|
||||
|
மனித ஆய்வுக்கு
எட்டாத தொலைவில்
நட்சத்திரங்கள்
நாம் இரவு நேரங்களில்
திறந்தவெளியில்
நின்றவாறு
வானத்தை உற்று நோக்கினால்
கோடான கோடி நட்சத்திரங்கள்
கண்சிமிட்டுவதைக்
காணலாம்.
ஒரு டெலஸ்கோப்
மூலம் அவற்றை உன்னிப்பாகக்
கவனித்தால்
பல்வேறு நட்சத்திரக்
கூட்டங்கள்
தென்படலாம்.
மேலும் அதி சக்திவாய்ந்த
தொலைநோக்கி
வாயிலாக துல்லியமாக
அவதானித்தால்
இன்னும் பல்லாயிரக்
கணக்கான விண்மீன்கள்
தெட்டத் தெளிவாகத்
தெரியும்
என்பது நிதர்சனமாகும்.
ஏலவே ஆகாயத்தில்
பரிணமித்துள்ள
நட்சத்திரக்
கூட்டங்கள்
எல்லைகள்
இல்லாமல்
பரந்து காட்சியளிக்கின்றனவா?
அல்லது அவற்றின்
தொகைக்கு
ஓர் எல்லைக்
கட்டுப்பாடு
உண்டா? என்ற வினாவிற்கு
விடையளிக்கும்
முகமாக விண்ணியலாளர்
சில அதிசயிக்கத்தக்க
உண்மைகளைக்
கண்டறிந்தனர்.
நமக்கு நேரடியாகத்
தெரிகின்ற
நட்சத்திரங்களும்
பார்வைக்குத்
தென்படாத
பல லட்சக்கணக்கான
விண்மீன்களும்
ஒன்றிணைந்து
விசித்திரமான
தோற்றத்தைத்
தருகின்றன.
ஆகவே நட்சத்திரக்
கூட்டங்களின்
எண்ணிக்கை,
இடப்பட்ட
நாமங்கள்,
புவியில்
உள்ளவர்களுக்குத்
தெரியக்கூடிய
தோற்றங்கள்
என்பவை பற்றி விரிவாக
ஆராய்வது
இங்கு உசிதமாகும்.
நட்சத்திரங்களின் தூரங்களை
ஒளியாண்டு
அலகிலேயே
கூறுவது வழக்கம்.
பூமிக்கு மிக அண்மையில்
நிலை கொண்டுள்ள
அல்பா சென்றோறி என்ற விண்மீனிலிருந்து
புறப்படுகின்ற
ஒளி நம்மை
வந்தடைய நான்கு அரை ஆண்டுகள்
செல்லும்.
ஆகவே அதன் தூரத்தை நான்கு அரை ஒளி
ஆண்டு எனக் கணிக்கப்படுகின்றது.
விண்மீன்கள் அநேகமாகக்
கூட்டம் கூட்டமாகவே
காட்சி தருகின்றன.
சில நட்சத்திரங்கள்
சிறிய கூட்டங்களாகவும்
சில பெரிய
கூட்டங்களாகவும்
தென்படுகின்றன.
இவற்றை மிகவும்
அவதானமாக
கவனித்தால்
சில சில
உருவங்களைக்
கொண்டிருப்பதையும்
காணலாம்.
எனவே, புராதன
மக்கள் இவ்வுருவங்களைக்
கொண்டு இவற்றுக்கு
கரடி, சிங்கம்,
இடபம், தேள், மீன்
என்றெல்லாம்
பெயர் சூட்டினர்.
மேற்கூறிய விண்மீன்
கூட்டங்கள்
யாவும் பல நூற்றாண்டுகளாக
மாற்றமடையாமல்
அதே தோற்றத்துடன்
அமைந்துள்ளன.
இவ்விண்மீன்கள் அசையாமல்
அப்படியே
இருப்பது
போலவே தோன்றுகின்றன.
ஆனால் விண்மீன்
அதிவேகத்துடன்
அசைந்து கொண்டிருக்கின்றன.
சமுத்திரத்தில் ஒரு கப்பல் தொலைதூரத்தில்
பயணித்துக்
கொண்டிருக்கும்
போது அது
அசையாமல்
நிரந்தரமாக
நிற்பதைப்
போன்று துறைமுதக்தில்
நிற்பவர்களுக்கு
காட்சிதரும்.
ஆகவே, நட்சத்திரங்களும்
நம்மிலிருந்து
மிகத் தொலைவில் இருக்கிறபடியால்
அவற்றின்
அசைவு நமது கண்களுக்குத்
தெரிவதில்லை.
இரவு நேரங்களில்
ஆகாயத்தில்
பூத்துக்
குலுங்கியுள்ள
நட்சத்திரங்களுடன்
எதேச்சையாக
இரண்டொரு
கோள்களும்
காட்சியளிக்கும்.
இவற்றை எப்படிச்
சுலபமாகக்
கண்டுபிடிப்பது?
என்பதைப் பார்ப்போம்.
சூரியனைப் பேலவே விண்மீன்களுக்கும்
தம்சுய ஒளியுடன் பிரகாசிக்கின்றன.
ஆனால் கிரகங்களுக்கு
சுயமான ஒளியில்லை.
கதிரவனின் ஒளி இவற்றில் விழுந்து தெறிப்பதினாலேயே
இக்கோள்களை
நாம் இனங்காணங்
கூடியதாகவுள்ளது.
இவை விண்மீன்களைப்
போல விட்டுவிட்டு
மின்னாமல்
ஒரே ஒளியுடனே
காணப்படும்.
முதல்தர விண்மீன்கள்
- இவை வேறு
கூட்டங்களில்
இருந்தாலும்
இவற்றுக்குத்
தனிப் பெயர்கள் இடப்பட்டுள்ளன.
சிரியஸ், றைகல், கட்பெலா, வேகா, பீற்றில்
ஜியுஸ், ஆல்டபிரான்,
ஸ்பைக்கா,
பொலக்ஸ், றெகுலஸ் என்பன பிரசித்தி
பெற்ற நட்சத்திரங்கள்
ஆகும். நட்சத்திரக் கூட்டங்களுக்கு
அவற்றின்
உருவங்களுக்கு
ஏற்ப முன்னோர்கள்
நாம மிட்டனர்
என்று ஆரம்பத்தில்
அறிந்தோம்.
சில உருவங்கள்
அவ்வளவு தெளிவாகக்
காண முடியாது.
எல்லாமாக எண்பத்தெட்டு
உடுக்குக்
கூட்டங்களுக்கு
பெயர்கள்
இடப்பட்டுள்ளன.
சூரியன் நாள் தோறும் புவியைச் சுற்றி வருவது போல காட்சியளிக்கும்
பாதையை ஒட்டி பன்னிரெண்டு
உடுக்குக்
கூட்டங்கள்
இருக்கின்றன.
இவற்றை மேடம், மிதுனம், கற்கடகம், சிங்கம், கன்னி, துலாம்,
விருச்சிகம்,
தனு, மகரம்,
கும்பம், மீனம், விருஷபம்
என்று பட்டியலிட்டுள்ளனர்.
இவற்றைப் பன்னிரெண்டு
ராசிகள் என்றும் கூறுவர். பூமி சூரியனைச்
சுற்றிவர
ஒரு ஆண்டு
செல்கின்றது.
ஆகவே, ஒவ்வொரு
மாதமும் ஒவ்வொரு ராசியில் நிற்பதாகக்
காட்சியளிக்கும்.
இப்பன்னிரெண்டு தொகுதிகளையும்
மேலும் இருபத்தேழு
சிறு தொகுதிகளாகப்
பிரித்து
அவற்றை அஸ்வினி முதலிய இருபத்தேழு
நட்சத்திரங்கள்
என்பர். சந்திரன் ஒரு முறை பூமியை
வலம் வர
சுமார் இருபத்தேழு
நாட்கள் செல்கின்றன.
ஆகவே, அது தினமும் இவ்விருபத்தேழு
தொகுதிகளில்
ஒன்றைச் சராசரி கடக்கின்றது.
சந்திரன் ஒரு நாளில் எந்த நட்சத்திரத்தில்
நிற்கின்றதோ
அதையே அன்றைய நட்சத்திரம்
என்பர். இந்நட்சத்திரக் கூட்டங்களுக்கு
புராணங்களில்
வரும் மக்களினதும்
விலங்கினதும்
பெயர்களைச்
சூட்டியுள்ளனர்.
சந்திரன் இல்லாத
இரவுளில்
பரந்த வெளியில் நின்று வானத்தை நோக்கினால்
பல நட்சத்திரக்
கூட்டங்கள்
நன்றாகத்
தெரியும்.
இனி சில கூட்டங்கள்
பற்றி விரிவாக அறிவோம். உடுக்கூட்டங்கள் எல்லாவற்றிலும்
ஒறயன் என்பதே மிகவும் கம்பீரமானது.
இதனை இனங் காண்பதும்
மிகவும் எளிது ஆகும்.
இதன் மத்தியில்
மூன்று விண்மீன்கள்
ஒரே கோட்டில்
சமதூரங்களில்
குறூகிய இடைவெளியில்
கட்டப்பட்ட
ஒருபட்டி
போன்று தெரிகின்றது.
ஒறயனுக்கு சமீபத்தில்
மிகவும் பிரகாசமான
ஒரு விண்மீன்
உள்ளது.
இதனையே சிரியஸ்
என்பர். சுமார் எட்டரை
ஒளியாண்டு
துரத்தில்
உள்ள இது
சூரியனைப்
போல் இருபத்தாறு
மடங்கு பிரகாசமானது.
இது கிழக்கில்
உதித்து மேற்கில் மறையும். டிசம்பர் மாதமுதல்
மார்ச்சு
மாத இறுதிவரை
வானில் காணலாம். இனி சப்த ரிஷி மண்டலம்
தொடர்பாக
சிறிது ஆராய்வோம்.
வடக்கு திசையில்
ஏழு விண்மீன்கள்
கைப்பிடியுள்ள
ஒரு கோப்பை
போலத் தெரியும்.
இதனை ஆங்கிலத்தில்
ஏர் (ஜிழிலிஸிமிசி)
என்றும் பெரும்கரடி
என்றும் அழைப்பர்.
இந்துக்கள் இதனை ஏழு ரிஷிகளாகக்
கருதுகின்றனர்.
எனவே இத்தொகுதியை
சப்த ரிஷி
மண்டலம் என்பர். இதன் கைப்பிடி
போன்ற பகுதியிலுள்ள
மூன்று விண்மீன்களில்
மத்தியில்
உள்ளதை வசிஷ்டர் என்பர்.
ஆங்கிலத்தில் இது மிஸார் எனப்படும்.
மிகவும் நன்கு அவதானித்தால்
இதன் அருகே
ஒரு சிறு
நட்சத்திரம்
மங்கலாகத்
தெரியும்.
இதுவே திருமண காலங்களில்
மணமக்களுக்கு
காட்டப்படும்
அருந்ததி!
ஆகும். இதனை அல்கோர்
என்பர். கண் வைத்தியர்களின்
பரிசோதனைக்
கருவிகள்
கண்டுபிடிப்பதற்கு
முன் இந்த
அருந்ததியைப்
பார்ப்பது
ஒரு கண்
பரிசோதனையாகக்
கொள்ளப்பட்டது.
இதைப் பார்க்கக்
கூடிய ஒருவரின் கண் பார்வையில்
ஒரு குறையும்
என்று சான்றிதழ்களும்
வழங்கப்படுகின்றன.
முக்கோண
வடிவிலுள்ள
நான்கு நட்சத்திரங்களில்
முதலிரண்டையும்
இணைத்து நீட்டினால்
இவற்றின்
இடைத் தூரத்தின்
சுமார் ஐந்து மடங்கு
தூரத்தில்
துருவ நட்சத்திரத்தைக்
காணலாம். பூமி தன்னைத்
தானே சுற்றும்
கற்பனை அச்சு இந்த
விண்மீனையே
நோக்கி இருக்கும்.
எனவே பூமியை
வட துருவத்தில்
நின்று பார்த்தால்
இது வானில்
உச்சியில்
தெரியும்.
பெருங் கரடியைப்
போலவே ஏழு விண்மீன்களைக்
கொண்ட ஒரு சிறு
தொகுதி, துருவ நட்சத்திரத்தை
கொண்ட ஒரு சிறு
தொகுதியையே
சிறுகரடி
என்பர்.
இதிலுள்ள நட்சத்திரங்கள்
அவ்வளவு பிரகாசமானவை
அல்ல. துருவ நட்சத்திரத்தின்
ஒரு பக்கத்தில்
பெருங்கரடி
நிலை கொண்டுள்ளதைப்
போன்று அதன் எதிரில்
கசியோப்பியா
இருக்கிறது.
ஆகவே இவற்றில்
ஒன்று காலையில் தெரிந்தால்
மற்றயது மாலையில் தெரியும்.
இது டபிள்யூ
என்ற ஆங்கில
எழுத்துப்
போல் அமைந்திருக்கிறது.
ஆகஸ்ட் மாதத்திலிருந்து
டிசம்பர்
வரை இரவு
வேளைகளில்
வடக்கு வானில் காணலாம். நட்சத்திரக் கூட்டங்களில்
மிகவும் சிறியதாகிய
தென் சிலுவை
தெற்கு திசையில் மிகவும் அழகாக காணப்படும்.
இதனை இணைத்து
நீட்டினால்
ஏறக்குறைய
தென் துருவத்தை
வந்தடையும்.
ஆனால் வட துருவத்தில்
துருவ நட்சத்திரம்
இருப்பது
போலத் தென் துருவத்தில்
பிரகாசமான
ஒரு நட்சத்திரமும்
கிடையாது.
இறயனுக்க ஒரு பக்கத்தில்
சிரியஸ் காணப்பட நேர் எதிரே
இடபம் என்னும் தொகுதி இருக்கிறது.V
என்ற ஆங்கில
எழுத்து போன்ற சிறிய
கூட்டமே இதன் முக்கிய
உறுப்பாகும்.
இத்தொகுதியில் மிகவும்
பிரகாசமான
விண்மீன்
அல்டபரன்
எனப்படும்.
இது ஒரு பிரமாண்டமான
நட்சத்திரம்.
சூரியனைவிட முப்பத்தாறு
மடங்கு விட்டமும்
நூறு மடங்கு
பிரகாசமும்
உடையது. ஐம்பத்தைந்து ஒளியாண்டு
தொலைவில்
உள்ளது. ஒக்டோபர் முதல் மார்ச் வரை வானில்
காணலாம்.
இத்தொகுதிக்கு அருகே மிகவும் மங்கலான விண்மீன்களைக்
கொண்ட ஒரு சிறிய
தொகுதி காணப்படும்.
உற்று நோக்கினால்
இதில் ஆறு விண்மீன்கள்
தெரியும்.
இத்தொகுதியை பிளேடீஸ்
என்பர். இதனையே ஆறு கார்த்திகைப்
பெண்கள் கூடிய கார்த்திகை
நட்சத்திரம்
என்று கூறுவர். இதனை இரட்டையர்
என்றும் அழைப்பர்.
இரு பிரகாசமான
நட்சத்திரங்கள்
இவற்றின்
தலைகளாக அமைகின்றன.
யுரேனஸ் என்ற கிரகம் இந்த உடுக்குத்
தொகுதிக்கு
ஊடாக சென்று
கொண்டிருக்கும்
போதே கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தொகுதியை டிசம்பர்
முதல் மே மாதம்
வரை காணலாம்.
சிங்கம் தொகுதியில்
மூன்று பிரகாசமான
உடுக்குகள்
இருக்கின்றன.
இவற்றுள் மிக ஒளி மிகுந்தது
றெகுலஸ்.
இது சூரியனும்
ஏனைய கிரகங்களும்
செல்லும்
பாதையிலே
உள்ளது. சந்திரன் சில வேளைகளில்
இந்த வீண்மீனை
மறைக்கும்.
அப்போது அது ஒரு நல்ல
காட்சியாக
இருக்கும்.
சப்த ரிஷி மண்டலம் தெரியும் போது இந்த
நட்சத்திரத்தைக்
கண்டுபிடிப்பது
சுலபம். விருச்சிகம் ராசித்
தொகுதியில்
மிகவும் அழகான தோற்றத்தை
உடையது விருச்சிகமாகும்.
இரு கோடுகளையும்
வளைந்த வாலையும் கொண்டது. பார்ப்பதற்கு ஒரு தேளைப் போலவே காட்சியளிக்கும்.
யூலை ஆகஸ்ட்
மாதங்களில்
இது தெளிவாகத்
தெரியும்.
நமது புலன்களுக்குத்
தோன்றும்
விண்மீன்களும்
நம் கண்களினாலோ
தொலைநோக்கியினாலோ
தனித்தனியாக
பிரித்துக்
காணாதபடி
பால் வழியில்
பொதிந்து
கிடக்கும்.
விண்மீன்களும் சேர்ந்து
உண்டாக்கியதே
உடுத்தொகுதியாகும்.
ஒளியாண்டு தொலைதூரத்தில்
நிலை கொண்டுள்ள
நட்சத்திரங்களின்
வியத்தகு
தோற்றங்கள்
எம்மை அதிசயிக்க
வைத்த வண்ணமே உள்ளன என்பது
வெள்ளிடைமலை.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |