|
||||
|
காப்பாற்றப் படவேண்டியது,
சிறீலங்கா சுதந்திரக்கட்சி! 'யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' என்றே நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளையும் தேர்தல் தினத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் மற்றும் இவ்வருடம் ஜனவரியிலிருந்து நிகழ்ந்த நிகழ்வுகளையும் சேர்த்து வர்ணிக்கலாம். அதாவது இந்த தேர்தல் முடிவுகள், இந்த முடிவுகளை தீர்மானித்த பின்னணிக் காரணிகள் மணியோசைகளை எழுப்பி இலங்கை மக்களுக்கு ஆபத்து ஒன்று வரவுள்ளதை எச்சரித்துள்ளது. இனி இலங்கையில் நிறைய அனர்த்தங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகளுள்ளன. இந்த தேர்தலில் ஆகக்கூடுதலான ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினர் இலங்கை மக்களை உண்மையாக நேசிப்பவர்கள் கிடையாது என்பது இலங்கையின் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் தெரியும். இவர்கள் கடந்த 20 வருடங்களாக இலங்கையின் மைய ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு சகலவிதமான சூழ்ச்சிகளையும் செய்து, நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலைந்து திரிந்தவர்கள். இடையில் 2001 -2004 ஆண்டு காலப்பகுதியில் புலிகளுடனும் சர்வதேச ஏகாதிபத்தியங்களுடனும் கைகோர்த்து இலங்கையின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றும் திட்டத்துடன் இருந்தார்கள். ஆனால் அப்போது இவர்களிடம் பாராளுமன்ற ஆட்சியதிகாரம் மாத்திரமே இருந்தது. அத்துடன் நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதியுடன் பகைமை பூண்டு, இவர்கள் புலிகளுடனும் சர்வதேச ஏகாதிபத்தியங்களுடனும் ஒட்டி உறவாடினர். தெற்கில் எதிரெதிராக இரு ஆட்சி முறைகள் இருப்பதை சாதமாக்கிக்கொண்ட புலிகள், வடக்கிலும் கிழக்கிலும் மாத்திரமன்றி, இலங்கை முழுவதிலும் பயங்கரவாதத்தை விதைப்பதில் வெற்றி கண்டனர். இதனால் இவர்களிடமிருந்த பாராளுமன்ற ஆட்சியதிகாரம் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்காவினால் பறிக்கப்பட்டது. நிறைவேற்று அதிகாரங்கள் கொஞ்சம் குறைக்கப்பட்டு இப்போதுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (பெயருக்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக இருந்தாலும்) ஐக்கிய தேசியக்கட்சியே இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று விரும்பியிருந்தார். (ஆனால் அவர் விரும்பியவாறு ஐக்கிய தேசியக்கட்சி தனித்து ஆட்சியமைக்கக்கூடிய ஆசனங்கள் கிடைக்கவில்லை.) இதனால் ஜனாதிபதி – பிரதமர் -பாராளுமன்ற ஆட்சி முறைமைகள் சண்டைகள், சச்சரவின்றி இருக்குமென கொஞ்சம் எதிர்பார்க்கலாம். அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சி, தேர்தலில் வெற்றி பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் இரண்டாமிடத்திலுள்ள சிறீலங்கா சுதந்திரக்கட்சியுடன் சேர்ந்து மந்திரிசபையை பங்கிடப்போகின்றது. இதற்கு 'தேசிய அரசாங்கம்' என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே மைத்திரிபால சிறிசேன இவ்வருடம் ஜனவரியில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபோதும் 'தேசிய அரசாங்கம்' என்றொரு கூத்து அரங்கேறியது. அப்போது தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்த ஐக்கிய தேசியக்கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் 'தேசிய அரசாங்கம்' உருவாக்கப்பட்டது. அது 7 மாதங்கள் உயிர் வாழ்ந்தது. ஆனால் நாட்டிற்கு உருப்படியாக ஒன்றையும் செய்யவில்லை. முழு நாடும் ஓர் ஆபத்தான சூழலில் இருக்கும் போதே 'தேசிய அரசாங்கம்' ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை இருக்கும். ஆனால் இலங்கை அவ்வாறான ஆபத்தான காலகட்டதில் இருக்கும் போதெல்லாம் 'தேசிய அரசாங்கம்' உருவாக்கப்படவில்லை. ஆனால் இப்போது எதற்கு? இதனை ஒரு 'கூட்டாட்சி' என்று சொல்ல ஏன் தயங்குகிறார்கள்? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரியில் இந்த 'தேசிய அரசாங்கம்' என்ற பதத்தின் பின்னால் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒரு பகுதியினரை சோரம் போக வைத்தார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற ஆட்சியைப் பறித்து, குறைந்தளவு ஆசனங்களைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சியிடம் வழங்கிவிட்டு 'தேசிய அரசாங்கம்' அமைக்கப்பட்டுள்ளதாக அவர் வித்தை காட்டினார். ஆனால் அப்போது தன்னை ஜனாதிபதியாக்கிய ஐக்கிய தேசியக்கட்சி அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறச் செய்யவேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. அவரது நோக்கம் இப்போழுது ஓரளவு நிறைவேறிய போதிலும், பாராளுமன்றத்தின் பெரும்பான்மைக்காக மீண்டும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒரு பகுதியினரை சோரம் போக அழைக்கிறார். சிறிலங்கா சுதந்திரக்கட்சியை ஐக்கிய தேசியக்கட்சியினுள் கரைப்பதே இவரது நிகழ்ச்சி நிரலாக உள்ளது. இதனை இவர் தனித்து செய்ய முடியாது. இதற்கு இலங்கைக்கு உள்ளும் வெளியிலும் பல சக்திகள் பின்னணியில் உள்ளன. இலங்கையை நவகாலனித்துவ பிடியில் வைத்திருப்பதற்கு சிறீலங்கா சுதந்திரக்கட்சி 64 வருடங்கள் தடையாக இருந்து வருகிறது. இந்த கட்சியை காப்பாற்றுவதற்கு இக்கட்சியின் தலைமையை மாற்றுவதே ஒரேயொரு வழி. (Vaanavil editorial!) Contribute by: Sivashanmugamoorthy Sundram |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |