|
||||
|
மாவீர்களும்...
விற்பனர்களும்...
மாவீரர்கள்
நினைவு
கூறப்படவேண்டியவர்களே,
ஆனால்
விற்பனைக்குரியவர்கள்
அல்ல... !!!
(இக்கட்டுரை வன்னி
இறுதிப் போர்... பெரும்
போர்... நடந்து
அடுத்த வருடம் எழுதப்பட்டது...
முள்ளி வாய்க்காலில்
தான் சத்தியப்பிரமாணம்
எடுப்போம்
என்று சூளுரை விடுப்பவர்கள்
இருக்குமிடத்தும்... வேலுப்பிள்ளை பிரபாகரனின்
இறுதி நாட்களில்
கப்பல் வருகிறது...
கப்பல் வருகிறது...
வெளிநாட்டில்
இருந்து உதவி வருகிறது...
வெளிநாட்டில்
இருந்து உதவி வருகிறது...
என்று மாயைக்குள்
உள்ளாக்கியது
மாதிரி... இன்றும் புலம்பெயர்
தேசங்களில்
பிரபாகரன்
உயிருடன்
இருக்கிறார்
என்றும்... அதற்காக இந்தியாவில்
இருந்து பிள்ளைகளை
வெளிநாட்டில்
பாதுகாப்பாக
வைத்திருக்கும்...
இளைஜர்களை
கவிதைகள்...
மேடைப்பேச்சுக்களிநூடாக...
உசுப்பேத்தி..
பலிக்கடாவாக்கிய...
காசி ஆனந்தனின்
முகப்புரையுடன்...
அமரர் வேலுப்பிள்ளை
பிரபாகரனின்
தமிழீழத்தை
நோக்கிய கைகாட்டலுடன்...
கூடிய... முகப் படத்துடன்...
"வருவோம்
தாய்மண்ணே" என்று திரும்பவும்
மக்களை மாயைக்குள்
உள்ளாக்க...
10 பாடல்களுடன்
வெளிவந்திருக்கும் CD மூலம்
விற்று பணம் பண்ணுபவர்கள்
இருக்குமிடத்தும்...
மாவீர் தியாகங்களை
வியாபாரமாக்கியும்...
மீண்டும்
போராடம் தொடங்கிறது...
என்றும் பல வழிகளில்
பணம் பண்ணுபவர்கள்
இருக்குமிடத்தும்...
இன்றும் இக்கட்டுரை
காலத்தின்
தேவையை ஒட்டி பொருந்தும்
என்ற நோக்கில்
மீள் பிரசுரிக்கப்படுகிறது...
இதுமட்டுமல்ல...
போரின் பின்னர் வன்னியின்...கிளிநொச்சி,
முல்லைத்தீவு
மாவட்ட மக்களை சந்தித்தவிடத்து...
அவர்களின்
நிலையை அறிந்தவன்
என்ற நிலையிலும்...
சிறுவர் பாதுகாப்புத்
திணைக்களத்தின்
பணிப்பாளரின்
அறிக்கையின்படி...
குறிப்பாக
அம்பாறை, மட்டக்களப்பு,
வவுனியா, முல்லைத்தீவு,
கிளிநொச்சி,
மொனராகலை,
நுவரெலியா,
பதுளை மாவட்டங்களில்
சிறுபராய
கர்ப்பிணிகள்
மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்
குறித்து
அதிகளவில்
பதிவாகியுள்ளன. இதன்பொருட்டு அந்தந்த பிரதேசங்களில்
ஆய்வுகள்
நடத்தப்பட்டு
உரிய தரவுகள்
பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும்
நன்னடத்தை
மற்றும் சிறுவர் பாதுகாப்புத்
திணைக்கள
பணிப்பாளர்
தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுவர்களின்
கல்விக்கான
உதவிகளுக்கு
இதுவரை சுமார் 3 மில்லியன்
ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும்
அவர் குறிப்பிட்டார். இதில் பார்த்தால்...
போர் நடைபெற்ற
அம்பாறை, மட்டக்களப்பு,
வவுனியா, முல்லைத்தீவு,
கிளிநொச்சி
மாவட்டங்களில்
சிறுபராய
கர்ப்பிணிகள்
மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்
அதிகளவில்
பதிவாகியுள்ளன.
இதை நாம் கவனத்தில்
கொள்ள வேண்டும்...
இவர்கள் எமது... இனம்...
எமது உறவுகள்...
எதிர்கால
சந்ததிகள்...
நடைபெற்ற போரிற்கு நேரடியாகவோ...
மறைமுகமாகவோ...
நாம் எல்லோரும்
பங்களித்துள்ள
நிலையில்....
இன்று எமக்கு பெரும் கடப்பாடு உண்டு...
பல வழிகளிலும்...
பல இழப்புக்களினூடே… நொந்து போயிருக்கும்
மக்களை திரும்பவும்
மாவீரர் ஆக்காதீர்கள்
...
பலிக்கடா
ஆக்காதீர்கள்
...)
மாவீர்களும்...
விற்பனர்களும்...
மாவீரர்கள்
நினைவு
கூறப்படவேண்டியவர்களே,
ஆனால்
விற்பனைக்குரியவர்கள்
அல்ல...!!!
ஈழத்தமிழ்
மக்களின்
உரிமைகளுக்கான
போராட்டம்
தொடங்கிய
காலத்திலிருந்து
பல உயிர்கள்
தியாகங்கள்
செய்து, வீரகாவியம்
படைத்து
எம்மை விட்டு
துறந்தும்
இன்றும்
எத்தனையோ
பெற்றோருக்கு
தம்
பிள்ளைகளின்
உயிர் அகன்ற
உடல்களை பார்க்கவோ...
அவர்களின்
நினைவு
கல்லறை
பார்க்கவோ கிடைக்காமல்
தம் துயரை
தம்மினுள்ளே
அமிழ்த்தி...
துயரும் வேளை, புலம்
பெயர்ந்த
நாடுகளிலோ
பரநாட்டியம்
பயிலும் தம்
பிள்ளைகளின்
நடனத்தை
மேடையேற்றி பார்ப்பதற்கும்... ஓர்
மாவீரர் திருவிழா...!!!
தாயகத்தில் பாடசாலைக்கு
சென்ற பிள்ளை
வீடு
திரும்பாமல்
விடுதலை
என்னும்
பிள்ளை
பிடித்த
கூட்டத்தால்
கூட்டிச்சென்று
வயிற்றில்
குண்டை கட்டி
குற்றுயிராக்கப்பட்ட
வேளை... புலம்
பெயர்ந்த
நாடுகளிலோ
பாடசாலை
செல்லும்
பிள்ளைகளை தவறான
வழியில்
வழிநடத்தி வளரும்
சமுதாயத்தை
மரமண்டையக்குவதர்க்கு...
ஓர் மாவீரர்
திருவிழா...!!!
தாயகத்தில் தாம்
பெற்ற பிள்ளைகளின்
சம்பாத்தியத்தை
காணாமல்... தம் புருஷர்களின்
சம்பாத்தியத்தை
காணாமல்... பிள்ளைகளின்
தாய்மார்...
கணவனை இழந்த விதவைகள்
துன்பத்திலும்...
துயரத்திலும்...
பாதுகாப்பில்லாமல்...
ஏழ்மையில்...
ஏங்கித் தவிக்கும்போது...
புலம் பெயர்ந்த நாடுகளிலோ
BMW... INFINITI... LEXUS... ஓடுவதற்கும்
பட்டாடைகள்
உடுத்துவதற்கும் மாவீரர் பெயரால் விழாவெடுத்து வருவாய் தேட... ஓர்
மாவீரர் திருவிழா...!!! மாவீரர்கள் நினைவு கூறப்படவேண்டியவர்களே, ஆனால் விற்பனைக்குரியவர்கள் அல்ல...!!!
புலம்
பெயர்
நாடுகளில்
மாண்ட பினாமி
வீரர்களே... 2008 மட்டும்
மாவீரர்
கணக்கு
சொல்லி
மாவீரர் திருவிழா
எடுத்தவர்களே...
2009 இலிருந்து
கணக்கு
எங்கே...???
நாற்பதினாயிரத்திர்க்கு மேற்ப்பட்டவர்களை
மாவீரர்களாக்கிய...
நாற்பதினாயிரத்திர்க்கு
மேற்ப்பட்ட
குடும்பங்களை
மாவீர
குடும்பம்
என்ற நாமத்தில்
அழித்த... மகா மாவீர
புருஷனிற்கு மாவீர்
பட்டம்
எங்கே...???
தன்னை மகா
மாவீரனாக்காமல்
தப்புவதற்கு
நாற்பதினாயிரத்திர்க்கு மேற்ப்பட்ட
அப்பாவி
குழந்தை...
கர்ப்பிணித் தாய்மார்கள்...
முதியோர்...என்று
கிளிநொச்சி
தொடக்கம்
முள்ளிவாய்க்கால்
மட்டும் நாலாம் கட்ட
போர் என்று
பலி
கொடுத்த... மகா மாவீர
புருஷனிற்கு மாவீர்
பட்டம்
எங்கே...???
தன்னை
சூரிய தேவனாக
காட்டுவதற்கு
பற்குணம், மைக்கேல்
தொடக்கம்
தோழர்
சுபத்திரன், பாறுக்
தோழர் வரை
நாலாயிரத்திற்கு
மேற்பட்ட மண்ணுக்காகவும்...
மக்களுக்காகவும்...
தம்மை அர்ப்பணித்த தோழர்கள் மட்டுமல்லாமல்...
சகோதரி ரஜனி தினரகம, செல்வி தொடக்கம்
சரோஜினி யோகேஸ்வரன், மகேஸ்வரி வரை எமது தாய்
நாட்டின்
தாய்க்
குலத்தை பலி
எடுத்த... மகா மாவீர
புருஷனிற்கு மாவீர்
பட்டம்
எங்கே...???
மண்ணை
மீட்கும்
போர்... தாயக
விடுதலைக்கான
போர் என்று
தன்னை தானைத்
தலைவனாக நிலை
நிறுத்தி...
மண்ணுக்காகவும்...
மக்களுக்காகவும்...
தம்மை
அர்ப்பணித்தவர்களின்
நாமத்தால்
மாவீர் உரை
என்று ஓர் உரை
வாசிக்கும்...
மகா மாவீர
புருஷனிற்கு மாவீர்
பட்டம்
எங்கே...???
நாலு பேர்
என்று
தொடக்கி...
நாற்பது
பேராக பண்ணையில்
பயிற்சியெடுத்து...
நாலாயிரம் பேராக
அந்நிய மண்ணில் பயிற்சியெடுத்து... நாற்பதினாயிரம் பேரை மாவீரராக்கி... மேலும்
நாற்பதினாயிரம் பேரை நாற்பது
நாட்களில்...
தான் சயனைட்
விழுங்காமல்
தன் உயிரை
காப்பற்றுவதற்க்காக
பலி கொடுத்து...
நாலு இலட்சம் பேரை
தம்
மண்ணிலேயே உடுத்த
உடைகளுடன்
முள்ளுக்கம்பிகளுக்குள் அகதிகளாக்கி...
எண்ணிலடங்காத ஆயிரக்கானவர்களை அங்கவீனர்களாகி...
குழந்தைகளை அனாதைகளாக்கி...
தாய்மாரை விதைவைகளாக்கி...
தன்
குடும்பத்தையே...
தன் குடும்பத்தின் மனைவி பிள்ளைகள்
நாலு
பேரையும் காப்பாற்றமுடியாமல்...
பலி கொடுத்த...
மகா மாவீர
புருஷனிற்கு மாவீர்
பட்டம்
எங்கே...???
மாவீரர்
திருவிழா
நடாத்தும்
மாவீர மானிடர்களே...??? மகா மாவீர
புருஷனிற்கு மாவீர்
பட்டம்
எங்கே...???
மண்ணுக்காகவும்...
மக்களுக்காகவும்...
தம்மை அர்ப்பணித்த தோழர்கள்...
தியாகிகளாகட்டும்...
வீர மக்களாகட்டும்...
எழிமைக்கும்...
உறுதிக்கும் இலக்கணமாக இருந்து அரசு இராணுவ இயந்திரத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழர்
கனகுலசிங்கம்
தொடக்கம்... வீர
வணக்க பட்டியலிடாமல் இன்றும் காந்தியம்,
வங்கம் தந்த பாடம் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கும் தோழர் சந்ததியார் மட்டுமல்லாமல்...
இனவெறியர்களால்
படுகொலை செய்யப்பட்ட
டாக்டர் இராஜசுந்தரம், அரபாத்... என்று
முகம்
தெரியாமல்
மண்ணுக்காகவும்...
மக்களுக்காகவும்...
தம்மை அர்ப்பணித்த...
பட்டியல்களில்
அடங்காத அனைவரும்
தியாகிகளே...!
வீரமறவர்களே...!!
மாவீரர்களே...!!!
என்று
எம்மண்ணில்
மரணித்தவர்கள்
அனைவருக்கும்
ஒருமித்து
பாகுபாடில்லாமல்
நினைவுகூறுகிறோமோ,
அன்றுதான்
எம்மை ஓர்
இனம் என்று
இலங்கை அரசு
தொடக்கம்...
உலக இன மக்கள்
வரை
அங்கீகரிப்பார்கள்...!!!
மாவீரர்
திருவிழா
நடாத்தும்
மாவீர மானிடர்களே...!!!
உங்களால்...
உங்களின்
தீர்க்கதரிசனமில்லாத
போராட்டத்தால்...
மண்ணுக்காகவும்...
மக்களுக்காகவும்...
தம்மை அர்ப்பணித்த/ தங்களால் படுகொலை செய்யப்பட்ட
சக
போராளிகளை...
அரசியல்வாதிகளை...
நினைவுகூர பக்குவப்படுங்கள்...!!!
மாவீரர்
திருவிழா
நடாத்தும்
மாவீர மானிடர்களே...!!!
உங்களால்...
உங்களின்
தீர்க்கதரிசனமில்லாத
போராட்டத்தால்...
மண்ணுக்காகவும்...
மக்களுக்காகவும்...
தம்மை அர்ப்பணித்த மாவீரர்
குடும்பங்களிற்கு
உதவிகளை
செய்யுங்கள்...!!!
இனியொரு
விதிசெய்வோம்...!
என்று
இனியும் நீங்கள்
திருந்தாவிடில்,
நீங்கள்
மானிடர்களே
அல்ல...!!
திருந்துங்கள்...!!!
மாவீரர்களை
விற்காதீர்கள்...!
விற்பனர்களே...!!
மாவீரர்களை
விற்காதீர்கள்...!!!
-
அலெக்ஸ்
இரவி
http://www.sooddram.com/Articles/general/Nov2010/Nov282010_ARavi.htm |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |