|
வாரம் ஒரு
ஆய்வாளர் பகுப்பாய்வு 02
கவிஞர் சேரன்
30 ஆண்டுகால
தமிழ்ப்புலிப்பாசிச ஆட்சி தமிழ்ப்புலமைக்கலாச்சாரத்தை வேரோடு
அழித்துவிட்டது. S.சிவநாயகம், DBS ஜெயராஜ், AJ வில்சன், கவிஞர் சேரன் தராகி
சிவராமிலிருந்து இன்று நிலாந்தன் வரை ஆய்வாளர்கள் காய்தல் உவத்தலின்றி
உண்மையை
எழுதுவதற்கு பதிலாக லாபியிஸ்டாக அதிகார ஒத்தோடிகளாக பாதி மலினமான
பத்திரிகையாளர்களாக(shock jock/tabloid journalism) வாசகர் எண்ணிக்கை
Rating ல் மட்டும் கவனங்கொண்டவர்களாக மாறிவிட்டார்கள். புலிகள்
பலமானவர்களாக இருந்த 2006 ம் ஆண்டு தேனி இணையத்தளத்தில் நான் கவிஞர்
உருத்திரமூர்த்தி சேரனை அம்பலப்படுத்தி எழுதிய கட்டுரை. இவ்வாறே கா.
சிவத்தம்பி முருகையன் போன்றோரையும் அம்பலப்படுத்தியுள்ளேன். கடைகெட்ட
மோசடிக்கார பத்திரிகையாளனான டி.பி.எஸ் ஜெயராஜை நான் அம்பலப்படுத்தி எழுதும்
கட்டுரை விரைவில் வெளிவரும். - நட்சத்திரன் செவ்விந்தியன்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலிருந்து வருகிற புத்திஜீவிகள் சிலர் எப்போதுமே
மரபு தவறாமல் தங்கள் குணத்தைக் காட்டி விடுவார்கள். அதாவது தங்களின்
தனிப்பட்ட நலன்களுக்காக கொள்கையைக் கைவிட்டு சார்ந்ததன் வண்ணமான
பச்சோந்தியாக மாறிவிடுவார்கள்.
2000ம் ஆண்டுவரையும் சேரனுக்கு உண்மையான மனித உரிமைப்போராளி, புலிகளின்
அராஜகங்கள் உள்ளிட்ட எல்லா அநீதிகளையும் தட்டிக்கேட்டு விமர்சிக்கிற
துணிவுள்ள கவிஞர் என்ற தகுதி இருந்தது. அண்மையில் காலமாகிய மதிப்புக்குரிய
தமிழ் எழுத்தாளரான சுந்தர ராமசாமியே இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் சேரனை "
இயற்கையின் உபாசகன், இடையறாத போராளி, நித்திய காதலன் " என்று
வருணித்திருந்தார். உண்மையில் தராக்கி சிவராம், வ.ஐ.ச ஜெயபாலன், சேரன்
ஆகியோரில் கொலைக் குற்றம் செய்யாதவராக இருந்தவரென்றால் அது சேரனே. (அகிலன்,
செல்வன் கொலைகளை சிவராமே முன்னின்று நடத்தியதை UTHR(J) முன்னைநாள் PLOTE
தோழர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.வ.ஐ.ச. ஜெயபாலன் வன்னிப்பகுதியில் ஒரு
கொலையை வேறு சிலரோடு சேர்ந்து செய்ததற்கு தண்டனையாக சில காலம் ஒரு இலங்கைச்
சிறையிலிருந்து வெளியே வந்தவர்). எனினும் 2001ம் ஆண்டுக்குப்பிறகு புலமைக்
கொலைகள் செய்யத் தொடங்கிய சேரன் தனக்கும் முன்னைய இருவருக்கும் வேறுபாடுகள்
இல்லை என்பதை நிரூபித்து வருகின்றார்.
2000 ம் ஆண்டு வரையும் சேரனும், சேரன் தனது தங்கையின் கணவர் மூலமாகவும் வேறு
நண்பர்கள் மூலமாகவும் தனது அதிகாரத்தின் கீழ் எப்போதும் வைத்திருந்த
சரிநிகர் பத்திரிகையும் ஏனைய அநீதிகளோடு புலிகளின் அநீதிகளையும்
பாரபட்சமின்றி விமர்சித்தே வந்துள்ளார்: வந்துள்ளன. 1999ம் ஆண்டின்
நடுப்பகுதியில் 'காலச்சுவடுக்கும்' 'மூன்றாவது மனிதனுக்கும்' (இலங்கை)
வழங்கிய விரிவான நேர்காணல்களில் சேரன் புலிகள் மீது வைத்த கடுமையான
நேர்மையான விமர்சனங்கள் மனச்சாட்சி உள்ளவர்களாலும், நடுநிலமை யாளர்களாலும்
நல்ல வரவேற்பைப் பெற்றன. காலச்சுவடு வெளியீடாக வந்த உயிர் கொல்லும்
வர்த்தைகள் என்ற சேரனின் கட்டுரை நூலிலும் புலிகளை நேர்மையாகவும் சரியாகவும்
விமர்சித்த கட்டுரைகள் உள்ளன. சர்வதேச ரீதியில் புலிகளை விமர்சிக்கிற
நேர்மையான தமிழர் என்கிற கீர்த்தியும் இக்காலம் வரையும் சேரனுக்கு இருந்தது.
1997 ம் ஆண்டு எவ்வாறு சிவராம் புலிகளை விமர்சிப்பதிலிருந்து புலிகளை
நியாயப்படுத்துகிற குத்துக்கரணத்தை அடித்தாரோ அதனை சேரன் 2002 ம் ஆண்டு
அடித்தார்.
"மனித உரிமைகளுக்கான பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் (UTHR(J)) சொல்வதுபோல
புலிகளை பாசிஸ்டுகள் (Fascists) என்று முத்திரை குத்துவதில் எனக்கு உடன்பாடு
இல்லை என்பது மட்டுமல்ல, இத்தகைய முத்திரையிடல்களுக்கு பின்னால் பலமான
அரசியல் காரணங்களும் உள்ளன"
- சேரன். (நிகரி பெப் 17, 2002)
மேற்கூறிய வரிகள் தான் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள விடுதலைப்புலிகளின்
முகவர்களைனதும் மற்றும் வன்னியிலுள்ள புலிகளினதும் காதில்
விழவேண்டுமென்பதற்காக சேரன் கூறியவைகள். சிவராமுக்கும் சேரனுக்கும் வலிய
நியாயங்களின் அடிப்படையில் புலிகளை பாசிஸ்டு என்ற முடிவுக்கு வரலாம் என்பது
தெரியும். 2001ம் ஆண்டுவரையான சேரனின் கட்டுரைகளும் காலச்சுவடு பேட்டியும்
புலிகள் பாசிஸ்டு என்பதைத்தான் சொல்கின்றன.
மேலும், 2002 செப்டம்பர் தீராநதி (குமுதம்)இதழில் வழங்கிய விரிவான
பேட்டியில் காலச்சுவடு பேட்டிக்கு நேரெதிரானதாக புலிகளை
குழந்தைப்பிள்ளைத்தனமாகவும் கண்மூடித்தனமாகவும் ஆதரித்திருந்தார்.
சேரன் கேவலமாகி, தனது தனிப்பட்ட நலன்களுக்காகவே கொடிய புலிகளை ஆதரிக்கிற
புலிச்சார்பு நிலை எடுக்கிறார்.
தமிழகத்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைக்கப்பட்ட கல்லூரி
ஒன்று கனடாவிலிருந்து தமிழ்க் கலைப்பட்டதாரிகளை உருவாக்கிவருகிறது.
இந்தக்கல்லூரியின் நிர்வாகம் புலி ஆதரவாளர்களின் தீவிர செல்வாக்குக்கு
உட்பட்டது. இக்கல்லூரிக்குள் தன்னை ஒரு செல்வாக்கான ஆளுமையாக்க வேண்டியதேவை
சேரனுக்கு உண்டு. புலிகளை நேர்மையாக விமர்சித்துக்கொண்டு இதனை அடையமுடியாது
என்பது முதலாவது காரணம்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் ஒரு வருகைதரு விரிவுரையாளராகவேனும்
வரவேண்டும் என்ற விருப்பு சேரனுக்குண்டு. புலிகளை விமர்சிக்கிற
நடுநிலையாளராக இருந்துகொண்டு இதனை அடைய முடியாது. இது இரண்டாவது காரணம்.
2003ம் ஆண்டு சேரன் யாழ்ப்பாணத்துக்கு போய் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்
நேர்முகப்பரீட்சைகளுக்கும் தோற்றியிருந்தார். இதற்காகவே ஓராண்டுக்கு
முதலிருந்தே புலிகளை வசியம் பண்ணுகிற வேலைகளை செய்யத்தொடங்கி விட்டார்.
சேரனுடைய எழுத்துக்கள் ஒருவழி என்றால் மறுவழி புலிமுகவர்களுக்கூடாக டெலோ,
ஈ.பி.ர்.எல்.எப் (சுரேஸ்) மற்றும் சிவராமைப்போல தானும் புலிகளுக்களுக்காக
வேசையாடத்தயார் என்பதை தெரியப்படுத்துவது.
UTHR(J)புலிகளை ஆதாரங்களில்லாமல் பாசிஸ்டுகள் என்று முத்திரை குத்தவில்லை.
1989 ம் ஆண்டிலிருந்து முறிந்த பனை (Broken Palmyrah), "The arrogance of
power" என்ற இரண்டு புத்தகங்களிலும், இன்று வரையும் தொடர்ச்சியாக
வெளியிட்டுவருகிற மனித உரிமை அறிக்கைகளிலும் புலிகள் பாசிஸ்டுகள் என்பதையும்
அவர்களது பாசிச நடவடிக்கைகளையும் ஆவணப்படுத்தியுள்ளனர். (விரிவான
தகவல்களுக்கு பார்க்க இணையம் www.uthr.org) இதனால் கோபமுற்ற புலிகள் UTHR(J)
ன் முன்னணி உறுப்பினரான ராஜினி திராணகமவை கொன்றனர். UTHRன் பணிகளை தொடர்ந்து
நடத்துவதற்காக ராஜன் ஹ¥ல் தனது யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவியையும்
எதிர்கால பேராசிரியர் தகுதியையும் தியாகம் செய்து தென்னிலங்கைக்கு சென்று
தலைமறைவாக இயங்கிவருகிறார். UTHR(J)ன் முத்திரையிடல்களுக்கு பின்னால் என்ன
அரசியல் காரணங்கள் உண்டு என்பதை சேரன் தான் விளக்கவேண்டும். ஆனால் சேரனின்
புலிச்சார்பு நிலைப்பாட்டுக்குப் பின்னால் உள்ள தனிப்பட்ட காரணங்களை மேலே
விளக்கியுள்ளேன். உண்மைகள் வெளிப்படுத்தப்படுத்தப்படவேண்டும்
ஆவணப்படுத்தப்படுத்தப்படவேண்டும் என்பதற்காக தனது பதவியையே தியாகம் செய்கிற
ராஜன் ஹ_லையும் அதே பல்கலைக்கழகத்தில் ஒரு பதவிக்காக பொய்யை உண்மையாகப்
புனைகிற சேரனையும் வாசகர்கள் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.
தமிழில் புனைவுசாரா (Non Fiction) எழுத்தாக இருந்த நேர்காணல்களை புனைவுசார்
(Fiction) எழுத்தாக மாற்றியமைத்த பெருமை சேரனையே சாரும். சேரனின் தீராநதி
நேர்காணல் (2002, செப்.) யதார்த்தவாதப் புனைவு என்றால் சாரு நிவேதிதாவின்
அம்மா (பிரான்ஸ்-இதழ் 13) நேர்காணல் மாந்திரீக யதார்த்தவாதப் புனைவு.
இனி தீராநதிப்பேட்டியை அலசலாம்.
கேள்வி: விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகள்
இருந்து வந்திருப்பதைப் பொதுவாகப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள்
எப்படிப்பார்க்கிறார்கள்?
சேரன்: " விடுதலைப்புலிகளின் ஆட்சிக்குள் இருக்கிற மக்களின்
அனுபவங்களைப்பற்றி நான் ஒன்றும் சொல்ல இயலாது. நான் அந்தப் பகுதிகளுக்குப்
போய் வரவில்லை. சமூகவியலாளர்கள் இது குறித்து என்ன சொல்கிறார்கள் என்றால் "தேர்தல்
நடைபெறாமல் ஒரு இயக்கம் நீண்ட காலமாக ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருக்க முடியுமென்றால் பயங்கரத்தைப் பாவித்து இருக்க முடியாது" என்று
சொல்கிறார்கள்.
அடக்குமுறை ஏதாவது ஒரு விதத்தில் பிரயோகிக்கப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த
மக்களின் ஆதரவில்லாமல்நீண்ட காலத்துக்கு ஒரு நிலப்பரப்பைத் தங்களது
ஆட்சிக்குக்கீழ் வைத்து வெற்றிகரமாக முன்னெடுப்பது என்பது சாத்தியப்படாது.
வியட்னாம் உட்பட பல நாடுகளில் இத்தகைய நிலமையைப் பர்த்திருக்கிறோம். அந்த
வகையில் வடக்கு கிழக்கில் புலிகளுக்குட்பட்ட பிரதேசங்களில் ஏராளமான மக்கள்
அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றுதான் நம்புகிறேன். அதே சமயத்தில்
புலிகள் சில மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்று சொல்லமுடியாது.
அம்மாதிரி தவறுகள் நடப்பதாக அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு
தூரம் அடிப்படையான ஜனநாயக, மனித உரிமைகள் சார்ந்து அரசாங்கம்
அமைக்கப்படப்போகிறது என்பதில்தானிருக்கிறது எதிர்காலம். "
பாருங்கள். சாத்தான் வேதம் ஒதுகிறது. தன்னுடைய பேட்டி வாசிப்பவர்களை சுத்த
மடையர்களாக நினைத்துக்கொண்டு அவர்கள் காதில் பூச்சுற்றுகிறார்
சேரன்.(மக்களைப்பற்றி யார் கவலைப்பட்டர்கள். பதுங்குகுழி திருமகனின் மனம்
குளிர்ந்தால் அதுபோதும் சேரனுக்கு)
சேரனின் இப்பதில் குதர்க்கங்களும் புனைவுகளும் நிரம்பியது என்பதை
குறைந்தபட்ச அரசியல் அறிவுள்ள ஒருவரே கண்டுகொள்ளலாம்.
(1) தான் போகாத இடத்தைப்பற்றிக்கருத்துச்சொல்ல முடியாது என்றால் என்ன
அடிப்படையில் காலச்சுவட்டுப் பேட்டியில் கருத்துச் சொல்லியுள்ளார்? இது ஒரு
மலினமான அரசியல் வாதியின் நழுவல் பதிலை ஒத்தது.
(2) விடுதலைப்புலிகள் நீண்ட காலமாக ஒரே பகுதியை முழுமையாக தங்கள் கட்டுப்
பாட்டுக்குள் வைத்திருக்கவில்லை. சுமார் 2 வருட காலம் யாழ் குடா நாட்டின்
பகுதிகளை வைத்திருந்தார்கள் (1985 - 1987). பின்னர் 1990 இலிருந்து 1995 வரை
5ஆண்டுகள் யாழ்குடாநாட்டின் பகுதிகளையும் வன்னிப் பகுதிகளையும்
வைத்திருந்தார்கள். கிழக்கின் கிராமப்புறங்களில் சில சில பகுதிகளை இலங்கை
இராணுவப் படை நகர்வு விலகல்களுக்கு ஏற்ப அவ்வப்போது வைத்திருந்தார்கள். ஆக
சனத்தொகை மிகக்குறைவாகவும் நகரங்களும் அற்ற முக்கியத்துவம் அற்ற
வன்னிப்புறக் காட்டுப்பகுதிகளைத்தான் ஏறத்தாழ 15 ஆண்டுகளாக
வைத்திருக்கிறார்கள். இவைகளும் முழுமையான கட்டுப்பாடு அல்ல.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருப்பதாகச் சொல்லப்படுகிற
எல்லாப்பகுதிகளிலும் இலங்கையின் பொருளாதாரமே இயங்கியதுஃ இயங்குகிறது.
இதைவிட இப்பகுதிகளுள்ள கல்வி, மருத்துவம், சமூக நலன்பேணுகைகள், ஏறத்தாழ 60
வீதமான சட்டவாதிக்கம் (1985-1987 காலப்பகுதியிலும் யாழ் பல்கலைக்கழகத்தின்
மற்றும் அனைத்து பாடசாலைகள் முதலியன மீதான சட்டவாதிக்கம், அவற்றின்
நிர்வாகம் எல்லாம் இலங்கை அரசின் பூரண கட்டுப்பாட்டில்) இவை எல்லாமே இலங்கை
அரசின் கட்டுபாடுக்குள்ளேயே இருந்தது.இருக்கிறது.
இதைவிட தேர்தல் இல்லாமல் மிக நீண்ட காலத்துக்கு மிகப்பெரிய
நிலப்பரப்புக்களையெல்லாம் முழுமையான கட்டுப்பாடுக்குள் பயங்கரத்தை பாவித்து
வைத்திருந்த சர்வாதிகார பாசிச அரசாங்கங்களுக்கு நிறைய உதாரணங்கள் எப்போதுமே
உண்டு. சுகாட்டோவின் இந்தோனேசியா, சதாம் ஹ¤சேனின் ஈராக், ஸ்ராலினின் ரக்ஷ்ய
ஒன்றியம், அல் சவூத் குடும்பத்தினரின் சவூதி அரேபியா, முபாரக்கின் எகிப்து,
தென்னாபிரிக்காவின் வெள்ளையர் ஆட்சி (பெரும்பான்மை கறுப்பினருக்கு
வாக்குரிமை இருந்ததில்லை) தென்னமெரிக்க சில சர்வாதிகார அரசாங்கங்கள். இவை
எல்லாமே இருபது வருடங்களுக்கு அதிகமாக முழுமையான கட்டுப்பாட்டை
வைத்திருந்தன. சேரன் தான்கூறுகிற "சுத்துமாத்து" சமூகவியல் கொள்கையைக்
கூறுகிற சமூகவியலாளர்களின் நாமங்களை உதிர்க்கவேண்டும்.
வியட்னாமோடு புலிகளின் கட்டுப்பட்டுப்பகுதிகளை ஒப்பிடுவது சேரனின்
நலன்களுக்காக ஆனதே தவிர அது சரியானது அல்ல. மிகுந்த மதிநுட்பம் மிகுந்த
புத்திஜீவியான ஹோசி மின்னோடு பிரபாகரன் எம்மாத்திரம்? அடக்குமுறைகளின்
அடிப்படையில் ஒப்பிடுவதாயின் பிரபாகரனை கம்போடியாவின் பொல் பொட்டோடுதான்
ஒப்பிடலாம்.
புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 20,000 ஐயும்
தாண்டிக்கொண்டிருக்கிறது என்பது UTHR(J) (Page 424,The Arrogance of Power
by Rajan Hoole) போன்ற நம்பகரமான மனித உரிமை அமைப்புக்களின் கணிப்பீடு (இவ்வெண்ணிக்கைக்கேட்டு
அதிர்ச்சி அடையும் ஈழத்தமிழர்கள் முதலில் சில கணக்குகளை போட்டு பாருங்கள்.
கடந்த 30 ஆண்டுகளாக புலிகளால் கொல்லப்பட்ட உங்கள் உறவினர்களினதும்,
அயலவர்களினதும், நண்பர்களினதும் இவர்கள் தவிர்ந்த உங்கள்
ஊரைச்சேர்ந்தவர்களினதும் எண்ணிக்கையை முதலில் கூட்டிப்பாருங்கள். இதே
பேரதிர்ச்சியானதாக இருக்கும்) சேரனின் தங்கையின் கணவரது சகோதரரையும் கொன்றது
புலிகளே. யோகசுந்தரமும் தருமலிங்கமும் உட்பட சேரனின் நண்பர்கள்
பெருமளவினரானவர்களையும் சேரனின் பதிப்பாளராகிய சபாலிங்கத்தையும் கொன்றது
புலிகளே (இவற்றை தனது கவிதைத்தொகுதி முன்னுரையில் சேரன் உதிர்க்கிறார்.
சார்ந்ததன் வண்ணங்களுக்கேற்ப உதிர்ப்பார் அலலது சுய தணிக்கை செய்வார்).
செல்வி மற்றும் மனோகரன் முதலியோரும் சேரனின் நண்பர்களே. இவர்கள் இருவரையும்
கடத்திச்சென்று சித்திரவதை செய்து கொன்றதும் புலிகளே. சேரன் கொழும்பில் வேலை
செய்த ICES இன் முதல்வரும் வட அமெரிக்கப் பல்கலைகழகங்களில் தனக்கு இருக்கிற
செல்வாக்கைப் பயன்படுத்தி சேரனுக்கு கலாநிதிப்பட்ட ஆய்வுக்கான
புலமைப்பரிசிலைப் பெற்றுக் கொடுத்தவருமான நீலன்
திருச்செல்வத்தையும் கொன்றது புலிகளே. சூடு சுரணையும், மனச்சாட்சியும்
மனிதாபிமானமும் இல்லாத சேரன் தனது உறவினர்களதும் நண்பர்களதும் சடலங்களில்
காலால் மிதித்து முன்னேறிக் கடந்து புலிகளுக்கு ஆதரவாக இருக்கக்கூடியவர்தான்.
ஆனால் சிறிதளவு சனத்தொகையே உடைய இலங்கைத் தமிழர்களில் 20,000 என்பது
மிகப்பெரிய வீதம். இந்தளவு சக தமிழர்களை புலிகளிடம் காவு கொடுத்த
மனச்சாட்சியுள்ள வடக்கு கிழக்கு தமிழர்கள் புலிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள்
என்பது சேரனின் மகா புனைவு.
காலச்சுவடு சஞ்சிகையில் முன்னுக்குப்பின் படு முரணாக கூறுகிற, எழுதுகிற
எழுத்தாளர்களின் முரண்பட்ட இரண்டு வாசகங்களையும் "கண்டதும் கேட்டதும்" என்ற
பகுதிக்குள் எழுதுவார்கள். சேரனின் காலச்சுவடு பேட்டியும் அதற்கு
நேர்முரணான தீராநதி பேட்டியும் இப்பகுதிக்குள் போடுவதற்கு மிகப்பொருத்தமானது.
ஆனால் காலச்சுவடு அப்படிச்செய்யவில்லை. ஏனெனில் காலச்சுவட்டைப் பொறுத்தவரை
சேரன் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்.
தீராநதிப் பேட்டி வழங்கப்பட்ட கலவை முறையானது முழுக்க முழுக்க புலிகளுக்கு
எண்ணெய் தடவுவதையே அடிப்படையாகக்கொண்டது. அரசியல்வாதிகள் தங்களது
குறுகியகால நலன்களுக்காக பொய்யையும் திரிக்கப்பட்ட உண்மையையும் சொல்கிற
முறையால் சொல்லி மக்களை நம்பவைப்பார்கள். உதாரணமாக அமெரிக்க வெளிவிவகாரக்
கொள்கையே அல்-கைடா முதலிய அமைப்புக்கள் அமெரிக்கா மீது தாக்குதல்
நடத்துவதற்கு காரணம் என்பதைத்தவிர்த்து ஜோர்ஜ் புஷ் அமெரிக்க வழி வாழ்க்கை
முறையை அல்-கைடா விரும்புவதில்லை என்றும் அமெரிக்க வாழ்க்கை மீது எரிச்சல்
கொண்டே அது அமெரிக்கா மீது தாக்குகிறது என்று திரித்துச்சொல்லுவார். சேரனும்
அதைப்போலவே ஒரு மலினமான
அரசியல் வாதியின் பாணியிலேயே பின்வரும் பல இடங்களில் சொல்கிறார்.
(1) "இலங்கையில் நடந்த எத்தனையோ அநியாயங்களைப் பற்றியும் தெரியாத சராசரி
இந்தியருக்கு ராஜீவ் காந்தியின் கொலையை மட்டும் வைத்து ஈழப்பிரச்சினையைப்
பார்ப்பது பாரதூரமாகத்தானிருக்கும். ராஜீவ் காந்தியின் படுகொலையை மட்டும்
வைத்துக்கொண்டு ஈழப்பிரச்சனையைப் பார்க்கக்கூடாது" என்கிறார் சேரன்.
இது புலிகளின் தமிழ்ச்செல்வன் சொன்னமாதிரி அல்லவா இருக்கிறது. இங்கு அவர்
பிரச்சனையை எளிமைப்படுத்தி திசை திருப்புகிறார். காந்தியின் கொலை ராஜதந்திர
ரீதியில் ஒரு மிகப்பெரிய வரலாற்றுத்தவறு. இதன்மூலம் பிரபாகரனுடைய எஞ்சிய
வாழ்நாள் முழுவதும் பதுங்கக வாசியாகவே கழிக்கப்படுவதும் நிரந்தரத் தீர்வு
திரிசங்கு சொர்க்கமானதும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்தியப்படைகளின்
அநியாயங்களுக்காகத்தான் ராஜீவ் காந்திகொல்லப்பட்டது போலவும் அது புலிகளின்
நலன்களுக்காகவன்றி தமிழர்களின் நலன்களுக்காகவே மேற்கொள்ளப்பட்ட்து போலவும்
கூறி புலிகளைவிமர்சிப்பதைத்தவிர்க்க சேரன் திரிக்கிறார். இலங்கை இந்திய
1987 ஒப்பந்த அதிகாரப் பகிர்வு நகைச்சுவைக்குரியவகையில் மிகக்குறைவுதான்.
எனினும் புலிகள் இந்தியப்படையினரோடு சண்டையை தொடங்கியதற்கான முதன்மைகாரணம்
தங்களது பாசிச அமைப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே. சண்டையைதொடங்கும்போது
இது ஒரு சூதாட்டம் என்று பிரபாகரனுக்கு மிகத்தெளிவாகவே தெரியும் . எனினும்
ஜனநாயக வழிமுறைக்குள் போய் தங்களது பாசிசக் கட்டமைப்பை இழப்பதை விட
சூதாடுவது நல்ல தெரிவு என்பது பிரபாகரனுடைய முடிவு. மக்களின்
நலங்களுக்காகத்தான் புலிகள் இந்தியராணுவத்தோடு மோதி பின்னர் காந்தியையும்
கொன்றார்கள் என்றால் இவைமூலம் புலிகள் சாதித்தது எதிர்விளைவுகளைத்தான்.
இன்றைக்கு பாரத தேசத்தின் மெல்லிய உறுமலுக்கே பயந்து சாவகச்சேரிக்கு அப்பால்
தங்களது படைகளை நடத்தமுடியாமல் நிரந்தரமாக முடங்கிக் கிடக்கிறார்கள் புலிகள்.
(2) இலங்கை அரசு தமிழர்களின் கல்வி வாய்ப்பைப் பாதிக்கிறவகையில் "தரப்படுத்தல்"
சட்டத்தைக் கொண்டுவந்ததாகவும் தன்னுடைய தமையன் கூடுதலான புள்ளிகள் எடுத்தும்
பல்கலைக்கழகத்துக்குள் நுழையமுடியாமல் வெளிநாடு போனார் என்றும் தன்னுடைய
தம்பி தங்கையும் மேலும் படிக்க வாய்ப்பு கிடைக்காததால்
வெளிநாட்டுக்குப்போனார்கள் என்றும் சேரன் சொல்கிறார்.
தரப்படுத்தல் தமிழர்களின் கல்வி வாய்ப்பைப் பாதிக்கிற வகையில்
கொண்டுவரப்பட்டது என்பது தவறு. முற்றிலும் இலங்கை அரசின் பணத்தில்
நடத்தப்படுகிற இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ஏறத்தாழ 74 வீதமான சிங்களவர்கள்
உள்ள இலங்கையில் 10 வீதத்துக்கும் குறைவான யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் 40
வீதத்துக்கும் மேற்பட்ட பொறியியல்துறை பல்கலைக்கழக இடங்களை பெறுவது
எந்தவகையில் நியாயம்? சமூக நீதி அடிப்படையில் முற்றிலும் திறமை அடிப்படையில்
பல்கலைக்கழகங்களுக்கு மணவர்களை அனுமதித்த முறையை மாற்றி பிரதேசங்களின் கல்வி
வளர்ச்சிக்கேற்ற வகையில் மாணவர்களை அனுமதிக்கிற தரப்படுத்தல் முறை
கொண்டுவரப்பட்டது மிகச்சரியானதே. முற்றிலும் தனியாரால் நடாத்தப்படுகிற
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் அனுமதியில் கூட இந்தத் தரப்படுத்தல் முறையின்
வேறுபட்ட தத்துவங்கள் பின்பற்றப்படுவதைக் காணலாம். இந்தத் தரப்படுத்தல்
முறைமூலம் அதுகாலவரையும் யாழ்ப்பாணத்தமிழர்கள் நியாயமற்ற வகையில் அனுபவித்து
வந்த சலுகைகள் இழக்கப்பட்டது உண்மையே. எனினும் இதனை தமிழர்களின் உரிமை
மீறலாக திரிப்பது சேரனின் யாழ்ப்பாண மைய வாதமே. அன்றைக்கு தமிழர் விடுதலைக்
கூட்டணியும் வாக்குகளைப் பெறுவதற்கு மலினமாக தரப்படுத்தல் திட்டத்தை
கடுமையாகத் தாக்கியது. தரப்படுத்தலின் பின்னரே யாழ் குடாநாட்டுக்கு வெளியில்
உள்ள தமிழர்களும் கிழக்கு மற்றும் மலையக தமிழர்களும் முஸ்லிம்களும்
பல்கலைக்கழக கல்வியைப் பெறுவதற்குரிய வாய்ப்பு கிடைத்தது என்பதை சேரன்
உட்பட்ட பலர் வசதியாக மறந்தும் திரித்தும் விடுகிறார்கள்.
தங்களின் தனிப்பட்ட நலன்களுக்காக வரலாற்றைத்திரிப்பவர்களின் திரிப்புக்கள்
முதலில் அவர்களின் தனிப்பட்ட வரலாற்றைத் திரிப்பதிலிருந்து ஆரம்பமாகும். ஒரு
காலத்தில் ரஷ்ய சாம்ராஜ்யத்தையே தனது ஜில்மால் விளையாட்டுக்களால் தின்று
ஏப்பம் விடக்கூடிய வல்லமை பெற்றிருந்த ராஷ்புடினுக்கோ தனது உண்மையான வயதை
கூட்டிச் சொல்ல வேண்டிய தேவை இருந்தது. சேரனுக்கோ தனது வயதைக் குறைத்து
இன்னமும் இளமை ஊசலாடுகிற Cow Boyஆகத் தன்னைக் காட்டவேண்டிய தேவை.
சேரன் உண்மையில் பிறந்தது 1958 ம் ஆண்டு. "பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்" (முதல்
பதிப்பு, க்ரியா,1984) என்ற நூலிலும் இரண்டாவது சூரிய உதயம் (இரண்டாம்
பதிப்பு, ஜூன் 1983, பொதுமை வெளியீடு) என்ற சேரனின் தொகுப்பு நூலிலும் 1958
ம் ஆண்டே சேரன் பிறந்த ஆண்டாக சரியாகவே குறிப்பிடப் படுகிறது. காலச்சுவடு
பேட்டியிலும் இலங்கை குடியரசான 1972 மே 22இல் தனக்கு வயது 13 என்றே
குறிப்பிடுகிறார். (1972ம் ஆண்டின் அடிப்படையிலாயின் அவரது வயது 14 எனினும்
பிறந்த மாதத்தினதும் திகதியினதும் அடிப்படையிலாயின் அவரது வயது 13) எனினும்
2000 ம் ஆண்டு வெளிவந்த சேரனின் முழுக்கவிதைகளின் தொகுப்பில் தான் பிறந்தது
1960 என திரிக்கிறார்.
ஒரு பொய் சொன்னால் அதை காப்பாற்ற ஒன்பது பொய் சொல்லவேண்டுமல்லவா. அதற்கமைய
2002 செப்டம்பர் வெளிவந்த தீராநதி பேட்டியில் தன்னுடைய அப்பா இறந்தபோது
தனக்கு வயது பதினொன்று என்கிறார். பாருங்கள் தன்னை இளமையாக
காட்டவேண்டுமென்பதற்காக 1971ம் ஆண்டு மாரடைப்பால் காலமாகவேண்டிய தன்னுடைய
தந்தையாகிய மஹாகவியை 1969 (1958+11=1969) இலேயே சேரன் கொன்றுவிட்டார்.
வயது தொடர்பாக சேரன் செய்த இன்னொரு மோசடி உரும்பிராய் சிவகுமாரன்
சம்பந்தமானது. தான் 1973 - 1974 காலப்பகுதிகளில் சிவகுமாரனுடன்
நெருங்கிப்பழகியதாகவும் சிவகுமாரன் ஒரு அமைதியற்ற பிறவி என்றும் அவர் ஒரு
இரவு முழுவதுமே ஆயுதப் போராட்டம் ஒன்றின் தேவையை வலியுறுத்தி
விவாதித்துக்கொண்டிறுப்பார் (பக்.28) என்றும் சேரன் Tigers of Lanka, Third
impression,1995) என்ற நூலின் ஆசிரியர் நாராயன் சுவாமியிடம் கூறியுள்ளார்.
சிவகுமாரன் பிறந்தது 1950 இல். சேரன் 1958 இல். சிவகுமாரனின் ஊர்
உரும்பிராய். சேரனின் ஊர் அழவெட்டி. சேரன் பல்கலைக்கழகத்துக்குப் போன
பின்னரும் ஆயுதப்போராட்டங்களோடு சகவாசம் வைத்துக்கொள்ளாதவர். சேரன்
தன்னுடைய 15, 16 வயதுகளில் (1973 : 1974) பள்ளியில் நல்ல பெயர்
எடுக்கவேண்டும் என்று பால்வடியும் முகத்தோடு வன்முறைப்பக்கம் போகாது நல்ல
பிள்ளையாக இருந்தவர். அப்படியான சேரன் தன்னைவிட எட்டு வயது கூடிய,
அக்காலப்பகுதிகளில் மறைவிடங்களில் வாழ்ந்த ஒரு புயலான சிவகுமாரனுடன்
நெருங்கிப் பழகினார் என்றால் சிவகுமாரன் என்ன கம்பி மஸ்தானா? (என்னச் சேரன்!
வரலாற்றின் பார்க்குமிடமெங்கும் நீக்கமற நீங்கள் நிறைந்திருக்கவேண்டுமென்ற
உங்கள் பரிதாபத்துக்குரிய Grandiose ஆசை எங்களுக்குப் புரிகிறது. ஆனால்
பொய்யை சொல்கிறபோது பொருந்தச் சொல்லவேண்டாமா?)
சேரன் இத்தோடு மட்டும் நின்று விடாது சிவகுமாரனும் தானும் ஏறத்தாழ ஒரே
வயதினர் என்ற பொய்யையும் நாராயணசாமியிடம் சொல்லியிருக்கவேண்டும். ஏனெனில்
நாராயண சாமி சிவகுமாரன் 1974 இன் சாகும் போது அவருக்கு வயது 17 என்று தவறாக
எழுதுகிறார். (24 என்பதே சரியானத
(Arun Ambalavanar's) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம
MBBS(Srilanka)
Phd(Liverpool,
UK)
'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........'
(முறிந்த
பனை நூலில் இருந்து)
(இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்)
Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call.
From: Broken Palmyra
வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம்
(சாகரன்)
புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம்
பிரபாகரனுடன்
இறுதி வரை இருந்து
முள்ளிவாய்கால்
இறுதி சங்காரத்தில்
தப்பியவரின் வாக்குமூலம்
தமிழகத்
தேர்தல் 2011
திமுக,
அதிமுக, தமிழக
மக்கள் இவர்களில்
வெல்லப் போவது
யார்?
(சாகரன்)
என் இனிய
தாய் நிலமே!
தங்கி
நிற்க தனி மரம்
தேவை! தோப்பு அல்ல!!
(சாகரன்)
இலங்கையின்
7 வது பாராளுமன்றத்
தேர்தல்! நடக்கும்
என்றார் நடந்து
விட்டது! நடக்காது
என்றார் இனி நடந்துவிடுமா?
(சாகரன்)
வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010
(சாகரன்)
பாராளுமன்றத்
தேர்தல் 2010
தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி
1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்......
நடந்த
வன்கொடுமைகள்!
(fpNwrpad;> ehthe;Jiw)
சமரனின்
ஒரு கைதியின் வரலாறு
'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்...
மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும்
(சாகரன்)
இலங்கையில்
'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம்
(சாகரன்)
ஜனாதிபதி
தேர்தல்
எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்?
பத்மநாபா
ஈபிஆர்எல்எவ்
ஜனாதிபதித்
தேர்தல்
ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்)
சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள்
(சேகர்)
அனைத்து
இலங்கைத் தமிழர்களும்
ஒற்றுமையான இலங்கை
தமது தாயகம் என
மனப்பூர்வமாக
உரிமையோடு உணரும்
நிலை ஏற்பட வேண்டும்.
(m. tujuh[g;ngUkhs;)
தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு
ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா?
(சாகரன்)
ஜனவரி இருபத்தாறு!
விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....?
(மோகன்)
2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!!
'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்'
(சாகரன்)
சபாஷ் சரியான
போட்டி.
மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா.
(யஹியா
வாஸித்)
கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்!
(சதா. ஜீ.)
தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை
மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா?
(சாகரன்)
கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும்
(சாகரன்)
சூரிச்
மகாநாடு
(பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி
(சாகரன்)
பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!!
(மோகன்)
தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு
பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல்
(சாகரன்)
இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம்
(சாகரன்)
ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும்
(சாகரன்)
அடுத்த
கட்டமான அதிகாரப்பகிர்வு
முன்னேற்றமானது
13வது திருத்தத்திலிருந்து
முன்னோக்கி உந்திப்
பாயும் ஒரு விடயமே
(அ.வரதராஜப்பெருமாள்)
மலையகம்
தந்த பாடம்
வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா?
(சாகரன்)
ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.!
(அ.வரதராஜப்பெருமாள்)
|