|
||||
|
யாழ்ப்பாணத்தில் மேதினக்
கூட்டத்தை
நடத்துவது
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு
பாதகமாக அமையும்
தமிழ் மக்களுக்கு
துரோகம் இழைத்து அவர்களின்
வாழ்க்கையை
சின்னாபின்னப்
படுத்தக்கூடிய
வகையில்
1983ம் ஆண்டு
ஜூலை இனக்கலவரம்,
யாழ் நூலகத்தை
எரித்து சாம்பலாக்கியமை
போன்ற அநியாயங்களை
தமிழ் மக்களுக்கு
இழைத்த ஐக்கிய தேசியக் கட்சியும்,
ஜே.வி.பி.யினரும்
ஆடைகளை அணிந்து கொண்டா இன்று யாழ்ப்பாணத்திற்கு
சென்று தங்கள் பிரசாரங்களை
மேற்கொள்ள
எத்தனிக்கிறார்கள்
என்று தமிழ் புத்திஜீவிகளும்,
சாதாரண மக்க ளும்
இவ்விரு கட்சிகளையும்
பார்த்து
ஏளனம் செய்யக்கூடிய
அள விற்கு
இக்கட்சிகள்
இன்று அவமானச் சின்னங்களாக
மாறியிருக்
கின்றன.
1983ம்
ஆண்டின் இனக்கலவரத்திற்கு
பின்னர் தமிழ் பாராளுமன்ற
உறுப்பினர்கள்
இலங்கையின்
அரசியல் சாசனத்திற்கு
விசுவாசமாக
இருப்போம்
என்று பாராளுமன்றத்தில்
பிரதிக்ஞை
எடுக்க வேண்டு மென்றும் அதை செய்யத்
தவறினால்
அவர்கள் பாராளுமன்ற
அங்கத்துவத்தை
இழப்பார்கள்
என்று சர்வாதிகார
போக்கில்
தன்னு டைய பாராளுமன்றத்தின்
பெரும்பான்மை
பலத்தை பயன்படுத்தி
தமிழ் மக்களை கொடுமைப்படுத்தி
வந்த ஜனாதிபதி
ஜே.ஆர்.
ஜெயவர்தனவின் ஜக்கிய
தேசிய அரசாங்கத்தைச்
சேர்ந்தவர்கள்
இன்று தங்களுக்கு
தமிழ் மக்களின் உதவி இல்லாவிட்டால்
தாங்கள் அரசியல் குப்பைக் கூடையில் தூக்கியெறியப்படுவோம்
என்ற உண்மையை
உணர்ந்து
தமிழ் மக்களின் ஆபத்பாந்த
வர்களாகவும்,
நண்பர்களாகவும்
போலி நாடகமாடுகிறார்கள்.
ஐக்கிய தேசியக்கட்சி
இந்தத் தடவை மேதினக்
கூட்டத்தை
யாழ்ப் பாணத்தில்
நடத்துவது
தமிழ் மக்கள் மீது அவர்களுக்கு
ஏற்பட்டி
ருக்கும்
திடீர் மோகமோ, கருணையோ
காரணம் அல்ல. அதற்கான
பின்னணி காரணம் ஒன்று இருக்கின்றது.
மே மாதம் முதலாம் திகதியன்று
ரணில் விக்கிரமசிங்க,
கொழும்பு
மாநகரில்
இந்தத் தடவை இருக்கவிரும்பவில்லை.
அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் சிரார்த்த
தினமாகும்.
கொழும்பில் இருந்தால்
அந்த நிகழ்வில்
தான் கட்டாயம்
பங்கு கொள்ள வேண்டியிருக்குமென்றும்
அதன் மூலம்
தமக்கும்
ஜனாதி பதி பிரேதாஸவின்
மகன் சஜித்
பிரேமதாஸவிற்கும்
இடையில் நட்பு ஏற்படுவதை
தவிர்த்துக்
கொள்ள வேண்டுமென்ற
ஒரே காரணத்திற்காகவே
ரணில் விக்கிரமசிங்க
இந்தத் தடவை ஐக்கிய
தேசியக் கட்சியின்
மே தின
கூட்டத்தை
கொழும்பில்
நடத்து வதை தவிர்த்துக்
கொள்ளும்
முகமாக யாழ்ப்பாணத்தில்
நடத்து வதற்கு தீர்மானித்துள்ளதாக
அறிவிக்கப்படுகிறது.
அரசாங்கம் வடபகுதியில்
யுத்தத்தில்
ஈடுபட்டுக்
கொண்டிருந்த
போது இது
ஒரு முடிவடையும்
யுத்தமல்ல
என்று அரசாங்கத்தைப்
பார் த்து
ஏளனம் செய்த ஐக்கிய
தேசியக் கட்சிக்கு
இன்று யாழ்ப் பாணத்தில்
சென்று மே தினக்
கூட்டத்தை
நடத்துவதற்கு
என்ன அருகதை
இருக்கிறது.
ஒரு காலத்தில்
எல்.ரி.ரி.ஈ.
இயக்கத்தின்
அடிவருடிகளைப்
போன்றும்
அவ்வியக்கம்
பிறப்பிக்கும்
கட்டளைக்கு
ஆடும் பொம்மைகளைப்
போன்றும்
இருந்துவந்த
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன்
இந்தத் தடவை மே
தினக் கூட்டத்தை
ஐக்கிய தேசியக் கட்சியினர்
இணைந்து நடத்துவதற்கு
எடுத்திருக்கும்
முடிவு எல்.ரி.ரி.ஈ.
தலை வர்
பிரபாகரனின்
தோல்வியடைந்த
பிரிவினைவாத
கொள்கையை
மறைமுகமாக
ஆதரிக்கும்
ஒரு செயற்பாடாகவே
அரசியல் அவதானிகள்
பார்க்கிறார்கள்.
குடும்பி மலை
என்ற தொப்பிகலையில்
உள்ள எல்.ரி.ரி.ஈ.யின்
கிழக்கு மாகாணத்தின்
பிரதான முகாமை அரசாங்கப்
படைகள் கைப்பற்றி
யதைப் பார்த்து தொப்பிகல ஒரு காட்டுப்
பிரதேசம்
என்று ஏளனம் செய்த
ரணில் விக்கிரமசிங்கவிற்கு
யாழ்ப்பாணத்தில்
சென்று மே தினக்
கூட்டத்தை
நடத்துவதற்கு
ஏதோ ஒரு
குள்ளத்தனமான
நோக்கம் இருக்கும்
என்று அரசியல் அவதானிகள்
கூறுகிறார்கள்.
ஐக்கிய தேசியக்
கட்சியுடன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
சேர்ந்து
விட்டது என்ற போலிப்
பிரசாரத்தை
தமிழ் பிரதேசங்களில்
முடுக்கி
விடுவதன்
மூலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு
தமிழ் மக்கள் மத்தியில்
உள்ள ஆதரவை
இழக்கச் செய்து, அந்த ஆதரவை
ஐக்கிய தேசிய கட்சி
அடைய வேண்டும்
என்பதே ரணில் விக்கிர
மசிங்கவின்
எண்ணமாக இருக்குமென்றும்
ஒரு சமூகவியலாளர்
தெரிவித்தார்.
தென்னிலங்கையில் எந்தவொரு
இடத்திலாவது
ஐக்கிய தேசியக்கட்சி
யின் தலைவர்
ரணில் விக்கிரமசிங்க
தலைமையில்
மே தினக்கூட்
டத்தை நடத்தினால்
அந்தக் கூட்டத்தில்
குழப்பங்களை
விளை விப்பதற்கு
அக்கட்சியின்
அதிருப்தியாளர்கள்
முயற்சிகளை
மேற் கொள்ளலாம்
என்ற அச்சம்
ரணில் விக்கிரமசிங்கவிற்கும்
கட்சி யிலுள்ள அவரது கையாட்களுக்கும்
இருக்கின்ற
காரணத்தினால்
தான் யாழ்ப்பாணம்
என்ற தங்களுக்கு
பாதுகாப்பான
ஒரு பொது
இடத்தை மேதினக் கூட்டத்திற்காக
ரணில் விக்கிரமசிங்கவும்
அவரது ஆதரவாளர்களும்
தெரிவு செய்திருப்பதாக
அறிவிக்கப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்கவும்
அவரது கட்சியும்
சமீபத்தில்
இலங்கைக்கு
வந்திருந்த
இந்திய பாராளுமன்ற
தூதுக்குழுவினர்
எவ்விதம்
தாங் கள்
பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களாக
இருந்தாலும்
இந்தியர்கள்
என்ற முறையில்
தேசப் பற்றுடன் நாட்டுக்காக
குரல் கொடுத்ததை
ஒரு முன்மாதிரியாக
வைத்து இனிமேலாவது
தேசப் பற்றுடன் நடப்பது அவர்களின்
கட்சிக்கும்
ரணில் விக்கிரமசிங்க
விற்கும்
நன்மையை ஏற்படுத்தும்.
அரசாங்கத்தை உள்ளூரில்
எதிர்த்தாலும்
வெளிநாட்டில்
இலங்கைக்கு
துரோகம் இழைக்காத கொள்கையை ஐக்கிய தேசியக்கட்சியும்
தமிழ் தேசிய கூட்டமைப்பும்
ஏனைய எதிர்க்கட்சிகளும்
கடைப்பிடித்
தால் நிச்சயம்
எங்கள் நாட்டின் இனப்பிரச்சினைக்கு
எல்லோரும்
ஏற்றுக் கொள்ளக்கூடிய
ஒரு சுமுகத்தீர்வை
காண முடியுமென்று
நாம் நம்பிக்கை
வைத்துள்ளோம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |