தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பும்,
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும்
(அபிமன்யு)
கிழக்கு மாகாணசபை
தரும் படிப்பினைகள்
கடந்த செப்டெம்பர்
மாதம் நடந்தேறிய
கிழக்கு மாகாணசபைக்கான
தேர்தல் கீழ்க்காணும்
சில படிப்பினைகளைத்
தெளிவாகத்
தந்திருக்கின்றது:-
முதலாவதாக,
கிழக்கு மாகாணம் பல்லின மக்களை உள்ளடக்கியதாக
இருந்தாலும்,
ஒரு காலகட்டத்தில்
அது தமிழ்
மக்களையே
பெரும்பான்மையாகக்
கொண்டிருந்தது.
அங்கு வாழும் முஸ்லிம் மக்களும், முஸ்லிம் மக்களிடையே
செல்வாக்கு
படைத்த அனேக முஸ்லிம்
தலைவர்களும்
தமிழ்மக்களுடன்
பேதமற்று
அரசியல் விவகாரங்களில்
கைகோர்த்து
இணைந்து செயலாற்றினர்.
அதனால் சிங்களப்
பேரினவாதிகளுக்கு
எதிரான பலமான அரசியல்
சக்தியாக
இரு இனங்களும்
செயற்பட்டன.
சிங்களப் பேரினவாதிகளின்
ஏதேச்சாதிகாரச்
சூழ்ச்சிகளை
முறியடிக்க
முடிந்தது.
அந்த மாகாணத்தின்
அரசியல் போக்கை நிர்ணயிக்கும்
பலமான அரசியல் சக்தியாக விளங்கினர்.
கால ஓட்டத்தில்,
அரசியல் சதுரங்கத்தில்
பற்பல தூரநோக்கற்ற
செயற்பாடுகளால்,
அந் நிலைமை
மாறி, “தமிழ்பேசும்
மக்கள் என்று இணைந்த
மக்கள் பிரிந்து தமிழர்கள்,
முஸ்லிம்கள்
என்ற இரு
பிரிவாக இப்பொழுது
செயற்படுகின்றனர்.
அதனால் தமிழ் மக்களும்
முஸ்லிம்
மக்களும்
இணைந்த பலமான சமூக
சக்தி என்ற நிலைமை
மாறி- சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக்
கொண்ட மத்திய அரசாங்கத்தின்
இனவாதப் போக்குகளை
எதிர்க்கும்
பலம் குன்றிய
நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
இரண்டாவதாக, தமிழ் மக்கள் வேறு, முஸ்லிம்
மக்கள் வேறு என்று
பார்க்கும்
நிலைமை அரசியலிலும்,
சமூகத்திலும்
சகல மட்டங்களிலும்
வலுவூன்றி
விட்டது.
இதனால் தமிழ் மக்களையும்
முஸ்லிம்
மக்களையும்
பிரித்து
தங்களின்
பேரின ஆதிக்கத்தை
நிறுவும்
சக்திகளின்
பலம் அதிகரித்திருக்கின்றது.
மூன்றாவதாக,
இலங்கை-இந்திய
ஒப்பந்தத்தின்
கீழ் ஏற்படுத்தப்பட்டு
பின் சட்ட
நடவடிக்கையால்
பிரிக்கப்பட்ட
வடக்கு-கிழக்கு
இணைப்பு மறுபடியும்
சமீப எதிர்காலத்தில்
ஏற்படுவதற்கான
சாத்தியக்கூறுகள்
அற்றுப் போய்விட்டன.
ஒட்டுமொத்த
வடக்கு-கிழக்கு
வாழ் மக்கள்
இணைந்த சர்வஜன வாக்கெடுப்புக்கு,
அரசாங்கம்
சர்வ முட்டுக்கட்டைகளையும்
போடும் என்பது ஒருபுறமிருக்க
இப்பொழுது
தனி மாகாணமாக
இருப்பதால்
ஒரு முஸ்லிம்
முதலைமைச்சராக
வருமளவிற்கு
இருக்கும்
இப்போதைய
அரசியல் பலம் வடக்கு-கிழக்கு
இணைப்பினால்
இழக்கப்பட்டு
விடும் என்ற எண்ண
ஓட்டத்தின்
உந்துதலினால்
முஸ்லிம்
மக்களும்கூட
வடக்கு-கிழக்கு
இணைந்த மக்களின் சர்வஜன வாக்கெடுப்பிற்கோ
வடக்கு-கிழக்கின்
மறு இணைப்பிற்கோ
ஆதரவளிக்கப்
போவதில்லை.
