Contact us at: sooddram@gmail.com

 

இலங்கை அணியின் சாதனையாளர்

மும்பை நகரில் நடந்து முடிந்த உலகக்கிண்ணத்திற்கான ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி இரண்டாமிடத்தைப் பெற்ற போதிலும், இலங்கை வீரர்கள் கனவான்களின் கிரிக்கெட் விளையாட்டில் கலந்து கொள்ளும் கனவான்கள் என்பதை முழு உலகத்திற்கும் தங்கள் உன்னதமான நற்பண்பின் மூலம் விளையாட்டின் மகத்துவத்தை எடுத்துக்காட்டி எமது நாட்டிற்கு சர்வதேச கீர்த்தியை பெற்றுக் கொடுத்தார்கள்.

கிரிக்கட் மட்டுமல்ல எந்த வொரு விளையாட்டிலும் ஒரு அணி வெற்றி பெறும். இன்னுமொரு அணி தோல்விய டையும். வெற்றியும், தோல்வியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை யதார்த்தபூர்வமாக புரிந்து கொண்ட கனவான்களே கிரிக்கட் போட்டிக்கு மெரு கூட்டி அதன் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த அடித்தளத்தை அமைக்க முடியும்.

அந்த விடயத்தில் இலங்கை அணியினர் இன்று உலகத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார்கள்.

இன்றும் கூட மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், அபிமானமும் இருந்து வருகிறது. அவர் கள் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக மாத்திரமே கருதி, இன்னொரு அணியை தங்கள் எதிரிகளைப் போல் நடத்துவதும் இல்லை.

கிரிக்கெட் விளையாட்டை அதன் விதிமுறைகளுக்கு ஏற்ப இவர்கள் விளை யாடுவதனால் வெற்றி தோல்வியை பொருட் படுத்தாமல், மிகவும் கெளரவமாக நியா யமான முறையில் கிரிக்கட் போட்டிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தான் இன்றும் கூட உலகநாடுகளின் மேற்கிந்திய தீவு கிரிக்கட் வீரர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்து வருகின்றது.

இலங்கை வீரர்களும் அதே பாணியில் கனவான்களைப் போன்று விளையாடி வருகிறார்கள். உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கை தோல்வியை தழுவிக் கொண்ட பின்னர் பிரபல முன்னாள் இந்திய கிரிக்கட் ஆட்டக்காரரும், சர்வதேச ரீதி யில் புகழ்பெற்ற கிரிக்கெட் விமர்சகருமான ரவி சாஸ்திரி இலங்கை அணியின் கப்டன் குமார் சங்கக்காரவிடம் நடந்து முடிந்த இறுதிப் போட்டி பற்றி நீங்கள் என்ன நினைக்கிaர்கள் என்று கேட்டார்?

அதற்கு பதிலளித்த குமார் சங்கக்கார, இந்திய அணி இலங்கை அணியை விட சிறப்பாக விளையாடியது. நாம் 350 ஓட்டங்களை எடுத்திருந்தால், ஒரு வேளை வெற்றி பெற்றிருக்கலாம். இந்திய அணியினர் எங்களை விட சிறப்பாக விளையாடி இலங்கை அணியை தோல்வியடையச் செய்தார்கள். நான் அவர்களை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன் என்று ஒரு கனவானைப் போன்று பதிலளித்தார்.

இது போன்ற கேள்விக்கு பதிலளித்த இந்திய அணியின் கப்டன் மகேந்திர சிங் தோனி, வெற்றிபெருமிதத்தில் தன்னை மறந்த நிலையில், தான் பின்னணி துடுப் பாட்ட வீரராக இருந்து நான்காம் நிலைக்கு வந்து இன்றைய போட்டியில் கலந்து கொண்டு என்னைப் பற்றி தூற்றியவர்களுக்கு பாடம் புகட்டியிருக்கிறேன் என்ற பாணியில் பேசினார்.

இவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்திய அணிக்கு எதிராக இவ்வளவு சிறப்பாக விளையாடி இந்த போட்டியை அதி உன்னத நிலைக்கு உயர்த்திய இலங்கை அணியைப் பற்றி ஒரு வார் த்தை கூட பேசவுமில்லை, அத்துடன் இலங்கை அணியை பாராட்டவும் இல்லை. இவ்விதம் தான் மகேந்திர சிங் தோனி கனவான்களின் விளையாட்டான கிரிக்கட் போட்டியில் தங்களுடன் எதிர்த்து விளையாடிய மற்றுமொரு அணிக்கு மதிப்பையும் கெளரவத்தையும் கொடுத்துள்ளார்.

இலங்கை அணி இந்த இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டாலும், எங்கள் அணியில் வலுப்பெற்றிருக்கும், ஒழுக்கமும், ஒற்றுமையும், தேசப்பற்றும் உலகெங்களிலும் பரந்து வாழும் கிரிக்கெட் ரசிகர்களின் மதிப்பையும் பாராட்டையும் பெருமளவிற்கு இலங்கை அணியை புகழ் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.

இலங்கை அணி இந்த இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தாலும், உலக கிரிக்கெட் வரலாற்றில் எங்கள் நாட்டின் பெயரை பொன் எழுத்துக்களால் செதுக்கி வைத்திருக்கும் ஒரு சாதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

மும்பை நகரில் நடந்து முடிந்த இந்தப் போட்டி எவருக்கும் வெற்றியையும், தோல்வியையும் பெற்றுக்கொடுக்கவில்லை. கிரிக்கெட் என்ற கனவான்களின் விளையாட்டுக்கே இந்த முடிவு மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறதென்று கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்டுகின்றார்கள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com