Contact us at: sooddram@gmail.com

 

போற்றுவோம் அண்ணல் அம்பேத்காரை!

விலக்குவோம்  அவரின் இந்திமயக் கொள்கையை!

ஒடுக்கப்பட்டவர்களின் உயர்விற்காகக் குரல் கொடுத்து உழைத்த உத்தமர் அண்ணல் அம்பேத்கார். இந்துச்சமயத்திலும் இந்தியாவிலும் உயர்வு தாழ்வு கற்பிக்கப்படாமல் சமஉரிமை நிலவப் பாடுபட்டவர் அண்ணல் அம்பேத்கார். அண்ணல் அம்பேத்கார் அவர்கள் தமிழின் சிறப்பை உணர்ந்து  போற்றியவர். மொழிச்சிறுபான்மையர் பற்றிப் பேசும்பொழுதுகூட அவர் எடுத்துக்காட்டிற்காகத் தமிழர்களைக் கூறுவதில் இருந்து தமிழ், தமிழர் மீது அவருக்கிருந்த பற்றினை நாம் உணரலாம். தங்களின் பணிநிமித்தம், பம்பாயில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ்க் கல்வி தருவது, பம்பாய் அரசினுடைய கடமை. இந்தக் கடமையை நான் சட்டப்பூர்வமான உரிமையாக அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடுகின்றேன் (அம்பேத்கார்  ஆங்கில நூல் தொகுப்பு 13 - தரவு : கீற்று)என அம்பேத்கார் அவர்கள் தமிழ்க்கல்வியை வலியுறுத்துகிறார். ஆனால், தமிழ்நாட்டிலேயே தமிழ்க்கல்வி என்பது மறைந்து வருகின்றது. தமிழ்வழிக்கல்வி என்பது கானல் நீராக மாறும் பேரிடர் உள்ளது.  எங்கும்  தமிழ்! என்றும் தமிழ்! என ஆராவாரமாக முழங்குவதுடன் நில்லாது முழுமையான தமிழ்க்கல்விக்கும் தமிழ்வழிக்கல்விக்கும் அண்ணல் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்!

மொழிவாரி மாநிலங்களின் பெயர்களைப்பற்றிக் கூறும் பொழுது மெட்ராசு மாநிலம் தமிழ்மாநிலம் என அழைக்கப்பெற வேண்டும் (Madras becalled Tamil City State - THOUGHTS-ON-LINGUISTIC-STATES-B-R-AMBEDKAR page 29)என வலியுறுத்துகிறார்.  இவ்வாறு தமிழ் உரிமை தொடர்பான அவரின் கருத்துகள் பலவும் போற்றிப் பின்பற்றத்தக்கன. ஆனால், இந்தியக் கூட்டமைப்பின் மொழிக் கொள்கை என வரும் பொழுது அவர் தடுமாறுகிறார். இந்தி ஒன்றுதான் தேசிய மொழி என்றும் இந்தியை ஏற்காதவர் இந்தியர் அல்லர் என்றும் கூறும் வடவரின்  சார்பாளர் போல் பேசுகிறார். இந்தியர்கள் ஒருமைப்பாட்டையும் பொதுவான பண்பாட்டையும் உடையவர்களாக இருக்க விழைவதால், இந்தியைத் தமக்குரிய மொழியாக ஆக்கிக் கொள்வது இந்தியர்கள் அனைவரின்  கடப்பாடாகும்; மொழிவாரி மாநிலத்தின் அடிப்படைக் கூறாக இக்கருத்துரையை ஏற்காத எந்த ஓர் இந்தியனும் இந்தியனாக இருக்க உரிமை யற்றவன்  என்கிறார்(Since Indians wish to unite and develop a common culture it is the bounden duty of all Indians to own up Hindi as their language. Any Indian who does not accept this proposal as part and parcel of a linguistic State has no right to be an Indian.-அதே நூலின் பக்கம் 11). இது குறித்துத் தோழர் பெ.மணியரசன் தம்முடைய சாதியும் தமிழ்த்தேசியமும் என்னும் நூலில் நன்கு விளக்கி உள்ளார்.

மொழிவாரி மாநிலங்கள் தத்தம் மாநில மொழிகளை (அவரது கூற்றுப்படி வட்டார மொழிகளை) மாநில ஆட்சி மொழியாக்குவது என்பது ஒன்றுபட்ட இந்தியாவிற்குச் சாவு  மணி அடிப்பதாகும் என்கிறார் அண்ணல் அம்பேத்கார். மாநில மொழிகள் மாநிலங்களின் ஆட்சிமொழிகளாக மாறினால், இந்தியர்கள் முதலும் முடிவுமாக இந்தியர்களாகவே இருக்க வேண்டும் என்ற இந்திய ஒருமைப்பாட்டு உணர்வு  மறைந்தொழியும் என்பதும் அவரது நம்பிக்கை(Those who are advocating linguistic States have at heart the ideal of making the regional language their official language. This will be a death kneil to the idea of a United India.  With regional languages as official languages the ideal to make India one United country and to make Indians, Indians first and Indians last, will vanish. - அதே நூலின் பக்கம் 12). பா.ச.க.வினர்போல் இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கும் மேலாக  ஒரே நாடு, ஒரே மொழி என்ற தவறான கொள்கையில் ஆழமாகக் காலூன்றி இருப்பவராக அண்ணல் அம்பேத்கார் விளங்குகிறார்.

அண்ணல் அம்பேத்காரின் கடும்உழைப்புடன் கூடிய நாட்டு நலன்சார்ந்த பணிகளைப்  பாராட்டும் நாம் அவரின் மொழிவழித் தேசிய உணர்வுகளுக்கு எதிரான - இந்தியப் புனைவுத் தேசியத்திற்கும்  இந்தித் திணிப்பிற்கும் சார்பான - கருத்துகளை அறிந்து விலகி நிற்றல் வேண்டும். நாம் கண்ணை மூடிக் கொண்டு நம் தலைவர்களின் கருத்துகளைக் கொத்தடிமை போல் ஏற்பதாலும் வடவர்களையே வழிகாட்டியாகக் கொள்ளும் போக்கு உள்ளமையாலும் அண்ணலுக்கான ஆதரவு என்பது தமிழ்த்தேசியத்திற்கு எதிரான போக்காக மாறக்கூடாது என்பதில் நாம் கருத்தாக இருக்க வேண்டும்.  

அண்ணல் வழியில் நாட்டு மக்கள் சம உரிமைக்கு வழி வகுப்போம்!

மொழிகளின் சம உரிமைக்கும் வழி காண்போம்!

- இலக்குவனார் திருவள்ளுவன்

http://thiru-padaippugal.blogspot.in/2013/04/language-policy-of-ambedkar.html

அயற் சொற்களையும  அயல எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழே விழி! தமிழா விழி!

எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com