நான்காவதாக,
தமிழ்பேசும்
மக்களாக தமிழர்களும்,
முஸ்லிம்களும்
இணைந்து தம் உரிமைகளை
எய்துவதற்கான
அரசில் வாய்ப்பு இருந்தும்
அதனை உதாசீனம்
செய்து மத்திய அரசாங்கத்துடன்
சில சலுகைகளைப்
பெறுவதற்கே
முஸ்லிம்
மக்களின்
ஒரு கணிசமான
தொகையினரால்
தலைவராகப்
கருதப்படும்
ரவூவ் ஹக்கீம் போன்ற தலைவர்கள்
முன்னுரிமை
கொடுப்பார்கள்
என்ற பார்வை
வலுவாகியுள்ளது.
ஐந்தாவதாக
தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
(TNA) கடந்தகாலக்
கையாலாகத்தனங்கள்,
அரசியல் அணுகுமுறைகளிலும்,
நோக்கங்களில்
தெளிவின்மையும்
சரியான செயற்பாடுகளும்
இல்லாமை ஆகிய காரணங்களால்
தமிழ் மக்கள் அவர்கள் மீது கசப்புணர்வும்
விரக்தியும்
கோபமும் கொண்டுள்ளார்கள்.
எனினும் அவர்கள் மகிந்த ராஜபக்சா அரசின் விடாப்பிடியான
அடக்கு முறைகளாலும்
ஆணவச் செயற்பாடுகளினாலும்,
அரசியல், மனித உரிமைகள்
மறுப்பினாலும்
ஆத்திரமும்
துயரமும்
மேலிடும்
கையறு நிலைமையில்
உள்ளார்கள்.
ஆகவே அவர்களைப்
பொறுத்தளவில்
அவற்றினை
எதிர்கொள்ள
அவற்றிற்கு
தங்களது ஆட்சேபங்களைத்
தெரிவிக்க
ஒற்றுமையாக ரி.என்.ஏ.யைத்
தெரிவு செய்வதைத்
தவிர அவர்களுக்கு
வேறு வழியோ
வேறு தெரிவோ
இப்போதைய
நிலைமையில்
இல்லை எனக் கருதுகிறார்கள்.
அதனாலேயே போட்டியிட்ட
இதர தமிழ்க்
கட்சிகளை
விடுத்து
ரிஎன்ஏ.யில்
போட்டியிட்டவர்களையே
பெரும்பான்மைத்
தமிழர்கள்
தெரிவு செய்திருக்கிறார்கள்.
ஆறாவதாகஇ
பெரும்பான்மைத்
தமிழர்களால்
தெரிவு செய்யப்பட்ட
கட்சி ரி.என்.ஏ என்ற நிலையில்,
அதனை ஏற்று
அக் கட்சியை
மாகாணசபை
அரசாங்கம்
அமைக்க அழைத்தோ, இல்லாவிடில்
அவர்களையும்
இணைத்து அரசாங்கம்
அமைத்தோ தமிழர்களுக்கு
நேசக்கரங்கள்
நீட்டும்
சந்தர்ப்பம்
மகிந்த ராஜபக்சாவிற்கு
இருந்தது.
எனினும் அதற்கு முயற்சிக்காதது
தமிழ் மக்களை உதாசீனம் செய்வதற்கு
ஒப்பானதோடு,
இன ஒற்றுமை,
நல்லிணக்கம்,
என்ற பேச்செல்லாம்
நேர்மையற்ற
வெறும் வாய்ப்பேச்சுக்கள்,
சிறுபான்மை
இனங்களைப்
பிரித்தாள்வதும்,
அவர்களைப்
பெரும்பான்மையினர்
கபளீகரம்
செய்வதே அவர்களது உண்மையான நோக்கம், உத்திகள் அனைத்தும் என்று மக்கள்
ஏற்கெனவை
கொண்டுள்ள
அபிப்பிராயங்களுக்கு
மேலும் வலு சேர்த்திருக்கிறது.
ஏழாவதாக,
1987ல் இணைந்த
வடக்கு –கிழக்கு மாகாணசபைக்கு,
பிரேமதாசா
–புலிகளின்
கூட்டு அதனைப் பலவீனப்படுத்தி
நிர்மூலமாக்கும்
வரை முதலமைச்சராக
இருந்தவர்
தமிழரான ஈ.பி.ஆர்.எல்.எவ்ச்
சேர்ந்த வரதராஜப் பெருமாள். இம்முறை ஒரு முஸ்லிம் முதலைமைச்சராவதற்கு
ரி.என்.ஏ.யின்
தலைவர் சம்பந்தன்
தானாகவே முன்வந்திருந்தார்.
சில துர்ப்பாக்கியமானதும்,
வேண்டத்தகாததுமான
கடந்தகாலச்
சம்பவங்களின்
காரணமாக தமிழர்களின்
மீது நம்பிக்கை
குன்றியிருக்கும்
முஸ்லிம்களை
அரவணைக்க
நீட்டப்பட்ட
நேசக்கரங்களாக
அது அமைந்துள்ளது.
தமிழ்
தேசியக் கூட்டமைப்பின்
அரசியல் செயற்பாடுகள்
கிழக்குமாகாணத்
தேர்தலின்
படிப்பினைகள்
இப்படியிருக்க, இன்னுமொரு விடயத்தை தமிழ் மக்கள்
கருத்தில்
கொள்வது இன்றியமையாததாகும்.
எப்பொழுதுமே நாம் மற்றவர்களையே
குற்றம் கூறுவதோடு
நின்று விடுவோம்.
எம்மை நாமே உள்நோக்கி,
சீர்தூக்கி
நமது குற்றங் குறைகளை
அலசுவதில்லை,
ஆராய்வதில்லை.
அவற்றை நிவர்த்தி
செய்ய முனைவதில்லை.
இது தமிழர்களின்
சாபக்கேடாகும்.
எமது இன்றைய
இழி நிலைக்கு
ஒரு முக்கிய
காரணியுமாகும்.
இந்த மனப்பாங்கை
நாம் களைந்தாக
வேண்டும்.
இல்லாவிட்டால் எமக்கு
என்றுமே விமோசனம் கிட்டாது.
ரி.என்ஏ.தான் தமிழ் மக்களின் பெரும்பான்மையினரால்
தங்களைப்
பிரதிநிதித்துவப்
படுத்த தெரிவு செயப்பட்ட
கட்சி. அதன் தலைவர்
சம்பந்தனும்,
கட்சியின்
தலைமைத்துவத்தைச்
சேர்ந்தோருந்தான்
தமிழ் மக்களின் நம்பிக்கை
நட்சத்திரங்கள்
என்பது இன்றைய நிலைமை. அவர்களின்
எதிர்காலச்
செயற்பாடுகள்,
தமிழர்களின்
வாழ்வாதாரம்
சீராக்க, அடிப்படை அரசியல் உரிமைகளைப்
பெற்று வாழ, அவர்கள்
என்ன செய்யப்
போகிறார்கள்
என்பதே வடக்கு-கிழக்கில்
வாழும் பெரும்பான்மைத்
தமிழர்களின்
ஆதங்கமான
எதிர்பார்ப்பாகும்.
எனவே; இக்
காலகட்டத்தில்
வெறுமனே மற்றவர்களையும்
மற்றக் கட்சிகளையும்
அரசாங்கத்தையும்
குறை கூறிக்கொண்டிராமல்
அடுத்த தேர்தலில்
வெல்லுவதை
மட்டும் குறிக்கோளாக
வைத்து எதிர்மறை அரசியல் நடாத்தாமல்
இனிமேலாவது
தமிழ்மக்கள்
அவர்கள் மேல் காட்டியிருக்கும்
எதிர்பார்ப்புகளுக்குப்
பங்கம் விளைவிக்காமல்
நேர்மையானதும்
காத்திரமானதுமான
அரசியல் செயற்பாடுகளில் ரி.என்.ஏ.யினர்
தீவிரமாகத்
தங்களை ஈடுபடுத்துதல்
வேண்டும்.
புலம் பெயர்ந்து
வாழும் தமிழர்களைத்
திருப்திப்
படுத்துவதற்காக
ரி.என்.ஏ.யின்
அரசியல் இருக்கவேண்டும்
என்பதல்ல
அவசியம்.
ரி.என்.ஏ. ஐத் தெரிவு
செய்த பெரும்பான்மை
வடக்கு-கிழக்கு
மாகாண மக்களின் மனநிலையும்,
அவர்களின்
எதிர்பார்ப்புகளை
நிறைவேற்றுவதும்,
ஏக்கங்களைத்
தீர்ப்பதுவுமே
கட்சியினர்
தம் தலையான
கடமையாகக்
கொண்டு செயற்பட வேண்டும்.
இதற்கு அவர்கள்
முதலில் தங்களுக்குள்
எதிர்காலத்
தலைமைப் பதவிக்கான
சண்டைகளையையோ,
மலிவான காய்நகர்தல்களையோ
விட்டொழிக்க
வேண்டும்.
இப்பொழுது அதன் தலைவராக மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர்
சம்பந்தன்.
பல ஆண்டுகள்
அரசியல் அனுபவம் வாய்த்தவர்.
அவர் தன்
செயற்பாடுகளில்
சரியாகவும்
நேர்மையாகவும் முன்னெடுக்கவில்லை
என மக்கள்
அவரை மறுதலிக்கும்வரை,
அவரைத்தான்
தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அவரும் ஒரு நேர்மையான்,
வல்லமை மிக்க, தன்னை
நம்பும் மக்களின் நலனுக்காக
இதயசுத்தியுடனான
செயற்பாடுகளில்
தன்னை அர்ப்பணிக்கும்
தலைவராகச்
செயற்பட வேண்டும்.
இரண்டாவதாக;
ரி.என.ஏ.யினரும்
அதன் தலைவர்
சம்பந்தனும்,
பொத்தாம்
பொதுவாக தமிழ்மக்களின்
சுயநிர்ணய
உரிமை என்று சொல்லிக்
கொண்டிருக்காது;
தமிழ் மக்களின் நலனுக்காக
அரசியல் அபிலாஷகளுக்காக
இன்றைய யதார்த்தத்தில்
எப்படியான
அரசியல் நிர்மாணங்களையும்
நிர்வாகங்களையும்
கோருகிறார்கள்
என்பதைத்
தீர்மானமாகத்
தெளிவுபடுத்த
வேண்டும்.
மூன்றாவதாக; இந்தியா உட்பட
சர்வதேச நாடுகளின்
ஆதரவு நிச்சயமாக
வேண்டியதுதான்.
ஆனால், எமது நோக்கங்களைத்
தெளிவு படுத்தாது,
அவற்றை அடைவதற்கான
வழிமுறைமைகளை
வரையறுக்காது,
சர்வதேச நாடுகள், இந்தியாவின்
உந்துதல்
என்றெல்லாம்
பேசிக்கொண்டிருந்தால்
மட்டும் ஒன்றையுமே
அடைய முடியாது
என்பதைப்
புரிந்து
கொண்டு; ஒப்புக்கொண்டு.
செயலாற்ற வேண்டும்.
நான்காவதாக,
மகிந்த ராஜபக்சா அரசாங்க அதிகாரிகளுடன்
நடைபெற்ற
பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின்போது
என்னென்ன
விடயங்களில்
ஒற்றுமை எய்தப்பட்டன;
வேற்றுமைகள்
இருந்தன, எதுவித முடிவுக்கும்
வரவில்லை
என்பது பற்றி ஒளிவுமறைவின்றி
பகிரங்கமாகத்
தெரிவிக்க
வேண்டும்.
ஐந்தாவதாக , பேச்சுவார்த்தைகள்
மூலந்தான்
ஒரு நியாயமானதும்,
நிரந்தரமானதுமான
தீர்வை எய்தப்படல்
வேண்டுமென்ற
நிலைமை ஏற்பட்டு விட்டமையால்,
மகிந்த ராஜபக்சாவின்
பாராளுமன்றத்
தெரிவுக்
குழுவில்
பங்குபற்ற
விடுத்திருக்கும்
அழைப்பை நிராகரிப்பதானால்,
அதற்கான காரணங்களை
விளக்க வேண்டும். அந் நிலைமையில்,
கட்சியின்
அடுத்தகட்ட
நடவடிக்கைகளையும்
காலவரம்புகளையும் தெளிவாகவும்
தீர்மானமாகவும்
தெரிவிக்க
வேண்டும்.
அவற்றை நடைமுறைப்படுத்தும்
செயல்களில்
இதயசுத்தியுடனும்,
எதுவித காலதாமதமின்றியும்
இறங்க வேண்டும்.
இவற்றை தமிழ் தேசியக்
கூட்டமைப்பின்
தலைவர் சம்பந்தனும்,
அக்கட்சியின்
பெயரில் தமிழ் மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட
பாராளுமன்ற,
மகாணசபை அங்கத்தினர்களும்
விரைவில்
செய்வார்களா?
அல்லது அவர்களைத்
தெரிவுசெய்த
தமிழ்மக்களின்
எதிர்பார்ப்புகளையும்,
எண்ணங்களையும், நம்பிக்கைகளையும்
பொசுக்கப்
போகிறார்களா???