|
||||
|
ஆப்கான்
மண்ணில் தினறுகின்றது
அமெரிக்கா
(சங்கர சேயோன்) ஆப்கானிஸ்தான்
மீது அமெரிக்கா
படையெடுத்து
ஒன்பது வருடங்கள்
பூர்த்தியாகப்
போகின்றன. இப்படையெடுப்பு 2001 ஒக்டோபரில்
இடம்பெற்றது.
இந்த யுத்தத்துக்காக
அமெரிக்கா
வருடமொன்றக்கு
100 பில்லியன்
டொலர்களைச்
செலவிடுகின்றது.
ஒன்பது வருட காலச்
செலவையும்
இக் காலத்தில்
அமெரிக்காவினதும்
நேட்டோ நாடுகளினதும்
படையினரின்
உயிரிழப்பையும்
ஈடு செய்யக்கூடிய
எவ்வித முன்னேற்றத்தையும்
அமெரிக்கா
யுத்தத்தில்
அடையவில்லை.
மூவாயிரத்துக்கு மேற்பட்ட
அமெரிக்க
மற்றும் நேட்டோ படையினர் ஆப்கான் யுத்தத்தில்
உயிரிழந்துள்ளனர்.
நேட்டோ
நாடுகளுக்கு
மாத்திரமன்றி
அமெரிக்காவுக்கும்
ஆப்கான் யுத்தம் இப்போது அலுத்துவிட்டது. அதனாலேயே 2011 நடுப்பகுதியில்
அமெரிக்கா
ஆப் கானிஸ்தானிலிருந்து
வெளியேறும்
என்று பராக் ஒபாமா
நடைமுறைச்
சாத்தியமற்ற
கால அட்டவணையை
வெளிப்படுத்தினார்.
‘மூக்கில்
மண் பிடிக்காமல்’
வெளியேறுவது
எப்படி என்பதை ஆராய்வதற்காக
2010 ஜனவரி 28ந்
திகதி லண்டனில் ஒரு மகாநாடு
நடைபெற்றது.
அமெரிக்கா,
ஐரோப்பிய
யூனியன் மற்றும் நோட்டோ நாடுகள் உட்பட எழுபதுக்கு
மேற்பட்ட
நாடுகள் பங்குபற்றின.
நல்ல தலிபான்களுடன்
பேச்சுவார்த்தை
நடத்துவது
என்று இம் மாநாட்டில்
தீர்மானித்தார்கள்.
அமெரிக்காவும்
மேற்கத்திய
நாடுகளும்
தன்னை ஓரங்கட்டிவிட்டுத்
தலிபான்களுடன்
பேச முற்படுகின்றன
என்ற சந்தேகம்
ஆப்கான் ஜனாதிபதி ஹமிட் கர்ஸாய்க்கு
ஏற்பட்டது. அவர் ‘ஜிர்கா’
எனப்படும்
முதியோர்
மகாநாட்டை
2010 மே 2ஆம் திகதி முதல்
4ஆம் திகதி
வரை நடத்தி
யுத்தத்தை
முடிவுக்குக்
கொண்டு வருவது பற்றி ஆராய்ந்தார்.
இந்த மகாநாட்டில்
தலிபான்களில்
ஒரு பிரிவினரைப்
பங்கேற்க
வைப்பதற்குக்
கர்ஸாய் மேற்கொண்ட
முயற்சி பலிக்கவில்லை.
இந்த மகாநாட்டிலும்
தலிபான்களுடன்
பேச்சுவார்த்தை
நடத்தி யுத்தத்தை
முடிவுக்குக்
கொண்டுவர
வேண்டும்
என்ற முடிவே
மேற்கொள்ளப்பட்டது.
படைபலத்தை அதிகரித்துத்
தாக்குதலைத்
தீவிரப்படுத்துவதன்
மூலம் தலிபான்களைப்
பேச்சுவார்த்தை
மேசைக்குக்
கொண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்புடன்
அமெரிக்கா
2010 பெப்ரவரி
மாதத்தில்
மேலதிக துருப்புகளை
ஆப்கானிஸ்தானுக்கு
அனுப்பியது.
இந்த நட வடிக்கை
பொது மக்களைத்
தலிபான்களின்
பக்கத்துக்
குத் தள்ளிவிடும்
என்று கர்ஸாய் எச்சரித்ததை
அமெரிக்கா
பொருட்படுத்த
வில்லை. இந்த நடைமுறை
ஈராக்கில்
பலனளித்தது
போல ஆப்கானிஸ்தானிலும்
பலனளிக்கும்
என்று அமெரிக்கா
எதிர்பார்த்தது.
ஈராக்கில்
சில சுன்னி
குழுக்களை
அமெ ரிக்கா
பணம் கொடுத்து
வழிக்குக்
கொண்டு வந்ததாலேயே
படைபல அதி கரிப்பு
அங்கே பலனளித்தது. ஆப் கானிஸ்தானிலும்
அதே பாணியில்
செயற்படுவதற்காக
அமெரிக்கா
2009 இல் 1.3 பில்லியன்
டொலரையும்
2010 இல் ஐரோப்பிய
யூனியன் 650
மில்லியன்
டொலரையும்
ஒதுக்கியிருந்தன.
ஆனால் எதிர்பார்த்தது
நடக்கவில்லை.
தலிபான்களின் உறுதியும்
பஸ்தூன் மக்களின் விசுவாசமும்
வலுவாகவே
இருந்தன.
அமெரிக்கா
படைபலத்தை
அதிகரித்த
அதே வேளை
தலிபான்களின்
தாக்குதலும்
அதிகரித்தது. படைத்தளம் உட்பட பல அமெரிக்க
இலக்குகள்
மீது தலிபான்கள்
தாக்குதலைத்
தீவிரப்படுத்தினார்கள்.
ஜூன் மாதத்தில்
மாத்திரம்
நூற்றுக்கு
மேற்பட்ட
அமெரிக்க
மற்றும் நேட்டோ துருப்புகள்
தலிபான்களின்
தாக்குதலில்
பலியாகினர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து
வெளியேறு
வதற்கான மூலோபாயம்
பற்றி லண்டன் மாநாட்டில்
ஆராய்வதற்கு
முன்னரே சில ஆலோசனைகள்
முன்வைக்கப்பட்டன. இந்தியாவுக்கான
முன்னாள்
அமெரிக்க
தூதுவர் றொபேட் பிளாக்வில் (Robert Blackwill) தெரிவித்த
ஆலோசனை விசேடமாகக்
குறிப்பிடத்தக்கது.
ஆப்
கானிஸ்தானை
இரண்டு நாடுகளாகப்
பிரிக்க வேண்டும் என்ற ஆலோசனையை
அவர் முன்வைத்தார். தலிபான்களின் பிரதான
ஆதரவாளர்களான
பஸ்தூன்கள்
செறிந்து
வாழும் தென்பகுதி
ஒரு நாடாகவும்
வடக்கும்
மேற்கும்
இன்னொரு நாடாகவும்
அமைய வேண்டும்
என்பது அவரது ஆலோசனை.
இந்த ஆலோசனைக்குப்
பாகிஸ்தான்
ஆரம்பத்திலேயே
வன்மையாக
எதிர்ப்புத்
தெரிவித்தது.
பாகிஸ்தானில் இரண்டு
கோடியே ஐம்பது இலட்சம் பஸ்தூன்கள்
வாழ்கின்றனர்.
இவர்கள் தலிபான்களுடன்
சேர்ந்து
விசாலமான
‘பஸ்தூன்தான்’
அமைப்பதற்கு
முயற்சிக்கலாம்
என்பது பாகிஸ்தானின்
அச்சம். ஆப்கானிஸ்தானில்
இந்திய செல்வாக்கு
இடம்பெறுவதைத்
தவிர்ப்பது
பாகஸ்தானின்
பிரதான குறிக்கோள். அதற்காகப் பாகிஸ்தான்
தலிபான்களைப்
பயன்படுத்துகின்றது.
தலிபான்களின் பங்களிப்புடன்
ஆப்கானிஸ்தானில்
அமைதி ஏற்படும் பட்சத்தில்
பாகிஸ்தான்
அங்கு தனது செல்வாக்கை
வலுப்படுத்த
முடியும்.
ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில்
தலிபான்களுக்குத்
தனியான ஒரு நாடு
அமைவது ஆப்கானிஸ்தானைத்
தனது செல்வாக்கு
வட்டத்துக்குள்
வைத்திருக்க
வேண்டும்
என்ற பாகிஸ்தானின்
எதிர்ப்பார்ப்புக்குப்
பொருத்தமானதல்ல.
அத்தோடு, வடக்கில் அமையும் நாட்டில் இந்தியாவின்
செல்வாக்கு
அதிகரிப்பதற்கும்
இடமுண்டு.
ஆப்கானிஸ்தானில்
அமைதியை ஏற்படுத்துவதற்காக
இந்தியாவும்
பாகிஸ்தானும்
கூட்டாகச்
செயற்பட வேண்டும் என்று ஒரு
கட்டத்தில்
அமெரிக்கா
வேண்டுகோள்விடுத்தது. இதற்கமைய, ஆப்கானிஸ்தான்
தொடர்பாகப்
பாகிஸ்தானுடன்
பேசுவதற்குத்
தயார் என்று ஜூன்
மாதத்தில்
இந்தியா கூறியதைப்
பாகிஸ்தான்
ஏற்கவில்லை.
ஆப்கானிஸ்தானில் அமைதியை
ஏற்படுத்துவதற்குத்
தனியாகவே
தன்னால் முடியும் எனக் கூறிவிட்டது.
ஆப்கான் விவகாரத்திலிருந்து
இந்தியாவை
ஒதுக்கி வைப்பதில்
பாகிஸ்தான்
எவ்வளவு தீவிரமாக இருக்கின்றது
என்பதை இதிலிருந்து
புரிந்து
கொள்ளலாம்.
ஆப்கானிஸ்தான் யுத்தத்தில்
அமெரிக்காவும்
நேட்டோ நாடுகளும்
வெற்றியீட்ட
முடியாது
என்பது இப்போது தெளிவாகிவிட்டது.
இந்த நிலையில்
வெளிநாட்டுத்
துருப்புக்கள்
அங்கிருந்து
வெளியேறிச்
செல்வது நாட்டைத் தலிபான்களிடம்
கையளிப்பதற்குச்
சமன். தலிபான்களுடன் பேசிச்
சமரசரத் தீர்வொன்றுக்கு
வர வேண்டியதன்
அவசியத்தை
இப்போது எல்லோரும்
உணர்கின்றனர்.
இந்த
விடயத்தில்
பாகிஸ்தான்
வகிக்கக்
கூடிய பாத்திரம்
மிகவும் முக்கியமானது. தலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே
‘நேச உறவு’
இல்லாத போதிலும், பாகிஸ்தானை
மீறிச் செயற்படும்
நிலையில்
அவர்கள் இல்லை. கர்ஸாய்
முன்னர் இந்தியாவுடன்
நெருக்கமான
உறவு வைத்திருந்தார். ஆப்கானிஸ்தானின் உள்விவகாரங்களில்
பாகிஸ்தான்
தேவையில்லாமல்.
தலையிடுகின்றது என்று குற்றஞ்சாட்டி
வந்தார்.
அவரும் இப்போது
பாகிஸ்தான்
பக்கம் திரும்புகின்றார்.
தலிபான்களுடன் தொடர்பை
ஏற்படுத்துவதற்குப்
பாகிஸ் தானை நாட
வேண்டியதன்
அவசியத்தைப்
புரிந்து
கொண்டதாலேயே
இந்த மனமாற்றம்.
கர்ஸாயின்
அரசாங்கத்திலுள்ள
தலிபான் எதிர்ப்பாளர்கள்
அவரது புதிய நிலைப்பாட்டை
விரும்பவில்லை. புலனாய்வுப்
பிரிவுத்
தலைவர் அம்ருல்லா
சாலேயும்
(Amrullah Saleh) உள்துறை அமைச்சர் ஹனிஃப் அமீரும் ((Hanif Amir) தலிபான்களுடன்
தொடர்பு ஏற்படுத்துவதற்கு
எதிர்ப்புத்
தெரிவித்துத்
தங்கள் பதவிகளை ஜூன் மாத
முற்பகுதியில்
இராஜினாமாச்
செய்தனர்.
யதார்த்தத்தை
இவர்கள் விளங்கிக்
கொள்ளவில்லை.
தலிபான்கள்
மீது கொண்ட
வெறுப்பை
முன்னிலைப்படுத்தி
னால் நாட்டில்
இரத்த ஆறு ஓடுவதைத்
தவிர்க்க
முடியாது
போய்விடும்.
ஆப்கானிஸ்தான் சமாதான முயற்சியில்
தலிபான் களைச் சம்பந்தப்படுத்
துவது தவிர்க்க முடியாததெனி
னும், அவர்
களைப் பேச்சு வார்த்தை மேசைக்கு வரச்செய்வது
லேசான காரியமாக இல்லை. வெளிநாட்டுத்
துருப்புகள்
நாட்டை விட்டு வெளியேறும்
வரை பேச்சுவார்த்தைக்குச்
செல்வதில்லை
என்பதில்
தலிபான்கள்
உறுதியாக
இருக்கின்றனர். பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு காண்பதற்கு
முன் வெளிநாட்டுத்
துருப்புகள்
வெளியேறினால்
பேச்சுவார்த்தை
என்ற கதையே
இருக்காது.
தலிபான்கள் ஆட்சியில்
அமர்ந்து
விடுவார்கள்.
வெளிநாட்டுப்
படைகள் வெளியேறாதிருக்கையில்
தலிபான்கள்
பேச்சக்கு
வர வேண்டுமானால்,
தாங்கள் தோல்வியடைவதாக
அவர்கள் கருதும் நிலை உருவாக
வேண்டும். அந்த நிலையை
உருவாக்கும்
நோக்கத்துடன்
அமெரிக்கா
படைபலத்தை
அதிகரித்த
போதிலும்
விளைவு எதிர்மாறாகவே
இருந்தது.
அதேநேரம்,
தங்கள் படைகளை வாபஸ் பெறப்போவதாக
நோட்டோ நாடுகள் அடிக்கடி கூறி வருவது
யுத்தத்தில்
வெல்ல முடியாது என்ற அவர்களின்
மனோநிலையை
வெளிப்படுத்துவதால்
அதுவும் தலிபான்களின்
நிலைப்பாட்டை
வலுப்படுத்துகின்றது.
தர்மசங்கடமான
நிலையில்
அமெரிக்கா. யுத்தத்தை நடத்தவும்
முடியாது.
கைவிடவும் முடியாது.
யுத்தத்தைக் கைவிட்டு
வெளியேறுவது
தலிபான்களிடம்
நாட்டை ஒப்படைப்பதாகிவிடும்.
அது சர்வதேச
மட்டத்தில்
அமெரிக்காவுக்குத்
தலைகுனிவு.
வெல்ல முடியாத யுத்தத்துக்காகத்
தொடர்ந்து
பெருமளவு
செலவு செய்துகொண்டும்
படையினரைப்
பலிகொடுத்துக்கொண்டும்
இருப்பது
அமெரிக்காவில்
எதிர்விளைவை
ஏற்படுத்தும்.
தலிபான்களுடன்
உடன்பாடு
கண்டு வெளியேறுவதைத்
தவிர வேறு
வழி இல்லை. பாகிஸ்தானே தஞ்சம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |