|
||||
|
ஒரு நாட்டின் இறைமையை பாதிக்கச்
செய்யும்
விதத்தில்
தலையிடுவதால்
எதிர்மறையான
விளைவுகள்
ஏற்படும்
25
வது மனித
உரிமைகள்
பேரவையில்
“இலங்கையில்
நல்லிணக்கத்தை
ஊக்குவித்தல்,
பொறுப்புக்கூறல்
மற்றும் மனித உரிமைகள்”
பிரேரணையின்
மீதான வாக்கெடுப்பின்
போது இந்தியா
அளித்த விளக்கம். 1.
இலங்கையில்
முப்பதாண்டுகளாக
நடைபெற்ற
யுத்தம்
2009 மே மாதத்தில்
முடிவுக்கு
வந்ததன் பின் ஐக்கிய
நாடுகளின்
மனித உரிமைகள்
பேரவையானது
இலங்கையின்
மீது மூன்று
தீர்மானங்களை
நிறைவேற்றியுள்ளது. யுத்தத்தின் முடிவானது
தமிழர்கள்
உள்ளிட்ட
இலங்கையிலுள்ள
அனைத்து சமூகங்களுக்கும்
ஏற்றுக்கொள்ளும்படியான
அரசியல் தீர்வொன்றை
எட்டுவதற்கான
அரியதொரு
சந்தர்ப்பத்தை
வழங்கியுள்ளது
என்பதே எப்பொழுதும்
இந்தியாவின்
கருத்தாகவுள்ளது. 2.
இந்தப் பேரவையின்
முயற்சிகள்
எப்பொழுதும்
ஒரு நாட்டின்
மனித உரிமைகளின்
பாதுகாப்பை
மேம்படுத்துவதில்
அந்தந்த நாடுகளின்
முயற்சிகளுக்குப்
பங்களிப்பதாகவே
இருக்கவேண்டுமென
இந்தியா நம்புகின்றது.
மனித உரிமைகளுக்கான
உயர் ஸ்தானிகரின்
அலுவலகத்துடனான
தொடர்புகளை
இலங்கை தொடர்ந்து
பேணுவதற்கு
நாம் ஆதரவளிக்கின்றோம்.
மனித
உரிமைகள்
பேரவையின்
தீர்மானங்களுக்கமைய
உயர் ஸ்தானிகர்
தேவையான தொழில் நுட்ப உதவிகளைத்
தொடர்ந்து
வழங்குவதை
நாம் ஊக்குவிக்கின்றோம். அத்துடன்
ஐக்கிய நாடுகளின்
விசேஷ செயல் முறைகளில்
இலங்கையுடனான
நெருங்கிய
ஈடுபாடுகளுக்கும்
நாம் ஆதரவளிக்கின்றோம். அத்தகைய மனப்பாங்குடனேயே
2012 மற்றும்
2013ம் ஆண்டுகளில்
பேரவையால்
நிறைவேற்றப்பட்ட
அத்தகைய ஒத்துழைப்புக்கு
ஊக்கமளிக்கும்
தீர்மானங்களுக்கும்
ஆதரவளித்தோம். 3.
சென்ற ஆண்டில் இலங்கையில்
குறிப்பிடக்கூடியளவு
முன்னேற்றம்
ஏற்பட் டுள்ளது. சர்வதேச சமூகத்திற்கு
அளித்திருந்த
வட மாகாண
சபைத் தேர்தலை நடத்துவதற்
கான வாக்குறுதியை
இலங்கை அரசாங்கம்
நிறைவேற்றியுள்ளது.
அத்துடன் கற்றுக் கொண்ட பாடங்கள்
மற்றும் நல்லிணக்க
ஆணைக்குழுவின்
பரிந்துரைகளில்
குறிப்பிடப்பட்ட
மும்மொழிக்
கொள்கை, தமிழ் மொழியின்
உத்தியோகபூர்வ
உபயோகத்தை
மேம்படுத்தல்
மற்றும் வட கிழக்கு
மாகாணங்களிலுள்ள
பாடசாலைகளில்
அபிவிருத்தி
உட்பட்ட சிலவற்றை அமுல்படு த்துவதற்கும்
நடவடிக்கையெடுத்துள்ளது. 4.
இந்தப் பேரவையின்
2013ம் ஆண்டுத்
தீர்மானத்திற்கமைவான
உயர் ஸ்தானிகரின்
அறிக்கை மீள் கட்டமைப்பு,
மீள் குடியேற்றம்
மற்றும் நல்லிணக்க
ஆணைக்குழுவின்
பரிந்துரைகளிற்
சிலவற்றின்
அமுலாக்கம்
ஆகியவற்றில்
ஏற்பட்டுள்ள
முன்னேற்றத்தை
ஏற்றுக்கொண்டுள்ளது.
அதே நேரத்தில்
கடந்த காலங்களில்
நடைபெற்ற
சர்வதேச மனித உரிமைகள்
மற்றும் மனிதாபிமான
சட்டங்கள்
மீறல்கள்
சம்பந்தமாக
நம்பகத்தன்மையும்
சுயாதீனமானதுமான
விசாரணைகளை
நடத்த இலங்கை அரசாங்கம்
தவறிவிட்டதென்றும்
அந்த அறிக்கையிற்
குறிப்பிடப்பட்டுள்ளது. 5.
நல்லிணக்க
ஆணைக்குழுவின்
பரிந்துரைகளின்
அமுலாக்கத்தின்
மையமாக இலங்கையின்
நல்லிணக்கம்
மற்றும் பொறுப்புக்
கூறல் ஆகியவை அமைந்துள்ளன.
நல்லிணக்க
ஆணைக்குழுவின்
அறிக்கையும்
அதன் முடிவுகள்
மற்றும் பரிந்துரைகள்
ஆகியனவும்
ஒரு நிரந்தர
அரசியல் தீர்வை எட்டுவதற்கான
அரியதொரு
சந்தர்ப்பத்தை
வழங்கியுள்ளதென்பதை
இந்தியா தொடர்ந்து
வலியுறுத்தும்.
காணாமற்போனோர், தடுப்புக்
காவலிலுள்ளோர்,
உயர் பாதுகாப்பு
வலயங்களைக்
குறைத்தல்,
இராணுவத்திடமுள்ள
தனிப்பட்டோரின்
காணிகளை மீள ஒப்படைத்தல்,
வட மாகாணத்தில்
குடிமக்கள்
வாழும் இடங்களிலிருந்து
இராணுவத்தை
அகற்றல் போன்றவை உள்ளிட்ட நல்லிணக்க
ஆணைக்குழுவின்
ஆக்கபூர்வமான
பரிந்துரைகள்
யாவற்றினதும்
தாமதமற்ற
செயலாற்றலுடனான
அமுலாக்கத்தை
இந்தியா வேண்டி நிற்கின்றது. 6.
முன்னர் கூறியபடி
2013 செப்டெம்பர்
மாதம் நடைபெற்ற வட மாகாண
சபைக்கான
தேர்தல் ஒரு குறிப்பிடத்தக்க
முன்னேற்றமாகும்.
எனினும் அதிகாரப்
பரவலாக்கல்
சம்பந்தமாக
இன்னும் அர்த்த புஷ்டியான
நடவடிக்கைகள்
இலங்கை அரசாங்கத்தினால்
மேற்கொள்ளப்
படவேண்டியுள்ளது.
சிறுபான்மைத் தமிழ் சமூகத்துடன்
பரந்த அடிப்படையுடனான,
யாவுமுள்ளடங்கலான,
அர்த்தபுஷ்டியுடனான
உண்மையான
நல்லிணக்கத்தை
ஏற்படுத்திக்
கொள்வதற்கான
வழிவகைகளை
ஏற்படுத்தும்
நடவடிக்கைகள்
தொடரப்பட
வேண்டும்.
இலங்கை அரசியல் சாசனத்தின்
13வது திருத்தத்தை
முழுதாக அமுல்படுத்துவதன்
மூலமான அதிகாரப் பரவலாக்கல்
உள்ளிட்ட
இலங்கை அரசாங்கத்தின்
வாக்குறுதிகளை
நிறைவேற்றுவதற்கான
முயற்சிகளை
முன்னெடுக்கவேண்டுமென
நாம் இலங்கை
அரசாங்கத்தைக்
கேட்டுக்கொள்கிறோம். அவைத் தலைவர் அவர்களே 7.
ஆயிரக்கணக்கான
வருடங்கள்
தொடர்புடைய
எமது நெருங்கிய
அயலவர் என்ற முறையில்
இலங்கையில்
ஏற்படும்
சம்பவங்கள்
பற்றி நாம் வாளாவிருக்க
முடியாது.
ஆயுதப் போர் முடிவுக்கு
வந்த காலத்திலிருந்து
இலங்கையில்
நிவாரணம்,
மீள்குடியேற்றம்,
புனரமைப்பு
மற்றும் மீள்கட்டுமானப்
பணிகளில்
இந்தியா பாரிய அளவில்
ஈடுபட்டுள்ளது.
உள்நாட்டில்
இடம்பெயர்ந்தோரை
மீள் குடியேற்றம்
செய்தல், கண்ணிவெடியகற்றல்,
கல்வி, தொடர்பாடல்,
ஜீவனோபாய
புனரமைப்பு,
பொருளாதார
அபிவிருத்தி
ஆகியவற்றில்
நாம் பாரியளவில்
இலங்கைக்கு
உதவி புரிந்துள்ளோம்.
இவை வட மற்றும்
கீழ் மாகாணங்கள்
இயல்பு நிலைக்குத்திரும்புவதில்
பெரும் பங்கு வகித்துள்ளன. 8.
இலங்கையின்
மனித உரிமைகள்
நிலைமை பற்றி விசாரித்து,
மதிப்பிட்டு
மற்றும் கண்காணிக்
குமாறு மனித உரிமைகளுக்கான
உயர் ஸ்தானிகர்
அலுவலகத்தைக்
கேட்பது, இந்தப் பிரேரணை ஏற்கனவே இந்த விவகாரங்களில்
ஏற்படுத்தப்பட்டுள்ள
முன்னேற்றத்தை
அலட்சியம்
செய்வதாகவும்
மனித உரிமைகள்
உயர் ஸ்தானிகர்
அலுவலகத்திற்கும்
இலங்கை அரசாங்கத்திற்குமிடை
யேயுள்ள பேரவையின்
விசேட நடைமுறைகள்
பற்றிய ஒத்துழைப்பை
இடருக்குள்ளாக்
குவதாகவும்
அமைகின்றது.
மற்றும், இலங்கை அரசாங்கத்தையும்
மனித உரிமைகள்
உயர்ஸ்தானிகர்
அலுவலகத்தையும்
ஒரே நேரத்தில்
விசாரணைகள்
நடத்தக் கோருவது ஒத்திசைவில்லாததும்
செயல் முறைக்கொவ்வாத
துமாகும். 9.
தன்முனைப்பு
வாய்ந்த தேசியக் கட்டமைப்பு
மூலம் மனித உரிமை
மீறல்களைக்
கண்காணிப்பதற்கான
செயற்பாடுகளைக்
கொண்டிருப்பது
ஒவ்வொரு நாட்டிற்கும்
இன்றியமையாததென
இந்தியா நம்புகின்றது.
எனவே இந்தப் பேரவையின்
முயற்சிகளானது
இலங்கை அரசாங்கத்தை,
மனித உரிமை
மீறல் சம்பந்தமான
குற்றச்சாட்டுக்கள்
யாவற்றின்
மீதும் பரந்த அளவிலான,
சுயாதீனமான
நம்பகத்தன்மை
வாய்ந்த விசாரணைகளைத்
தேசிய விசாரணைக்
கட்டமைப்புகள்
மூலம் முன்னெடுப்பதற்குத்
தூண்டுவனவாகவும்,
குற்றவாளிகளைச்
சட்டத்தின்
முன் நிறுத்துவனவாகவும்
அமையவேண்டும்.
இலங்கைக்குத் தேவையான
உதவிகள் யாவும் ஒத்துழைப்புடனும்
சேர்ந்து
செயலாற்றும்
முறையிலானதாகவும்
அமையவேண்டும். 10.
ஒரு நாட்டின்
இறைமையைப்
பாதிப்படையச்
செய்யும்
விதத்தில்
பலவந்தமான
தலையீட்டு
அணுகுமுறையைக்
கையாள்வது
எதிர்மறையான
விளைவுகளையே
ஏற்படுத்துமென்பதே
இந்தியாவின்
உறுதியான
நம்பிக்கை.
ஆக்கபூர்வமான சர்வதேசப்
பேச்சுவார்த்தைகள்
மற்றும் ஒத்துழைப்புக்கான
விதிமுறைகளின்
அடிப்படையிலிருந்து
விலகிச் செல்லுதலானது
மனித உரிமைகள்
மற்றும் அடிப்படைச்
சுதந்திரம்
ஆகியவற்றைப்
பாதுகாப்பதற்கான
இந்தப் பேரவையின்
முயற்சிகளைப்
பங்கமடையச்
செய்வதாகும்.
அத்துடன் ஒரு நாட்டின்
மனித உரிமைப்
பாதுகாப்பை
கண்காணிப்புச்
செய்யும்
கட்டுப்பாடற்ற
உத்தரவுடனான
புறஞ்சார்
விசாரணைக்
கட்டமைப்பானது
2006ம் ஆண்டில்
மனித உரிமைகள்
ஆணைக்குழுவைத்
தோற்றுவிப்பதற்கான
ஐக்கிய நாடுகள் பொதுப் பேரவையின்
தீரமானம்
60/251, 2011ம் ஆண்டில்
மனித உரிமைகள்
ஆணைக்குழுவின்
மீளாய்வு
செய்யும்
ஐ.நா. பொ.ச தீர்மானம்
65/281 ஆகியவற்றைப்
பிரதிபலிப்பதாகாது. 11.
ஆகவே இத்தீர்மானமானது,
அந்த நாட்டின்
முயற்சிகளுக்கு
ஆக்கபூர்வமான
பங்களிப்பு
க்குப் பதில் முட்டுக்கட்டைகளையே
ஏற்படுத்தி,
எதிர்பாராத
விதத்தில்
நிலைமையை
மேலும் சிக்கலுக்குள்
ளாக்குமென
நாம் கவலையடைகிறோம். அவைத்தலைவர் அவர்களே.. 12.
இந்தக் காரணங்களுக்காக
எமது பிரதிநிதிகள்
குழு இத்தீர்மானத்
துடன் ஒத்திசைய முடியாததுடன்
வாக்களிப்பதிலிருந்தும்
விலகிக்கொள்ளுகிறது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |