|
||||
|
விவசாயிகளின் பிரச்சினைக்கு
தீர்வு காண்பது அவசியம்
கிழக்கில் இம்முறை
அமோக நெல்
அறுவடை கிடைத்துள்ளது. அங்கு நெல் அறுவடை தற்போது முடிவுறும்
கட்டத்துக்கு
வந்துள்ளது.
தாங்கள் எதிர்பார்த்ததைப்
பார்க்கிலும்
கூடுதலான
விளைச்சல்
கிடைத்திருப்பதாக
விவசாயிகள்
மகிழ்ச்சியுடன்
கூறுகின்றனர்.
யுத்தம் ஓய்ந்த
பின்னர் கிழக்கின்
அனைத்து வயல் பிரதேசங்களிலும்
வேளாண்மைச்
செய்கையில்
ஈடுபடக் கூடிய சூழல்
தற்போது உருவாகியிருக்கிறது.
இதுவே முதன்மைக்
காரணம் ஆகும். மட்டக்களப்பு, அம்பாறை,
திருகோணமலை
ஆகிய மாவட்டங்களின்
வயல் பிரதேசங்கள்
அன்றைய காலப் பகுதியில்
புலிகளின்
நடமாட்டமுள்ள
இடங்களாகவே
இருந்தன.
விவசாயிகள்
நிம்மதியாக
நெற்செய்கை
மேற்கொள்வதற்கு
அக்காலப்
பகுதியில்
புலிகள் இடமளிக்கவில்லையென்பது
வெளிப்படையாகத்
தெரிந்த விடயம்...... தமிழ், முஸ்லிம்,
சிங்கள விவசாயிகள்
அனைவருமே
இப்பிரச்சினையை
எதிர்கொண்டனர்.
புலிகள் தங்களது
பிரதேசங்களில்
விவசாயிகளின்
காணிகள் பலவற்றை பலவந்தமாகச்
சுவீகரித்து
தங்களுக்கு
நெருக்கமானவர்களுக்கு
விவசாயம்
செய்வதற்காகக்
கையளித்தனர். வயல் சொந்தக்காரர்கள்
நியாயம் கேட்பதற்கு
புலிகள் இடமளிக்கவில்லை.
வயல் பிரதேசங்களில்
புலிகள் தாங்கள் நினைத்தபடி
நிர்வாகம்
நடத்தியதனால்
தமிழ், முஸ்லிம் விவசாயிகள்
பலர் தசாப்த
காலமாக தங்களது வயல் காணிகளை
கண்ணால் காண முடியாதிருந்தது. அதேசமயம் எல்லைப்
புறங்களில்
நெற்செய்கையில்
ஈடுபட்டு
வந்த சிங்கள
விவசாயிகள்
கூட புலிகளின்
அச்சம் காரணமாக தங்களது வயல் நிலங்களைக்
கைவிட்டு
இடம்பெயர
வேண்டியிருந்தது.
இவையெல்லாம் போதாதென்று
கிழக்கில்
விவசாயிகள்
அனைவரும்
புலிகளுக்கு
வரியும் கப்பமும் செலுத்த வேண்டிய அராஜக சூழலொன்று
அன்றிருந்தது. அறுவடை செய்யப்பட்ட
நெல்லின்
அளவைப் பொறுத்து ஒவ்வொரு விவசாயியும்
புலிகளுக்கு
வரி செலுத்த
வேண்டியது
அக்காலப்
பகுதியில்
கட்டாயமாகும்.
விவசாயியொருவர் உழவு இயந்திரம்
வைத்திருந்தால்
அதற்கென வேறாக வரி
செலுத்த வேண்டியிருந்தது.
இவ்விதமாக விவசாயிகள்
தங்களது வருமானத்தின்
ஒரு பகுதியை
வீணாக புலிகளுக்குச்
செலுத்த வேண்டிய கட்டாயம் இருந்ததாலும்
நெற்காணிகள்
பறிக்கப்பட்டதாலும்
வேளாண்மைச்
செய்கையென்பது
அக்காலத்தில்
வெறுக்கப்பட்டதாகவே
இருந்தது.
விவசாயிகளின் அத்தனை
பிரச்சினைகளுக்கும்
யுத்தம் ஓய்ந்தபின்னர்
முழுமையான
தீர்வு கிடைத்தது. கப்பம், வரி என்ற பேச்சுகளெல்லாம்
தற்போது அங்கு கிடையாது.
தமிழ், முஸ்லிம்
விவசாயிகளெல்லாம்
தங்களது நெற்காணிகளில்
நீண்ட காலத்தின்
பின்னர் அச்சமின்றி
வேளாண்மைச்
செய்கையில்
ஈடுபடுகின்றனர்.
கைவிடப்பட்ட நிலையிலான
வயல் காணிகளே
தற்போது அங்கு இல்லை
எனலாம்.
விவசாயிகள் எதிர்நோக்கும்
நீர்ப்பாசனப்
பிரச்சினைகளும்
துரிதமாகத்
தீர்க்கப்பட்டு
வருகின்றன. இத்தகைய சாதகமான
நிலைமை காரணமாக கிழக்கு விவசாயிகள்
தற்போது அமோகமான நெல் விளைச்சலைப்
பெற்று வருகின்றனர்.
கிழக்குப் பிரதேசமானது
‘இலங்கையின்
நெற்களஞ்சியம்’
என்ற பெயருக்கு
மீண்டும்
உரித்தாகியுள்ளது.
இத்தனைக்கும் அப்பால்
கிழக்கில்
விவசாயிகள்
மத்தியில்
தற்போது பெரும் கவலையொன்று
நிலவுகிறது. தாங்கள் சிரமப்பட்டு
செய்கை பண்ணி அறுவடை
செய்த நெல்லை நியாயமான விலைக்கு விற்பனை செய்ய முடியவில்லையென்ற
ஏக்கம் அவர்கள் மத்தியில்
உள்ளது.
ஒருகிலோ சிவப்புச்
சம்பா நெல் முப்பது
ரூபாவுக்கும்
வெள்ளைச்
சம்பா நெல் இருபத்தெட்டு
ரூபாவுக்கும்
விவசாயிகளிடமிருந்து
கொள்வனவு
செய்யப்பட
வேண்டுமென்பதே
அரசாங்கத்தின்
அறிவிப்பாகும்.
எனினும் விவசாயிகளின்
அறுவடை நெல் அத்தனையையும்
அரசாங் கத்தினால்
கொள்வனவு
செய்ய முடியாத சிக்கல் நிலைமையொன்று
உள்ளது. விவசாயி ஒருவரிடமிருந்து
ஒரு ஏக்கர்
விளைச்சலில்
பதினைந்து
மூடை நெல்
மாத்திரமே
இவ்விதம்
கொள்வனவு
செய்யப்படுகிறது.
களஞ்சிய வசதி போதாமை மற்றும் நெல் கொள்வனவுக்காக
ஒதுக்கப்பட்ட
நிதி போதாமை
போன்றவை இந்நிலைமைக்குக்
காரண மெனக்
கூறப்படுகிறது.
அரசாங்கத்துக்கு விற்பனை
செய்ய முடியாத நெல்லை விவசாயிகள்
தனியாருக்கே
விற்பனை செய்ய வேண்டியுள்ளது. தனியார் வியாபாரி
கள் இச்சந்தர்ப்பத்தை
தங்களுக்கு
வாய்ப்பாகப்
பயன்படுத்திக்
கொள்ளப் பார்க்கின்றனர்.
விவசாயிகளிடமிருந்து மிக மலிவான விலைக்கு நெல்லை வாங்குகின்றனர்.
நெற்செய்கைக்காக வங்கிகளில்
கடன் பட்டும்
நகைகளை அடகு வைத்தும்
பணத்தை முதலீடு செய்த விவசாயிகளுக்கு
இப்போது வேறு வழி
கிடையாது. தாங்கள் பெற்றுக்கொண்ட
கடனில் இருந்து மீள வேண்டுமாயின்
தங்களது அறுவடை நெல்லை குறைந்த விலைக்காவது
விற்க வேண்டிய அவசரத்தில்
விவசாயிகள்
உள்ளனர்.
விவசாயிகளைப் பாதிக்கின்ற
இந்நிலைமை
பரிதாபமானது. பெரும் சிரமப்பட்டு
உழைத்த விவசாயி பாதிக்கப்படுகையில்,
சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக்கொண்டு
நெல் வியாபாரிகள்
குறுகிய காலத்திற்குள்
பெரும் வருமானம் ஈட்டுவதை அனுமதிக்கலாகாது.
விவசாயிகளின்
நலன் கருதி
துரிதமாகத்
தீர்வு காண வேண்டிய
பிரச்சினை
இது! (தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |