|
||||
|
நெடியவன் உட்பட விடுதலை
புலிகளின் வெளிநாட்டு
பிரிவினருக்கு
எங்கே வரும் சிக்கல்?
இலங்கை
அரசு, பயங்கரவாதத்தில்
ஈடுபட்டதாக வெளிநாடுகளில்
உள்ள 40 பேரின் பெயர்களை
சர்வதேச போலீஸ்
இன்டர்போலிடம்
கொடுத்ததையடுத்து,
அதில் சிலரை கைது
செய்வதற்கான நடவடிக்கைகளில்
ஈடுபட தொடங்கியுள்ளது.
விடுதலைப் புலிகளின்
வெளிநாட்டுப்
பிரிவுகளில் ஒன்றின்
தலைவரான நெடியவன்
எனப்படும் பேரின்நாயகம்
சிவபரன் தொடர்பாக
நார்வே அதிகாரிகளுடன்
பேச்சுக்கள் நடக்கின்றன.
இன்டர்போல் மூலம்
சிவப்பு எச்சரிக்கை
வழங்கப்பட்டுள்ள
40 பேரில், முதல்
கட்டமாக 8 பேர்
தற்போது வசிக்கும்
நாடுகளுடன், இலங்கை
வெளியுறவு அமைச்சு
பேச்சுவார்த்தைகளை
நடத்துகிறது. அந்த
8 பேரில் நெடியவனும்
ஒருவராக உள்ளார்.
நார்வே நாட்டு
வெளியுறவுத்துறையின்
உள்துறை விவகாரங்களை
கவனிக்கும் செயலாளர்
Morten Hψglund, இலங்கை அரசின்
கோரிக்கையை எப்படி
எதிர்கொள்வது
என்பது தொடர்பாக
தமது அமைச்சு ஆராய்ந்து
வருவதாக, நார்வே
அரசு வானொலி NRK-க்கு
அளித்த பேட்டியில்
தெரிவித்துள்ளார்.
அந்த விவகாரம்
என்ன?
ஆனால், நெதர்லாந்து
போலீஸ் யாரையும்
கைது செய்யவில்லை.
மிரட்டி பணம் சேகரிப்பதாகக்
குற்றம் சாட்டப்பட்ட
நபரை, சுதந்திரமாக
வெளியே திரிய விட்டார்கள்.
அவரது நடமாட்டங்கள்
ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டன.
இது மாதக்கணக்கில்
நடந்தது.
இதிலிருந்து, பணம்
கணக்குப் பார்க்கப்படும்
இடம்தான் நெதர்லாந்து
என்றும், பணம்
போய்ச்சேரும்
இடம் நெதர்லாந்துக்கு
வெளியே இருக்கிறது
என்றும் ஊகித்தது
உளவுத்துறை. அதையடுத்து,
சில வெளிநாட்டு
உளவுத்துறைகளிடமிருந்து
புலிகளின் பண டீலிங்குகள்
பற்றிய தகவல்களை
பெற்றுக்கொண்டது
AIVD.
இந்த வகையில்
AIVD தொடர்புகொண்ட
வெளிநாட்டு உளவுத்துறைகளில்
ஒன்று, ஜேர்மன்
உளவுத்துறையான
Bundesnachrichtendienst (BND).
அவர்களும் கிட்டத்தட்ட
இதேபோன்ற தகவல்
சேகரிப்பில் இருந்தது
அப்போது தெரியவந்தது.
நெதர்லாந்து உளவுத்துறையும்,
ஜேர்மன் உளவுத்துறையும்
தத்தமது கையிலுள்ள
தகவல்களைப் பரிமாற்றம்
செய்துகொண்டனர்.
அப்போதுதான், முதன்முதலில்
இந்த விவகாரத்துக்கு
ஒரு முழு உருவம்
கிடைக்கத் தொடங்கியது.
2010-ம் ஆண்டு மார்ச்
முதல் வாரத்தில்,
ஜேர்மன் உளவுப்பிரிவினர்
ஜேர்மனியிலுள்ள
இலங்கை தமிழர்
தொடர்புள்ள மொத்தம்
8 இடங்களை ஒரே நேரத்தில்
சுற்றி வளைத்தனர்.
இந்த 8 இடங்களில்,
தமிழர் தொடர்பு
மையம் ஒன்றின்
அலுவலகமும் அடக்கம்.
இந்தச் சுற்றிவளைப்பில்
ஜேர்மன் பிரஜாவுரிமை
பெற்றவர்கள் உட்பட,
6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜேர்மன் கைதுகளுடன்,
நெதர்லாந்தில்
விஷயங்கள் கொஞ்சம்
குழம்பிப் போயின.
தங்களால் கண்காணிக்கப்பட்டுக்
கொண்டிருந்த ஆட்கள்
உடனடியாகவே வெளித்
தொடர்புகள் அனைத்தையும்
துண்டித்துக்
கொண்டதை AIVD கவனித்தது.
இனியும் இவர்களை
வெளியே விட்டு
வைத்திருப்பதால்,
மேலதிக தகவல்கள்
கிடைக்காது என்பதும்
புரிந்து போனது.
இதன் பின்னரே,
AIVD தனது வேட்டையைத்
தொடங்கியது.
2011-ம் ஆண்டு ஏப்ரல்
நான்காவது வாரம்.
நெதர்லாந்து உளவுத்துறை
ஒரே நேரத்தில்
இலங்கை தமிழர்
தொடர்புள்ள மொத்தம்
16 இடங்களைச் சுற்றிவளைத்தது.
இதில் 7 பேர் கைதாகினர்.
கம்யூட்டர் ஹார்ட்
டிஸ்க்குகள், டி.வி.டிக்கள்,
போட்டோக்கள் உட்பட
பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ரொக்கப் பணமாக
40,000 யூரோ எடுக்கப்பட்டது.
இந்தக் கட்டத்தில்,
விவகாரம் நெதர்லாந்து
நீதிமன்றத்துக்குச்
சென்றது. பயங்கரவாத
இயக்கமாக தடைசெய்யப்பட்ட
அமைப்புக்கு நிதி
சேகரித்தல் தொடர்பான
வழக்கு பதிவாகியது.
வழக்கு ஒருபுறத்தில்
நடைபெற்றுக் கொண்டிருக்க,
AIVD இந்த விவகாரத்தில்
மேலதிக உளவுத்
தகவல்களைச் சேகரித்துக்
கொண்டிருந்தது.
காரணம், இந்தப்
பணப்பரிமாற்றங்கள்,
ஒரு சர்வதேச நெட்வேர்க்
ஆன செயல்பட்ட தகவல்கள்
அவர்களிடம் கிடைத்திருந்தன.
அதேநேரத்தில்
ஜேர்மனியில்
BND, தமது விசாரணை
வட்டத்துக்குள்
இருந்தவர்களை
விசாரித்து, இந்த
நெட்வேர்க்கை
புரிந்துகொள்ள
முயன்று கொண்டிருந்தது.
அவரை தேடிய ஜேர்மன்
உளவுத்துறை, அவர்
ஆபிரிக்காவில்
உள்ள மடகாஸ்கர்
நாட்டில், தன்னிடமுள்ள
புலிகளின் பணத்துடன்
செட்டிலாகி விட்டதைத்
தெரிந்து கொண்டது.
2011-ம் ஆண்டு, மே 18-ம்
தேதி, உலகின் வெவ்வேறு
நகரங்களிலும்
முள்ளிவாய்க்காலில்
யுத்தம் முடிவுக்கு
வந்தது தொடர்பான
நிகழ்வுகள் நடைபெற்றன.
இவற்றில் பல நெடியவனின்
தலைமையிலான குழுவினால்
ஏற்பாடு செய்யப்பட்டவை.
இந்த நிகழ்வுகள்
நடைபெற்ற அதே மே
18-ம் தேதி, நெடியவன்,
நார்வே தலைநகர்
ஆஸ்லோவில் விசாரணை
செய்யப்பட்டுக்
கொண்டிருந்தார்!
இந்த விசாரணை மிகமிக
முக்கியமானதாக
கருதப்பட்டு
நெடியவனை
விசாரிக்க நெதர்லாந்திலிருந்து
பிரத்தியேகமாக
ஒரு நீதிபதியும்,
ஆறு டிஃபென்ஸ்
அட்டர்னிகளும்
நார்வே சென்றிருந்தனர்.
நார்வேயின் தலைநகர்
ஆஸ்லோவிலுள்ள
மாவட்ட நீதிமன்றத்தில்,
மூடிய அறைக்குள்
நெடியவன் மீதான
விசாரணைகள் நடைபெற்றன.
விசாரணைகள் வீடியோவில்
படம்பிடிக்கப்பட்டன.
அதன்பின் நெடியவன்
ஜாமீனில் விடப்பட்டார்.
இந்த விவகாரம்
தொடங்கிய நெதர்லாந்தில்,
விடுதலை புலிகளுக்காக
மிரட்டி பணம் சேகரித்தவர்கள்
மீது Extortion, Material support to terrorism, Money
laundering ஆகிய பிரிவுகளில்,
வழக்கு தொடரப்பட்டது.
நெதர்லாந்து வழக்கு
எண்: BU7200, 09/748801-09.
(நன்றி: விறுவிறுப்பு) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும். விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |