|
||||
|
காங்கிரஸ் உருவாக்கிய பிரச்சினை
இன்று அதற்குப்
பொறியாகிவிட்டது
(சங்கர
சேயோன்)
ஆந்திரப்
பிரதேச மாநிலத்தின்
தெலுங்கானா பகுதியில்
ஜுலை 27ந் திகதி
நடைபெற்ற இடைத்
தேர்தலில் தெலு
ங்கானா தனி மாநிலக்
கோரிக்கையை வலியுறுத்தும்
தெலுங்கானா ராஷ்டிர
சமிதி அமோக வெற்றியீட்டியிருப்பது
காங்கிரஸ் கட்சிக்கும்
தெலுங்கு தேசம்
கட்சிக்கும் பலத்த
அடியாக அமைந்துள்
ளது. இடைத் தேர்தல்
நடைபெற்ற பன்னிரண்டு
தொகுதிகளுள் பதினொன்றில்
தெலுங்கானா ராஷ்டிர
சமிதி மிகக் கூடுதலான
பெரும்பான்மையுடன்
வெற்றியீட்டியிருக்கின்றது.
மற்றைய தொகுதியில்
தெலுங்கானா ராஷ்டிர
சமிதியின் ஆதரவு
பெற்ற பாரதிய ஜனதா
கட்சி வெற்றி பெற்றது.
தெலுங்கு தேசம்
கட்சியின் வேட்பாளர்கள்
அனைவரும் கட்டுப்
பணத்தை இழந்திருப்பது
குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா
பிரதேசத்தைத்
தனி மாநிலமாகப்
பிரகடனப்படுத்த
வேண்டும் என்ற
கோரிக்கை இந்தியாவின்
சுதந்திரத் துடன்
எழுந்தது. சில
காலத்தில் இக்
கோரிக்கை வலுவடைவதும்
வேறு சில காலத்தில்
வலு இழப்பதுமாக
இரு ந்து இப்போது
தீவிரமாக முன்வைக்கப்
படுகின்றது.
இப்போதைய
ஆந்திரப் பிரதேச
மாநிலம் ஆந்திரா,
தெலுங்கானா, ராயலசீமா
என மூன்று பகுதிகளைக்
கொண்டது. ஆந்திரப்
பிரதேச சட்ட சபைக்கு
ஆந்திராவிலிருந்து
123 எம். எல்.
ஏக்களும் தெலுங்கானாவிலிருந்து
119 எம். எல்.
ஏக்களும் ராயலசீமாவிலிருந்து
52 எம். எல்.
ஏக்களும் தெரிவாகின்றனர்.
மாநிலத்தின்
23 மாவட்டங்களில்
9 மாவட்டங்கள்
ஆந்திராவிலும்
10 மாவட்டங்கள்
தெலுங்கானாவிலும்
4 மாவட்டங்கள்
ராயலசீமாவிலும்
உள்ளன.
இந்தியா
சுதந்திரம் அடைந்த
வேளையில் தெலுங்கானா
பிரதேசம் ஹைதராபாத்
நிஸாமின் ஆளுகைக்குள்
இருந்தது. எல்லா
சமஸ்தானங்களும்
1947 ஓகஸ்ட் 15ந் திகதிக்கு
முன் இந்தியாவின்
ஒரு பகுதியாக இணைய
வேண்டும் என்று
சுதந்திர இந்தியாவின்
ஆட்சியாளர்கள்
அறிவித்த போதிலும்
ஹைதராபாத் நிஸாம்
இணைய மறுத்துவிட்டார்.
வெளிநாடுகளின்
உதவியுடன் தனியாக
ஆட்சி நடத்துவதற்கு
முயற்சித்தார்.
இந்த நிலையில்
இந்திய இராணுவம்
1948 செப்ரெம்பர்
13ந் திகதி ஹைதராபாத்
நிஸாமுக்கு எதிரான
‘ஒப்பரேஷன் போலோ’
நடவடிக்கையை ஆரம்பித்தது.
செப்ரெம்பர்
18ந் திகதி நிஸாம்
சரணடைந்தார்.
தெலுங்கானா
மத்திய அரசாங்கத்தின்
நேரடி நிர்வாகத்
தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
அப் போதே தனி
மாநிலக் கோரிக்கை
எழுந்துவிட்டது.
இவ்வளவும்
நடந்த போது ஆந்திரா
தனி மாநிலமாக இருக்கவில்லை. ‘சென்னை
மாகாணம்’ என்ற
மாநிலத்தின் ஒரு
அங்கமாகவே இருந்தது.
ஆந்திரா வுக்குத்
தனி மாநில அந்தஸ்து
வேண் டும் என்று
1952ம் ஆண்டு பொட்டி
ராமுலு என்பவர்
உண்ணாவிரதமிருந்து
உயிர்த் தியாகம்
செய்ததைத் தொடர்ந்து
ஆந்திரப் பிரதேச
மாநிலம் உருவாக்கப்
பட்டது.
1953
டிசம்பரில் நியமிக்கப்பட்ட
மாநிலங்கள் மீளமைப்பு
ஆணைக்குழு தெலுங்கானா
மக்கள் ஆந்திராவுடன்
இணைவதை விரும்பாததால்
அப் பிரதேசம் ஹைதராபாத்
மாநிலம் எனத் தனியாக
இயங்க வேண்டும்
என்றும் அடுத்த
தேர்தலின் பின்
மூன்றிலிரண்டு
பெரும்பான்மையுடன்
மக்கள் தீர்மானித்தால்
ஆந்திராவுடன்
இணையலாம் என்றும்
1955ம் ஆண்டு சிபார்சு
செய்தது. எனினும்,
காங்கிரஸ் தலைமையில்
செல்வாக்குப்
பெற்றிருந்த ஆந்திர
மாநில காங்கிரஸ்
தலைவர்களினது
வற்புறுத்தலின்
பேரில் 1956 நவம்பர்
1ந் திகதி தெலுங்கானா
ஆந்திரப் பிரதேச
மாநிலத்துடன்
இணைக்கப்பட்டது.
தெலுங்கானா
மக்களைப் பொறுத்தவரையில்
இது ஒரு பலவந்தமான
இணைப்பு.
தனி
மாநிலப் போராட்டம்
1969இல் ‘ஜெய் தெலுங்கானா’
என்ற பெயரில் வெடித்தது. இப்
போராட்டத்துக்கு
மாணவர்கள் தலைமை
தாங்கினார்கள்.
பொலிசாரின்
துப்பாக்கிச்
சூட்டில் 369 மாணவர்கள்
பலியாகினர். இச்சந்தர்ப்பத்தில்
காங்கிரஸ் பிரமுகராக
இருந்த சென்னா
ரெட்டி அக் கட்சியிலிருந்து
வெளியேறித் தெலுங்கானாப்
போராட்டத்துக்குத்
தலைமை வகித்தார்.
அவர் தெலுங்கானா
மக்கள் சங்கம்
என்ற பெயரில் ஒரு
அமைப்பை ஆரம்பித்துப்
போராட்டத்தை முன்னெடுத்தார்.
சென்னா
ரெட்டி 1971ம் ஆண்டு
மீண்டும் காங்கிரஸ்
கட்சியில் இணைந்ததும்
தெலுங்கானாப்
போராட்டம் பின்னடைவு
கண்டது. மீண்டும்
2001 ஆம் ஆண்டு தனி
மாநிலக் கோரிக்கை
வீறுடன் எழுந்தது.
இது கல்வகுண்டல
சந்திரசேகர ராவ்
போராட்டத்துக்குத்
தலைமையேற்ற காலம்.
சந்திரசேகர
ராவ் தெலுங்கு
தேசம் கட்சியின்
எம்.
எல். ஏயாக
இருந்தவர். அக் கட்சியின்
மாநில அரசாங்கத்தில்
பிரதிச் சபாநாயகராகப்
பதவி வகித்தவர்.
தனக்கு அமைச்சர்
பதவி தரவில்லை
என்பதற்காகச்
சந்திரபாபு நாயுடுவைப்
பகைத்துக்கொண்டு
கட்சியிலிருந்து
வெளியேறித் தெலுங்கானா
ராஷ்டிர சமிதியை
ஆரம்பித்தார்.
காங்கிரஸ்
கட்சி தெலுங்கானா
ராஷ்டிர சமிதியுடன்
கூட்டாக 2004 பொதுத்
தேர்தலில் போட்டியிட்டது. தெலுங்கானா
கோரிக்கையை நிறைவேற்றுவதாக
வாக்குறுதி அளித்த
காங்கிரஸ், பின்னர்
அந்த வாக்குறுதி
யிலிருந்து பின்வாங்கியதால்
தெலுங்கானா ராஷ்டிர
சமிதி அரசாங்கத்திலிருந்து
வெளியேறியது.
மாநில
சட்ட சபைத் தேர்தல்
2009ம் ஆண்டு நடைபெற்ற
போது தெலுங்கானா
ராஷ்டிர சமிதி
தெலுங்கு தேசம்
கட்சியுடன் இணைந்து
போட்டியிட்டது. அந்தத்
தேர்தலில் சந்திரசேகர
ராவ்வின் கட்சி
சோபிக்கவில்லை.
தெலுங்கானாவை
ஆதரிக்காத கட்சிகளுடன்
கூட்டுச் சேர்வது
பாதிப்பை ஏற்படுத்தும்
எனக் கருதிய சந்திரசேகர
ராவ், தெலுங்கானாப்
போராட்டத்தைத்
தனியாக நடத்துவது
என்ற முடிவுக்கு
வந்து தெலுங்கானாக்
கோரிக்கையை முன்வைத்து
உண்ணாவிரதம் ஆர
ம்பித்தார். தெலுங்கானா
கோரிக்கைக்கு
இன்றைய அளவுக்கு
மக்களாதரவு பெருகியதற்கு
இந்த உண்ணாவிரதமும்
அதையொட்டி இடம்பெற்ற
நிகழ்வுகளும்
காரணமாகின.
சந்திரசேகர
ராவ் உண் ணாவிரதம்
இருக்க முற்பட்ட
போது 2009 நவம்பர்
29ந் திகதி கைது
செய்யப் பட்டார். எனினும்
சிறையில் தனது
உண்ணாவிரதத்தை
ஆரம்பித்தார்.
மத்திய அரசாங்
கத்தினது அறி வுறுத்தலின்
பேரில், தெலுங்கானாக்
கோரிக்கை பற்றி
ஆராய்வதற்காக
அரசியல் கட்சி
களின் கூட்டமொ
ன்றை டிசம்பர்
7ந் திகதி ஆந்திரப்
பிரதேச முதல்வர்
கூட்டினார். சட்ட சபையில்
தீர்மான மொன்றை
நிறைவேற்றித்
தெலுங்கானா தனி
மாநிலம் அமைப்
பதற்கான நடை முறையை
ஆரம் பிப்பது என்ற
ஆலோசனை இக் கூட்டத்தில்
ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மாக்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியையும்
வேறு இரண்டு சிறிய
கட்சிகளையும்
தவிர மற்றைய எல்லாக்
கட்சிகளும் இதை
ஏற்றுக்கொண்டன.
இக்
கூட்டத்தின் அறிக்கை
கிடைத்ததும், தெலுங்கானா
மாநிலம் அமைப்பதற்கான
நடைமுறை ஆரம்பிக்கப்படவுள்ளது
என மத்திய அரசாங்கம்
அறிவித்தது. சந்திரசேகர
ராவ் உண்ணாவிரதத்தைக்
கைவிட்டார். ஆனால் நெருக்கடி
தீரவில்லை. மேலும் தீவிரமடையும்
சூழ்நிலையே உரு
வாகியது.
மத்திய
அரசாங்கத்தின்
அறிவிப்பு வெளியாகியதும்
ஆந்திர மாநிலக்
கட்சிகள் முன்னைய
நிலைப்பாட்டிலிரு
ந்து பின்வாங்கின.
மத்திய அர சாங்கத்தின்
அறிவிப்புக்கு
எதிரான குரல் காங்கிரஸ்
கட்சிக்குள்ளிருந்தே
முதலில் எழுந்தது.
முன்னாள் முதல்
வர் வை. எஸ்.
ராஜசேகர ரெட்டியின்
மகன் ஜெகன்மோகன்
ரெட்டி இந்த எதிர்ப்புக்குப்
பின்னால் செயற்பட்ட
சூத்திரதாரி.
ஆந்திராவையும்
ராயல சீமாவையும்
சேர்ந்த பல எம்.
எல். ஏக்கள்
மத்திய அரசாங்கத்தின்
முடிவுக்குக்
கண்டனம் தெரிவிக்கும்
வகையில் தங்கள்
இராஜினாமாக் கடிதங்
களை அனுப்பினார்கள்.
இந்த நிலை யில்
மற்றைய கட்சிகள்
பின்வாங்கின.
காங்கிரஸ்
கட்சிக்குத் தர்மசங்கட
நிலை.
மத்திய அரசாங்கத்தின்
அறி விப்புக்கு
எதிரான கிளர்ச்சியில்
ஈடுபடுபவர்கள்
மீது நடவடிக்கை
எடுத்தால் மாநிலத்தில்
கட்சி பிளவு பட்டுவிடும்.
