|
||||
|
பிரபஞ்சத்தில் நீண்டு கொண்டு செல்லும் அற்புதங்களின்
பட்டியல்
பெளதிகவியல், இரசாயனவியல்
கணிதம், தொழில்நுட்பம்,
இலத்திரனியல்
போன்ற பல்வேறுபட்ட
விஞ்ஞானத்
துறைகளுள்
மிகவும் பழைமை வாய்ந்தது
வானசாஸ்திரம். எமது அயல் நாடான
பாரதத்தில்
கூட வான
சாஸ்திரம்
அக்காலகட்டத்திலேயே
கொடிகட்டிப்
பறந்தது என்று வரலாறு
இயம்புகின்றது.
தற்பொழுது
அமெரிக்கா
சோவியத் ரஷ்யா போன்ற
வல்லரசு நாடுகளுக்கு
நிகராக இந்தியாவும்
அண்மையில்
நிலாவிற்கு
சந்திராயன்
என்ற பெயருடைய
செயற்கைக்
கோளை ரொக்கெட்
மூலம் ஏவி சாதனை
படைத்தது.
அம்புலியிலிருநது சந்திராயன்
அனுப்பிவைத்த
தகவல்களின்படி
அங்கு தண்ணீர் உள்ளது என்பது உலக விஞ்ஞானிகள்
அனைவரையும்
வியப்பில்
ஆழ்த்தியது.
பண்டைய காலத்தில்
வாழ்ந்த ஆதிவாசிகள்
இரவு பகல்
அடுத்தடுத்து
உண்டாவதையும்
வடக்கு தெற்கு துருவப் பிரதேசங்களில்
நீங்கலாக
ஏனைய கண்டங்களில்
சூரியன் இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்குள்
பன்னிரெண்டு
மணிநேரம்
காட்சியளிக்கின்றமையும்
கண்டறிந்தனர்.
வீடு நிர்மாணிப்பதற்கு
முக்கிய மூலவஸ்து வாகத் திகழ்கின்ற
சீமெந்து
கண்டுபிடிக்கப்படாமையினால்
இரவில் திறந்த வெளியில் படுத்து உறங்கினார்கள்.
இதனால் புராதன
மக்கள் ஆகாயத்தில்
அவ்வப்போது
தோன்றுகின்ற
சந்திரன்
அடங்கலாக
விண்மீன்கள்
வானிலிருந்து
புவியை நோக்கி மின்னல் வேகத்தில்
விழுகின்ற
விண்கற்கள்
போன்றவற்றினால்
தங்களுக்கு
ஏற்படுகின்ற
நன்மை, தீமைகள் எவை என்பதை
நன்கு உணர்ந்துகொண்டனர்.
மேலும் வானத்தில்
அபூர்வமாகக்
காட்சியளித்த
வால்வெள்ளி
அவர்களுக்கு
பெரும் கிலியை உண்டு பண்ணியது. தூமகேது தோன்றினால்
தமக்கோ அல்லது நாட்டிற்கோ
கெடுதல் ஏற்பட்டுவிடும்
என்று முழுமையாக
நம்பினார்கள்.
எனவே ஆகாயத்தில்
சூரியனை நீள் வட்டமாகச்
சுற்றி வருகின்ற பூமி, சந்திரன்,
புதன், சுக்கிரன்,
செவ்வாய்,
வியாழன், சனி, யுரெனஸ்,
நெப்டியூன்
மற்றும் கிரகங்கள்
பட்டியலில்
இருந்து சர்வதேச விஞ்ஞானிகளினால்
நீக்கப்பட்ட
புளுட்டோ
என்பனவற்றின்
தாற்பரியங்கள்
எவை என்பதை
நோக்குவோம்.
அத்துடன் நட்சத்திரங்கள்
விண்கற்கள்
விண்துகள்கள்
போன்றன பற்றியும்
சிறிது ஆராய்வோம்.
அதற்கு முன் வான்வெளியில்
நாம் காண்கின்ற
விண்மீன்கள்
கோள்கள் போன்றவற்றின்
அசைவு உருவமைப்பு
தன்மை ஆகியவற்றின்
ஆராய்ச்சியே
விண்ணியல்
ஆகும் என்றும் கூறலாம். இது ஏனைய அறிவுத்துறைகளை
எல்லாம் உள்ளடக்கிய
பரந்த துறையாகும்.
கிரேக்க நாட்டு விஞ்ஞானியான
அரிஸ்டோட்டில்
மற்றும் தொலமி ஆகியோர்
புவி தட்டையானது
அல்ல முட்டை
வடிவானது
என்று ஆராய்ச்சி
மூலம் கண்டறிந்தனர்.
மேலும் ஆயிரத்து
அறுநூற்று
நாற்பத்து
இரண்டாம்
ஆண்டு இத்தாலி நாட்டின் கலிலியோ என்ற விஞ்ஞானி
அண்டவெளியை
அதிசக்தி
வாய்ந்த தொலைநோக்கி
மூலம் ஆராய்ந்து
மூட நம்பிக்கையை
பிழையென்று
நிரூபித்துக்
காட்டினார்.
ஆனால் கத்தோலிக்க
திருச்சபை
அவர் கூறுவது
பொய் என்ற
அடிப்படையில்
சிறைக்கு
அனுப்பியது. அதன்
பின்னர் இத்துறையை
மிகவும் துல்லியமாக
ஆராய்ந்த
விஞ்ஞானிகள்
இருவர் சூரியனைப்
பூமி சுற்றிவரும்
பாதை வட்ட
வடிவமானது
அல்ல நீள்வட்டப்
பாதை என்பதை
ஆதாரங்களுடன்
கண்டறிந்தனர்.
ஆயிரத்து
எழுநூற்று
இருபத்தேழாம்
ஆண்டு பிரித்தானிய
கணித விஞ்ஞானியான
சேர் ஐஸாக்
நியூட்டன்
ஒரு அப்பிள்
மரத்திலிருந்து
பழம் கீழ்
நோக்கி விழுவதைக்
கண்டு பல உண்மைகளைக்
கண்டார்.
இதன் அடிப்படையில்
இவ்வுலகில்
உள்ள பொருட்கள்
யாவும் ஒன்றையொன்று
கவருகின்றன
என்று அறிந்துகொண்டார். அதன் பின்னரே நியூற்றனின்
விதி விஞ்ஞானத்
துறையினரின்
பயன்பாட்டிற்கு
அறிமுகமானது.
அதன் பின்னர்
தோன்றிய விஞ்ஞானிகளின்
ஆராய்ச்சியின்
பயனாக மேலும் பல உண்மைகள்
தெரியவந்தன.
சில விண்மீன்களிலிருந்து
வெளியேறும்
ஒளியானது
புவியை வந்தடைய இருபது கோடி வருடங்கள்
செல்கின்றன
என்பதையும்
அந்நட்சத்திரம்
நிலைகொண்டுள்ள
தொலைவை ஒளி ஆண்டு
அலகில் கூறி வைத்தனர்.
அக்காலகட்டத்தில் ரொக்கெட்டோ
செயற்கைக்
கோளோ கண்டுபிடிக்கப்படவில்லை
என்பதால்
வேற்றுக்
கிரகங்கள்
பற்றிய ஆராய்ச்சி
அனைத்தையும்
அதிசக்தி
உயர்ந்த தொலைநோக்கி
மூலம்தான்
விஞ்ஞானிகள்
அறிந்துகொள்ள
முடிந்தது.
நிலாவின் மேற்பரப்பில்
உள்ள மலைகளையும்
பள்ளத்தாக்குகளையும்
மற்றும் சனிக்கிரகத்தைச்
சுற்றியுள்ள
ரம்மியமான
வளையங்களையும்
கண்டு வியந்தனர்.
ஒரு நட்சத்திரத்தை
விண்வெளி
ஆராய்ச்சி
மையத்தில்
உள்ள தொலைநோக்கியினூடாகப்
பார்த்தாலும்
வெறும் கண்ணால் நோக்குவது
போல அது
ஒரு ஒளிப்புள்ளியாகவே
தென்படும். ஏனெனில் விண்மீன்கள்
புவியிலிருந்து
கோடிக்கணக்கான
ஒளியாண்டு
தொலை தூரத்தில்
இருப்பதே
பிரதான காரணியாகக்
கொள்ளலாம்.
பதினான்கு கோடி எண்பத்து எட்டு இலட்சம்
கிலோ மீற்றர்
தொலைவில்
நிலைகொண்டுள்ள
சூரியனின்
ஒளி பூமியை
வந்தடைய சுமார் எட்டு நிமிடங்கள்
எடுக்கின்றன.
சாதாரண ஒளிக்கதிரை
ஓர் அரியத்தின்
ஊடாகச் செலுத்தினால்
அவ்வொளியில்
வானவில்லில்
தோன்றும்
ஏழு வர்ணங்களையும்
வெளிப்படுத்தும்
என்பதை விஞ்ஞானிகளான
ஐஸாக் நியூற்றன்
சி. வி. இராமன் போன்றவர்கள்
நிரூபித்துக்
காண்பித்தனர்.
இதுவரை காலமும் பூமியில் அமைந்துள்ள
விண்வெளி
ஆராய்ச்சி
மையத்தில்
இருந்தவாறு
ஆராய்ச்சிகள்
நடைபெற்றன. ஆனால்
இன்றைய விஞ்ஞான யுகத்தில்
அண்டவெளியில்
வலம் வந்து
கொண்டிருக்கும்
விண்வெளி
மையத்தில்
இருந்தவாறு
வேற்றுக்
கிரகங்களின்
பல விலைமதிக்க
முடியாத தரவுகள் பெறப்படுகின்றன.
இனி சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்ற பூமியைப் பற்றி சிறிது
ஆராய்வோம்.
பூமி உருண்டை வடிவமென ஏற்றுக்கொண்டாலும்
அது சரியான
வட்டமாக இருப்பதில்லை. இருதுருவங்களில் சிறிது
தட்டையாகவும்
கற்பனைக்
கோடான பூமத்திய ரேகைப் பகுதியில்
சற்று படுத்தும்
இருக்கின்றது.
பூமத்திய ரேகையின்
ஊடாகச் செல்லும் விட்டம் பன்னிரண்டாயிருத்து
அறுநூற்று
எண்பத்து
மூன்று கிலோ மீற்றராகும்.
பூமி தன்னைத்தானே
சுற்றிக்கொள்வதுடன்
முந்நூற்று
அறுபத்து
ஐந்தே கால் நாட்களில்
சூரியனையும்
ஒரு முறை
சுற்றி வருகின்றது.
ஒவ்வொரு ஆண்டும்
ஜனவரி மாதம் மூன்றாம்
திகதி அளவில் பூமியானது
சூரியனுக்கு
அருகில் வருகின்றது.
பூமி தன்னைத்தானே
ஒருமுறை சுற்றிவரும்
நேரத்தை ஒரு நாளொன்றும்
சூரியனை ஒருமுறை சுற்றிவர எடுக்கும்
காலம் 4ஸி வருடமென்றும்
கொள்ளப்படுகின்றது. பூமி தன்னைத்தானே
சுற்றுவதினால்
இரவு பகல்
உண்டாவதும்
சூரியனைச்
சுற்றுவதினால்
பருவ காலங்களும்
ஏற்படுகின்றன.
அடுத்து சந்திரனைப்
பார்ப்போம். சந்திரன் பூமியின்
உப கிரகமாகும்.
ஜீவராசிகளுக்கு சூரியனைப்
போல் சந்திரன்
அவ்வளவு முக்கியமானதல்ல.
ஆனால் சந்திரன் இல்லையென்றால்
குளிர்ந்த
நிலா வெளிச்சத்தை
நாம் கண்டுகளிக்க
முடியாது.
பூமி சூரியனைச்
சுற்றிவருவது
போலச் சந்திரனும்
புவியைச்
சுற்றி வருகின்றது. பூமியில் ஒருவன்
ஒரு கல்லை
அறுபது மீற்றர் உயரத்திற்கு
எறிவானெனின்
சந்திரனில்
முன்னூற்று
அறுபது மீற்றர் தூரத்திற்கு
எறிவான்.
சந்திரனின் ஈர்ப்பு
சக்தியானது
பூமியில்
உள்ளதைவிட
ஆறிலொரு பங்காகும்.
பூமியில் சூரிய வெப்பத்தை
வாயுக்கள்
ஓரளவு தடுத்து குறைக்கின்றன. சந்திரனில் காற்று
இல்லாத படியினால்
சூரியக் கதிர்கள் விழுகின்ற
பகுதியில்
வெப்ப நிலை கூடவே
காணப்படும்.
ஏனைய பகுதிகளில்
துருவப் பிரதேசங்களில்
உள்ள உஷ்ண
நிலையைக்
கொண்டிருக்கும்.
தொலை நோக்கி
வாயிலாக சந்திரனை உற்று நோக்கினால்
அதன் மேற்பரப்பில்
உள்ள மலைகளையும்
பள்ளத்தாக்குகளையும்
அவதானிக்கலாம்.
இதுவே எங்களுக்கு
பாட்டி வடை சுடுவது
போன்று காட்சியளிக்கின்றது.
சந்திரன் பூமியைச் சுற்றிவரும்
அதே அளவு
நேரத்தில்
அது தன்னைத்தானே
சுற்றுகிறது. இதனால் பூமியில்
உள்ளோர் நிலாவின் ஒரு பகுதியைத்தான்
எப்பொழுதும்
காணக்கூடியதாகவுள்ளது.
இனி புதன் பற்றி
அறிவோம். இதனை ஆங்கிலத்தில்
மெக்கூரி
என்று அழைக்கின்றனர்.
சூரியனுக்கு மிகவும்
அண்மையில்
நிலைகொண்டுள்ள
கிரகம் புதனாகும்.
அனைத்துக் கிரகங்களுக்குள்ளும்
புதனே மிகச் சிறிய
கிரகமாகும். இக்கிரகத்தின் விட்டம்
நான்காயிரத்து
எண்ணூறு கிலோ மீற்றராகும்.
இது சந்திரனைவிட
சிறிய பருமனுடையது.
தன் சூரியனை ஒரு முறை
சுற்றிவர
எண்பத்தெட்டு
நாட்கள் செல்கின்றன. நாம்
வாழுகின்ற
பூமியானது
இருபத்து
நான்கு மணித்தியாலயங்களுக்கு
ஒருமுறை தன்னைத்தானே
சுற்றுவதினால்
புவியின்
எல்லாப் பகுதிகளுக்கும்
இரவு பகல்
மாறி மாறிக்
கிடைக்கின்றது.
ஆனால் புதனில்
நீண்ட நாட்களுக்கு
இரவும் பகலும் மாறி மாறி
வருகின்றன.
புதன் சூரியனுக்கு
அருகில் இருக்கும்
போது கதிரவனின்
ஒளி படுகின்ற
பகுதியின்
வெப்பநிலை
சுமார் நானூறு பாகை செல்ஸியஸ்
ஆகவும் தூரத்தில்
இருக்கும்
வேளையில்
ஏறத்தாழ இருநூற்று
எண்பது பாகை செல்ஸியஸாகவும்
தென்படுகின்றது
என வானிலை
ஆய்வாளர்
கூறுகின்றனர்.
பூமிக்கும் சூரியனுக்கும்
இடையே புதன் ஒரே
நேர் கோடில்
வலம்வரும்
போது அது
சூரிய பிம்பத்திற்குக்
குறுக்காக
ஒரு சிறு
கரும்புள்ளியாக
ஊர்ந்து செல்லும். இதனைக் கிரகணம்
என்று கூறுவதற்குப்
பதிலாக புது சந்திரணம்
என்று அழைக்கின்றனர்.
விண்வெளி ஆராய்ச்சி
மையத்திலுள்ள
தொலைநோக்கி
வாயிலாக புதனை உற்று
நோய்கினால்
வளர்பிறை,
தேய்பிறை,
பூரணை, அமாவாசை நிகழுவதைக்
காணலாம்.
இப்பிரபஞ்சத்தில் நிகழுகின்ற
அற்புதங்களை
கண்டுகளிக்க
உறுதுணை புரிகின்ற
தொழில்நுட்ப
கருவிகள்
நவீன முறையில்
கண்டுபிடிக்கப்பட்டே
வருகின்றன.
சுக்கிரனை (Vலீnus) ஆராய்வோமாகில்
இக்கிரகம்
பருமனிலும்
திணிவிலும்
பூமியை ஓரளவிற்கு
ஒத்திருப்பதாகக்
கூறப்படுகின்றது. இதனுடைய விட்டம்
பன்னிரெண்டாயிரத்து
முன்னுற்று
இருபது கிலோ மிற்றராகும்.
இது சூரியனை
ஒருமுறை சுற்றிவர இருநூற்று
இருபத்து
நான்கு நாட்கள் ஆகின்றது.
சூரியனுக்கும் பூமிக்கும்
இடையே ஒரு நேர்கோட்டில்
வரும்போது
இதுவும் கரும்புள்ளியாகத்தான்
தோற்றமளிக்கும்
இந்நிகழ்வை
சுக்கிர சந்திரணம்
என அழைப்பார்கள். இது வெகு அபூர்வமாக
நிகழுகின்றது.
இறுதியாக இரண்டாயிரத்து
நான்காம்
ஆண்டு ஜூன் எட்டாம்
திகதி நடைபெற்றது. அடுத்ததாக எதிர்வரும்
இரண்டாயிரத்து
பன்னிரெண்டாம்
ஆண்டு ஜூன் ஆறாம்
திகதி நிகழும் என்று வானியலாளர்
கூறுகின்றனர்.
எட்டு ஆண்டுகள் இடைக்காலத்தைக்
கொண்ட இச் சுக்கிரசந்தரணம்
இரண்டாயிரத்துப்
பன்னிரெண்டுக்குப்
பின்னர் நூற்றாண்டு
காலப் பகுதியைக்
கடந்ததும்
நிகழுமாம். இக்கிரகத்தைச் சுற்றி
வெண்ணிற மேகப்படலம்
பரிணமித்துள்ளது.
இதனால் சுக்கிரனில்
மேற்பரப்பைத்
துல்லியமாக
ஆராய்வதில்
சிக்கல் நிலை தோற்றியுள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |