Contact us at: sooddram@gmail.com

 

இடம்பெயர்ந்தோரின் துயரத்தை அரசியலாக்கக் கூடாது

மீள் குடியேற்றம் தொடர்பாக நேற்றைய பத்திரிகை களில் வெளியாகிய இரண்டு செய்திகள் இவ்விட யத்தில் அக்கறை உள்ளவர்களின் முக்கிய கவனத் துக்குரியவை. கிளிநொச்சி மாவட்டத்தின் ஆறு கிராம சேவகர் பிரிவு களில் நேற்று மீள்குடியேற்றம் நடைபெற்றதென்பது ஒரு செய்தி. இடம்பெயர்ந்தவர்களில் தொண்ணூறு வீதமா னோர் மீள்குடியேற்றப்பட்டுவிட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கூறியிருப்பது மற்றைய செய்தி.

இடம் பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்ற விவகாரத்தை அர சாங்கத்துக்கு எதிரான பிரதான பிரசார ஆயுதமாகச் சில அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்ற பின்னணியில் இவ் விரு செய்திகளும் வெளியாகியிருப்பது அப் பிரசாரம் அரசியல் நோக்கம் கொண்டது என்று அரச தரப்பினர் கூறுவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இடம் பெயர்ந் தவர்களின் மீள்குடியேற்றம் உடனடியாகச் சில வீடுக ளைக் கட்டி மக்களைக் குடியமர்த்தும் அளவுக்கு இலகு வானதல்ல. உக்கிரமான சண்டை நடைபெற்ற பகுதியி லேயே மீள்குடியேற்றம் நடைபெற வேண்டியிருப்பது அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய பிரதான விடயம்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பாதுகாப் புச் செயலாளர், யுத்தத்தில் ஆறாயிரம் படையினர் மர ணமடைந்ததாகவும் கிட்டத்தட்ட முப்பதாயிரம் படையி னர் காயமடைந்ததாகவும் கூறியிருக்கின்றார். யுத்தம் எவ் வளவு உக்கிரமாக நடைபெற்றது என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். அதேபோல், எத்தனை கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்பதையும் உட்கட் டமைப்பு வசதிகளில் எவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்க லாம் என்பதையும் விளங்கிக்கொள்ள முடியும்.

வகைதொகையின்றிக் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக் கின்றன. ஏறக்குறைய எல்லா உட்கட்டமைப்பு வசதிக ளும் சேதமாகிவிட்டன. இந்த நிலையில் உடனடியாக மீள்குடியேற்றத்தைச் செய்வதென்பது இயலாத காரியம். கண்ணிவெடிகளை அகற்றுவதும் உட்கட்டமைப்பு வசதி களை மீளக் கட்டியமைப்பதும் மீள் குடியேற்றத்துக்கு அத்தியாவசியமான முன்தேவைகள். இந்த முன்தேவை களைப் பூர்த்தி செய்துகொண்டே மீள்குடியேற்றம் மேற் கொள்ளப்படுகின்றது. இதனால் சிறிதளவு தாமதம் ஏற் படுவது தவிர்க்க முடியாதது.

இடம் பெயர்ந்தவர்களில் தொண்ணூறு வீதத்தினர் மீளக் குடியமர்த்தப்பட்டுவிட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி கூறுவது மீள்குடியேற்றச் செயற்பாடு திருப்திகரமாக நடைபெறுகின்றது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. கிளிநொச்சியில் ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் நேற்று நடைபெற்ற மீள்குடி யேற்றம் தொடர்ச்சியான செயற்பாட்டின் ஒரு அம்சமே. வன்னியில் பல கிராம சேவகர் பிரிவுகளில் ஏற்கனவே மீள்குடியேற்றம் இடம் பெற்றுவிட்டது.

அரசாங்கம் மீள்குடியேற்றத்தில் அக்கறை செலுத்தவில்லை என்று எதிரணிக் கட்சிகள் செய்யும் பிரசாரம் இடம் பெய ர்ந்த மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையை வெளிப் படுத்தவில்லை. இது இடம்யெர்ந்த மக்களைத் தவறாக வழிநடத்தி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தையே வெளிப்படுத்துகின்றது.

இடம் பெயர்ந்திருக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியவர்கள். அவர்களின் துயரத்தை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தாமல் மீள்குடியேற்றத்தை மேலும் துரிதப்படுத்துவதற்கு அரசாங்கத்துடன் ஒத்து ழைப்பது தான் அம் மக்கள் மீதுள்ள உண்மையான அக்கறையாகும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com