|
||||
|
ஜே.வி.பி பாடம் கற்றுக் கொண்டால் அக்கட்சிக்கு
மக்கள் ஆதரவு கிடைக்கும்
ஏப்ரல் மாதம்
1ம் திகதி முட்டாள்கள்
தினமாக உலகெங்கிலும்
வாழும் மக்கள் நினைவு கூர்ந்து அன்றைய தினம் அதிகாலை
யிலேயே ஒவ்வொருவரும்
மற்றவர்களை
முட்டாள்களாக்கி
குதூகலிக்கும்
வினோத விளையாட்டுக்களில்
ஈடுபடுவதுண்டு.
அதுபோன்று
ஏப்ரல் மாதம் 5 ஆம்
திகதியன்று
ஜே.வி.பியினர்
சுதந் திர இலங்கையில்
முதல் தடவையாக மேற்கொண்ட
வன்முறைக்
கும் ஆயுதப்
போராட்டங்களுக்கும்
வித்திடும்
ஒரு முட்டாள்
தனமான முயற்சியில்
தவறான வழியில் இட்டுச் செல்லப்பட்ட
சிங்கள இளைஞர்கள்
அநியாயமாக
பலிகடாக்களாக்கப்பட்டார்கள்.
இது ஒரு தற்கொலை முயற்சி என்று பாராளுமன்ற
ஜனநாயக வெஸ்ட் மினிஸ்ரர்
சம்பிரதாயத்தின்
மீது நம்பிக்கை
வைத்துள்ள
வர்கள் கண்டனம் தெரிவிக்கவும்
தயக்கம் காட்டவில்லை.
1971
ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதம் 5ம் திகதியன்று
5 பாடங்களை
கற் றுக்கொடுத்ததன்
மூலம் உங்களுக்கு
அரசியல் விடுதலையை
பெற் றுக்கொடுத்து
உங்கள் வாழ்க்கையை
வளமாக்குவோம்
என்ற போலி
வாக்குறுதிகளை
அளித்து சிங்கள இளைஞர்களை
ஏமாற்றிய
விரல் விட்டு எண்ணக்கூடிய
சர்வதிகாரத்தின்
மீது நம்பிக்கை
கொண்டுள்ள
சிலர் இந்த ஆயுதப்
போராட்டத்திற்கு
வித்திட்டனர்.
அரசாங்கத்தை கவிழ்க்க
வேண்டும்
என்ற நோக்கத்துடன்
வீடுகளில்
தயாரிக்கப்பட்ட
கைக்குண்டுகளையும்,
கல்கட்டாஸ்
என்று அழைக் கப்படும்
உள்ளூரில்
தயாரிக்கப்படும்
துப்பாக்கிகளையும்
பயன் படுத்தி
நாட்டின்
பல பகுதிகளிலுள்ள
பொலிஸ் நிலையங்களின்
மீது அன்றிரவு
எதிர்பாராத
வகையில் தாக்குதல்களை
நடத்தி தங்களின் எவ்வித திட்டமும்
அற்ற ஆயுதப்
போராட்டம்
ஜே.வி.பி. தலைவர்களின் வழிநடத்தலின்
மீது அரங்கேற்றப்பட்டது.
ஆரம்பத்தில் லத்தீன்
அமெரிக்காவில்
பாமர மக்களுக்கு
விடுதலை பெற்றுக்கொடுப்பதற்காக
ஆயுதப் போராட்டத்தை
ஆரம்பித்து
கியூபாவில்
பிடல் கஸ்ரோவை ஆட்சி பீடத்தில்
அமர்த்திய
மாவீரன் ஷேகுவேராவின்
பெயரில் இவ்வியக்கத்தை
ஆரம்பித்த
இந்த தவறான
வழியில் இட்டுச் செல்லப்பட்ட
சிங்கள இளைஞர் கள், பின்னர்
அதனை மக்கள்
விடுதலை முன்னணி அதாவது ஜே.வி.பி என்று இயக்கத்திற்கு
பெயர் சூட்டினார்கள்.
1971
ஆம் ஆண்டில்
சிங்கள இளைஞர்கள்
ஆரம்பித்த
ஆயுதப் போராட்டம்
ஓரிரு தினங்களில்
அன்றைய பிரதம மந்திரி
ஸ்ரீமாவோ
பண்டாரநாயக்கவின்
அரசாங்கத்தினால்
அடக்கப்பட்டது. தங்கள்
மீது வெறி
கொண்டு காட்டுமிராண்டித்தனமாக
தாக்குதல்களை
மேற்கொண்ட
ஜே.வி.பி யைச் சேர்ந்த
பல்லாயிரக்கணக்கான
அப்பாவி சிங்கள இளைஞர்கள்
பொலிஸாரினால்
கண்ட கண்ட
இடமெல்லாம்
கைது செய்து
படுகொலை செய்யப்பட்டனர்.
நாட்டின் இளைஞர்கள்
விரல்விட்டு
எண்ணக்கூடிய
ஒருசில தேசத் துரோக
தலைவர்களின்
வழிநடத்தல்களினால்
தங்கள் உயிர்களை இழப்பதைக்
கண்டு மனம் நொந்து
போன அன்றைய
பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க
அம்மையார்
சகல இளைஞர்களையும்
உடனடியாக
வந்து சரணடையுமாறு
உத்தியோகபூர்வமாக
விடுத்த வேண்டுகோளை
ஏற்றுக் கொண்ட பல
சிங்கள இளைஞர்கள்
சரணடைந்தார்கள்.
அவ்விளைஞர்கள் ஓரிரு
வருடங்கள்
புனர்வாழ்வு
முகாம்களில்
வைக்கப்பட்ட
பின்னர் நீதிமன்றங்களின்
ஊடாக அவரவர்
பெற் றோர்களிடம்
கடுமையாக
எச்சரிக்கை
செய்த பின்னர் விடுவிக் கப்பட்டனர்.
ஜே.வி.பி.யின் தலைவர்
ரோஹன விஜயவீர
போன்ற பல முக்கிய
தலைவர்கள்
நீதிமன்றத்தின்
மூலம் தண்டிக்கப்பட்டு
சிறைத்தண்டனையை
அனுபவித்தனர்.
இத்தகைய காலகட்டத்தில்
1977 ஆம் ஆண்டின்
பொதுத் தேர்தலில்
ஐந்தில் ஒரு பெரும்பான்மை
பாராளுமன்ற
ஆசனங்களுடன்
பதவிக்கு
வந்த ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான
அரசாங் கம், தனது
சுயநலத்தைக்
கருத்திற்
கொண்டு ரோஹன விஜயவீர
போன்றவர்களை
விடுவித்தது.
அதையடுத்து தமிழ்
இளைஞர் களின் ஆயுதப்
போராட்டங்களை
அடக்குவதற்கு
இருக்கும்
ஒரே வழியாக
தமிழ் மக்கள் மீது வன்முறைகளை
கட்டவிழ்த்து
விட வேண்டும்
என்ற இன்னுமொரு
முட்டாள்
தனமான முயற்சியில்
இறங்கிய அன்றைய யு.என்.பி அரசாங்கம்,
1983 ஆம் ஆண்டில்
இனக்கலவரங்களை
தமிழ் மக்கள் மீது மேற்கொண்டு
அந்தப் பலியை மிகவும்
சாதுரியமான
முறையில்
ஜே.வி.பி யினர் மீதும்
தமிழ், சிங்கள மக்களை என்றும் நண்பர்களாக
நினைத்து
அரசி யல்
நடத்தி வந்த விஜயகுமாரதுங்கவின்
மீதும் சுமத்தி அவர் களை
கைது செய்தது.
இதையடுத்து மீண்டும்
ஜே.வி.பியினர்
1987 முதல் 1989 வரை கட்ட
விழ்த்துவிட்ட
வன்முறைகளில்
பல்லாயிரக்கணக்கான
அப்பாவி சிங்கள இளைஞர்களும்,
பொதுமக்களும்
மரணத்தை தழுவிக் கொண்ட நிகழ்வுகளும்
உங்களுக்கு
நிச்சயம்
ஞாபகத்தில்
இருக்கும்.
நாம் இதுவரை தெரிவித்த
கருத்துக்கள்
எமது நாட்டின்
வரலாற்றில்
சிவப்பு எழுத்துக்களினால்
பொறிக்கப்பட
வேண்டிய வேதனைக் குரிய நிகழ்வுகளாகும். இன்று
5 ஆம் திகதியன்று
ஜே.வி.பி யினர் தங்கள்
கட்சியின்
40 வது ஆண்டு
நிறைவை விமர்சையாக
நாடெங் கிலும் கொண்டாடுவதற்கான
ஒழுங்குகளை
செய்திருக்கிறார்கள்.
எனவே இந்த
40 ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களின்
போதாவது ஜே.வி.பியினர்
வெறுமனையே
மக்களை ஏமாற்றி தங்களை ஜனநாயக வாதிகளாக அழைத்துக்
கொள்ளும்
கபட நாடகத்தை
அடியோடு கைவிட்டு மனம்மாறி பாராளுமன்ற
ஜனநாயகத்திற்கு
வாழ்நாள்
பூராவும்
விசுவாசமாக
இருப்போம்
என்ற பிரதிக்ஞையை
எடுத்துக்
கொள்வது மிக மிக
அவசியமாகும்.
ஜே.வி.பியினர் இந்த நல்வழியை கடைப்பிடிப்பார்களே
ஆனால் அவர்களுக்கு
நிச்சயம்
விமோசனம்
கிடைக்கும்.
ஜே.வி.பியினர் இவ்விதம்
நல்வழியில்
அரசியல் நடத்தினால்
அவர் களுக்கு
கடந்த காலத்தில்
இருந்து வந்த மக்கள்
எதிர்ப்பு
நீங்கி, ஜே.வி.பியையும்
மக்கள் இன்னுமொரு
அரசியல் கட்சியாக கருதி ஆதரவை
நல்கக் கூடிய ஒரு
சாதகமான வாய்ப்பு உருவாகு வதற்கும் இடமுண்டு. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |