|
||||
|
தமிழ்,
சிங்கள மக்களின் பாரம்பரியங்களுடன்
இரண்டறக்
கலந்துள்ள
சித்திரைப்
புத்தாண்டு
சித்திரைப்
புத்தாண்டு
என கூறப்படும்
திருநாளை
இலங்கை வாழ் சிங்கள
பெளத்தர்கள்
‘அலுத் அவுருத்த’ என்றே அழைக்கின்றனர். சிங்கள சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு
ஏற்ப சூரியன்
வருடத்திற்கு
ஒருமுறை மீன ராசியில்
இருநது மேஷ ராசியினை
நோக்கிச்
செல்லும்
நிகழ்வினையே
புத்தாண்டாக
கொண்டாடி
வருகின்றனர்.
சமாதானம்
சந்தோஷம்
ஆகியவற்றை
சுமந்து வெள்ளைநிற
வண்டியில்
வரும் இந்திரதேவ
குமரனின்
வருகையினை
கொண்டாடும்
விதத்திலேயே
சித்திரை
புத்தாண்டை
சிங்கள பெளத்தர்கள்
கொண்டாடுவதாக
வரலாறு கூறுகின்றது.
இந்த புத்தாண்டு
காலம் வருடாந்தம்
சித்திரை
மாதம் 13, 14ம்
திகதிகளில்
கொண்டாடப்பட்டு
வருவதுடன்,
புத்தாண்டு
பிறக்கும்
செய்தியினை
‘குயில்’ தன் குரலால்
உலகறியச்
செய்வதாக
நம்பப்படுகின்றது.
புத்தாண்டுக்கான
ஏற்பாடுகள்
அதற்கான சுபநேரத்தில்
அரிசி இடித்து அடுப்புக்கட்டி
பலகாரம் சுடுவதுடன்
ஆரம்பிக்கப்படுவது
வழக்கமாகும். அடுத்ததாக
பழைய வருடத்திற்கான
ஸ்நானம் இடம்பெறும். உடலையும் உள்ளத்தையும்
சுத்தப்படுத்தும்
நோக்கி இடம்பெறும்
இந்த குளியில்
பழைய வருடத்திற்கான
இறுதிக் குளியலாகும்.
புத்தாண்டுக்கான விசேட நீராடல் சிங்களவர்
மத்தியில்
வழக்கத்தில்
இருந்து வருகின்றது.
புத்தாண்டைக் கொண்டாடும்
வகையிலும்,
புத்தாண்டு
குமரனுக்கு
படைக்கும்
வகையிலும்
கெவும் (பலகாரம்), கொக்கிஸ், கிரிபத் (பால்சோறு), முங்கெவும்
(பயத்தம் பலகாரம்), அலுவா (அரிசி
மாவால் செய்யப்படும்
இனிப்புக்
கட்டி), வாழைப்பழம்
ஆகியவற்றை
வெள்ளை துணி விரித்த
மேசையில்
வைத்து, குத்து விளக்கேற்றி
புத்தாண்டு
குமரனுக்குப்
படைக்கப்படும்.
அதன் பின் வீட்டுத்தலைவன்
அல்லது பெரியோர் குடும்பத்தில்
ஏனையோருக்கு
தீண்பண்டங்களை
ஊட்டிவிடுவர்.
சிங்கள
பெளத்தர்கள்
சித்திரைப்
புத்தாண்டை
பகைமை ஒழிப்புக்கான
சிறந்த வாய்ப்பாக
உபயோகப்படுத்திக்
கொள்வது வழக்கத்தில்
இருந்து வருகின்றது. நீண்ட காலமாக
பகைமை கொண்டிருந்த
நண்பர்கள்,
உறவினர்கள்
ஆகியோரை பார்க்கச்
சென்று பகைமை தீர்த்துக்
கொள்ளப்படும்.
சித்திரைப்
புத்தாண்டில்
இன்னும் ஓர் முக்கிய
அம்சமாகவே
கைவிசேடம்
கருதப்படுகின்றது. ஆரம்ப காலத்தில்
வீட்டின்
தலைவி உரிய சுப
நேரத்தில்
சிறிய மூலிகைப் பொட்டனம் ஒன்றினை கிணற்றுக்குள்
போட்டுவிட்டு
பிறக்கும்
புத்தாண்டு
நிமித்தம்
முதல் முறையாக தண்ணீரை கிணற்றிலிருந்து
வெளியில்
எடுப்பதையே
கை விசேடமாக
கருதப்பட்டது.
ஆயினும் நாளடவில்
கைவிசேடம்
என்பது சுபமுகூர்த்தத்தில்
பணத்தை கொடுப்பதும்
எடுப்பதும்
என்ற நிலை
ஏற்பட்டுள்ளது.
புதுவருடம் பிறந்ததன்
பின் பஞ்சாங்க
கணிப்பின்படி
சுப தினத்தில்
சுப நேரத்தில்
தொழிலிலுக்குச்
செல்வது அல்லது தொழிலை ஆரம்பிப்பதன்
மூலம் தொழில் விருத்தி அடையும் என்பதே எதிர்பார்ப்பாரும்,
ஆரம்ப காலத்தில்
முற்றத்தில்
விளக்கேற்றி
வைத்து, அதன் அருகே
வைக்கப்பட்டிருக்கும்
மண்வெட்டியைக்
கொண்டு வீட்டின் தந்தை மண்ணை
வெட்டி கத்தியால்
ஒரு பிலா
மரத்தின்
கிளையினை
வெட்டுவதே
வழக்கத்தில்
இருந்து வந்தது. காலப் போக்கில்
அந்தந்த ஆண்டிற்கு
ஏற்ப பஞ்சாங்கத்தில்
குறிப்பிடப்பட்ட
வர்ண உடைகளை
அணிந்து, சுப திசை
சுப நேரம்
ஆகியவற்றுக்கு
அமைய அலுவலகத்திற்குச்
செல்வதே வழக்கமாகி
விட்டது. புதுவருடத்திற்காக
அடுப்பு மூட்டுவதும்
ஒரு பழக்கமாகும். பழைய வருடத்தின்
முடிவில்
அனைத்து அடுப்பு வேலைகளும்
முடிவிற்குக்
கொண்டுவரும்
வீட்டுத்
தலைவி அடுப்புச்
சாம்பலையும்
அப்புறப்படுத்தி
அடுப்பை தூத்துவிடுவான்.
அதன் பின் புத்தாண்டு
பிறக்கும்
வரை வீட்டில்
அடுப்பு பத்த வைப்பதில்லை.
உரிய நேரம்
காலம் பார்த்து மீண்டும் புதுப்பானை
வைத்து பொங்குவதற்காக
வீட்டுத்
தலைவி சுபமுகூர்த்தத்தில்
அடுப்பை பத்த வைப்பதே
வழக்கத்தில்
இருந்து வருகின்றது.
அடுப்பு பத்த வைப்பது
முதல் அனைத்து சுப வேலைகளும்
நிறுத்தப்பட்டு
சமூகச் செயற்பாடுகள்
நிறுத்தப்பட்டிருக்க
நேரத் நொநெகத்த (சுப முகூர்தம்
அற்ற காலம்)
சூரியன் மீன - மேஷ
இடையிலிருந்து)
பன்சலைக்கு
சென்று வழிபாடுகளில்
ஈடுபடுவதே
பெளத்தர்களின்
வழக்கமாகும்.
இவற்றுடன் புத்தாடை உடுத்தும்
பாரம்பரிய
விளையாட்டுகளில்
ஈடுபடும்
மக்கள் புத்தாண்டை
மகிழ்ச்சியுடன்
கொண்டாடுவதற்காக
பிரத்தியேகமான
சில விளையாட்டுக்களை
விளையாடுவது
வழக்கமாகும்.
சுமார் ஆறு அடி
உயரத்தில்
குருக்காக
கட்டப்பட்ட
பாக்கு மரத் தண்டின்
இரு முனைகளிலும்
அமர்ந்தவாரு
தலையணைகளால்
தலையில் அடித்துச்
சண்டையிடுவது,
ஒரு கோஷடியினர்
வீசும் தேங்காயினை
மறுகோஷ்டியினர்
தேங்காயினை
கொண்டு தகர்த்துவிடுவது,
சுமார் 20 அடிக்கு மேல் உயரமான
கிaஸ் மரத்தில்
உச்சியில்
பொருத்தப்பட்ட
கொடியினை
கைப்பற்றுவதற்காக
முயற்சித்தல்,
ஊஞ்சல் கட்டி பெண்கள்,
மற்றும் சிறுவர்கள்
கோஷ்டிகளாக
ஆடுதல், கயிர் (வடம்)
இழுத்தல்,
பல்லாங்குழி
விளையாட்டு,
கண்களைக்
கட்டியவாறு
முன்னால்
தொங்கும்
முட்டிகளை
கம்பால் அடித்து நொருக்குதல்,
கண்களைக்
கட்டியவாறு
கரும்பலகையில்
வரையப்பட்ட
யானைக்கு
கண் வைத்தல்,
ஓட்டப் போட்டிகள்,
குறிப்பாக
இரு கால்களையும்
கோனி சாக்கினுள்
போட்டுக்
கொண்டு ஓடுதல் மற்றும் கிராமங்கள்
ஊடாக நடத்தப்படும்
ஓட்டப் போட்டி ஆகியன சிங்களவர்களின்
சித்திரைப்
புத்தாண்டின்
சிறப்பினை
எடுத்துக்
கூறும் விளையாட்டுகளாகவே
கருதப்படுகின்றன.
செல்வம் சந்தோஷம், சாந்தி சமாதானம் ஆகியவற்றை
இலக்காக கொண்டு, அனைவருக்கும்
வழமான வாழ் கையினை
பிரார்த்திக்கும்
ஒருநாளாகவே
சித்திரைப்
புத்தாண்டு
கொண்டாடப்
படுகிறது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |