|
||||
|
உலக கிரிக்கெட்
வரலாற்றில்
சாதனை படைத்துள்ள
இலங்கை அணி
உலகெங்கிலும் பரந்து
வாழும் லட்சோப லட்ச கிரிக்கெட்
ரசிகர்கள்
ஆவலோடு எதிர்பார்த்துக்
கொண்டிருந்த
உலக கிரிக்கெட்
கிண்ணத்திற்கான
இறுதி ஆட்டம், வெற்றிகரமான
முறையில்
நிறைவுபெற்றது.
இந்த போட்டியில்
இந்திய அணி வெற்றியீட்டினாலும்,
இலங்கை அணி கிரிக்கெட்
விளையாட்டில்
தன்னிகரற்ற
கனவான்களைக்
கொண்ட ஒரு அணி
என்பதை முழு உலகத்திற்கும்
எடுத்துக்
காட்டக் கூடிய வகையில்
எங்கள் நாட்டிற்கு
பெருமை தேடி தந்திருக்கிறது.
சுருக்கமாக
கூறுவதாயின்
இந்த இறுதி
ஆட்டம் இந்திய அணிக்கு வெற்றியையும்,
இலங்கை அணிக்கு தோல்வியையும்
பெற்றுக்
கொடுத்தது
என்று சொல்வதை விட, ஒட்டுமொத்தமாக
பார்க்கு
மிடத்து, இறுதி ஆட்டம்
கிரிக்கெட்
விளையாட்டிற்கு
கிடைத்த மாபெரும் வெற்றி என்றே, கணிக்க
வேண்டியிருக்கிறது.
Catches
Win Matches என்ற கிரிக்கெட்
விமர்சகர்களின்
கருத்து, நேற்றுமுன்தினம்
போட்டியில்
உண்மையாகியுள்ளது. எமது அணியினர், பந்துகளை கைகளிலிருந்து
நழுவி விடுவதற்கு
இடமளிக்காமல்,
மூன்று Catch களை பிடித்திருந்தால்
இந்த போட்டிமுடிவு
வேறு விதமாக
திசைதிரும்பியிருக்கும்.
இலங்கை அணியின்
பந்துவீச்சாளர்கள்
எதிர்பார்த்தளவு
தங்கள் திறமையை காண்பிக்க
முடியாமை
இருந்தமையும்
நாம் அடைந்த
தோல்விக்கு
ஒரு பிரதான
காரணமாகும்.
எது எவ்வாறு
இருப்பினும்
இலங்கை அணியின் உபதலைவர் மஹேலஜெயவர்த்தன
எமது அணியின்
துடுப்பாட்ட
வீரர்களின்
திறமை, ஆட்டம் கண்டுகொண்டிருந்த
வேளையில்
தனது சக
துடுப்பாட்டக்காரர்களுக்கு
உற்சாகமூட்டி
எவரும் எதிர்பாராத
விதத்தில்
ஓட்டங்களை
குவித்து,
274 ஓட்ட இலக்கை
அடைந்து எங்கள் நாட்டிற்கு
பெருமை தேடிக் கொடுத்தார்.
அதுபோன்று, லசித்
மாலிங்க முதல் ஓரிரு
ஓவர்களில்
இந்திய முன்வரிசை
வீரர்கள்
இருவரை தனது புயல்
வேக பந்து
வீச்சின்
மூலம், ஆட்டம் இழக்கச்செய்து
இந்திய அணியை தடுமாற்ற
நிலைக்கு
தள்ளினார்.
ஆயினும் அதற்கு பிறகு எமது
பந்துவீச்சா
ளர்கள் தங்கள் திறமையை காட்ட தவறிய
காரணத்தினால்
இந்திய அணியின் கப்டன் மஹேந்திரசிங்
டோனியின்
சிறந்த தலைமைத்துவத்தின்
கீழ் இந்திய
அணி வெற்றியீட்டி
உலக ஒரு
நாள் கிரிக்கெட்
வெற்றிக்
கிண்ணத்தை
தனதாக்கிக்
கொண்டது.
இதுவரை நாம் கூறியது
இறுதி ஆட்டத்தின்
போது, இடம்
பெற்ற நிகழ்வுகளாகும். இறுதி
ஆட்டத்தில்
கலந்துகொண்ட
இலங்கை வீரர்களுக்கு
நல்லாசி கூறி, அவர்களுக்கு
உற்சாக மூட்டுவதற்காக
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது வேலைப்பளுவையும்
பொருட்படுத்தாமல்
இந்தியாவுக்கு
சென்று மும்பாய் மைதானத்தில்
பார்வையாளர்
பிரிவில்
அமர்ந்திருந்து,
கரகோசம் செய்து இலங்கை அணியை உற்சாகமூட்டினார்.
ஆட்டம் முடிவடைந்த
பின்னர், இரண்டு அணிகளின் கப்டன்களை,
1983 ஆம் ஆண்டின்
உலக கிண்ணத்தை
வெற்றியீட்டிய
இந்திய அணியின் வீரரான ரவி சாஸ்திரி
பேட்டி கண்டார்.
அப்போது, இலங்கை
அணியின் கப்டன் குமார் சங்ககார தெரிவித்த
கருத்துக்கள்
கனவான்களின்
கிரிக்கெட்
விளையாட்டில்
ஈடுபடும்
இலங்கை அணியினர் உண்மையிலேயே
கனவான்கள்
என்பதை பறைசாற்றுவதாக
அமைந்தது.
ஆங்கிலத்தில்
தெளிவாக கருத்துக்களை
தெரிவிப்பதில்
வல்லவராக
விளங்கும்
குமார் சங்ககார, இந்திய அணி ஒரு
சிறந்த அணி, அதனை
தோல்வியடையச்
செய்வது இலகுவான செயலல்ல. நாம் 350 ஓட்டங்களை
பெற்றிருந்தால்,
சில சந்தர்ப்பங்களில்
இந்திய அணியை தோல்வியடையச்
செய்திருக்கலாம்
என்றார்.
இந்திய அணி ஒரு
சிறந்த அணி. அதனால், அவ்வணியினர்
சிறப்பாக
விளையாடி
எங்களை தோல்வியடையச்
செய்தார்கள்.
நான் இந்திய
அணியின் கப்டனையும்
ஏனைய அனைவரையும்
வாழ்த்தி
விடைபெறுகிறேன்
என்று குமார் சங்ககார தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த
இந்திய அணியின் கப்டன் மஹேந்திரசிங்
டோனி, வெற்றி
பெருமிதத்தில்
தன்னைப் பற்றியும்,
தான் பின்னணியில்
விளையாடுவதற்கு
பதில் நாலாவது துடுப்பாட்டக்காரராக
விளையாடியதைப்
பற்றியெல்லாம்
பேசினாரே
ஒழிய, இந்திய
அணிக்கு எதிராக இந்தளவுக்கு
சிறந்த முறையில் விளையாடி, நேற்றைய போட்டியை ஒரு வரலாற்று
முக்கியத்துவம்
வாய்ந்த போட்டியாக
மாற்றியமைத்தமைக்காக
இலங்கை அணியை அவர்
பாராட்ட மறந்துவிட்டார்.
இது அவர் வேண்டுமென்றே
செய்த தவறா? அல்லது வெற்றி
பெருமிதத்தில்
அதனை குறிப்பிட
மறந்துவிட்டதனால்
ஏற்பட்ட தவறா? என்று
எங்களுக்கு
தெரியாது.
அதுபற்றி தீர்மானிக்கும்
பொறுப்பு
கிரிக்கெட்
ரசிகர்களிடமே
விடப்பட வேண்டும்.
சர்வர் சுந்தரம்
படத்தில்
நகைச்சுவை
மன்னன் நாகேஷ், தான் காதலித்த
கதாநாயகி
கே.ஆர்.விஜயா
தனக்கு பதில் நடிகர்
முத்துராமனை
விரும்பி
மணமுடித்த
போது, நாகேஷ்
தனக்கே உரித்தான பாணியில் சிரித்துக்கொண்டே
முத்துராமன்
வெற்றிபெற்று
விட்டார்.
நான் ரணர்ரப்
ஆகிவிட்டேன்
என்று எங்களை சிந்திக்க
வைக்கும்
ஒரு கருத்தை
தெரிவித்தார்.
இலங்கை அணி
தோல்வியடைந்தாலும்,
அணியில் வலுப்பெற்றிருந்த
ஒழுக்கமும்,
ஒற்றுமையும்,
தேசப்பற்றும்
இலங்கை அணியை கிரிக்கெட்
ஆதரவாளர்கள்,
இப்போட்டியின்
சம்பியன்
பட்டத்தை
பெற்றவர்களாகவே
நினைத்து,
பாராட்டி
போற்றுவார்கள்
என்பது திண்ணம். இலங்கை அணி தோல்வியடைந்தாலும்,
உலக கிரிக்கெட்
வரலாற்றில்
இலங்கையின்
பெயரை பொன் எழுத்துக்க
ளால் செதுக்கி
இருக்கும்
ஒரு சாதனையை
ஏற்படுத்தியிருக்கிறது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |