Contact us at: sooddram@gmail.com

 

வேர் அறுதலின் வலி கவிதை தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

யாழ் முஸ்லிம் வலைத்தளத்தின் வெளியீடாக வேர் அறுதலின் வலி என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. 21 வருடங்களுக்கு முன்பு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வினையொட்டி யாழ் வலைதளம் நிகழ்த்திய போட்டிக்காக வந்து சேர்ந்த கவிதைகளை இத்தொகுப்பு ஏந்தி நிற்கிறது. வரலாற்றுப் பதிவாகவும், ஆழ் மனசில் வேரூன்றிய வலிகளின் வெளிப்பாடாகவும் இங்கு 127 பக்கங்களில் 55 கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. வடக்கிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கே இந்த நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

வ.ஐ.ச. ஜெயபாலனின் சிறப்பானதொரு முன்னுரையும், ஆசிரியர் எம்.எஸ்.ஏ. ரஹீம், முன்னாள் அதிபர் எம்.எம். அப்துல் குத்தூஸ் ஆகியோர் ஆசியுரைகளையும், ஊடகவி யலாளர் ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் அவர்கள் அணிந்துரையையும் வழங்கி நூலை சிறப்பித்திருக்கிறார்கள். மறந்துபோனதாக காட்டிக்கொள்ளும் இந்த நிகழ்வினை மறக்க முடியுமா என்பதாக ஊடவியலாளர் அன்ஸிர் அவர்கள் எம்மை மீண்டும் ஒருமுறை சிந்திக்க வைத்திருக்கிறார். அதாவது வடபுலத்து முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த அந்த கொடுங்கணங்களை மீட்டிப் பார்க்கும் சந்தர்ப்பமாக இந்த நூல் வெளிவருவதற்கு முன்நின்று செயற்பட்டிருப்பவர் அன்ஸிர் அவர்கள்தான். காத்திரமாக இத்தொகுதிவெளிவர உந்துதலாக இருந்த அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஏ.எம்.எம்.அலி,ஜன்ஸி கபூர், எம்.எச்.எம். புஹாரி, கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர் கனி, கே.எம்.ஏ. அkஸ், புத்தளம் எம்.ஐ.எம். அப்துல் லதீப், ஏ.எல்.எம். சத்தார், ஏ.எஸ். இப்றாஹீம், முஹம்மது இக்பால் காரியப்பர், ஏ.கே. முஜாராத், சபீனா சம்சுதீன், எம்.ஐ.எம். அஸ்ரப், எம்.ஐ.எம். நுஸ்கி, எச்.எப்.ரிஸ்னா, முருகேசு பகீரதன், ஏ.எம்.முகைதீன், பாத்திமா நுஸ்ரா, தம்பிராசா, பரமலிங்கம், ஏ.எல்.எம். அஸாத், முஹம்மது நிஸ்றி, ரீ.எல். ஜவ்பர் கான், ஏ.எஸ்.எம். அப்துல்லாஹ், ஹலீமா அனீஸ், ஏ. நஸபுல்லாஹ், அப்துல் ஹலீம், பாத்திமா தஸ்லிமா நசீர், மஃனாஸ் மஃமாறூப், பாத்திமா நஸ்லா ஷாமில், சம்சுதீன் சிபானா, பாத்திமா பஸ்லா, எம்.கே.எம். வசீம், உ. நிசார், எம்.எம்.விஜிலி, கே.எம். நெளஷாட், அலியார் ஜிப்ரி, என். அப்துல் ரஹ்மான், அப்துல் கபூர், நுசைமியா, ஜே.சபீனா, சீவரட்ணம், எஸ். சிராஜூதீன் பிரோஸ்கான், ரமீஸ் பாத்திமா ருஸ்தா, ஜெஸ்மினா மகாஸ், ஜமால்தீன் பிரோஸ்கான், மதனரூபன், எஸ்.எப். சப்னா, கவிஞர் யாழ். அkம், எம்.என்.எம். பாயிக், கலாபூஷணம் தமீமா ரஹீம், வீ. சிவராஜா, ஏ.என்.எம். இஜ்லான், எச். எம்.எம். சப்வான், ஏ.யூ.எல். எப். அரபா உம்மா, அபு அப்பாஸ், ஏ. பாத்திமா அப்கா, நீலா பாலன், மூத்த தம்பி மகாதேவன் ஆகியோரது கவிதைகள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன. சொந்த மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட்ட மனித ஆத்மாக்களின் துயரங்களைப் பதியும் கவிதைகளை இனி பார்ப்போம்.

கிண்ணியா ஏ.எம்.எம். அலியின் கறைபடிந்த வரலாற்றை கண்ணீரால் வாசிக்கும் என்ற (பக்கம் 20) கவிதை துப்பாக்கி முனையைக் காட்டி முஸ்லிம்கள் துரத்தப்பட்ட துயரத்தை காட்டி நிற்கிறது.

தப்போதும் புரியாமல் தயைகூர்ந்து வாழ்ந்தவரை

துப்பாக்கி முனைகொண்டு துரத்தியடித்திட்ட கதை

எப்போதும் மறக்கவொணா ஈனமிகுங் கதையாகி

இப்போதும் வடபுலத்து இசுலாமியரை எரிக்குதம்மா

வாருங்கள் பாங்கோசை கேட்கிறது (பக்கம் 27) கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர் கனியின் கவிதை பின்வருமாறு அமைந்துள்ளது.

நபியவர்கள் மதீனாவுக்கு யாத்திரை செய்த ஹிஜரத் வரலாறு யாவரும் அறிந்ததே. சொந்த மண்ணைவிட்டு அவர்கள் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அது போலவே முஸ்லிம்களும் தமது ஊரை, உடமைகளை விட்டு இடம்பெயர்ந்து வந்துள்ளனர். இரண்டையும் ஒப்பிட்டு அவர் எழுதியிருக்கும் கவிதை சிறப்பானதாகும்.

சூழ்நிலை துரத்தியதால் சுந்தர நபியின் வாழ்வில் ஹிஜ்ரத் எனும் இடம்பெயர்வு ஏற்பட்டமை இஸ்லாமிய வரலாறு ... யாழ் மண்ணின் ஈமானிய இதயங்களை சூழ்ச்சி விரட்டியதால் இன்னொரு ஹிஜ்ரத் ஏற்பட்டமை இன்றைய முஸ்லிம்களின் சரித்திரம். பழங்கால வரலாறும் சமகால சரித்திமும் இடவெளியில் இரண்டே தவிர எடையில் ஒன்றே தாம்.

பல சந்தக் கவிதைகளின் சொந்தக்காரியாக திகழும் தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னாவின் கறுப்பு மாதம் (பக்கம் 48) என்ற கவிதை பின்வருமாரு அமைந்துள்ளது.

வடபுலத்து முஸ்லிம்கள்

படபடத்த நாளொன்று

வருகின்ற அக்டோபர்

வருடங்கள் இருபத்தொன்று!

தீயவை அழித்துவிடல்

மனிதகுல தர்மம் தான்...

இனமொன்றை துடைத்தழித்தால்

அதற்கு பெயர் வன்மம் தான்!

சொத்துக்கள் சொந்தங்கள்

பலிகொடுத்தோர் ஏராளம்..

இனி வாழ்வில் எமக்கெல்லாம்

இசைக்கலாமா பூபாளம்?

ஒக்டோபர் மாதமிங்கு

கறுப்பாக ஆயிற்று..

ஒட்டுமொத்த வாழ்க்கையும்

இருட்டாகிப் போயிற்று!

ஒக்டோபர் மாத்தில் இந்நிகழ்வு நடந்ததையொட்டி அவர் தனது கருத்துக்களை எழுதியிருக்கும் பாங்கு அழகானது. அந்த மாதம் கறுப்பாகிப் போனதால். வாழ்க்கை இருட்டாகிப் போனதாக கூறியிருக்கிறார்.

பாத்திமா நஸ்வா ஷாமிலின் கவிதை குறியீட்டுக் கவிதையாக சிறப்பு பெறுகிறது. இன சம்ஹாரம் என்ற தலைப்பில் (பக்கம்77) அவர் யாத்திருக்கும் கவிதையில் வடபுலத்து மக்கள் குருவிகளாக உவமிக்கப்பட்டுள்ளனர். இவர் தர்காநகர் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதியும், மூத்த இலக்கியவாதிகளில் ஒருவருமான கலைவாதி கலீல் அவர்களின் புதல்வியார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com