பங்காளனாகவும்
பின்னர் ஆயுதந் தாங்கிய போராட்டத்திற்கு
தலைமை ஏற்றிருந்தவர்களில்
ஒருவராகவும்
விளங்கியவர்
அமரர் தோழர் பத்மநாபா.
அவரது பிறந்த
தினம் இன்றாகும்.
1951ம் ஆண்டு
நவம்பர் 19 ம் திகதி
காங்கேசன்துறையில்
பிறந்தார்.
அவரது வாழ்க்கை
காலத்தின்
பெரும் பகுதி இயக்க
முகாம்களிலும்,
காடு, மேடுகளிலும்,
ஏழை, பாளைகளின்
குடிசை வீடுகளிலுமே
களிந்தது.
தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில்
கல்வி பயிலும் காலத்தில்
1970 ஆண்டளவில்
ஒரு மாணவனாக
அரசியலில்
ஈடுபடத் தொடங்கினார். தமிழ்
மாணவர் பேரவை, தமிழ்
இளைஞர் பேரவை, ஈழ
விடுதலை இயக்கம், ஈழப்புரட்சி
அமைப்பு என அரசியல்
வாழ்வை தொடர்ந்த தோழர் பத்மநாபா
1981ம் ஆண்டு
நடைபெற்ற
அமைப்பாளர்கள்
மாநாட்டில்
ஈபிஆர்எல்எவ்
இன் தலைமை
பொறுப்பை
ஏற்றார். 1984ம் ஆண்டு
ஈபிஆர்எல்எவ்
இன் முதலாவது
காங்கிரசில்
செயலாளர்
நாயகமாக தெரிவுசெய்யப்பட்ட
அவர் இறக்கும்
வரை கட்சியின்
செயலாளர்
நாயகமாக பணியாற்றினார்.
காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி, தெல்லிப்பளை
யூனியன் கல்லூரி, யாழ்ப்பாணம்
மத்தியகல்லூரி
ஆகிய கல்லூரிகளே
அவரது பாடசாலைக்
கல்வியை கற்றார். 1972 ஆம் ஆண்டு
அவரது பாடசாலைக்கற்றல்
முடிவுக்கு
வந்தது. அரசியல் நடவடிக்கைகள்
காரணமாக பொலிஸாரால்
கைது செய்யப்பட்டு
சில நாட்களின்
பின் விடுதலை
செய்யப்பட
பத்மநாபாவை
அவரது பெற்றோர் கணக்கியல்துறையில்
கல்வி பயில்வதற்காக
1976 ஆம் ஆண்டு
இங்கிலாந்துக்கு
அனுப்பிவைத்தனர்.
ஆனால், அவர் பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஒன்றிடம் ஆயுத பயிற்சியை
பெற்றுக்கொண்டு
ஒரு போராளியாக
நாடு திரும்பினார்.
தமிழர்களின் ஆயுதந்
தாங்கிய போராட்டம்
எங்கள் மத்தியில்
ஜனநாயக விழுமியங்களை
புறந்தள்ளிய
போக்கு தலையெடுத்திருந்த
போதும் தோழர் பத்மநாபா
எப்போதும்
ஜனநாயக பாரம்பரியங்களுக்கு
மதிப்பளித்து
வந்தவர். கட்சிக்குள் ஜனநாயகத்தையும்,
தமிழ் இயக்கங்களிடையே
ஐக்கியத்தையும்
வலியுறுத்தி
வந்தவர்.
கட்சிக்குள் பிரச்சினைகளுக்கு
தீர்வு காண்பதற்கு
அவர் விமர்சனம்
சுயவிமர்சனத்தை
கைக்கொண்டார்.
இயக்கங்களிடையே தோன்றிய
பிணக்குகளை
பேச்சுவார்த்தைகள்
மூலம் தீர்த்துக்கொள்ளவதற்கே
முக்கியத்துவமளித்தார்.
அவர் இறக்கும்
வரையும், இறந்த பின்னரும்
பல்வேறு அரசியல் கட்சிகளின்
தலைவர்களாலும்
மரியாதை செலுத்தும்
ஒருவராக தோழர் பத்மநாபா
விளங்குவதற்கு
அவரது இந்த அணுகுமுறையும்
ஒரு காரணம்.
தோழர் பத்மநாபாவின்
மறைவின் பின் வெளியிடப்பட்ட
நினைவு மலரில் அவரது நீண்டகால
நண்பனும்,
கட்சித் தோழனுமான தோழர் வரதராஜப்பெருமாள்
குறிப் பிட்டிருப்பவற்றை
இங்கு குறிப்பிடுதல்
பொருத்தமாகும்.
'அவர்
கொள்கைப்
பிடிவாதமுடைய
ஒரு சமதர்மப்
புரட்சிவாதி.
மாக்சிசம்,
வர்க்கம்,
புரட்சி, போராட்டம்
என்ற வார்த்தைப்
பிரயோகங்களை
உருப்போடும்
வரட்டுத்
தனமோ அல்லது
தனது சுயநல
நோக்கங்களுக்காக
புரட்சிக்
கோட்பாட்டை
பயன்படுத்தும்
பாசாங்குத்
தனமோ அவரது
புரட்சிவாழ்க்கையில
எள்ளளவும்
இருந்ததில்லை.
அவர் சமூகப் புரட்சிக்காக
உணர்வு பூர்வமாக உழைத்தார்
சமூகப் புரட்சியாளர்களை
உள்ளத்தால்
நேசித்தார். நேர்மையான சமூகப்
புரட்சியாளர்கள்
மீது – அவர்கள்
தன்னை விமர்சிப்பவர்களாயினும்
சரி, எதிர்ப்பவர்களாயினும்
சரி – உளமார
அன்பு செலுத்தினார்.
அவ்வாறானவர்களோடு பழகுவதிலும்,
நட்பு கொள்வதிலும்
பெருமிதமும்
மகிழ்ச்சியும்
கொண்டார்.
தோழர் நாபாவிடம்
கர்வம், தலைக்கனம்,
அதிகார வெறி என்பவற்றை
இம்மியளவேனும்
யாரும் கண்டிருக்க
முடியாது. பல்லாயிரக்கணக்கான
இளம் தோழர்கள்
அவர் சுட்டு
விரலுக்கு
கட்டுப்பட்டு
எதையும் செய்யத் தயாரான நிலையில் இருந்த போதிலும் அவர் எந்தக்
கட்டத்திலும்
அதிகார மமதையோடு நடந்ததில்லை.
ஸ்தாபனத்தின் ஜனநாயக
பூர்வமான
பொது முடிவுகளுக்குக்
கட்டுப்பட்டு
நடக்கும்
ஒரு கட்டுப்பாடுடைய
உறுப்பினனுக்கு
முன்னுதாரணமாக
அவரே திகழ்ந்தார்.'
இவ்வாறு தோழர்
பத்மநாபாவின்
மறைவின் பின் வெளியிடப்பட்ட
நினைவு மலரில் அவரது நீண்ட
கால நண்பனும்
கட்சித் தோழனுமான தோழர் வரதராஜப்பெருமாள்
குறிப்பிட்டிருப்பது
அவரது குணநலன்களை
மிகவும் நேர்த்தியாய்
பிரதிபலிப்பதாகும்.
தோழர் பத்மநாபா எப்போதும்
மனித நேயத்துக்கு
முக்கியத்துவம்
தந்தவர். உழைக்கும் மக்களின்
துன்ப, துயரங்களுக்கு
தீர்வு காண உழைப்பதில்
தனது இலட்சியமாக
கொண்டிருந்தார்.
அவரது தாராள மனப்பான்மையும்,
தயாள குணமும்
தான் அவரது
எதிரிகளுக்கும்
வாய்ப்பாய்
அமைந்தது.
'மக்களுக்காகவே
மண்ணை நேசிக்கின்றோம்'
என்ற அவரது
புகழ்பெற்ற
வாக்கியம்
அவர் எந்தளவிற்கு
மக்களை நேசித்தார்
என்பதை எடுத்துக்காட்டுவதாகும்.
சிங்கள மக்களின்
ஆதரவு எமக்கு அவசியம் என்பது பற்றி பலர்
இன்று பேசுகின்றார்கள்
ஆனால், எமது போராட்டத்தின்
ஆரம்ப காலத்திலேயே
சிங்கள மக்கள் எமது நண்பர்கள்
என்பதை நன்குணர்ந்து
செயற்பட்டவர்
தோழர் பத்மநாபா.
அவர் தனது
சொல்லாலும்
செயலாலும்
மட்டுமல்ல
தனது வாழ்க்கை
நடைமுறை மூலமும் எங்களுக்கு
வழிகாட்டிய, கற்றுத்தந்த
ஒருவர்.
ஏறத்தாள 10 ஆண்டுகளாக
பழகி வந்த
ஆனந்தி என்ற இந்தியப்
பெண்ணை 10.04.1989
இல் திருமணம்
செய்துகொண்டார். திருமணமாகி சுமார்
ஒருவருடத்தில்
19.06.1990 இல் சென்னை,
கோடம்பாக்கத்தில்
வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
இதனால் அவருக்கு
குடும்ப வாரிசு இல்லை. ஆனால், அமரர் தோழர் பத்மநாபாவின்
அரசியல் வாரிசுகள்
பல ஆயிரக்கணக்கானவர்கள்,
இலங்கையில்
மட்டுமல்ல
இன்று உலகெங்கும்
உள்ளார்கள்.
அவர்கள், தோழர் பத்மநாபாவின்
கொள்கைகளையும்,
இலட்சியங்களையும்
முன்கொண்டு
செல்வார்கள்.
தங்கள் சொல்லாலும்,
செயலாலும்
அவரது நாமம் நின்று,
நிலைக்கச்
செய்வார்கள்.
மக்களை நேசித்து, மக்களின் உரிமைகளுக்காக
போராடி, மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவே
தனது உயிரையும்
அர்ப்பணித்த
தோழர் பத்மநாபா என்னென்றும்
மக்களால்
நேசிக்கப்படுவார்.
(மோகன்
சிவராஜா) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |