|
||||
|
அமரர் தோழர்
பத்மநாபா
62 வது பிறந்தநாள்
நினைவு தினம்.
(தோழர் மோகன்)
ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் ஸ்தாபகர்களில்
ஒருவரும்,
அதன் செயலாளர்
நாயமுமான
அமரர் தோழர் பத்மநாபாவின்
62 வது பிறந்தநாள்
நினைவுதினம்
இன்றாகும். யாழ்ப்பாண மாவட்டம்
காங்கேசன்துறையில்
19.11.1951 இல் பிறந்த
தோழர் பத்மநாபா
19.06.1990 அன்று தமிழ்நாட்டின்
தலைநகர் சென்னையில்
அவரது 39 வது வயதில்
புலிகளால்
படுகொலை செய்யப்பட்டார்.
தனது மாணவப்
பருவம் முதலே சமூக
அக்கறை கொண்டிருந்த
அவர் அன்றைய
தமிழரசுக்
கட்சித் தலைவர்களின்
அரசியல் கருத்துக்களால்
ஈர்க்கப்பட்டார்.
அதன் இளைஞர்
அணியில் ஒருவராக 4 வது உலக
தமிழாராட்சி
மாநாட்டின்
போது உருவாக்கப்பட்ட
தொண்டர் படையில் பங்கேற்றிருந்தார்.
தரப்படுத்தல், தமிழாராட்சி
மாநாட்டு
படுகொலைகள்
என்பன மாணவர்களையும்,
இளைஞர்களையம்
உணர்ச்சி
ஊட்டவதற்கு
அன்றைய தமிழ் தலைவர்களுக்குப்
பேருதவியாய்
அமைந்தன.
அவர்களின் தேர்தல்
வெற்றிக்கு
இவை நன்கு
பயன்படுத்தப்பட்டன.
தமிழர் விடுதலைக்
கூட்டணி உதயமானது தனிநாட்டு
கோரிக்கை
எழுந்தது. ஆயுதப்
போராட்டம்
மூலம் தனி நாடு
அமைவதே தமிழ் மக்கள்
எதிர்கொள்ளும்
பிரச்சினைகளுக்கு
ஓரே தீர்வு
என்று பேசியும், எழுதியும்
வந்த தமிழ்
தலைவர்கள்
அதற்கு விசுவாசமாக
இருக்கவில்லை
என்பதை அந்தத் தலைவர்களின்
தேர்தல் வெற்றிக்காக
இரத்தத்தையும்,
வியர்வையையும்
சிந்திய இளைஞர்கள்
விரைவிலேயே
விளங்கிக்
கொண்டனர்.
குறித்த தலைவர்கள்
மேடையில்
பேசுவதற்கும்,
அவர்களின்
நடைமுறைக்கம்
இடையில் நிலவிய வேறுபாட்டை
படிப்படியாக
அடையாளம்
கண்டு கொண்ட தமிழ்
இளைஞர்களின்
இலக்கு நோக்கிய அர்ப்பண உணர்வுடன்
கூடிய பயணம் ஆரம்பமாகிறது.
கடந்த கால சமூக
அரசியல் நடவடிக்கைகளால்
பாடங்கற்றுக்கொண்ட
இவ் இளைஞர்களில்
ஒரு பகுதியினர்
தமிழ் அரசியலின்
போதாமைகளை
அடையாளம்
கண்டு கொள்கின்றனர். மாக்ஸிஸம் என்ற தத்துவ வெளிச்சத்தில
அவர்களது
அரசியல் கருத்துக்கள்
செழுமை பெறத் தொடங்குகின்றது.
இலங்கை தமிழர்கள்
இனரீதியாக
மாத்திரமல்ல,
வர்க்க ரீதியாகவம்,
சாதி ரீதியாகவும்,
பால் ரீதியாகவும்
ஒடுக்கப்படுகிறார்கள்
இவற்றிலிருந்தும்
பொருளாதார
ரீதியில்
ஏற்றத் தாழ்வுகளிலிருந்தும்
விடுபடும்
போதே மக்களின்
விடுதலை சாத்தியமாகும்
என்ற கருத்து
வலுப்பெறத்
தொடங்கியது.
இந் நிலையில்
இலங்கை அரச படைகளுக்கு
எதிராக தமிழ் இளைஞர்கள்
ஆயுதந் தாங்கிய நடவடிக்கைகள்
முளைவிடத்
தொடங்கியவுடன்
தமிழ் இளைஞர்களின்
எழுச்சியை
முளையிலேயே
கிள்ளிஎறிய,
அரச படைகள்
முனைந்து
நின்றன. சிலர் கொல்லப்படுகின்றார்கள்,
ஏராளமானோர்
கைது செய்பப்பட்டார்கள்
எஞ்சியோர்
தலைமறைவாகவும்,
தனிமைப்படவும்
நேர்ந்தது.
அரச படைகளின் கெடுபிடிகள்
நெருக்கடிகளால்
மாணவர் இளைஞர் அமைப்புக்கள்
ஸ்தம்பித
நிலையை அடைகின்றன. கல்வியை
தொடர்வதற்காக
அவரது குடும்பத்தினரால்
இங்கிலாந்துக்கு
அனுப்பிவைக்கப்பட்ட
தோழர் பதமநாபாவுக்கு
அங்கு ஈரோஸ் இயக்கத்தின்
ஸ்தாபகரும்,
ஈழு விடுதலைப்
போராட்ட இயக்கங்களிடையில்
மாக்ஸிய கருத்துக்கள்
பலம்பெற பங்காற்றியவருமான
இரட்ணசபாபதியுடன்
அரசியல் ரீதியான பரிச்சயம்
ஏற்படுகின்றது. அவர் மூலம் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம்
ஆயுதப் பயிற்சியை
பெற்ற ஒருவராக அங்கிருந்து
நாடு திரும்புகின்றார்.
சேரன், ரஞ்சன்
என்ற பெயர்களோடு
மலையகத்திலும்,
தமிழ் நாட்டில் தாயகம் திரும்பிய
மலையக மக்கள் மத்தியிலும்
தனது வெகுஜன
வேலைகளை மேற்கொண்டதுடன்
வடக்கின்
செம்மண் பிரதேசங்களின்
தொழிலாளர்
விவசாயிகள்,
கூலி உழைப்பாளர்கள்
மத்தியில்
பணியைத் தொடர்ந்தார்.
இழப்பதற்கு
எதுவுமில்லாத
உழைக்கும்
மக்களே போராட்டத்தின்
தலைமை சக்திகள் அவர்கள் விடுதலை பெறுவதே போராட்டத்தின்
முக்கிய குறிக்கோள்
என்பதை விளங்கிக்கொண்டு
மக்களை அரசியல் மயப்படுத்துவதிலும்,
அணிதிரட்டுவதிலும்
அர்ப்பணிப்போடு
ஈடுபட்டார்.
அவர்கள் முகங்கொடுத்த
பிரச்சினைகளுக்கு
அடிப்படையான
காரணங்களை
தெளிவுபடுத்தி
அதற்கெதிராக
போராட வேண்டிய அவசியத்தை
வலியுறத்தியதுடன்.
சாதிரீதியான ஒடுக்குமுறைகள்,
கூலி உயர்வு
போன்ற உடனடிப்பிரச்சினைகளுக்கு
தீர்வுகாண்பதற்கு
அவர்களுக்குப்
பக்கபலமாய்
நின்று உழைத்தார்.
மலையகமக்கள், மாணவர்கள்,
தொழிலாளர்
விவசாயிகளை
அரசியல் மயப்படுத்தி
அணிதிரட்டி
ஸ்தாபன மயப்படுத்தும்
நடவடிக்கைகளை
மேற்கொண்டு
வந்த தோழர்
பத்மநாபாவும்
சக தோழர்களும்
ஸ்தாபனத்தை
பலப்படத்தும்
அடுத்த கட்ட நடவடிக்கையாக
1981ம் ஆண்டு
அமைப்பாளர்
மாநாடு ஒன்றை நடாத்தி
ஈபிஆர்எல்எவ்
இன் கட்டமைப்பும்,
கடமைகளும்
வரையறுக்கப்பட்டத.
இந்த பணிகளை
முன்னெடுத்துச்
செல்வதற்கான
தலைமைப் பொறுப்பு தோழர் பத்மநாபாவிடம்
விடப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து
1984 ம் வருடம்
நடைபெற்ற
ஈபிஆர்எல்எவ்
இன் முதலாவது
கட்சிக் காங்கிரசில்
அவர் மீண்டும்
கட்சியின்
செயலாளர்
நாயகமாகத்
தெரிவுசெய்யப்பட்டார்.
அன்றிலிருந்து இறக்கும்
வரை அவர்
கட்சியின்
செயலாளர்
நாயகமாகவே
பதவிவகித்தார்.
அதன் அடையாளமாக
தோழர்களாலும்,
கட்சியோடு
தொடர்புபட்டிருந்த
அனைவராலும்
அன்போடும்
மரியாதையோடும்
எஸ்.ஜி என்றே அழைக்கப்பட்டார்.
கட்சிக்குள் அதிகாரம் மிக்க ஒருவராக
பதவி வகித்த
போதும் கட்சிக்கு
உள்ளேயும்,
கட்சிக்கு
வெளியிலும்
யாரும் எந்தக் குற்றச்சாட்டையும்
அவர்மீது
சுமத்தியதில்லை. மாறாக
அனைவராலும்
நேசிக்கப்படும்
ஒருவராகவே
விளங்கினார்.
உட்கட்சிப் படுகொலைகளால்
ஆயுதந் தாங்கிய இயக்கங்களை
நம்பி வந்த பல
இளைஞர்கள்
சந்தேகத்தின்
பேராலும்,
அதிகார வெறியினாலும்
பலிகொள்ளப்பட்டுக்
கொண்டிருந்த
காலகட்டத்தில்
அத்தகைய கறை படிந்த
வரலாற்றிலிருந்து
ஈபிஆர்எல்எவ்
தன்னை காத்துக்கொண்டதில்
தோழர் பத்மநாபாவின்
பங்கு மகத்தானதாகும்.
தவறான மார்க்கங்கள்
ஊடாக மக்களின்
விடுதலையை
எய்த முடியும்
என்ற தவறான
கருத்து அவரிடம் இருக்கவில்லை.
1985
இல் அனுராதபுரத்தில்
அப்பாவிசிங்கள
மக்கள் புலிகளால்
படுகொலை செய்யப்பட்ட
வோதும், சுளிபுரத்தில்
புலிகள் இயக்க இளைஞர்கள்
படுகொலை செய்யப்பட்ட
போதும், ரெலோ இயக்கம்
தடைசெய்யப்பட்டு
படுகொலைகள்
இடம்பெற்ற
போதும் இந்த தவறுகள்
தவிர்க்கப்பட
வேண்டும்
எனக் குரல்
கொடுக்க ஈபிஆர்எல்எவ்
பின்நிற்கவில்லை. 1986 மார்கழி
13 அன்று ஈபிஆர்எல்எவ்
இன் அரசியல்
செயற்பாட்டுக்கு
புலிகள் தடை விதித்ததை
தொடர்ந்து
மோதல் உருவாவதற்கு
முன்னதாக
ஈபிஆர்எல்எவ்
சக இயக்கங்களை
சேர்ந்த போராளிகளுக்கு
எதிராக ஆயுதங்களை
உயர்த்தியது
கிடையாது.
தோழர் பத்மநாபா
இயக்கங்களிடையே
ஐக்கியத்தை
வலுப்படுத்துவதிலேயே
அதிக கவனம்
செலுத்தினார்.
1984
இல், ஆயுதந்
தாங்கிப்
போராடிய இயக்கங்களான
ஈரோஸ், ரெலோ, ஈபிஆர்எல்எவ்
மத்தியிலும்
பின்னர் புலிகளுடனும்
இணைந்து ஈழ தேசிய
விடுதலை முன்னணி (ஈ.என்.எல்.எவ்)
என்ற ஐக்கிய
முன்னணியை
உருவாக்குவதில்
தோழர் பத்மநாபாவின்
பங்கு காத்திரமானதாகும்.
1985 இல் புளொட் மற்றும் தமிழர் விடுதலைக்
கூட்டணியும்
கூட்டுச்
சேர்ந்து
திம்புப்
பேச்சுவார்த்தைகளின்
போது தமிழர்
தரப்பு ஒற்றுமையாக
பங்கேற்றுக்கொண்டதும்.
நினைவிற்கொள்ளப்பட வேண்டியதாகும்.
தோழர் பத்மநாபா
ஒற்றுமை என்பதை மக்களை மயக்குவதற்காக
வெறும் பேச்சளவில்
உச்சரித்த
ஒருவர் அல்ல. ஐக்கிய
முன்னணி தொடர்பான தெளிவான பார்வை அவரிடமிருந்தது.
போராடும் அணிகள்
மத்தியில்
ஐக்கியமும்,
போராட்டமும்
என்ற அணுகுமுறையையே
அவர் கைக்கொண்டார்.
1988 இல் வரதராஜப்பெருமாள்
தலைமையிலான
முதலாவது
வடக்குகிழக்கு
மாகாண சபை அமைந்த
போது வடக்கு
கிழக்கில்
வாழும் தமிழ், முஸ்லிம்,
சிங்களம்
என அனைத்து
இன மக்களையும்
பிரதிநிதித்துவப்படுத்தும்
வகையில் அதன் அமைச்சரவை
அமைந்திருந்தது.
அது மாத்திரமல்ல
வடக்கு கிழக்கு மாகாண சபையில்
கூட்டுச்
சேர்ந்திருந்த
ஈஎன்டிஎல்எவ்
சார்பில்
ஒருவர் அமைச்சராகும்
வாய்ப்பளிக்கப்பட்டது.
1989 இல் இடம்பெற்ற
பொதுத் தேர்தலில்
யாழ் மாவட்டத்தில்
ஈபிஆர்எல்எவ்
சார்பில்
போட்டியிட்டு
வெற்றி பெற்ற மூவரில்
இலங்கை கம்யூனிஸ்ட்
கட்சியை சேர்ந்த தோழர் க. நவரட்ணம் ஒருவர். அந்த தேர்தலில்
தோழர் க. நவரட்ணம் உட்பட மூவருக்கு
விருப்பு
வாக்குகளை
அளிக்கும்படியே
ஈபிஆர்எல்எவ்
இன் பிரச்சாரம்
அமைந்திருந்தது.
இவை தோழர்
பத்மநாபா
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக
போராடியவர்கள்
மத்தியில்,
அதற்கு ஆதரவான முற்போக்கு
ஜனநாயக சக்திகளிடையே
ஒற்றுமை அவசியம் என்பதை வெறுமனே சொல்லிக் கொண்டிருந்த
ஒருவர் அல்ல சந்தர்ப்பம்
கிடைத்த போதெல்லாம்
முன்மாதிரியாகவும்,
தீர்க்கதரிசனத்தோடும்
செயற்பட்ட
தலைவர் என்பதற்க எடுத்துக்காட்டுக்களாகும்.
அமரர் தோழர் பத்மநாபாவின்
கருத்துக்கள்,
செயல்கள்
யாவும் மக்கள் நலனை முன்நிறுத்தி
செயற்படும்
அனைவராலும்
முன்னுதாரணமாகக்கொள்ளத்
தக்கவையாகும். அவரது
பிறந்த தின நினைவு
நாளில் அவரது எண்ணங்கள்
செயல்வடிவம்
பெற உழைப்போம்
என திடசங்கற்பம்
பூணுவோம்.
தோழர் பத்மநாபாவின்
நாமம் நீடூழி வாழ்க !!! |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |