Contact us at: sooddram@gmail.com

 

ராஜபக்ஷேவின் நாடகமா?!

நாகை மீனவர்கள் சிறைப்பிடிப்பு..

'நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் மற்றும் காரைக்காலில் இருந்து, 18 படகுகளில் 112 மீனவர்கள் கடந்த 12-ம் தேதி கடலுக்குச் சென்றனர். 'எல்லை தாண்டி மீன்பிடித்தார்கள்!’ என்று 15-ம் தேதி மதியம், யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் அவர்கள் பிடிக்கப்பட்டு, 16-ம் தேதி மாலை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்!’ என்று செய்தி வெளியானது.

 அடுத்து, 'நாகை மீனவர்களை, ஈழத்து மீனவர்கள்தான் சுற்றிவளைத்துப் பிடித்து, உள்ளூர்போலீஸிடம் ஒப்படைத்தார்கள்..!’ என்று இலங்கைத் தரப்பில் செய்தி வந்தது.  எப்போதும் இல்லாதவகையில், 'நாகை மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இலங்கைத் துணை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்!’ என தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டது. கனிமொழி முதலான சில தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகி விடுதலை ஆனார்கள். ஆனால், வழக்கமாக குரல் எழுப்பும், இன உணர்வு அமைப்புகளின் தலைவர்கள் யாருமே வாய்திறக்கவில்லை!

உண்மையில் நடந்தது என்ன?

இலங்கை வடமராட்சி வடக்குக் கடல் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜத் தலைவர் அந்தோணிப்பிள்ளை எமிலியாம் பிள்ளையிடம் பேசினோம். ''சம்பவத்தன்று, எங்கட ஆட்கள் முதல் நாள் கடலில் போட்ட வலைகளை எடுக்கப் போக... இந்திய இழுவைப் படகுகளால் வலைகள் நாசமாகிக் கிடந்திருக்கு. எங்கட ஆட்கள் கோபத்தில் பேச, இரு தரப்பிலயும் வாக்குவாதம்! தமிழக இழுவைப் படகுகளைக் கரைக்குக் கொண்டு வந்தோம். 30 வருடங்களா போரால் துன்பத்தை அனுபவிச்சுட்டு, இப்போதான் ஆழ்கடலில மீன்பிடிக்க அனுமதி கிடைச்சுது. போரில் குடும்ப உறவுகளை இழந்து, சொத்துகளை வித்தோ... கடன் வாங்கியோதான் மீன்பிடி சாதனங்களை வாங்கியிருக்கோம். இந்த நேரத்தில இழுவைப் படகைக் கொண்டுவந்து, எங்கட மீன்பிடி சாதனங்களை அழிக்கலாமா? வலை போட்டுப் பிடிச்சா, மேற்பரப்பில உள்ள மீன்களைப் பிடிக்கலாம், அடியில மீன்குஞ்சுகள் இருக்கும். தொடர்ந்து மீன்வளம் அழிக்கப்படாமல் இருக்கும். தமிழகத்தில் இருந்து வர்ற சகோதரர்களை எங்க கடற்பிரதேசத்தில மீன்பிடிக்கக் கூடாதுன்னு சொல்லல. எங்களப் போலவே வலையைப் போட்டு மீன்பிடிங்க. நீங்க இழுவைப் படகைப் பயன்படுத்துறதால எங்கட இயற்கை அழிஞ்சதுன்னா, இந்தத் தொழிலையே நம்பியிருக்கிற நாங்க எங்க அய்யா போக?' என்று கேட்டார் எமிலியாம்பிள்ளை.

''ஈழத் தமிழ் மீனவர்களின் இந்தக் குரலின் நியாயத்தை, தமிழக மீனவர்கள் தரப்பில் யாரும் மறுக்கவில்லை. இரு தரப்பு அரசாங்கங்களும் உயர்மட்ட அளவில் கறாராகப் பேசி, இதில் முடிவுகாண வேண்டும்!'' என்கிறார்கள், தமிழக மீனவர் சங்கங்களின் தலைவர்கள். இதையட்டி சொல்லப்படும் இன்னொரு கருத்துதான் முக்கியமானது. 'தமிழக மீனவர்களின் அத்துமீறலே பருத்தித்துறை சிறைப்பிடிப்புக்குக் காரணம் என்பது உண்மை அல்ல; சிங்கள ராஜபக்ஷே அரசின் சகுனித் திட்டம்தான் இது!’ என்கிறார்கள்.

நாம் விசாரணையில் இறங்கியபோது, ''தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை படுகொலை செய்வதும், தாக்கிக் கொள்ளையடிப்பதும் ராஜபக்ஷே அரசின் மீதான இனப்படுகொலைக் குற்றச்சாட்டோடு சேர்க்கப்பட்டு, பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதில் உடனடியாகத் தப்பிக்கவேண்டிய கட்டாயத்துக்கு ராஜபக்ஷே தள்ளப்பட்டு உள்ளார். இதனால்தான் சமீபமாக தமிழக மீனவர் படுகொலை செய்யப்பட்டபோதெல்லாம், 'யாரோ மூன்றாவது சக்தியின் கைவரிசைஎன்று இலங்கை அரசுத் தரப்பில் மறுப்பு வெளியிடப்படுகிறது. 'தங்கள் மீது தவறு இல்லை என மட்டும் சொன்னால் போதாது, தமிழக மீனவர்கள்தான் தவறுக்குக் காரணம்!’ என்று நிரூபித்துக் காட்டவும் முடிவுசெய்தனர். அதன்படி, கடந்த செவ்வாயன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் இருந்த தமிழக மீனவர்களின் 18 படகுகளை, சிங்களக் கடற்படையின் அதிவேக டோரா தாக்குதல் படகுகள் சுற்றிவளைத்தன. மேலும் கடற்படையினர், கரையில் உள்ள மீனவர்களை வரவழைத்து அவர்களே தமிழக மீனவர்களைப் பிடித்ததாகக் கூறுமாறு கட்டாயப்படுத்தினர். அவர்களும் அப்படியே கூறுகின்றனர். இதன் மூலம் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கிறார்கள் என்று ஈழத்தமிழரை வைத்தே சொல்லவைக்கும் திட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர். ஈழத்தமிழ் மீனவர்களின் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை ராஜபக்ஷேவுக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்வது எல்லாம் பொய். தமிழக இழுவைப் படகுகளால் ஈழ மீன்வளத்துக்கு பாதிப்பு என்பதற்காகவும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கவில்லை. ஏனென்றால், யாழ்ப்பாணத்தில் செல்வாக்குள்ள ஒரு அரசியல்வாதி தடைவிதிக்கப்பட்ட இழுவைப்படகு மூலம் அரசு ஆதரவுடனேயே அங்கு மீன்பிடித் தொழிலைப் பெரிய அளவில் செய்ய முயன்றார். பல தரப்பினரும் எதிர்த்ததால் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். எனவே, பருத்தித்துறை சம்பவம் என்பது முழுக்க முழுக்க ராஜபக்ஷே தரப்பு திட்டமிட்டு நடத்திய நாடகம்!' என்றனர் நம்மிடம்.

இன்னொரு புறம், ''ஒரு முறை தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் தாண்டி கிராமத்துக்குள் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுப் போனவர்கள்தான், சிங்களக் கடற்படையினர். இந்தியக் கடல் பகுதியில் புகுந்து நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை சுட்டுக் கொன்றவர்கள். அவர்களின் ஊருக்கு அருகில் தமிழக மீனவர்கள் போகும்போது, சும்மா பிடித்துக்கொண்டுபோய் நீதிமன்றத்தில் நிறுத்துவார்களா? பருத்தித்துறை பிடித்துவைப்பு நாடகத்தின் மூலம் சிலர் இனத்துரோகக் கறையை எளிதாகத் துடைக்க முயல்கிறார்கள். அது நடக்காது!' என்கிறார்கள், தமிழ் இன உணர்வாளர்கள்.

என்னதான் நடந்தது என்றாலும், இனிமேலும் இப்படி நடக்காமல் இருக்கட்டுமே!

(இரா.தமிழ்க்கனல்) (நன்றி: ஆனந்த விகடன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com