|
||||
|
நாங்க மாறிட்டோம்.. நீங்க?
தமிழ்நாடு சட்டப்பேரவைத்
தேர்தலில்
அதிகளவு வாக்குப்பதிவுக்குக்
காரணம்
தமிழ்நாடு சட்டப்பேரவைத்
தேர்தலில்
அதிகளவு வாக்குப்பதிவுக்குக்
காரணம் இரண்டு மட்டுமே. இந்த இரண்டு காரணங்களுக்கும்
வாழ்த்தப்பட
வேண்டியவை
ஊடகமும், தேர்தல் ஆணையமும்தான்.
தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்
எண்ணிக்கையில்
(4.7 கோடி பேர்)
18 வயது முதல்
29 வயதுக்குள்
உள்ளவர்களின்
எண்ணிக்கை
22 விழுக்காடு. இன்றைய
இளைஞர்கள்
அரசியலில்
ஈடுபாடு இல்லாதவர்களாக
இருக்கிறார்கள்
என்பது எந்த அளவுக்கு
உண்மையோ அந்த அளவுக்கு
உண்மை, இவர்கள் பத்திரிகை
படிக்கிறவர்களாகவோ,
அல்லது தொலைக்காட்சிகளைப்
பார்க்கிறவர்களாகவோ
இருக்கிறார்கள்
என்பதும்.
இணையதளத்தில் தங்கள்
வலைதளங்களுக்குள்
புகும் முன்பாக, கூகுள் அல்லது யாகு தரும்
செய்திகளையும்
போகிறபோக்கில்
பார்க்கிறவர்களாக
இருக்கிறார்கள்.
இவர்களுக்கு அரசியலில்
ஈடுபாடு இல்லை என்றாலும்,
இவர்களுக்கு
நாட்டில்
நடக்கும்
ஊழல்கள் பற்றிய தகவல்கள் நிச்சயம் போய்ச் சேர்ந்திருக்கிறது.
தேர்தல் குறித்த
செய்திகளும்
போய்ச் சேர்ந்திருக்கிறது.
இவர்கள் தங்கள்
எதிர்ப்பை
அல்லது ஆதரவைப் பதிவு செய்தே
ஆக வேண்டும்
என்ற விழிப்புணர்வுக்கு
ஆளானார்கள்.
இதற்கான முக்கிய
காரணம் தகவல் தொழில்நுட்பம்தான்.
இந்த இளைஞர்
கூட்டத்தில்
வழக்கமாக
வாக்களிக்க
வருவோர் மட்டுமன்றி,
பெருவாரியாக
வாக்களிக்க
வந்த காரணத்தால்தான்
வழக்கமான
65 விழுக்காடு
வாக்குப்பதிவு
இந்த முறை
77.8 விழுக்காடு
என உயர்ந்தது.
அதற்காக இவர்கள்
எதிர்க்கட்சியைத்
தேர்வு செய்தார்கள்
என்பதை உறுதியாகச்
சொல்லிவிட
முடியாது.
இன்றைய இளைஞர்களின்
மனப்போக்கு
வித்தியாசமானது.
கதாநாயகர்களுடன் மட்டுமல்ல,
வில்லன்களுடனும்
தங்களை அடையாளப்படுத்திக்
கொள்ளும்
வித்தியாசமான
மனநிலை கொண்டவர்களாக
இருக்கிறார்கள்
இன்றைய இளைஞர்கள்.
இவர்கள் ஊழல்பேர்வழிகளுக்கு
எதிராகத்
திரண்டார்கள்
என்று ஒரேயடியாக
நம்புவதற்கு
இல்லை.
இரண்டாவது காரணம் தேர்தல் கமிஷன். மிகப்பெரிய பாராட்டுதலுக்கு
உரியதாகவும்,
தமிழ்நாடு
சட்டப்பேரவைத்
தேர்தல்
2011-ன் கதாநாயகனாகவும்
இருப்பது
தேர்தல் ஆணையம் மட்டுமே.
இந்தமுறை தேர்தல்
காலத்தில்,
ஊடகம் பார்த்தோரும்,
பத்திரிகை
படித்தோரும்
பேசிக்கொண்டவை
அனைத்தும்-
அது வீட்டுச்
சமையல்கூடமாக
இருந்தாலும்
டீக்கடையாக
இருந்தாலும்-
தேர்தல் கமிஷனின் நியாயமான, நேர்மையான
நடவடிக்கைகள்
பற்றித்தான்.
என்னதான் தமிழக முதல்வர் கருணாநிதி
புலம்பித்
தீர்த்தாலும்,
மக்கள் அதன் நடவடிக்கைகளால்
மனம் மகிழ்ந்தார்கள்.
தங்கள் வீட்டுச்சுவர்கள்
நாசப்படுத்தப்படாத
ஒரே காரணத்துக்காகத்
தேர்தல் கமிஷனுக்கு
மதிப்பளித்தார்கள்.
எங்குபார்த்தாலும் ஒலிபெருக்கிகள்
இல்லாத சூழலைப் பாராட்டினார்கள்.
வீடுதேடி
வந்து பத்திரிகை
வைத்துவிட்ட
ஒரே காரணத்துக்காக
கல்யாணத்துக்குப்
போய் தலையைக்
காட்டுவதுபோல,
தேர்தல் கமிஷனின் நேர்மைக்காகவே
வாக்குச்
சாவடிக்கு
வந்த பொதுமக்களும்,
அறிவுஜீவிகளும்
அதிகம். அந்த அளவுக்கு
நம்பகத்தன்மையை
உருவாக்கியது
தேர்தல் ஆணையம்.
இந்த முறை பூத்
சிலிப்புகளைத்
தேர்தல் ஆணையமே வழங்கியது. அழகாகப் படத்துடன்கூடிய
ரசீதுகளை
அளித்தது.
வாக்குச்
சாவடிக்கு
வந்தவர்களில்
பெரும்பாலோர்,
தேர்தல் ஆணையம் அளித்த இந்த பூத்
சிலிப்புகளை
வைத்துக்கொண்டுதான்
வாக்களித்தார்கள்
என்பது நாளிதழ், தொலைக்காட்சி
பார்த்த எவராலும் யூகிக்க முடியும். முன்பெல்லாம் ஏதோ ஒரு அரசியல்
கட்சியினர்
அவர்கள் சின்னத்துடன்
பூத் சிலிப்
கொடுக்கும்போது
அதைக் கொண்டு வருவதில் தயக்கம் இருந்தது.
ஆனால் இப்போது
வாக்காளர்
பொதுமனிதராக
வாக்குச்சாவடியில்
வரிசையில்
கூச்சமின்றி,
தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாமல்
நிற்கமுடிந்தது.
இதற்காகவே வோட்டுபோட
வந்தவர்களும்
அதிகம்.
மேலும், இந்தப் புகைப்படங்களுடன்
கூடிய வாக்காளர்
பட்டியல்
புதிய சூழலை உருவாக்கியுள்ளது. பூத் ஏஜன்டாக இருப்பவர்
தனது வரையறைக்கு
உள்பட்ட நான்கு அல்லது ஐந்து தெருக்களுக்கான
வாக்காளர்களைப்
பெயர் வைத்து அறிவதில்லை.
மாறாக, புகைப்படத்தை
வைத்தே அறிந்துகொள்ளும்
சூழல். இதனால் யார் வாக்களிக்க
வரவில்லை
என்பதை அவரால் மிகத் தெளிவாகச்
சொல்லிவிட
முடியும்.
கிராமங்களில்
அத்தகைய சூழலில், மறுநாள் சந்திக்கும்போது,
வயற்காட்டுக்குப்
போகும்போது,
நீ வோட்டுபோடவே
வரவில்லையே
என்று எல்லார் முன்னிலையிலும்
கேட்டுவிட்டால்
என்ன செய்வது
என்கிற கூச்சமும்;எல்லாரும்
போய்ப் போட்டுவரும்போது
நாம் மட்டும்
சும்மா இருப்பதா என்கிற பெருந்திரள்
மனநிலையையும்
(மாஸ் சைக்காலஜி)
உருவாக்கியதில்
தேர்தல் ஆணையம் மிகப்பெரும்
சாதனை நிகழ்த்தியுள்ளது.
இந்தத் தேர்தலில்
எந்தவொரு
கட்சியாலும்
தங்கள் பிரசாரத்துக்கு
கூட்டத்தைக்கூட
கூட்ட முடியவில்லை
என்கிறபோது,
இந்த அதிகபடியான
வாக்காளர்கள்
அரசியல் ஈடுபாட்டால்
வாக்களிக்க
வரவில்லை
என்பது நிச்சயம். அரசியல்வாதிகள் தங்கள்
பொய்முகங்கள்
கிழிந்து
அம்பலப்பட்டுக்
கிடக்கிறார்கள்.
அதனால்தான் இவர்கள்
பேச்சைக்
கேட்கவே பணம் கொடுத்து
ஆள்திரட்டும்
நிலை, கட்சிக்காரர்களுக்கு
ஏற்பட்டது.
ஆனால், இந்த
கூடுதல் வாக்காளர்கள்
யாருக்கு
வாக்களித்திருந்தபோதிலும்,
ஊழலுக்கு
எதிராக அல்லது விலைவாசி உயர்வுக்கு
எதிராக என எதுவாக
இருந்தாலும்,
தங்கள் கடமையாற்றும்
உணர்வால்
உந்தப்பட்டு
வந்தவர்கள்
இவர்கள், இந்த உணர்வை
ஊட்டியவர்கள்
தேர்தல் ஆணையமும், ஊடகங்களுமே.
மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையைச் சரியாகவே ஆற்றியிருக்கிறார்கள். இதே
கடமை உணர்வு
அரசியல்வாதிகளுக்கும்
ஏற்பட்டுத்
தேர்ந்தெடுக்கப்படும்
வேட்பாளர்களும்
பொறுப்புணர்வுடன்
தங்களைத்
தேர்ந்தெடுத்த
மக்களின்
நலனையும்,
தேச நலனையும்,
வருங்காலச்
சந்ததியினரின்
(தங்களுடைய
வருங்காலச்
சந்ததியினரை
அல்ல) நலனையும்
கருத்தில்கொண்டு
செயலாற்றினால்,
இங்கே ஒரு நல்லரசு
அமையும். இந்தியா வல்லரசாக
உலக அரங்கில்
மிளிரும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |