|
||||
|
சரிகிறது
ஒபாமாவின்
செல்வாக்கு
அமெரிக்க அதிபர்
பராக் ஒபாமா 2012-ல் தான் மீண்டும்
அதிபர் தேர்தலில்
போட்டியிடுவதாக
19 மாதங்களுக்கு
முன்பே அறிவித்திருப்பது
அதிர்ச்சி
அளிக்காவிட்டாலும்
ஆச்சரியத்தை
ஏற்படுத்தி
இருக்கிறது.
கடந்த ஆறு மாதங்களாகவே
நாளும் பொழுதும் தனது செல்வாக்குச்
சரிந்து கொண்டிருப்பது
தெரிந்தும்,
அதிபர் ஒபாமா இப்போதே
தான் மீண்டும்
போட்டியிடுவது
பற்றி அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதுதான்
உலகளாவிய
அரசியல் பார்வையாளர்களை
வியப்படைய
வைத்திருக்கிறது.
அதிபர் பராக்
ஒபாமா தேர்தலின்போது
கொடுத்த வாக்குறுதிகள்
பலவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை
என்று பெருவாரியான
அமெரிக்க
வாக்காளர்கள்
கருத்துக்
கணிப்புகளில்
தொடர்ந்து
சுட்டிக்காட்டி
வருகிறார்கள்.
உள்நாட்டுப்
பிரச்னைகள்
ஆனாலும் சரி, வெளிநாட்டு
விவகாரங்கள்
ஆனாலும் சரி, அதிபர்
பராக் ஒபாமாவின்
அணுகுமுறையும்,
செயல்பாடுகளும்
அவரது ஆதரவாளர்களுக்கேகூடத்
திருப்தி
அளிப்பதாக
இல்லை.
கடந்த நவம்பர் மாதம் நடந்த
அமெரிக்கக்
காங்கிரஸýக்கான
தேர்தலில்,
பராக் ஒபாமாவின்
ஜனநாயகக்
கட்சி மிகப்பெரிய
பின்னடைவைச்
சந்திக்க
நேர்ந்தது. அமெரிக்கக் காங்கிரஸ்
என்பது இந்தியாவிலுள்ள
மக்களவைபோல,
மக்களால்
நேரடியாகத்
தேர்ந்தெடுக்கப்படும்
நாடாளுமன்ற
அவை. இப்போதைய நிலையில்
அமெரிக்கக்
காங்கிரஸில்,
அதிபர் பராக் ஒபாமாவின்
ஜனநாயகக்
கட்சி உறுப்பினர்கள்
189 பேர்தான்
இருக்கிறார்கள்.
குடியரசுக்
கட்சி உறுப்பினர்கள்
239 பேர் இருப்பதால்,
அதிபர் ஒபாமாவின்
முடிவுகள்
பல அமெரிக்கக்
காங்கிரஸின்
வாக்கெடுப்புக்கு
வரும்போது
நிராகரிக்கப்படும்
வாய்ப்பு
உண்டு. அமெரிக்க மேலவையான செனட்டில்
அதிபர் பராக் ஒபாமாவின்
ஜனநாயகக்
கட்சிக்கு
51 இடங்களும்,
எதிர்க்கட்சியான
குடியரசுக்
கட்சிக்கு
46 இடங்களும்
இருக்கின்றன
என்பதுதான்
அவருக்கு
ஆறுதல் அளிக்கும்
விஷயம்.
அமெரிக்க ஜனநாயக முறையில், நம்மிடம் காணப்படாத
சில நல்ல
அம்சங்கள்
உண்டு. அதிபர்கள் கொண்டுவரும்
சில திட்டங்களை
அவரது கட்சிக்காரர்களே
எதிர்ப்பதும்,
எதிர்க்கட்சியினர்
ஆதரிப்பதும்கூட
உண்டு. ஜனநாயகக் கட்சி அதிபரின்
கொள்கை முடிவுகள்
தேசநலன் கருதியதாக
இருந்தால்
எதிர்க்கட்சியான
குடியரசுக்
கட்சியினர்
அதை ஆதரிப்பதும்,
அது தேசநலனுக்கு
விரோதம் என்று கருதினால்
அதிபரின்
கட்சியைச்
சேர்ந்தவர்களே
அதை எதிர்ப்பதும்கூட
உண்டு.
அதிபர் ஒபாமாவின்
சமீபகால நடவடிக்கைகள்
சில ஜனநாயகக்
கட்சி, குடியரசுக்
கட்சி என்கிற வேறுபாடு இல்லாமல், எல்லாத் தரப்பினரையுமே
எரிச்சலூட்டி
இருக்கிறது. அரசியல் விமர்சகர்களும்
சமீபகாலமாக
அதிபர் பராக் ஒபாமா
முந்தைய அதிபர் ஜார்ஜ் புஷ் பயணித்த
பாதையில்
நடைபோடுவதாகக்
குற்றம் சாட்டுகின்றனர்.
கியூபாவின் ஒரு முனையில்
இருக்கும்
துறைமுக நகரம்தான்
குவாந்தனாமோ. கி.பி.
1494-ல் கிறிஸ்டோபர்
கொலம்பஸ்
முதன்முதலில்
வந்து இறங்கிய இடம் இதுதான்.
கி.பி. 1741-ல் பிரிட்டிஷாரால்
பிடிக்கப்பட்டு,
1903-ல் கியூபா
- அமெரிக்க
ஒப்பந்தப்படி
இந்தத் துறைமுகம்
மட்டும் அமெரிக்காவுக்கு
நிரந்தரமாகக்
கியூபாவால்
தரப்பட்டதாகக்
கூறப்படுகிறது.
இதை கியூபா
மறுத்தாலும்
இந்த இடம்
அமெரிக்கக்
கடற்படையினர்
ஆதிக்கத்தில்தான்
தொடர்கிறது.
இந்த குவாந்தனாமோ
பகுதியில்
2002-ம் ஆண்டில்
அன்றைய அதிபர் ஜார்ஜ் புஷ் ஆட்சியில்
ஆப்கானிஸ்தான்
மற்றும் இராக்கிலிருந்து
கொண்டுவரப்பட்ட
ராணுவக் கைதிகளைக்
காவலில் வைக்க ஒரு
சிறைக்கூடம்
ஏற்படுத்தப்பட்டது.
இந்தச் சிறைக்கூடத்திற்குக்
கொண்டுவரப்படும்
கைதிகள் சித்திரவதைக்கு
ஆளானார்கள்
என்பதால்,
இதை குவாந்தனாமோ
வதைக்கூடம்
என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன.
நியூயார்க் இரட்டைக்
கோபுரத் தாக்குதலுக்குக்
காரணமானவர்
என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கும்
காலித் ஷேக் முகம்மதும்
அவரது கூட்டாளிகளான
நான்கு பேரும் இந்த குவாந்தனாமோ
வதைக்கூடத்தில்தான்
இப்போது அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களை நியூயார்க்கிலுள்ள
அமெரிக்க
அரசின் பெடரல் நீதிமன்றத்தில்தான்
தனது அரசு
விசாரணை நடத்த இருக்கிறது
என்று பதவி ஏற்றபோது
அதிபர் பராக் ஒபாமா
அறிவித்தார்.
அவரது அறிவிப்பு
பல்வேறு தரப்பினரின்
வரவேற்பையும்
பெற்றது என்பது மட்டுமல்ல,
குவாந்தனாமோ
வதைக்கூடம்
விரைவில்
மூடப்படும்
என்கிற நம்பிக்கையையும்
ஏற்படுத்தியது.
இப்போது, தனது முடிவிலிருந்து
பின்வாங்கி
இருக்கிறார்
அதிபர் ஒபாமா. நியூயார்க்கில்
ஊடகங்களின்
பார்வையில்
வழக்கு வெளிப்படையாக
விசாரிக்கப்பட்டால்,
தீவிரவாதிகள்
அமெரிக்க
நிர்வாகத்துக்கு
எதிரான குற்றச்சாட்டுகளை
வெளிப்படையாகப்
பதிவு செய்து விடுவார்கள்
என்று பயப்படுகிறது
அமெரிக்க
அரசு. மேலும்,
பாதுகாப்புக்காக
மட்டுமே நியூயார்க்
மாநகராட்சி
100 கோடி டாலர்கள்
செலவழிக்க
வேண்டும்
என்று காரணம் காட்டி மேயர் மைக்கேல்
ப்ளூம்பர்க்
அந்த ஆலோசனையை
நிராகரித்து
விட்டார்.
பதவி ஏற்ற
இரண்டாண்டுகளில்
குவாந்தனாமோ
வதைக்கூடத்தை
மூடுவதாகச்
சொன்ன அதிபர் பராக் ஒபாமா,
இப்போது விசாரணை, ராணுவக் கமிஷனால் வதைக்கூடத்திலேயே
நடத்தப்படும்
என்று அறிவித்திருப்பது
ஜார்ஜ் புஷ்ஷின் மறுஅவதாரம்
என்றே அவரை நினைக்க
வைக்கிறது.
அமெரிக்க காங்கிரûஸயோ,
செனட்டையோ
கலந்தாலோசிக்காமல்
அதிபர் ஒபாமா, லிபியாமீது
படையெடுக்க
உத்தரவிட்டிருப்பதும்
பலரை எரிச்சலடையச்
செய்திருக்கிறது. லிபியா எந்தவிதத்திலும்
அமெரிக்காவுக்கு
அச்சுறுத்தலாக
இருக்கவில்லை.
லிபியர்கள்
அவர்களது
தலையெழுத்தை
நிர்ணயித்துக்
கொள்ளட்டுமே,
நாம் ஏன்
இன்னொரு நாட்டின் உள்நாட்டு
விவகாரத்தில்
தலையிட்டு
சர்வதேச அரங்கில் பெயரைக் கெடுத்துக்
கொள்ள வேண்டும்? காங்கிரஸ்
மற்றும் செனட்டின்
சம்மதமில்லாமல்
அதிபர் பராக் ஒபாமா,
லிபியா மீதான படையெடுப்புக்கு
உத்தரவிட்டது
அரசியல்சட்ட
மீறல்'' என்கிறார்கள்
பல ஜனநாயகக்
கட்சி மற்றும் குடியரசுக்
கட்சி உறுப்பினர்கள்.
50 வயதை எட்ட
இருக்கும்
அதிபர் பராக் ஒபாமாவின்
செல்வாக்கு
இப்போது அமெரிக்காவில்
50 சதவீதத்துக்கும்
குறைவு. கறுப்போ,
வெளுப்போ
நானும் ஓர் அமெரிக்கர்தான்
என்பதையும்,
முந்தைய அதிபர்களிலிருந்து
மாறுபட்டவரல்ல
என்பதையும்
நிரூபித்து
வருகிறார்
அதிபர் பராக் ஒபாமா... |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |