|
||||
|
கடாஃபியின் கழுத்து இறுகுகிறது! கடைசி
ஆணும்..
கடைசிப் பெண்ணும்...
கடைசி குண்டும்...
லிபியா நாட்டு
சர்வாதிகாரி
மம்மர் கடாஃபியின்
மகுடம் சரிந்து கொண்டு
இருக்கிறது.
அவரது கழுத்தை, புரட்சி ரீங்காரம்
நெருக்கும் காலம்
இன்னும் ஒரு சில
நாட்களே இருக்கக்கூடும்!
மன்னர் இண்டிரிசின்
ஆட்சியைத்
தனது அசைக்க
முடியாத தைரியத்தாலும்,
படை பலத்தாலும்,
பேச்சுத்
திறமையாலும்
வீழ்த்தி,
42 ஆண்டுகளுக்கு
முன்னால்
வட ஆப்பிரிக்க
நாடான லிபியாவின்
ஆட்சியைப்
பிடித்தவர்,
மம்மர் கடாஃபி.'மன்னரை வீழ்த்திய
கடாஃபிக்கு
மக்களின்
கஷ்டங்கள்
தெரியும்.
சாதாரண மக்களுக்கு
என்னென்ன
செய்ய வேண்டும் என்பது புரியும்.
அடிப்படைத் தேவைகளைக்
கொடுத்து,
சுதந்திரக்
காற்றை சுவாசிக்கவைப்பார்’
என்ற நம்பிக்கையில்தான்
முழுக்கவே
அந்த நாட்டில் இருந்த
இஸ்லாமிய
மக்கள் இவரை ஆதரித்தனர்.
ஆனால், மன்னர்
ஆட்சிக் காலத்தில்
அடக்குமுறையும்
ஆணவமும் மட்டுமே இருந்தது என்றால், இவரது ஆட்சியில்
மத மயக்கமும்
கலந்தது.
மக்களின் மத உணர்வுகளைத்
தூண்டிவிட்டதால்,
கடாஃபி என்ன சொன்னாலும்,
எதைச் செய்தாலும்
சகித்துக்கொண்டார்கள்
லிபியர்கள். இன்னொரு பக்கம்,
உலகில் தலையெடுக்கும்
பயங்கரவாத
இயக்கங்களுக்கு
ஆதரவும் உதவிகளும்
பகிரங்கமாகவே
செய்தார்
கடாஃபி. அமெரிக்காவை எதிர்த்த
ஓர் இயக்கத்துக்கு
ஆதரவு காட்ட... அன்றைய
அதிபர் ரொனால்டு ரீகன், கடாஃபி
மீது கடுப்பாகி
'நாய்’ என்று
பட்டம் சூட்டினார்.
பொதுவாகவே
அமெரிக்காவை
எதிர்க்கும்
நாட்டின்
அதிபர்கள்
அளவுக்கு
அதிகமாகக்
கொச்சைப்படுத்தப்படுவார்கள்
என்பது வேறு விஷயம்! ஆயுதம், அதிகாரத்தைப்
பெற்றுத்
தரும். ஆனால், அதை மட்டுமே வைத்து ஆட்சி நடத்திவிட
முடியாது
என்பது கடாஃபிக்குப்
புரியவில்லை.
நாட்டின் தேசிய வருமானத்தில்
80 சதவிகிதத்துக்கும்
மேல் ராணுவத்துக்கே
செலவிட்டு,
லிபியர்களை
ரிங் மாஸ்டராக
நின்று ஆட்டுவிக்க
நினைத்தார்.
வெறுப்பை மனதுக்குள்
அடக்கிக்கொண்டு
வாழ்ந்தனர்
லிபிய மக்கள். பெரிதாக கிளர்ச்சிகள்
எதிலும் ஈடுபடவில்லை.
2009-ம்
ஆண்டு, அவர் ஆட்சிக்
கட்டிலில்
அமர்ந்து
40 ஆண்டுகள்
முடிந்திருந்தது. 'மிக
நீண்ட காலம் ஆட்சியில்
இருக்கும்
தலைவர்’ என்று தன்னைத்தானே
சொல்லிக்கொண்டு
கொண்டாட்டங்கள்
நடத்தினார்.
ரஷிய அதிபர்
வந்தார்.
இத்தாலிய பிரதமர்
வந்தார்.
ஆப்பிரிக்கத் தலைவர்கள்
எல்லோருமே
லிபியத் தலைநகர் திரிபோலியில்
கூடினார்கள்.
கடாஃபியை மதவாதி,
பயங்கரவாதி
என்று பட்டம் கொடுத்த நாட்டின் பிரதிநிதிகளும்
வந்து வாழ்த்தினார்கள்.
இவர்களோடு
சேர்ந்து
லிபிய மக்களும்!
ஆனால், இவர்களின்
மௌனத்தை அண்மையில்
அடித்து உடைத்தது எகிப்து. சர்வாதிகாரி
முபாரக் ஆட்சியை 18 நாள் போராட்டத்தில்
விரட்டிய
எகிப்தின்
எஃகு நிகழ்வுகள்,
லிபிய மக்களின் ரத்தத்தையும்
சூடேற்ற... கொண்டாட்டமும், குதூகலமும்
இருந்த திரிப்போலி
வீதிகளில்
இளைஞர்கள்
கூட ஆரம்பித்தார்கள்.
'அதிக வேலை வாய்ப்புகளை
உருவாக்குங்கள்’
என்ற பொதுவான
முழக்கம்
முதலில் வந்தது. 'பொருளாதார
சீர்திருத்தம்
வேண்டும்’
என்று இன்னோர் இளைஞன் சொன்னான்.
பிப்ரவரி
20-ம் நாள் நிலவரம் இந்தளவே! இது மற்ற
ஏரியாக்களுக்கும்
பரவிவிடக்
கூடாது என்று நினைத்த
கடாஃபி, பத்திரிகைகளைத்
தடை செய்தார். இணையதளங்களை முடக்கினார்.
மின்சாரத்தைத் தடை செய்தார்.
இதை அடுத்துதான்,
'பத்திரிகைகளின்
குரலை ஒடுக்காதே!’,
'உலகின் மோசமான அடக்குமுறையை
செய்யாதே’, 'எங்கே
திரும்பினாலும்
ஊழல்’, 'பெண்
பித்தனுக்கு
அதிகாரம்
ஒரு கேடா’,
'குடும்ப ஆட்சி நடத்தாதே’
- என்ற ஐந்து
முழக்கங்கள்
உரக்கக் கிளம்பின. நாலா பக்கமும்
பொதுமக்கள்
திரள ஆரம்பித்து...
தெருவை, நகரத்தை, தலைநகரை முற்றுகையிட்டார்கள்.
முதன் முறையாக
கடாஃபியின்
கண்களில்
பய ரேகை! 'எகிப்து
முபாரக்கைப்போல
கடாஃபியும்
நாட்டைவிட்டு
ஓடிவிட்டார்’
என்று ஒரு தொலைக்காட்சியில்
செய்தி ஓட... கடாஃபிக்குப்
பைத்தியமே
பிடித்துவிட்டது.
'நானா கோழை, நானா
கோழை?’ என்று
ராணுவ அதிகாரிகளைப்
பார்த்து
கத்த ஆரம்பித்தார்.
''நான் திரிபோலியில்
இல்லை என்றும், வெனிசூலாவுக்குத்
தப்பிவிட்டேன் என்றும் சில நாய்கள்
சொல்வதை நம்பாதீர்கள்.
இதோ திரிபோலியில்தான்
இருக்கிறேன்...''
என்று டி.வி-யில் பேசியபடி மாளிகையைவிட்டு
வெளியே வந்தார். சாலையில் இறங்கினார்.
''இதோ பாருங்கள்...
நான் நிற்பது
திரிபோலிதானே!''
என்றார் கெத்தாக. இந்த காமெடியை
மக்கள் ரசிக்கவில்லை.
எதிர்ப்பு முழக்கங்கள்
மேலும் வலுத்தன. இதில் இன்னும்
எரிச்சலானார்
கடாஃபி. இருந்தாலும், 'அரசு
ஊழியர்கள்
அனைவருக்கும்
இரண்டு மடங்கு சம்பளம்’ என்று அறிவித்தார். 'நாடு
எப்படி நாசமானாலும்
பரவாயில்லை.
தங்களுக்கு சமபளம்
கூட்டினால்
ஆட்சியை ஆதரிப்பார்கள்’
என்று கடாஃபி போட்ட கணக்கும்
தப்பாய்ப்
போனது. ரோடுகளில்
கூட்டம் மேலும் அதிகரித்தபடியே
இருந்தது.
'போராடும் எவனைப் பார்த்தாலும்
சுடுங்கள்’
என்பது அடுத்த உத்தரவு. தெருவில் நேருக்கு
நேர் வந்து
போராட்டக்காரர்களை
எதிர்க்கொள்ளப்
பயந்த ராணுவம், ஹெலிகாப்டரில்
பறந்து குண்டுகள்
வீசியது.
லிபிய வீதிகளில்
திரும்பிய
பக்கமெல்லாம்
பிணக் குவியல்கள்!
''இப்போதாவது
போராட்டத்தைக்
கைவிடுங்கள். இல்லைஎன்றால்
தெருவில்
உடல்களைத்தான்
பொறுக்கவேண்டி
இருக்கும்!''
என்று கொக்கரித்தார்
கடாஃபி. அவரது மகன் சயீஃப் அல் இஸ்லாம்
கடாஃபி அதை செயலாக்கினான்.
''கடந்த
நான்கைந்து
நாட்களில்
மட்டும்
2,000 பேர் கொல்லப்பட்டு இருக்கலாம்''
என்று லிபியாவில்
இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
''சர்வதேச
மனித உரிமைப்படி,
மக்கள் கருத்துகளைச்
சுதந்திரமாகத்
தெரிவிப்பதற்கும்,
பிரச்னைகள்
தொடர்பாகப்
போராடுவதற்கும்
உரிமை உள்ளது. எனவே, போராட்டக்காரர்களுக்குப்
பாதுகாப்புத்
தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து
விதமான உதவிகளையும்
செய்து தர வேண்டும்.
அமைதியாகப்
போராட்டம்
நடத்துபவர்கள்
மீது அரசாங்கம்
தாக்குதல்
நடத்தினால்,
விளைவுகள்
கடுமையாக
இருக்கும்!''
என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு
கவுன்சில்
எச்சரிக்கை
செய்துள்ளது.
'வட அமெரிக்க
இஸ்லாமிய
சமூகம்’ என்கிற அமைப்பு, அமெரிக்காவில்
இருக்கிறது. அவர்கள் அதிபர்
ஒபாமாவுக்கு
ஓர் அறிக்கையைக்
கொடுத்திருக்கிறார்கள்.
''லிபிய
மக்களைக்
காப்பாற்றும்
காரியத்தை
அமெரிக்கா
உடனடியாகச்
செய்ய வேண்டும்.
1988-ல் ஈராக்கிலும்,
1994-ம் ஆண்டு
ருவாண்டாவிலும்
1996-ல் செர்பியாவிலும்
நடந்ததைப்
போன்ற பேரழிவு இன்று லிபியாவில்
நடக்கப்போகிறது!''
என்று எச்சரிக்கை
செய்துள்ளது.
ஆனால், அதைப் பற்றி கடாஃபிக்கு
கவலை இல்லை.
பக்கத்து நாடுகளில்
இருந்து கூலிப் படைகளை வரவழைத்து
ஒடுக்குமுறை
அட்டகாசங்களைத்
தொடர்கிறார்.
''நீங்கள்
விரட்டி அடிப்பதற்கு
நான் ஒன்றும்
இந்த நாட்டின்
அதிபர் அல்ல. நானே
ஒரு போராளி.
கூடாரத்தில் இருந்து
கோட்டைக்கு
வந்தவன்.
செத்தாலும் இந்த மண்ணில்தான்
சாவேன்...'' என்று இல்லாத
பொல்லாத வசனமெல்லாம்
பேசிக்கொண்டே
இருக்கிறார்.
''எகிப்தில்
முபாரக்கை
விரட்டியதைப்போல,
எங்களை விரட்டிவிடலாம்
என்று நினைக்காதீர்கள். லிபியா
ஒன்றும் எகிப்து அல்ல. கடாஃபியை
எதிர்க்கும்
கடைசி ஆணும் கடைசிப்
பெண்ணும்
இருக்கும்
வரை, எங்களிடம்
கடைசிக் குண்டு இருக்கும்
வரை போராடியே
தீருவோம்!''
- இது கடாஃபியின்
மகன் விடுக்கும்
அறைகூவல்! பதிலுக்கு, ''எங்களின்
கடைசி மூச்சு இருக்கும்வரை
கடாஃபியை
எதிர்த்துக்கொண்டே இருப்போம்...''
என்கிறார்கள்
போராட்டக்காரர்கள். கடாஃபியின் கையிருப்பில் ஆயுதங்கள்
கரைந்துகொண்டே
போகிறது.
ஆனால், அவரை எதிர்க்கும்
மக்களின்
மூச்சுக்
காற்றின்
வெப்பம் நித்தம் கூடிக்கொண்டே
இருக்கிறது!
- ப.திருமாவேலன் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |