Contact us at: sooddram@gmail.com

 

ஈழத்தமிழர்களை கொன்றுகுவித்த போர்த் தளபதி பொன்சேகாவுக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆதரவு

(தி. வண்ணமதி)

தமிழருக்கு எதிரான போரை முன்நின்று நடாத்தியவர் முன்னாள் சிறிலங்கா இராணுவத்தளபதி சரத் பொன்சேகா. தமிழருக்கு எதிரான போரை முன்னெடுத்தவர்கள் வரிசையில் சிறிலங்காவின் தற்போதய அதிபர் மகிந்த ராஜபக்சவைவிட பொன்சேகவுக்கு அதிகமானதும், காத்திரமானதும் பங்கு உண்டு. இவர் முன்னர் ஒருகாலத்தில் யாழ்ப்பாணமாவட்டத்தில் தளபதியாக பணியாற்றியவர். இவர் தளபதியாக இருந்த காலத்தில் பல இளைஞர், யுவதிகள் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.

இன்று, அனோமா பொன்சேகா வடிக்கும் இதே கண்ணீரை யாழ்ப்பாணத் தமிழ் தாய்மாரும், தம் கணவன்மாரை படையினரிடம் பிடிகொடுத்த துணைவிமாரும் ஏற்கனவே வடித்தனர். இப்பாடிப்பட்ட சரத் பொன்செகாவுக்கு கடந்த அதிபர் தேர்தலில் 4 மில்லியன் மக்கள் வாக்களித்திருந்தனர். மகிந்தவின் பிடியிலிருந்து சிறிலங்காவுக்கு விடிவு கிட்டட்டும் என வாக்களித்த தமிழர்கள், முஸ்லிம்கள் போக, ஏனைய சிங்கள இனவாதிகளின் வாக்குகள் ஏன் வழங்கப்பட்டன தெரியுமா? போரில் இரக்கமின்றி ஆயிரக்கணக்கான தமிழர்களை குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்ற பேதமின்றி கொன்று குவித்த கொலைவீரன் என்பதால் தான்.

இப்படிப்பட்ட சரத் பொன்சேகாவுக்காக கனேடியத் தமிழ் காங்கிரஸ் ஆதரவளிக்கிறது. இதில் 'கனடிய தமிழ் காங்கிரஸ் ஏன் ஆதரவளிக்கின்றது என விளக்கமளிக்கிறார் அதன் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை, இது தொடர்பாகயாகூ நியூஸ்’[yahoo news.] இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த வாரம் 30 மாதகாலக் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கும் சிறிலங்காவினது முன்னாள் இராணுவத் தளபதியும் போரின் போது தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையினைக் கட்டவிழ்த்துவிட்டவருமான சரத் பொன்சேகாவிற்குத் தங்களது ஆதரவினை வழங்கி நிற்கும் கனேடியத் தமிழர்கள் முன்னாள் இராணுவத் தளபதியினை ராஜபக்ச அரசாங்கம் மோசமாக நடாத்துவதைக் கண்டித்திருக்கிறார்கள்.

"இராணுவ ஜெனராலாகப் பொன்சேகா இருந்தபோது அவருக்கும் தமிழர்களுக்குமிடையில் பிரச்சினைகள் நிலவியது என்னவோ உண்மைதான். ஆனால் தற்போது அவர் ஒரு அரசியலாளன் என்ற வகையில் பொன்சேகாவிற்கும் எங்களுக்குமிடையில் எந்தப் பிரச்சினையுமில்லை என கனேடியத் தமிழ் காங்கிரசினது தேசிய பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை கூறுகிறார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சிறிலங்காவினது அதிபர் ராஜபக்சவினதும் நாட்டினை ஆண்டுவரும் ராஜபக்ச குடும்பத்தினதும் பணிப்புக்கமைய பொன்சேகாவிற்கு அநீதி இழைக்கப்பட்டு அவர் சிறையிலிடப்பட்டிருக்கிறார். 

முன்னாள் இராணுவத் தளபதி இவ்வாறு இழிவாக நடாத்தப்படும் முறையானது, தமிழர்கள் உள்ளிட்ட தனது அரசியல் எதிராளிகளை தற்போதைய கொடுங்கோல் அரசாங்கம் எவ்வாறு நடாத்துகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. சிறிலங்காவினது சிறைகளில் வாடும் ஆயிரக்கணக்கான தமிழர்களுக்காக மாத்திரமல்லாமலாது பொன்சேகாவின் விடுதலைக்காகவும் புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் போராடுவோம்.

கொழும்பு ஆட்சியாளர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் புலம்பெயர் தமிழர்கள் பொருத்தமான சர்வதேசக் கட்டமைப்புகளிடம் இந்த விடயத்தினை எடுத்துச் செல்கிறார்கள்.

உழுத்துப்போனதோர் ராஜபக்ச இராச்சியத்திற்குள் சிறிலங்கா சென்றுவிட்டது. இந்த இராச்சியம் உருவாவதற்கு வாக்களித்த தென்பகுதிச் சிங்களவர்கள் நிலைமையினைப் புரிந்துகொண்டு விழித்தெழாவிட்டால் ராஜபக்சக்களின் இராச்சியத்திலிருந்து இலங்கைத் தீவினை எவராலும் மீட்கமுடியாது.

பொன்சேகாவினைச் சிறையில் அடைத்ததன் மூலம், கடந்த சனவரியில் இடம்பெற்ற குடியரசு அதிபர் தேர்தலில் ராஜபக்சவிற்கு ஆதரவாக வாக்களித்த நான்கு மில்லியன் மக்களை மகிந்த அரசாங்கம் அவமதித்திருக்கிறது.

மனித உரிமைகள் மற்றும் சனநாயகப் பண்புகள் தொடர்பில் ஆளும் மகிந்த அரசாங்கம் எள்ளளவும் கவலைகொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. சர்வதேசம் கடுமையாக எதிர்த்துநிற்கும் கொடுங்கோலாட்சியின் பிடியில் சிறிலங்கா சிக்கித் தவிக்கிறது.

இதேவேளை, மே 2009இல் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளமைப்புக்கு எதிரான போரைத் தலைமையேற்று நடாத்திய முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகாவிற்கும் அதிபர் ராஜபக்சவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட கடந்த சனவரியில் இடம்பெற்ற குடியரசு அதிபர் தேர்தலில் பொன்சேகா ராஜபக்சவினை எதிர்த்துக் களமிறங்கினார்.

ஆனால், அதிபர் தேர்தல் முடிவுக்கு வந்த கையோடு கைதுசெய்யப்பட்டுத் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த பொன்சேகாவினது பட்டிகள், பதக்கங்கள் அனைத்தையும் கடந்த மாதம் இராணுவ நீதிமன்றம் பறித்திருந்தது. தற்போது இராணுவ நீதிமன்றினால் மூன்று ஆண்டுகாலக் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கும் தளபதி பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com