Contact us at: sooddram@gmail.com

 

அமெரிக்க ஆக்கிரமிப்பால் சீர்குலைந்து கிடக்கும்ராக் 

மார்ச் 19, 2003 அன்றுராக்கில் நுழைந்து ஆக்கிரமிப்பு செய்து கொண்ட அமெரிக்க ராணுவம் இதுவரை 4 ஆயிரத்து 403 பேரை இழந்துள்ளது.. அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரத்தின்படியே இவ்வளவு அதிகமான அளவில் இழப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த விபரமும் ஜூலை 3 ஆம் தேதி வரையிலான புள்ளிவிபரமாகும். இதில் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 109 பெண்களும் அடங்குவார்கள். அங்கிருந்து வெளியேறி விடுவோம் என்று அமெரிக்க அரசு தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாலும், நிரந்தரமாக முகாம் போடுவற்கான ஏற்பாடுகளில்தான் கவனம் செலுத்துகிறது. பெரும் இழப்புகளையும் மீறித்தான் இவை நடைபெறுகின்றன.

உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்கையில், காயடைந்தவர்களின் எண்ணிக்கையோ 30 ஆயிரத்தைத் தாண்டி நிற்கிறது. 2003ல் 2 ஆயிரத்து 416, 2004ல் 8 ஆயிரத்து ஐந்து, 2005ல் 5 ஆயிரத்து 944, 2006ல் 6 ஆயிரத்து 412, 2007ல் 6 ஆயிரத்து 112, 2008ல் 2 ஆயிரத்து 51, 2009ல் 676 மற்றும் 2010 ஆம் ஆண்டில் இதுவரை 280 பேர் காயமடைந்துள்ளனர். மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் இந்தப்பட்டியலில் இடம் பெறவில்லை.ராக்கில் ராணுவப்பணிக்காக சென்றவர்களில் 30 விழுக்காட்டினர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்காவுக்குத் திரும்பியபிறகு தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் ஏராளமாகப் பதிவாகியுள்ளன. அமெரிக்க ராணுவம் சந்திக்கும் இத்தகையப் பிரச்சனைகள் அந்நாட்டு மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்கிரமிப்பு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் தப்பிக்கவில்லை. இதுவரை 141 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளார்கள். இதில் உள்ளூர் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையே 119 ஆகும். 94 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். எஞ்சியுள்ள 47 பேர் இரு தரப்புக்கும் இடையிலான சண்டையில் சிக்கி உயிரிழந்துள்ளார்கள். அமெரிக்க ராணுவத்திடமிருந்து பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு என்பதெல்லாம் கிடைப்பதில்லை. அவர்களிடமிருந்து தப்பிப்பதே பல சமயங்களில் பத்திரிகையாளர்களுக்கு பெரும்பாடாகப் போய்விடுகிறது. இத்தகைய உயிரிழப்புகளுக்கு அமெரிக்காவோ அல்லதுராக்கில் உள்ள அமெரிக்க ஆதரவு அரசோ பொறுப்பேற்றுக் கொள்வதில்லை.


ராக்கில் உள்ள எண்ணெய் வளத்திலிருந்து கிடைக்கும் வருமானத்திலிருந்து கணிசமான பகுதியை தனது செலவுக்காக அமெரிக்க அரசு வாங்கிக் கொள்கிறது. அதற்குக்கூட கணக்கே இல்லை என்று அண்மையில் செய்திகள் வெளியாகின. கிட்டத்தட்ட 95 விழுக்காடு பணத்தை அமெரிக்க ராணுவம் எவ்வாறு செலவிட்டது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதோடு, அமெரிக்க மக்களின் வரிப்பணமும்ராக் ஆக்கிரமிப்புக்காக கொட்டப்படுகிறது.ராக்கில் அமெரிக்க எண்ணெய் பெருநிறுவனங்களின் நலன்களுக்காக 2008 ஆம் ஆண்டில் மட்டும் 60 ஆயிரம் கோடி ரூபாயை அந்நாட்டு அரசு ராணுவச் செலவாக செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டில் இந்தச் செலவு குறைந்தாலும் 36 ஆயிரம் கோடி ரூபாயைத் தொட்டது.

அமெரிக்காவோடு கைகோர்த்துராக் மண்ணில் கால் வைத்த மற்ற நாடுகள் தங்கள் ராணுவங்களை விலக்கிக் கொண்டுவிட்டன. அமெரிக்க ராணுவம் மட்டும் வெளியேறாமல் சுமார் 85 ஆயிரம் ராணுவத்தினரை அங்கு நிறுத்தி வைத்துள்ளது.ராக்கைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் போரில் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட அப்பாவிராக்கியர்களின் எண்ணிக்கையோ ஆறு லட்சத்தைத் தொடும் என்பதுதான் அதிர்ச்சிதரக்கூடிய செய்தியாகும். இருதரப்பு மோதல்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் இந்த மோதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

சாமானியராக்கியர்களின் வாழ்க் கையோ சீர்குலைந்து போய்க்கிடக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் வேலையின்மை பிரச்சனை வேறுபட்டாலும் கடுமையாகவே இருக்கிறது. சுமார் 27 விழுக்காடு முதல் 60 விழுக்காடு வரை வேலையின்மை விகிதம் இருக்கிறது. இந்தப் புள்ளிவிபரமே மோதல்கள் இல்லாத இடங்களில் உள்ளவையாகும். பணவீக்கம் 50 விழுக்காட்டைத் தாண்டிவிட்டது. நோய்வாய்ப்படும்ராக்கியர்களைக் கவனிக்க மருத்துவமனைகளில் வசதியில்லை. அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு முன்புராக்கில் 34 ஆயிரம் மருத்துவர்கள் இருந்தனர். ஆக்கிரமிப்புக்குப்பிறகு அங்கிருந்து வெளியேறியவர்கள் 12 ஆயிரம் பேர். கொல்லப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கையோ இரண்டாயிரம்.

ராக்கில் ஆக்கிரமிப்பு செய்துள்ள அமெரிக்கப் படைகள் அங்கிருக்கலாமா என்று நடத்திய பல்வேறு கருத்துக் கணிப்புகளில் வெளியேற வேண்டும் என்பதுதான் பெரும்பாலான கருத்தாகும். பிரிட்டன் பாதுகாப்புத்துறையே ஒருமுறை இந்தக்கருத்துக் கணிப்பை நடத்தியது. அப்போது
அமெரிக்க ராணுவம் வெளியேற வேண்டும் என்று 82 விழுக்காடுராக்கியர்கள் விரும்புவதாகத் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

(தீக்கதிர்)

இப்படிப்பட்ட செயற்பாடுகளையுடைய அமெரிக்காவைத்தான் ஈழ மக்களின் மீட்போனாக 'மேற்குலகம் எமக்கு நீதி பெற்றுத் தரும்' என்று புலிகளும், புலம் பெயர்ந்த புலிப் பினாமிகளும், அவர்களின் ஊது குழல்களான ஊடகங்களும், மனித உரிமை, போர்க்குற்றம் என்று கொக்கரிக்கும் கூட்டங்களும் பிரசாரப்படுத்தி வருவது வெட்கக் கேடான ஏமாற்று வேலையாகும். - சாகரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com