|
||||
|
சிவாஜிலிங்கத்தின் சின்னத்தனம்!
(ஊரிக்காட்டான்)
தனது தவறான
நடைமுறைகளால்
இந்தியாவுக்குச்
செல்ல முடியாமல்
சென்னை விமான நிலையத்தில்
திருப்பி
அனுப்பப்பட்ட
சிவாஜிலிங்கம்,
தற்போது இலங்கையில்
செய்து வரும் குளறுபடியான
வேலைகளால்,
கிழக்கு மாகாணத்துக்கும்,
முஸ்லீம்
பகுதிகளுக்கும்
செல்ல முடியாத நிலை ஏற்பட்டாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை.
தமிழரசுக்
கட்சியின்
ஆயுட்காலத்
தலைவராக இருந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை
செல்வநாயகத்தின்
நினைவு தினம் நேற்று
முன்தினம்
யாழ் நகரில்
கொண்டாடப்பட்ட
பொழுது, அதில் சிறப்பு
அதிதியாகக்
கலந்து கொள்வதற்கு
சிறீலங்கா
முஸ்லீம்
காங்கிரசின்
தலைவரும்,
அமைச்சருமான
ரவூப் ஹக்கீம் அவர்களும்
அழைக்கப்பட்டிருந்தார்.
'தந்தை செல்லா
அறங்காவல்
குழு' என்ற
அமைப்பே இந்த நிகழ்வை
ஏற்பாடு செய்திருந்தது. செல்வநாயகத்தின்
புதல்வர்
எஸ்.ஸி.சந்திரஹாசன்
பல வருடங்களாக
தமிழகத்தில்
தங்கியிருந்து
'ஈழத் தமிழ்
ஏதிலியர்
புனர்வாழ்வு
அமைப்பு' என்ற தன்னார்வத்
தொண்டு நிறுவனம் ஒன்றை நடாத்திவிட்டு,
இலங்கையில்
போர் முடிவுற்ற
பின்னர் இலங்கை திரும்பி, 'தமிழ் கட்சிகளின்
அரங்கம்' என்ற தமிழ்
அரசியல் கட்சிகளின்
ஒற்றுமை அமைப்பை உருவாக்குவதில்
முன்னின்று
உழைத்தார்.
ஆனால் சில
மாதங்களே
உயிர்வாழ்ந்த
அந்த அமைப்பை,
தமிழ் தேசியக் கூட்டமைப்பும்,
தமிழ் விரோதிகளும்
உள்ளிருந்து
உடைத்து சீர்குலைத்த
பின்னர், சந்திரஹாஸன்
நேரடி அரசியல் ஈடுபாடுகள்
அற்று தெல்லிப்பழையிலுள்ள
தமது பூர்வீக
வீட்டில்
குடியேறி
வாழ்ந்து
வருவதுடன்,
தனது தந்தையாரான
எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின்
நினைவு நிகழ்வையும்
சிறப்பாக
நடாத்தி வருகின்றார்.
சென்ற வருடம்
செல்வநாயகம்
நினைவு தினத்திற்கு
மட்டக்களப்பின்
'முடிசூடா
மன்னன்' என ஒரு
காலத்தில்
தமிழரசுக்
கட்சியால்
வர்ணிக்கப்பட்டு,
பின்னர் தமிழரசுக்
கட்சி செய்த துரோகத்தால்
அதிலிருந்து
விலகி ஐக்கிய தேசியக் கட்சியில்
இணைந்து அமைச்சரானதற்காக
'தமிழினத்தின்
துரோகி' என அதே
தமிழரசுக்
கட்சியால்
வர்ணிக்கப்பட்ட
செல்லையா
இராசதுரையை
சந்திரஹாஸன்
அழைத்திருந்தார்.
அந்த வைபவம்
நடந்து கொண்டிருக்கும்
போது அங்கு
அழையா விருந்தாளியாக
நுழைந்த ரெலோ இயக்கத்தின்
பிரமுகரும்,
முன்னாள்
பாராளுமன்ற
உறுப்பினரும்,
புலிகளின்
தீவிர ஆதரவாளருமான
எம்.கே.சிவாஜிலிங்கம்,
இராசதுரையை
தூசண வார்த்தைகளாலும்,
'துரோகி' என்ற சொற்பதத்தாலும்
திட்டி அவமதித்ததுடன்,
கிழக்கு மாகாண மக்களுக்கும்
வட மாகாண
மக்களுக்கும்
இடையில் ஆப்பு வைக்கவும்
முயன்றார்.
அவரது இந்த அநாகரிகமான,
அசிங்கமான
செயலை அவரது ரெலோ
இயக்கத் தலைமை உட்பட
அனைவரும்
அந்த நேரத்தில்
கண்டித்திருந்தனர். இந்த வருடம் ரவூப் ஹக்கீம்
அவர்களை செல்வநாயகம்
நினைவு தினத்திற்கு
அழைத்ததையும்,
சிவாஜிலிங்கம்
மிகவும் அசிங்கமான
முறையில்
கண்டித்துள்ளார். ரவுப்
ஹக்கீம் அவர்களை 'தமிழினத்தின்
விரோதி' எனவும், 'சிங்களப் பேரினவாதத்தின்
கைக்கூலி'
எனவும் வசைபாடிய சிவாஜிலிங்கம்,
யாழ்ப்பாணம்
அவரது பாட்டனார்
கொடுத்த பூர்வீகச்
சொத்து என்ற நினைப்பில்,
'ஹக்கீமுக்கு
யாழ்ப்பாணத்தில்
என்ன வேலை?'
எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். குறைந்த பட்ச அரசியல்
நாகரீகம்
கூட இல்லாமல்
அவர் செய்துள்ள
ரவூப் ஹக்கீம் மீதான கண்டனம்,
தமிழ் மக்களைத் தலைகுனிய வைத்துள்ளது. சிவாஜிலிங்கத்தின் சென்ற வருட நடவடிக்கை
கிழக்கு மக்களையும்,
வடக்கு மக்களையும்
பிரிக்கும்
முயற்சியாக
அமைந்தது.
இந்த வருட நடவடிக்கை
தமிழ் மக்களையும்,
முஸ்லீம்
மக்களையும்
பிரிக்கும்
வகையில் அமைந்துள்ளது.
புலிகளின் தலைவரும்,
சிவாஜிலிங்கத்தின்
ஊரவரும் (வல்வெட்டித்துறை),
உறவினருமான
பிரபாகரனும்
இதே வேலையை,
அதாவது வடக்கு தமிழ் மக்களிலிருந்து
கிழக்கு மக்களையும்,
முஸ்லீம்
மக்களையும்
பிரிக்கும்
வேலையைத்தான்
செய்தார்.
அதே வேலையைத்தான்
இப்பொழுது
சிவாஜிலிங்கமும்
செய்கிறார்.
பிரபாகரன் வடக்கிலிருந்து
முஸ்லீம்
மக்களை விரட்டியடித்து
இனச் சுத்திகரிப்பு
செய்த வேலையை, இப்பொழுது
சிவாஜிலிங்கம்
பொறுப்பெடுத்துள்ளார்
போல் தெரிகிறது.
தனது தவறான
நடைமுறைகளால்
இந்தியாவுக்குச்
செல்ல முடியாமல்
சென்னை விமான நிலையத்தில்
திருப்பி
அனுப்பப்பட்ட
சிவாஜிலிங்கம்,
தற்போது இலங்கையில்
செய்து வரும் குளறுபடியான
வேலைகளால்,
கிழக்கு மாகாணத்துக்கும்,
முஸ்லீம்
பகுதிகளுக்கும்
செல்ல முடியாத நிலை ஏற்பட்டாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை.
கட்டுரையில் உள்ள தவறு
ஒன்றை சுட்டிக்காட்ட
விரும்புகின்றோம். தமிழ்
கட்சிகளின்
அரங்கம் வரதராஜப்பெருமரின்
முயற்சியினால்
உருவாக்கப்பட்டது
மாறாக சந்திரகாசனின்
முன்முயற்சி
அல்ல. ஆனால்
அவரும் இதில் ஒரு
முன்னணி செயற்பாட்டாளர் - ஆர் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |