Contact us at: sooddram@gmail.com

 

தொழிலாளர்களின் நிலைமைக்கு பிரித்தானியா காரணம்?

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு பிரதான காரண கர்த்தாக்கள் பிரித்தானியர்களே. அவர்கள்தான் இந்த மக் களை அழைத்து வந்தனர் ,இன்று இந்த நிலைமையில் அவர்கள் இருப்பதற்கு அவர்களே பதில் சொல்ல வேண்டும் என ஒரு சில மலையக பிரதிநிதிகள் குறைகூறத் தொடங் கியிருக்கின்றனர். காலனித்துவ ஆட்சி காலத்தில் போர்த் துகேயர் ஒல்லாந்த ருக்குப்பிறகு இலங்கையை கைப்பற் றிய ஆங்கிலேயர்கள் 133 வருடங்கள் ஆட்சி செய்தனர். அனைவருமே இலங் கையை தமது வர்த்தக நோக்கத்திற்கே பயன்படுத்தினர் என்பது முக்கிய விடயம். இதில் ஆங்கி லேயர் இலங்கையின் மத்திய மலை நாட்டை ஆரம்பத்தில் கோப்பி ,கொக்கோ பின்னர் தேயிலை பயிர்ச்செய்கைக் காக பயன்படுத்தினர்.
சிலோன் டீ என்ற பெயரை உலகறியச்செய்தவர்கள் ஆங்கிலேயர்களே இந்த சந்தர்ப்பத்தில் மேலதிக வேலைக் காகவும் தமது பெருந்தோட்டப்பயிர்ச்செய்கையை விரிவு படுத்தவும் தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வரும் செயற்பாட்டில் ஆங்கிலேயர்கள் ஈடுபட் டனர். இந்த பணி கிழக்கிந்திய கம்பனி மூலமாகவே முன் னெடுக்கப்பட்டது.
தொழிலாளர்கள் இங்கு வருவதற்கு காரணகர்த்தாக்கள் ஆங்கிலேயர்களே என்பது உண்மை தான் ஆனால் அவர்கள் நமது நாட்டைவிட்டுச்சென்று 66 வருடங்கள் கழிந்த பின் னரும் இதுவரை அவர்களை குறை கூறிக்கொண்டிருப்பதில் உள்ள நியாயம் என்ன? அவர்கள் இலங்கையையும் மலை யகத்தையும் சூறையாடிவிட்டுச்செல்லவில்லை, பச்சை தங்கம் என அழைக்கப்படும் தேயிலையை அறிமுகப்படுத் தியுள்ளனர் அதன் மூலம் இலங்கையின் தேசிய வருமா னத்திற்கு வழிகாட்டி விட்டே சென்றுள்ளனர்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் இது வரையிலும் நாட்டின் அபிவிருத்திக்கு பெருந்தோட்டத் தொழிற்றுரை எந்தளவிற்கு பங்களிப்பு செய்து வருகின் றது என்பதை அடுத்தடுத்து ஆட்சி அமைத்த அரசாங்கங் களே அறியும். அப்படி இருக்கும் போது இந்த வருமானத் திற்கு அடிகோலிட்ட ஆங்கிலேயர்களையும் அவர்களின் நாடான பிரித்தானியாவையும் வசைபாடுவதில் என்ன யதார்த்தம் உள்ளது?
அப்படியானால் இவர்களை அனுப்பி வைத்து விட்டு இப்படி ஒரு சமூகம் இருக்கின்றதா இல்லையா என்று கூட தெரியாத நிலையிலிருக்கும் இந்தியாவையும் அல்லவா குறை கூற வேண்டும்.

இன்று வரைக்கும் இத்துறையில் வருமானத்தைப்பெற் றுத்தருவதில் மாடாய் உழைக்கும் இந்த தொழிலாளர் வர்க்கத்தினருக்கு அரசாங்கங்கள் என்ன உரிமைகளைப் பெற்றுக்கொடுத்துள்ளன? அதை விடுவோம் இவர்களின் வாக்குகள் மூலம் பதவி மற்றும் ஏனைய சொகுசுகளை அனுபவித்துவரும் பிரதிநிதிகள் என்ன உரிமைகளைப் பெற்றுக்கொடுத்துள்ளனர்? சலுகைகளை எவருமே பெற் றுகொடுக்கலாம்.ஆனால் சலுகைகளை உரிமைகள் என்ற பெயரில் வழங்கிக்கொண்டிருக்கும் பிரதிநிதிகளை விட ஆங்கிலேயர்கள் எவ்வளவோ மேல் என்றே கூற வேண் டியுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற மீரியபெத்த அனர்த்தத்தில் கூட இறந்தவர்கள் தொகை எவ்வளவு என்ற விடயத்தை கூற முடியாமல் மென்று விழுங்கி தற்போது காணாமல் போன வர்களை மீட்கும் பணியிலும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியாமல் தோல்வியை தழுவிக்கொண்டு அதே அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கிக்கொண்டிருக்கும் இவர்கள் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு ஆங்கி லேயரை சுட்டிக்காட்டுவது சிறுபிள்ளைத்தனமான,கோமா ளித்தனமான செயலாகும். மாகாண சபைகளிலும் ,பாராளுமன்றத்திலும் ,பொது இடங்களிலும் இவ்வாறு கதைத்து வரும் இவர்கள் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் இலங்கை விஜயத்தின் போதும் மேற்குறிப்பிட்ட கதையை அவிழ்த்து விட்டனர் என்பது முக்கியவிடயம். இப்போது எழுந்துள்ள கேள்வி இதுதான். தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து பலரையும் சுட்டிக்காட்டிக்கொண்டிருப்பதிலேயே காலத்தை தள்ளிக்கொண்டிருக்கும் பிரதிநிதிகள் இவர்களின் நிலைமைக்கு நீங்கள் தான் காரணம் என இன்றைய ஐக்கிய இராச்சியத்திடமும் இந்தியாவிடமும் நேரிடையாக பேச முடியுமா?

மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப் படமாலிருக்க ஒபாமாவும், கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனும் காரணம் என அறிக்கை வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com