எம். எல்.
ஏக்களின் இராஜினாமாக்
கடிதங்களை ஏற்றால்
அத்தொகுதிகளுக்கு
இடைத்தேர்தல்
நடத்த வேண்டும்.
ஆட்சியைக்
கலைத்தால் சட்ட
சபைத் தேர் தல்
நடத்த வேண்டும்.
தெலு ங்கானா
தொடர்பாகக் காங்கிரஸ்
கட்சிக்கு எதிரான
அலை வீசிய அந்த
நேரத்தில் தேர்தலுக்
குச் செல்வது பாதிப்பாக
அமை ந்துவிடும்.
எனவே காங்கிரஸ்
மத்திய தலைமையும்
அதன் முன்னைய முடிவிலிருந்து
பின்வாங்கியது.
உள்துறை அமைச்சர்
ப. சிதம்பரம் டிசம்பர்
23ந் திகதி வெளியிட்ட
அறிக்கையில் பின்வருமாறு
கூறினார்.
“மத்திய
அரசாங்கம் வெளியிட்ட
அறி வித்தலுக்குப்
பின் ஆந்திரப்
பிரதேச நிலைமையில்
மாற்றம் ஏற் பட்டது. அநேகம்
அரசியல் கட்சிகளில்
இவ்விட யத்தில்
மாறுபட்ட கருத்துகள்
நிலவுகின்றன.
மாநிலத்திலுள்ள
எல்லா அரசியல்
கட் சிகளுடனும்
குழுக்களுடனும்
விரிவான பேச்சு
வார்த்தை நடத்த
வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இவ்விடயத்தில்
அக் கறையுள்ள அனைவரையும்
இதில் ஈடுபடுத்துவதற்கான
சகல நடவ டிக்கைகளையும்
இந்திய அரசாங்கம்
எடுக்கும்.”
தெலுங்கானா
ராஷ்டிர சமிதி
தலைவர்களும் தெலுங்கானா
மக்களும் சிதம்பரத்தின்
அறிக்கையைச் சந்
தேகத்துட னேயே
பார்த்தனர். தெலுங்கானா
பிர ச்சினையை உறை
நிலையில் வைத்திருப்பதற்
கான காங்கிரஸ்
அரசாங்கத்தின்
தந்தி ரோபாயம்
என்று அவர்கள்
கருதினார்கள்.
தெலுங்கானா
பிரச்சினையில்
காங்கிரஸ் கட்சி
ஆரம்பத்திலிருந்தே
தவறுக்கு மேல்
தவறு விட்டு வந்திருக்கின்றது. மாநிலங்கள்
மறுசீரமைப்புப்
குழுவின் அறிக்கையை
நடைமுறைப் படுத்தாமல்
அவசரப்பட்டுத்
தெலுங்கானாவை
ஆந்திராவுடன்
இணைத்தது முதலாவது
தவறு. ஆந் திராவுடன்
இணைவதைத் தெலுங்கானா
மக்கள் விரும்பவில்லை
எனத் தெரிந்திருந்தும்
ஆந்திராவின் காங்கிரஸ்
தலைவர்களைத் திருப்
திப்படுத்துவதற்காகக்
காங்கிரஸ் தலைமை
இந்த முடிவை எடுத்தது.
தெலுங்கானாவைத்
தனி மாநிலமாகப்
பிரகடனப்படுத்துவதாகத்
தெலுங்கானா ராஷ்டிர
சமிதிக்கு 2004ம்
ஆண்டு வாக்குறுதி
அளித்தது இரண்டாவது
தவறு.
தனி மாநிலக்
கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும்
மனோநிலை இல்லாமலே
பாராளுமன்றத்
தேர்தல் கூட்டுக்காகக்
காங்கிரஸ் அந்த
வாக்குறுதியை
அளித்தது. மக்களிடம்
நம்பிக்கையைத்
தோற்றுவித்துவிட்டுப்
பின்னர் அதிலிருந்து
பின்வாங்குவது
மக்களைத் தீவிர
நிலைப்பாட்டுக்குத்
தள்ளும் என்பது
பற்றிக் காங்கிரஸ்
தலைமை சிந்திக்க
வில்லை.
ஆந்திரப்
பிரதேச மாநில முதலமைச்சர்
கூட்டிய சர்வகட்சிக்
கூட்ட அறிக்கை
கிடைத்தவுடன்,
தெலுங்கானா மாநிலம்
அமைக்கப்படு மென
மத்திய அரசாங்கம்
விடுத்த அறிக்கை
ஒரு அவசர முடிவு.
சம்பந்தப்பட்ட
கட்சிகளின் மாநிலத்
தலைவர்களையும்
தேசியத் தலை வர்களையும்
அழைத்து மத்திய
அரசாங்க மட்டத்திலும்
பேச்சுவார்த்தை
நடத்தி அக் கட்சிகளின்
ஆதரவை உறுதிப்படுத்திய
பின் அவ்வாறான
அறிக்கையை வெளியிட்டிருக்கலாம்.
சந்திரசேகர ராவ்வின்
உண்ணாவிரதத்தை
முடிவுக்குக்
கொண்டுவர வேண்டும்
என்பதற்காக அவசரப்பட்டு
அறிக்கை வெளியிட்ட
பின்னர் அதற்கு
முரணான நிலைப்பாட்டை
எடுத்ததால் தெலுங்கானாவில்
வன்முறை வெடித்தது.
தனி மாநிலக்
கோரிக்கைக்கு
மக்களாதரவு வளர்ந்தது.
தெலுங்கானா
பிரதேசத்தில்
தனி மாநிலத்துக்கான
ஆதரவு பெருமளவில்
வளர்ந்திருக்கின்றது
என்பதையே இடைத்
தேர்தல் முடிவுகள்
காட்டுகின்றன. தெலுங்கானா
ராஷ்டிர சமிதி
வேட்பாளர்கள்
ஆந்திரப் பிரதேச
வரலாற்றிலேயே
ஆகக் கூடுதலான
அதிகப்படி வாக்குகளால்
வெற்றி பெற்றிருப்பது
சாதாரண விடயமல்ல.
தனி
மாநிலக் கோரிக்கை
தெலுங்கானா பிரதேசத்தில்
வலுவாக வேரூன்றிவிட்டது. அதேநேரம்
தனி மாநிலத்துக்கு
எதிரான உணர்வுகளும்
ஆந்திராவிலும்
ராயலசீமாவிலும்
வலுவாகவே உள்ளன.
மத்தியில்
எந்தக் கட்சி பதவிக்கு
வந்தாலும் இப்பிரச்சினை
அதற்குத் தலையிடி
யாகவே இருக்கப்
போகின்றது.
ஆந்திரப்
பிரதேச மாநிலத்தின்
தலைநகரான ஹைதராபாத்
தெலுங்கானா பகுதிக்குள்
இருக்கின்றது. தெலுங்கானா
ஆந்திரப் பிரதேச
மாநிலத்துடன்
இணைக்கப்படுவதற்கு
முன் குர்நூல்
என்ற நகரமே ஆந்திராவின்
தலைநகராக விளங்கியது.
ஹைதராபாத்
இப்போது அபார வளர்ச்சி
அடைந்திருக்கின்றது.
ஆந்திராவிலும்
ராயலசீமாவிலும்
ஹைதராபாத்தை விட்டுக்கொடுப்பது
என்ற பேச்சுக்கே
இடமில்லை. அதை இரண்டு மாநிலங்களுக்கும்
பொதுத் தலைநகர்
ஆக்குவதும் சாத்தியமில்லை.
ஹைதராபாத்திலிருந்து
ஆந்திராவின் கிட்டிய
எல்லை 150 கிலோ மீற்றர்
தூரத்தில் உள்ளது.
கட்டுப்படுத்த
முடியாத அளவுக்குத்
தெலுங்கானா தனி
மாநிலக் கோரிக்கை
வளர்ந்துவிட்டது. ஏற்கனவே
மகாராஷ்டிரத்தில்
விதர்ப்பமும்
மேற்கு வங்காளத்தில்
கோர்காலான்டும்
அஸாமில் போடோவும்
தனி மாநிலக் கோரிக்கையை
வலியுறுத்தி வருகின்றன.
தெலுங்கானா
தனி மாநிலம் அமையும்
பட்சத்தில் அது
பல தனி மாநிலங்க
ளுக்கு வழிவகுக்கலாம்.
தெலுங்கானா
தனி மாநிலக் கோரிக்கையை
உதா சீனப்படுத்துவதும்
இலகுவான காரிய
மல்ல.
காங்கிரஸ்
தலைமை 1956ம் ஆண்டு
விட்ட தவறு இன்று
பூதாகர மான பிரச்சினையாக
வளர்ந்துவிட்டது.
(சங்கர
சேயோன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |