போராட்டங்களில்
இடதுசாரிகளின்
முக்கியத்துவம்
(எம்.ஏ.பேபி)
ரஷ்யப்
புரட்சி-கிட்டத்தட்ட
72 முழு ஆண்டுகள்
வெற்றிகரமாக நடந்த
ஒரு சோஷலிச ஆட்சி,
தற்போது என்னவா
யிற்று? அதற்காக ரஷ்யப்புரட்சியே
தவறு என்று கூறிவிட
முடியுமா? அநீதிக்கு எதிராக
போராடுபவர்களுக்குரஷ்யப்புரட்சிஏராளமான
விஷயங்களை தந்துள்ளது.
சமத்துவ சமுதா
யத்தினை நிர்மாணிக்கப்
போராடுபவர்களுக்கு
ரஷ்யப்புரட்சியும்,
இது போன்ற ஒவ்வொரு
புரட்சியும் பாடமாக
அமைந்துள்ளன.
மேற்குவங்கத்திலேயே
கூட 1972 தேர்த லில்
கம்யூனிஸ்ட்டுகளின்
நிலை என்ன? தேர்தல் ஜனநாயகமே
வெறும் கண் துடைப்பு
வேலையாக நடத்தப்பட்டது.
அது வெளியில்
தெரியாமல் இருப்பதற்காக,
8 இடங்களில் சிபிஎம்
வெற்றி பெற்றதாக
அன்றைக்கு சித்தார்த்த
சங்கர்ரேயாலும்,
இந்திரா காந்தியாலும்
அறிவிக்கப்பட்டது.
ஆனால், 1977ல் நிகழ்ந்தது
என்ன? மிகப் பெரும்பான்மை
பலத்துடன் ஆட்சிக்கு
வந்த மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி
தலைமை யிலான இடதுசாரிகள்
கடந்த 34 வருடங்களா
கத் தொடர்ந்து
தேர்தலில் வெற்றிபெற்று,
ஆட்சியில் அமரவில்லையா?
மேற்குவங்கம்
என்பது நமக்கு
ஒரு முன்மாதிரி.
இன்றைக்கு
பலரும் கேரளாவில்
இடதுசாரி அரசாங்கத்
தின் மக்கள் நலத்திட்டங்கள்
குறித்தும், சாத
னைகள் குறித்தும்
பேசுகின்றனர்.
கேரளம், மேற்குவங்க
அனுபவத்தினைதான்
தனக்கு முன்மாதிரியாகக்
கொண்டு முன்னேறியது.
இதுவே தற்போதைய
இந்தியாவில் இடது
சாரிகளின் கொள்கை
- இடதுசாரி சித்தாந்
தம் பொருந்துவதற்கான
மிகச்சரியான எடுத்
துக்காட்டாகும்.
கடந்த மூன்று பத்தாண்டுகளாக
அமல் படுத்தப்பட்ட
உலகமயமாக்கல்,
தாராளமய மாக்கல்,
தனியார்மயமாக்கல்(எல்பிஜி) கொள்
கைகளின் காரணமாக
விளைந்தது என்ன?
‘இதற்கு மாற்றே
இல்லை’ (கூஐசூஹ)
என்று தம் பட்டமடிக்கப்பட்டது.
ஆனால், இன்றைக்கு
இதன் காரணமாக விளைந்தது
என்ன?
ஐக்கிய நாடுகள்
சபையின் அமைப்புக
ளில் ஒன்றான, அமெரிக்காவால்
கட்டுப்படுத்
தப்படும் சர்வதேச
தொழிலாளர் அமைப்பின்
நூறாவது மாநாடு
சமீபத்தில் ஜெனிவாவில்
நடைபெற்றது. அதில் நம்முடைய
இந்திய தொழிற்சங்க
மையத்தின் அகில
இந்திய தலைவர்
ஏ.கே.பத்மநாபன்
கலந்து கொண் டார்.
ஐஎல்ஓவின் 183 உறுப்பு
நாடுகளிட மிருந்து
சேகரிக்கப்பட்ட
புள்ளி விவரங்களின்
அடிப்படையில்
அது மூன்று முக்கியமான
விஷயங்களை தன்னுடைய
அறிக்கையில் சுட்டிக்
காட்டியுள்ளது.
உலகம் முழுவதும்
கடந்த 30 ஆண்டுகளில்
வேலை வாய்ப்பின்
மை என்பது பெருகியுள்ளது.
தொழிலாளர்
களுக்கான கூலி
மற்றும் ஊதியம்
குறைந்துள் ளது.
பணிப் பாதுகாப்பு
கேள்விக்குள்ளாகி
யுள்ளது என்று
கூறுகிறது. இது
ஏதோ தோழர் ஏ.கே.பத்மநாபனின்
உரையிலிருந்து
குறிப் பிடப்படுவதல்ல.
அமெரிக்காவின்
ஆளு மைக்கு உட்பட்ட
ஐஎல்ஓ வின் அதிகாரப்
பூர்வமான அறிக்கையில்
இருந்து வெளிவந்
துள்ள விஷயம்.
இந்த மூன்று
அடிப்படை குறி
யீடுகள் தான் தொழிலாளர்களின்
வாழ்நிலை குறித்த
அடிப்படை குறியீடுகள்.
அப்படி இருக்கையில்,
இன்று உலக அளவில்
தொழி லாளர்களின்
வாழ்நிலை மிக மோசமாகப்
பாதிக்கப்பட்டுள்ளது
என்பதையே இது குறிப்பிடுகிறது.
உலகமயமாக்கலின்
பலன் சொட்டுச்
சொட்டாக அனைவரையும்
சென்றடையும் என்ற
“டிரிக்கிள் டவுண்”
கொள்கை பொய்யாக்கப்பட்டுள்ளது.
கிளிண்டனின் பொருளாதார
ஆலோசகராக இருந்த
ஜோசப் ஸ்டிக்லிட்ஷ்
போன்ற பொருளாதார
வல்லுநர் கள் கூட,
இன்று இந்த வடிவத்தில்
உலகமய மாக்கல்
கொள்கை தொடரப்படுமானால்,
நாம் அனைவரும்
பெரும் ஆபத்திற்குள்ளாவோம்
என்று கூறுகின்றனர்.
எனவே, இடதுசாரி
சித்தாந்தத்திலே
மிகப் பெரும் சந்தேகம்
உடையவர்கள் கூட,
இன்றைக்கு உலகமய
மாக்கல் கொள்கையில்
நம்பிக்கை இல்லாத
வர்களாக ஆகியுள்ளனர்.
எல்பிஜி கொள்கை
என்பது மக்கள்
விரோதமானதாக, முன்னேற்
றத்திற்கு எதிரானதாக,
மனிதத் தன்மை யற்றதாக
இருக்கிறது.
மனிதத்தன்மையற்றது
என்பதற்கு சரி
யான உதாரணம்-நரசிம்மராவ்
ஆட்சியிலும் சரி,
வாஜ்பாய் ஆட்சிலும்
சரி, மன்மோகன்
சிங் ஆட்சியிலும்
சரி - பல மில்லியன்
டன் கள் அளவிலான
தானியங்கள் அரசு
கிட்டங்கி களில்
எலிகளுக்கும்,
புழுக்களுக்கும்
உண வாக இருப்பில்
போடப்பட்டதை காண்கி
றோம். எப்படிப்பட்ட
சூழலில் என்றால்,
மனி தன் பசியிலே
புழுவாக துடித்துக்
கொண்டி ருந்த சூழலில்
என்பது தான் வேதனை
யானது. இந்த
முரண்பாடான நிலையினை
தான் நான் மனிதத்
தன்மையற்றது என்று
குறிப்பிட்டேன்.
அதே போன்று
இன்று தர மான கல்வியும்,
சுகாதாரமும் வசதி
வாய்ப் புள்ளவர்களுக்கு
மட்டுமே என்ற நிலை
எழுந்துள்ளது.
கலாச்சாரம்
சீரழிந்து போயுள்
ளது. மக்களே
கூட அதிக விலை
உள்ளது மட்டும்
தான் தரமானது என்ற
மனநிலைக்குத்
தள்ளப்பட்டுவிட்டனர்.
சுதந்திரச்
சந்தைப் பொருளாதாரத்தைப்
பற்றி விவரிக்க
வேண் டியது ஏராளம்.
எனவே, இன்றைக்கு
மக்களு டைய பிரச்சனைகளை
சந்திக்க, தீர்வுகாண,
இடதுசாரிகளின்
எதிர்காலத்தை
உத்தர வாதப்படுத்த
வேண்டும் என்பதில்
மாற்றுக் கருத்துக்கு
இடமே இல்லை.
எனவே, இடதுசாரி
மற்றும் ஜனநாயக
சக்திகள் இந்த
நாட்டில் நமது
மக்களிடையே, அவர்களது
பிரச்சனைகளை எடுத்துக்
கொண்டு, பல்வேறு
போராட்டங்களை
தொடர்ந்து, வலிமையாக
நடத்தி வருவோமா
னால், அவர்கள்
பின்னே ஏராளமான
மக்கள் அணிதிரண்டு
வருவார்கள். இன்
றைக்கு பல்வேறு
அரசியல் கட்சிகளின்
பின் னால், அரசியல்
கட்சிகள் அல்லாத
பிற் போக்கு சக்திகளின்
பின்னால் அணி திரண்டு
கொண்டிருக்கும்
அல்லல்படும், ஒடுக்கப்
பட்ட மக்களை நம்
பின்னே அணி திரட்ட
வேண்டியுள்ளது.
நாம் அவர்களை
அணுக முடிந்தால்,
கண்டிப்பாக இடதுசாரிகள்
சரியான உண்மையான
மாற்றாக உருவாக
முடியும். இது கண்டிப்பாக
நடைமுறை சாத்தியமாகும்,
நிறைவேறும்.
இதனை நான் உலக
அளவிலே முக்கிய
ஆதாரங்களோடு
விளக்குகிறேன்.
முன்னே றிய
முதலாளித்துவ
நாடுகளில் எழுப்பப்பட்ட
கிளர்ச்சிகள்
மிகக் கடுமையான
தாக்குத லுக்கு
ஆளாக்கப்பட்டு,
பலமான பின்னடை
வுகளையும் சந்தித்துள்ளன.
ஆனால், இன் றும்
தொழிலாளி வர்க்கத்தின்
தலைமையில், கம்யூனிஸ்ட்
கட்சியின் தலைமையில்
சில நாடுகள் அறிவியல்
பூர்வமான சோஷலிச
சித்தாந்தத்தினை
அமல்படுத்திக்
கொண்டி ருப்பதை
நம்மால் காண முடியும்.
அவை சீனா, வியட்நாம்,
வடகொரியா, கியூபா
போன்ற நாடுகள்.
இந்த நாடுகளுக்கிடையேயான
பொதுத் தன்மை என்ன?
மூன்றாம் உலக
நாடுகள் இவை.
மிகக் குறைந்த
வளர்ச் சியினை
எட்டியுள்ள நாடுகள்.
நாம் இந்த நாடுகளில்
அமலாகும் சோஷலிச
சித்தாந் தங்கள்
குறித்து பரிசீலனை
செய்ய வேண் டும்.
அனுபவங்களை
எடுத்துக் கொள்ள
வேண்டும். தத்துவார்த்த
ரீதியான விவாதங்
களை நடத்த வேண்டும்.
மார்க்சும்,
ஏங்கெல்சும் பிறந்த
கிழக்கு ஐரோப்பிய
நாடுகள், ரஷ்யா,
கிழக்கு ஜெர்மனி
எல்லாம் சோசலிச
நாடுகளாக மலர்ந்தன.
ஆனால், தற்போது
மீண்டும் முதலாளித்துவ
பாதைக்குத் திரும்பிவிட்டன.
இதுவும் பரிசீல
னைக்கு எடுக்கப்பட
வேண்டிய பகுதி.
அது மட்டுமல்லாமல்
சீனாவில், வியட்நாமில்,
கியூபாவில், கொரியாவில்
சோஷலிசம் தக்க
வைக்கப்படுவதற்கான
காரணங்கள் என்பது
விவாதிக்கப்பட
வேண்டியுள்ளது.
இந்தியா வும் இதுபோன்ற
குணாம்சங்கள்
கொண்ட நாடு தான்
என்ற அடிப்படையில்,
நாம் சரி யான பாடங்களை,
அனுபவங்களை பெற
முடிந்தால் இந்தியாவிலும்
இடதுசாரிகளின்
எழுச்சி என்பது
உத்தரவாதமானது.
அதே போன்று, இங்கே
நான் ஒப்பீட்டு
அளவில் குறிப்பிட
விரும்புவது என்னவென்றால்,
மூன்றாம் உலக நாடுகளின்
மக்களை நாம் அணுகுவது
என்பது வளர்ச்சியடைந்த
முத லாளித்துவ
நாடுகளை விட சாத்தியமானது
என்பதுதான்.
அமெரிக்கா, வியட்நாம்
மீது குண்டு களைப்
பொழிந்தபோது, வியட்நாமிய
கம்யூனிசப் போராளி
ஹோசிமின், வியட்நாம்
மக்களை “புத்தரின்
உடல் மீது போடப்பட்ட
குண்டுகள் இவை”
என்று கூறி, போராட்டத்
திற்கு அறைகூவல்
விடுத்தார். கம்யூனிச
சிந்தனை இல்லாத,
புரட்சியை விரும்பாத
வியட்நாமியர்கள்
உட்பட அனைத்து
வியட்நாமிய மக்களும்
இதைக் கேட்டதும்
மிகப் பெருமளவில்
அமெரிக்க ஏகாதிபத்தியத்
திற்கு எதிராக
அவர் பின்னே அணிதிரண்ட
னர். இதற்கு
அங்கே கம்யூனிச
சித்தாந்தம் இல்லை
என்பது பொருளாகாது.
மக்களு டைய
மொழியிலே வியட்நாமிய
கம்யூனிஸ்ட் கட்சியின்
திட்டம் எடுத்துச்
செல்லப்பட் டுள்ளது
என்பதுதான்.
தற்போது நான்
குறிப்பிடுவதை
மிகச்சரி யான புரிதலுடன்
அணுக வேண்டும்.
நமது நாட்டிலே
உப்புச் சத்தியாக்கிரகப்
போராட் டத்தின்போது,
மகாத்மா காந்தி
இது மாதிரி யானதொரு
அணுகுமுறையைத்தான்
பயன் படுத்தினார்.
ஏழையிலும்
ஏழை கூட உப்பில்
லாமல் உண்பதில்லை.
எனவே அவர் இதை
பயன்படுத்திக்
கொண்டார். ஒப்பீட்டு
அள வில் பார்க்கும்
போது, பிரிட்டிஷ்
ஏகாதிபத் தியத்திற்கு
எதிராக மக்களை
அணி திரட்ட மார்க்ஸ்,
ஏங்கெல்ஸ், லெனின்,
ஸ்டாலின் உள்பட
அனைவரும் கிரேக்க
மற்றும் ரோமா னிய
இதிகாசங்களை-புராண
கதாநாயகர் களை
பயன்படுத்திக்
கொண்டுள்ளனர்.
ஏனென்றால்,
மக்கள் இதுபோன்ற
விஷயங் களில் மரியாதை
கொண்டுள்ளனர்
என்ப தோடு உணர்வுபூர்வமாக
தங்களை இணைத் துக்
கொண்டுள்ளனர்
என்பது தான்.
பிடல் காஸ்ட்ரோ
கூட தன்னை கைது
செய்த போது, வரலாறு
என்னை விடுதலை
செய்யும் என்ற
தலைப்பிலே உரையாற்றிய
போது, ஸ்பானிய
காலனி ஆட்சியை
எதிர்த் துப் போராடி
கொலை செய்யப்பட்ட
ஜோஸ் மார்ட்டியைத்
தான் கியூபப் புரட்சிக்கு
வித்திட்டவர்
என்று கியூப மக்களுக்கு
சுட்டிக் காட்டுகிறார்.
ஹியூகோ சாவேஸ்
வெனி சுலாவுக்கு
‘பொலிவாரிய குடியரசு’
என்று பெயரிடுகிறார்.
தனது திட்டத்தினை
பொலி வாரிய திட்டம்
என்று கூறுகிறார்.
அவர் தனது முன்னோடியாக
சைமன் பொலிவாரைத்தான்
சுட்டிக் காட்டுகிறார்.
எனவே, நாம் பாடங்களை
கற்றுக் கொள்ள
வேண்டியுள்ளது.
இந்தியாவிலும்
நாம் இவற்றை பயன்படுத்த
வேண்டும். உலகில் உள்ள
ஒவ்வொரு பகுதி
மக்களுக்கும்,
அவர் களுக்கென்று
ஒரு சமுதாயம்,
ஒரு கலாச் சாரம்,
இதிகாசங்கள் உள்ளன.
ஒவ்வொரு நாகரிக
மடைந்த சமுதாயமும்
தனக்கென்று ஒரு
புராதன வரலாற்றினை
கொண்டுள்ளது.
நம் நாட்டிலும்
பல்வேறு இதிகாசங்கள்
உள்ளன. நம்
நாட்டு மக்களுக்கும்
பெரும் வரலாறு
உள்ளது. எனவே,
நாம் நமது திட்டத்தினை
இவற் றுடன் தொடர்புபடுத்திக்
கொள்ள வேண்டும்.
மக்களுக்கு
ஏற்ற மொழியில்
நாம் உரையாட வேண்டும்.
நமக்கென்று
உள்ள சில பிரத்
யேகமான வார்த்தைகளை
விடுத்து, அவர்
களுக்கேற்ற மொழியிலே
அவர்களை அணுக வேண்டும்.
அதே போன்று,
லத்தீன்-அமெரிக்க
நாடு களின் நிகழ்வுகளையும்
நாம் கவனிக்க வேண்டியுள்ளது.
இந்த நாடுகளில்
முன் னேற்றகரமான
எண்ணமுடைய, இடதுசாரி
சிந்தனையுடைய,
ஜனநாயக சக்திகள்
தலைமைக்கு வந்துள்ளன.
எந்தவொரு அரசியல்
கட்சியினையும்
முதலில் சாராதிருந்து
மக்களுடைய பிரச்சனைகளில்
தலைமை தாங்கி,
மக்களின் தளங்களில்
இருந்து, பின்னர்
அரசியல் வடிவம்
பெற்ற ஒரு தலைவர்
ஹியூகோ சாவேஸ்.
உருகுவேயின்
டாக்டர் தபேர்
வாஸ்கிஸ் மற்றொரு
உதாரணம். உலகமயமாக்கலை
எதிர்த்த போராட்டத்தின்
மூலம் வெளிவந்த
தலைமை இது. இது போன்ற பல
உதார ணங்கள் லத்தீன்
அமெரிக்க நாடுகளில்
உள்ளன. தென்
ஆப்பிரிக்கா மற்றொரு
உதாரணம். இன்றைக்கு
உலக அளவில் இதுபோன்று
தேர்தல் நடைமுறைகளின்
மூலம், முற்போக்கு
அரசாங்கங்கள்
பல ஆட்சிக்கு வந்துள்ளன.
இப்படிப்பட்ட
நாடுகள் அனைத்தையும்
ஒன்றுசேர்த்து
பார்த்தோமானால்,
கிட்டத்தட்ட
27 சதமான மக்கள்
உலக அளவில் இடதுசாரி
சிந்தனை யுடைய,
முற்போக்கு மற்றும்
ஜனநாயக கட்டமைப்பினை
உருவாக்குவதற்கு
ஆதர வாக, ஒரு சமூக
மாற்றத்திற்கு
ஆதரவாக உள் ளனர்.
இன்னும் பல
நாடுகள் இதில்
இணை யவும் செய்யலாம்.
அல்லது இந்த
நாடுகளில் சில,
முதலாளித்துவத்திற்கு
திரும்பவும் செய்யலாம்.
இந்தியாவில்
இடது சாரிகளின்
எதிர்கா லம் என்பது
உலக அளவில் இடதுசாரிகளின்
எதிர்காலத்தோடு
தொடர்புடையது.
இடது சாரிகளின்
முக்கியத்துவம்
என்பது உலக அளவிலும்
சரி, இந்தியாவிலும்
சரி, தேர்தல் வெற்றிகளில்
மட்டும் பிரதிபலிப்பது
அல்ல. உலகம் முழுவதும்
ஆங்காங்கே நடைபெற்று
வரும் தொழிலாளி
வர்க்கத்தின்,
விவசாயி களின்
மற்றும் பல்வேறு
தரப்பட்ட மக்களின்
பிரச்சனைகளில்,
போராட்டங்களில்,
எழுச்சி களில்
பிரதிபலிப்பது.
இந்தியாவைப்
பொறுத்த வரையில்,
இந்திய சமுதாயத்தில்
நமது அரசியல் தலையீடு
என்பது ஒரு சில
பகுதிகளில் மட்டுமே
உள்ளது.
ஆனால் ஊழல்
கறைபடிந்தவர்கள்
என்று இடதுசாரிகளில்
ஒருவரைக் கூட மக்களால்
காட்ட முடியாது.
இன்றைக்கு
தமிழகத்தில் உள்ள
ஒரு சில புள்ளிகள்
மெகா ஊழலின் காரணமாக
தேசியப் புள்ளிகளாக
மாறியுள்ளனர்.
எனவே, இடது சாரிகளின்
உயர்ந்த தரம் என்பது
அவர்களை மக்களின்
பிரச்சனைகளில்
தலையிட தகுதியானவர்
களாக்கியுள்ளது.
இடது சாரிகளின்
பலம் சாதாரணமானது
அல்ல. நமது நாட்டில்
நம்மால் பல கோடி
மக்களை நம் பின்னே
அணி திரளச் செய்ய
முடியும். தமிழகத்தில்
மட்டும் 32 லட்சம்
தொழிலாளர்கள்
உள்ளனர். அகில
இந்திய அளவில்
6 கோடியே 45 லட்சம்
பேரை அணி திரட்ட
முடியும். பெண்கள் அமைப்புகளில்
மட்டும் 1 கோடியே
90 லட்சம் பேர் உள்ளனர்.
இளைஞர் அமைப்புகள்,
விவசாயிகள், விவ
சாயக் கூலிகள்
என பலகோடி மக்கள்
இடது சாரிகளால்
அணிதிரட்டப்படக்கூடிய
உத்தர வாதமான பிரிவினராக
உள்ளனர்.
தற்போது தேர்தலில்
ஏற்பட்டுள்ள பின்னடைவினை
ஒரு கம்யூனிஸ்ட்டாக
நாம் ஏற்றுக் கொண்டாலும்,
நம்பிக்கையோடு
நமது பயணம் தொடர
வேண்டும். அநீதிக்கும்
சமத்துவமற்ற நிலைமைக்கும்
எதிரான போராட்டங்கள்
தொடரப்பட வேண்டும்;
முற்றிலுமாக நீக்கப்பட
வேண்டும். தவறுகளை திருத்திக்
கொள்வதன் மூலம்
தான் மனித சமுதாயம்
முன்னேற்றம் காண
முடியும்.
- தமிழில்: ஆர்.எஸ்.செண்பகம்