Contact us at: sooddram@gmail.com

 

மேற்கு ஆசியாவில் பதற்றம்  அமெரிக்கா அடிக்குது கொள்ளை லாபம்!

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியால் ஆட்சியாளர்கள் தலைகள் உருண்டு கொண்டிருக்கின்றன. எழுச்சியை அடக்கும் முயற்சியில் சில ஆட்சியாளர்கள் கடுமையான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். மக்களின் எழுச்சி ஏற்படாத நாடுகள் கூட அத்தகைய எழுச்சி ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்வதற்கான வேலைகளில் இறங்கியுள்ளன. இந்தப்பகுதிதான் அமெரிக்காவின் ஆயுத ஏற்றுமதி அதிகமாக நடக்கும் இடமாகும். இத்தகைய நெருக்கடிகளால் அமெரிக்காவின் ஆயுத விற்பனை பாதிக்கப்படவில்லை. மாறாக, வழக்கத்தைவிட பெருமளவில் அதிக ஆயுதங்களை ஆட்சியாளர்கள் வாங்கிக் குவித்து வருகிறார்கள்.

அமெரிக்க ராணுவத்துறையின் கணிப்புப்படி, நடப்பாண்டில் மேற்கு ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் ஆயுத ஏற்றுமதி 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிடும். இவ்வளவு மதிப்பிலான ஆயுத விற்பனை இதுவரை எந்த ஆண்டிலும் நடைபெற்றதில்லை. மேலும், ராணுவ விமானங்கள் மற்றும் விமானத்தாக்குதல் தடுப்பு அமைப்புகள் ஆகியவற்றை பிரபலப்படுத்துவதில் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு முனைப்புக் காட்டிவருகிறது. இந்தப்பணியால் ராணுவ ஆயுதத்தயாரிப்பு ஒப்பந்ததாரர்களான லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் போயிங் ஆகிய நிறுவனங்கள் குதூகலத்தில் உள்ளன. வானில் பயணித்து தாக்கும் ஆளில்லா விமானங்கள், எப்-35 ரகப் போர் விமானம் மற்றும் ஏவுகணைத்தடுப்பு அமைப்புகள் ஆகியவற்றிற்கு ஏகப்பட்ட கிராக்கி உள்ளது.

2006 ஆம் ஆண்டில்தான் மேற்கு ஆசிய நாடுகள் ஆயுதம் வாங்குவது அதிகரித்தது. இருப்பினும் இந்த ஆயுத விற்பனையின் மதிப்பு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கோடி ரூபாய் வரைதான் ஒவ்வொரு ஆண்டும் இருந்து வந்தது. 2011 ஆம் ஆண்டில் 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயை மேற்கு ஆசிய நாடுகள் வாங்கப்போகும் ஆயுதங்களின் மதிப்பு தொடப்போகிறது என்பது அமெரிக்க ராணுவத்துறையின் மதிப்பீடாகும். தங்கள் போர் விமானங்களையும், சரக்கு விமானப்பிரிவையும் மேம்படுத்தத் திட்டமிடும் நாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்ததே இதற்குக் காரணம் என்றும் அமெரிக்க ராணுவத்துறை சுட்டிக்காட்டுகிறது.

லிபியா மீது நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதலைப் பெறுவது என்ற நாடகத்தை ஒருபுறம் நடத்திக்கொண்டிருக்கும் அமெரிக்கா, மறுபுறத்தில் கடாபி தலைமையிலான அரசுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து கொண்டிருக்கிறது. எகிப்து மற்றும் ஏமன் போன்றவை எக்கச்சக்கமாக ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் மற்ற இரு நாடுகளாகும்.

பத்தில் ஏழு அமெரிக்க நிறுவனங்கள் சர்வதேச அளவில் நடக்கும் ஆயுத ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவால் செய்யப்படுகிறது. சிப்ரி என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள பட்டியலில் உலகிலேயே அதிக அளவில் ஆயுதங்களைத் தயாரித்து விற்கும் முதல் பத்து நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அதில் ஏழு நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும். லாக்ஹீட் மார்ட்டின், போயிங், நார்த்ராப் கிரம்மன், ஜெனரல் டைனமிக்ஸ், ரேதியான், எல்-3 கம்யூனிகேஷன்ஸ் மற்றும் யுனிடெக் டெக்னாலஜிஸ் ஆகியவையே அந்த ஏழு நிறுவனங்களாகும். அமெரிக்காவின் ஆயுத விற்பனை இரண்டரை லட்சம் கோடி ரூபாயை நடப்பாண்டில் தாண்டினாலும் ஆச்சரியமில்லை என்கிறது ஆய்வு நிறுவனமான சிப்ரி.

இரண்டு அமெரிக்காக்கள்!

ஒருபுறம் ஆயுதங்களை விற்பதில் காட்டப்படும் முனைப்பு. அதற்காக உலகெங்கும் பதற்றங்களை உருவாக்குவதற்கான பணிகள். ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கொள்ளை லாபம். மறுபுறத்தில், அமெரிக்காவில் உள்ள 31 மாகாணங்கள் ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் உறுதியளிக்கப்பட்ட சலுகைகள் ஆகியவற்றை வழங்க முடியாத நிலையில் இருக்கின்றன. சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறையில் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் அமெரிக்கர்களில் பெரும்பாலானவர்கள், தங்களுக்குத் தேவையான பணம் ஓய்வுக்காலத்தில் இருக்காது என்ற அச்சத்தில் இருப்பதாக காலப் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

2012 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், அவருடைய ஆட்சிக்காலத்திலேயே பொருளாதாரத்தில் முதலிடம் என்ற அந்தஸ்தை இழக்கக்கூடியவராகவே இருப்பார் என்று சர்வதேச நிதியம(ஐ.எம்.எப்) சுட்டிக்காட்டியுள்ளது. 2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவை சீனா முந்திவிடும் என்று பல்வேறு கணிப்புகள் எடுத்துக்காட்டியுள்ளன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com