|
||||
|
வட மாகாண மக்களை
வாழ விடுங்கள்!
(எஸ்.ஹமீத்)
பாவப்பட்டதும் பரிதாபத்திற்கும்
உரிய ஒரு
மாகாணம் இலங்கையில்
இருக்குமென்றால்,
அது வட
மாகாணத்தைத்
தவிர வேறொரு
மாகாணமாக
இருக்க முடியாது. 30 வருடங்களுக்கு
மேலாக யுத்தப் பேய் கடித்துக்
குதறி சப்பித் துப்பிய மாகாணம் அது. இரத்த
வாடை இன்னமும்
வீசிக் கொண்டிருக்கும்-இழப்புகளின்
ஓலம் இன்னமும்
கேட்டுக்
கொண்டிருக்கும்-மாகாணம்
அது. அந்தகாரங்களுக்குச் சொந்தக்காரர்களாகிப்
போன அபலைகளைக்
கொண்டிருக்கும்
மாகாணம் அது. அவயவங்களை இழந்து
ஆறாத் துயரில் மூழ்கியிருக்கும்
அப்பாவிகளைக்
கொண்டிருக்கும்
மாகாணம் அது. சொந்த
ஊர்களிலிருந்து
பலவந்தமாக
வெளியேற்றப்பட்ட
முஸ்லிம்களையும்
யுத்தத்தின்
கோரத்தைத்
தாங்கிக்
கொள்ள முடியாமல்
தாமாகவே வெளியேறிய
தமிழ் மக்களையும்
கொண்ட மாகாணம் அது! இந்த மாகாணத்துக்குத்தான் இப்பொழுது சரித்திரத்தில் முதன் முறையாகத் தனியான தேர்தல் நடைபெறப் போகிறது. இந்தத் தேர்தல், இம் மாகாண மக்களைப் பொருத்தவரை அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்பதில் எந்தவித சந்தேகங்களும் இல்லை. சுயாட்சி என்றும் சுய நிர்ணயம் என்றும் உரிமைப் போராட்டம் என்றும் அதற்காக உயிர் கொடுப்போமென்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் மேடைகளிலே உரத்துப் பேசி, மக்களை உசுப்பேத்தி இருக்கிறார்கள். இதுவரை காலமும் காவு கொடுத்த அப்பாவி மக்களின் உயிர்கள் போதாதென்று இன்னமும் மரண தேவனுக்குத் தமது மக்களின் உயிர்களை அள்ளிக் கொடுக்கும் ஆவேசப் பேச்சுக்களை அரங்கேற்றியிருக்கிறார்கள்.
அவர்களுக்கென்ன.. பதவிகளும்
பஞ்சணைகளும்
படாடோப வாழ்க்கை முறைகளும்
பவிசான பயணங்களும்
பாதுகாப்பும்
இருக்கின்றன.
இந்தத் தேர்தலில்
மக்களை அடகு வைத்து,
அதன் மூலம்
இந்த அரசியல்வாதிகள்
தமதும் தமது குடும்பத்தினரதும்
சுகபோகங்களை
மேலும் உறுதிபடுத்திக்
கொள்வார்கள்.
ஆனால், பாதிப்புக்குள்ளாகப்
போவது என்னவோ பாமர மக்கள்தான்!
யுத்தம் முடிந்து இப்பொழுதுதான்
வட மாகாண
மக்கள் கொஞ்சம் நிம்மதியான
காற்றைச்
சுவாசிக்க
ஆரம்பித்திருக்கிறார்கள். அபிவிருத்திகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன,
தொழில் வாய்ப்புகள்
வழங்கப்படுகின்றன.
புனர் வாழ்க்கைக்கும்
புது வாழ்க்கைக்கும்
அத்திவாரங்கள்
இடப்பட்டுள்ளன.
கதியற்று எங்கெங்கோ
இடம்பெயர்ந்து
வாழ்ந்தவர்கள்
மீளக் குடியேற ஆரம்பித்துள்ளார்கள்.
யுத்தத்திற்குப் பலிக்கடாவாக்கப்பட்ட
இளைஞர்களும்
யுவதிகளும்
சராணகதியின்
பின்னர் விடுதலை பெற்று, தமது எதிர்காலத்தைக்
கட்டியெழுப்பத்
தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில்
மீண்டும்
இரத்தக் களரியை ஏற்படுத்துமாப்போல்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
பேசுவதும்
செயற்படுவதும்
மிகக் கேவலமானதும்
ஏற்றுக்கொள்ள
முடியாததுமாகும்.
தாம் பதவிக்கு வர என்ன
திருகு தாளங்களையும்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
செய்யும்
என்பது கடந்த காலங்களைப்
பின்னோக்கிப்
பார்த்தால்
தெரியும். தமது பதவிகளைத்
தக்க வைப்பதற்காக
இவர்கள் அப்பாவிகளான
ஜனங்களை கொடூர சாவுக்கும்
இரை கொடுக்கத்
தயங்காதவர்கள்
என்பதையும்
வரலாற்றிலிருந்து
நாம் அறிந்து
கொள்ள முடியும்.
அந்தக் குணங்களோடுதான்
அவர்கள் இந்தத் தேர்தலிலும்
செயற்பட்டு
வருகிறார்கள்.
மூன்று தசாப்த
யுத்த சூறாவளியில்
எல்லாவற்றையும்
இழந்து போன வட
மாகாண மக்களை இனியாவது நிம்மதியாக
வாழ விட்டுத்
தமது சுயநல
மூட்டைகளைக்
கட்டிக் கொண்டு ஒதுங்கிக்
கொள்வதுதான்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
இம் மக்களுக்குச்
செய்யும்
பேருதவியாகவும்
பெரும் உபகாரமாகவும்
இருக்கும்.
அரசின் மீதான எதிர்ப்புக்
கோஷம் என்பது, வட மாகாண
மக்களை இன்னும் அதல பாதாளத்தில்
தள்ளி விடுமென்பதுதான்
யதார்த்தம். மிகப்
பலம் வாய்ந்த
படைகளையும்
சக்தி வாய்ந்த ஆயுதங்களையும்
வைத்துக்
கொண்டு, யுத்தம் செய்து தமது மக்களின்
'விடுதலை'யை
வென்றெடுக்க
முடியாதவர்கள்,
வெறும் வெற்றுக் கோஷங்களின்
மூலம் வென்றெடுக்க
நினைப்பது
வேடிக்கையிலும்
வேடிக்கையாகும்
என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய சூழலில்
மக்களுக்குத்
தேவை உணவு,உடை,உறையுள்
என்பவற்றோடு
அச்சமற்ற
நிம்மதியான
வாழ்க்கையே
தவிர, போராட்டங்களோ-யுத்தங்களோ
அல்ல. கடந்த
கால யுத்தத்தினால்
மக்கள் மிகவும் களைத்துச்
சோர்ந்து
சுருண்டு
போயுள்ளார்கள்.
தயவு செய்து
அம் மக்களை
வாழவிடுங்கள்!
இதுகாலவரை இம்
மக்களின்
துயர் துடைக்கப்
பெரிய அளவில் திட்டங்கள்
தீட்டிச்
செயற்படாத
சர்வதேசம்,
இனிமேலும்
அவ்வாறுதான்
நடந்து கொள்ளும் என்ற உண்மையைப்
புரிந்து
கொள்ள வேண்டும். எனவே சர்வதேசம்
என்னும் மாயையைக் காட்டி மக்களின் மதியை மயக்காதீர்கள்.
எதிர்ப்பு அரசியல்
நடாத்தும்
அளவுக்கு
இன்றைய சூழலில் வட மாகாண
தமிழ், முஸ்லிம் மக்களிடத்தே
தெம்பும்
இல்லை; அதற்கான மனோ நிலைமையிலும்
அவர்கள் இல்லை என்ற
யதார்த்தத்தை
உணருங்கள்.அந்த
உணர்வின்
மூலம், இணக்க அரசியலுக்கான
வாய்ப்புகளைக்
கண்டறிந்து
செயற்படுத்துங்கள்.
தேர்தலில் வெல்ல வேண்டுமென்ற
வெறித்தனத்தினால்
இனங்களிடையே
குரோதங்களை
விதைக்காதீர்கள். சகல சமூகங்களும்
இணைந்து ஒற்றுமையுடனும்
சந்தோஷத்துடனும்
வாழும் வழி வகைகளைக்
கண்டறிந்து
செயற்படுங்கள்.
இதுவே இன்றைய சூழலில் அவசியமானதும்
அவசரமானதுமாகும்! |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |