Contact us at: sooddram@gmail.com

 

மீண்டும் மரண பூமி­யாகும் யாழ்.குடா­நாடு

எறி­க­ணை­களின் முழக்­கங்­களும் வேட்­டோ­சை­களின் இரைச்­சல்­களும் வட­பு­லத்தின் புலர்வை நிச்­ச­யப்­ப­டுத்­திய காலம் மறைந்து செல்­பே­சி­களின் சீண்­டல்­க­ளுடன் வலைத்­த­ளங்­களில் குறிப்­பாக முக­நூல்­களின் அர­வ­ணைப்­புக்­க­ளுடன் பொழுது புலரும் இவ்­வே­ளை­களில் மீண்டும் அவல மர­ணங்­களின் பதி­வுகள் குடா­நாட்டை அச்­சு­றுத்தி வரு­கின்­றன. அமை­தி­யான நிலை­யி­லி­ருந்து ஆதூ­ர­மான நிலைக்கு கடந்­து­போன சில ஆண்­டு­க­ளுக்கு முன்­பி­ருந்த சூழலை ஞாப­கப்­ப­டுத்தி நிற்­கின்­றன.

யாழ்ப்­பாண நக­ரத்­தி­லி­ருந்து ஒன்­றரை மைல் தூரத்தில் காங்­கே­சன்­துறை வீதியின் மேற்குப் பக்­கத்தில் நாச்­சிமார் அம்மன் கோயில் அமைந்­துள்­ளது. அக்­கோயில் எதிர்ப்­பு­றத்தில் அமைந்­துள்ள தேர்­முட்டிப் பகு­தியில் நிறைந்த சனக்­கூட்டம். இம்­மாதம் 16ஆம் திகதி புதன்­கி­ழமை மாலைக் கருங்­கல்லில் எனது மோட்டார் வண்டி அவ்­வீதி வழியே விரைந்து கொண்­டி­ருந்­தது. வீதியின் ஓர­மாக வண்­டியை நிறுத்தி விட்டு அகல விரித்துப் பார்­வையை கூர்­மைப்­ப­டுத்­தி­ய­படி விரை­கிறேன். ’என்ன...என்ன....என்ன பிரச்­சினை ஏதேனும் அக்­சி­ட­னனே!’ என்று வாய்க்குள் முணு­மு­ணுத்­த­படி கூட்­டத்தை சற்று விலக்கி அந்தக் கோரக் காட்­சியைக் காண்­கிறேன். கண்­ட­போது என்­மனம் திடுக்­குற்­றது. சித்­த­பே­த­மி­ழந்து அப்­ப­டியே அந்தச் சனக்­கூட்­டத்­துக்­குள்ளே ஒரு­கணம் உறைந்து விடு­கின்றேன்.

பேய­றைந்­தது போன்ற உணர்வு, கை கால்கள் நடு­ந­டுங்க வந்த வேகத்­தி­லேயே திரும்பி வந்­து­வி­டு­கின்றேன். ஆ! என்ன கொடுமை! ஆடைகள் கலைந்த நிலையில் பெண்­ணொ­ருத்­தியின் வெற்று உடல் கண்­காட்சிப் பொரு­ளாக அந்தத் தேர்­முட்­டியில் கிடத்­தப்­பட்­டி­ருந்­தது. அந்த உட­லத்தை வேடிக்கை பார்க்­க­வென்று ஒரு கூட்டம். என்ன கொடுமை இறைவா! என்று மன­துக்குள் புழுங்­கி­ய­வாறு எனது பய­ணத்தை தொடர்ந்தேன். அன்­றி­ரவு முழு­வதும் நித்­திரா தேவியின் வரு­கையை என்னால் நிச்­ச­யப்­ப­டுத்த முடி­ய­வில்லை.

சப­ல­ம­டைந்த என் மனது தேற்­று­வா­றின்றித் தவித்­தது. அடுத்த நாள் விடி­காலையில் பத்­தி­ரி­கையை புரட்­டும்­போது நான்­கண்ட அந்த நிட்­டூ­ர­மான காட்சி பத்­தி­ரி­கையின் முன்­பக்­கத்தை நிறைத்­தி­ருந்­தது. யார் அந்தப் பெண்? என்ற வினா­வுக்கு விடை­தேட என்­கண்கள் பத்­தி­ரி­கையை மேய்த்­தன.

அரி­யாலைப் பகு­தியில் அநா­த­ர­வான நிலை­யி­லி­ருந்த மன­நிலை பாதிப்­ப­டைந்த 45 வய­தான பெண்தான். வன்­பு­ணர்வின் பின் மிகக் குரூ­ர­மான முறையில் கொலை செய்­யப்­பட்­டுள்ளாள் என்ற செய்தி என் மனதை ஆழ­மாக வருத்­தி­யது.

யாழ்.குடா­நாட்டில் அவல மர­ணங்­களின் தொகை கட்­டுக்­க­டங்­காமல் அதி­க­ரித்து வரு­வது யாழ்ப்­பாண மர­ணங்­களின் தேசம் என்­ப­தனை நிதர்­ச­னப்­ப­டுதி நிற்­கின்­றது. வீதி விபத்­துக்­களால் விளையும் மர­ணங்கள், கொலைகள், தற்­கொ­லை­களால் ஏற்­படும் சாவுகள் என அவல மர­ணங்­களின் பட்­டியல் நீண்டு செல்­கின்­றது. எந்த நேரத்தில் என்ன நிக­ழுமோ என்ற ஏக்கம் கலந்த தவிப்பு வட­புல மக்­களின் மனங்­களை குடை­கின்­றது. தமிழ் மக்­களைப் பொறுத்த வரையில் அவர்­க­ளது வாழ்வு சோகத்­து­டன்தான் விடியும்.

அந்­த­ள­வுக்கு இழப்­புக்கள் துய­ரங்கள் கழுத்தை நெரிக்கும். நெஞ்சம் கொதிக்கும். வன் செயல்கள், கொலைகள் எல்­லா­வற்­றையும் கண்டு பழக்­கப்­பட்ட எம்­மி­னத்­திற்கு தற்­போதும் சாவு பற்­றிய செய்­திகள் காட்­சிகள் தொடர்ந்து கொண்­டுதான் இருக்­கின்­றன.

வட­புலம் அபி­வி­ருத்தி அடைந்­துள்­ளது என்ற கோஷத்தை அர்த்­தப்­ப­டுத்­து­வ­தற்­காக வெறு­மனே வீதி­க­ளையும் கட்­ட­டங்­க­ளையும் அமைப்­ப­தனால் நிலை­பே­றான அபி­வி­ருத்­தியை எய்த முடி­யாது. மக்­களின் உள்­ளார்ந்­த­மான நலன்­களில் அக்­கறை கொண்டு சட்டம் ஒழுங்­குகள் சிறந்த முறையில் இயங்­கு­வ­தற்­கான இயங்­கு­த­ளத்தை செப்­ப­னிட வேண்­டி­யது நல்­லாட்­சியின் தனித்­து­வ­மான பண்பு என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

யாழ்.குடா­நாட்டை மையப்­ப­டுத்­திய செய்தி பத்­தி­ரி­கை­களைப் புரட்­டும்­போது தினமும் ஓரிரு அவல மர­ணங்கள் பற்­றி­ய­தான செய்தி செய்தித் தாள்­களை அணி செய்யும். குறிப்­பாக வீதி விபத்­துக்­களால் உண்­டாகும் சாவுகள். உயிரின் பெறு­ம­தி­யினை மலி­னப்­ப­டுத்தி விடு­கின்­றன.

யாழ்.போதனா வைத்­தி­யாலை புள்ளி விபரப் பதி­வு­களை நோக்­கும்­போது அவல மர­ணங்­களின் எண்­ணிக்கை உச்ச நிலையில் இருப்­ப­தனை அவ­தா­னிக்­கலாம்.

வீதி ஒழுங்­குகள் சீரின்­மை­யினால் உண்­டாகும் வீதி விபத்­துக்­களை இயன்­ற­வரை குறைக்­க­மு­டிந்தும் கவ­ன­யீ­ன­மான வாகனம் ஓட்­டு­தல்கள் சவக்­கு­ழி­களை நிரப்பும் ஏதுக்­களைத் தூண்டி விடு­கின்­றன. இதற்கு மக்­களை மாத்­திரம் குறை கூறினால் மட்டும் போதாது. வீதி ஒழுங்கைப் பேணும் பொலி­ஸாரின் கைக­ளிலும் பொறுப்பு உண்­டென்­பதை யாரும் மறு­த­லிக்­க­மு­டி­யாது.

சட்டம் ஒழுங்கைப் பேணு­கின்ற பெருந்­த­கை­யி­ன­ரான பொலிஸார் கவ­ன­மெ­டுத்து வீதி ஒழுங்கைப் பேணினால் அவல சாவு­களின் எண்­ணிக்­கையை இயன்­ற­ளவு குறைக்­க­மு­டியும்.

அது­மட்­டு­மல்ல இப்­பி­ர­தே­சத்தை அச்­சு­றுத்தும் அடுத்த பயங்­க­ர­மாக வன்­செ­யல்­களால் விளையும் கொலைகள் சாவு­களின் தொகையை கூட்டி நிற்­கின்­றன. சினி­மாக்­களில் காட்­டப்­படும் கொலைக் காட்­சிகள் போல கர்ண கொடூ­ர­மான கொலைகள் அரங்­கேறி வரு­கின்­றன. தட்டிக் கேட்க ஆளில்­லா­விட்டால் தம்பி சண்டப் பிர­சண்டன் என்ற நிலையில் சில வன்­மு­றை­யா­ளர்கள் சட்­டத்தை தம் கையில் எடுக்க முற்­ப­டு­கின்­றனர்.

விளைவு கொலைகள் விழும் தேச­மாக இப்­பூமி மாறு­கின்­றது. சினிமா பாணி­யி­லான காடைத் தனங்கள், சண்­டித்­த­னங்கள் கோலோச்­சு­வதை கைகட்டி வேடிக்கை பார்க்­கி­றது அதி­கார வர்க்கம். ஒழுக்கம் மி-குந்த கல்­வியே கருந்­தனம் என்­றி­ருந்த நம்­ம­வர்கள் அச் செய­லொ­ழுங்கில் நின்று பின்­வாங்கி புற­மொ­துக்கி வாழத் தலைப்­படும் துர்ப்­பாக்­கிய சூழ­மைவு எமது பிர­தேச அபி­வி­ருத்­தியை பின்­ன­கர்த்தி நிற்­கின்­றது.

அல்லும் பகலும் சதா பெண்­ணு­டலை வேட்­டை­யா­டு­வ­தற்­கென அலையும் காமக் கழு­கு­களின் பார்­வைகள் சில­வேளை ஏது­ம­றி­யாத அப்­பாவி பிஞ்­சு­களின் உடல்கள் மீதும் விழு­கின்­றன.

தினமும் அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக அரங்­கேறி வரும் சிறு­மிகள் மீதான பாலியல் வேட்­டைகள் இப்­பி­ர­தே­சத்து பெண்­களின் எதிர்­கால வாழ்வை சூனி­யப்­ப­டுத்தி நிற்­கின்­றன. பெண்கள் வெளியில் நட­மா­டு­வ­தற்கே அச்­ச­மூட்டும் சூழல் இங்கு கருக்­கொள்­வது எமது இனத்தின் எதிர்­கா­லத்­திற்கு ஆரோக்­கி­ய­மாக அமை­யாது. மாறாக யுத்த வேளையில் பெண்கள் மான­பங்­கப்­ப­டுத்­தப்­பட்­டதை விடவும் மோச­மான அதிர்­வு­களை எம்­மினம் உணரும் காலம் வெகு விரைவில் வரலாம்.

யுத்­தத்­திற்கு பின்­ன­ரான சூழலில் வட பகுதி பல்­வேறு குற்றச் செயல்­களின் அரங்­க­மாக விளங்­கு­வது சமூக ஆர்­வ­லர்­களை கவ­லை­யிலும் விச­னத்­திலும் ஆழ்த்தி வரு­கி­றது. மது, போதைப் பொருட்கள் முத­லிய வகை­ய­றாக்­க­ளுக்குள் அடி­மைப்­பட்­டி­ருக்கும் இன்­றைய இளம் சந்­த­தி­யினை மீட்­டெ­டுக்கும் மீட்­பர்­களின் தேவை பெரிதும் உண­ரப்­படு­கின்­றது.

வேண்­டப்­படு­கி­றது. தர­மற்ற சினி­மாக்­களின் கட்­டற்ற வர­வினால் அவற்றின் சாயல்­களைத் தழு­வி­ய­தான குற்றச் செயல்களின் பெருக்கம் நாள் ஒன்றும்பொழுதொன்றுமாக வேகமெடுத்து வருகின்ற நிலையில் இவ்வாறான குற்றச் செயல்களுக்குத் தீனிபோடும் தரமற்ற தமிழ் சினிமாக்களின் வரவை தடைசெய்வதுடன் குற்றச் செயல்களின் தாக்கத்தைக் குறைப்பதற்குச் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் உடன் நடவடிக்கையில் இறங்கவேண்டிய தருணமிது.

கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் மனித பண்பாட்டுக்கே உதவாத இக்குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தாமல் வாளாது இருந்தால் அதன் தாக்கத்தை முழு நாடுமே அனுபவிக்கும் காலம் விரைவில் வரும் என்பதையும் மறுதலிக்கமுடியாது.

சட்டங்கள் சிலவேளை ஏமாந்து போனாலும் போகலாம். ஆனால் தர்மம் நிச்சயம் பழிவாங்கியே தீரும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனதில் இருத்திச் செயற்படவேண்டும்.

 -எஸ். நதி­பரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com