குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல்
பாதுகாக்கப்படுகின்ற
நிலைவரம்
இவ்வருட இறுதியளவில்
அவசரகால சட்ட ஆட்சியினை
அகற்ற அரசாங்கம்
திட்டமிட்டு
வருவதாக அரசாங்கம்
பேச்சாளரும்
ஊடகத்துறை
அமைச்சருமான
கெஹலிய ரம்புக்வெல
அறிவித்துள்ளார். கடந்த நான்கு
தசாப்தங்களில்
பெரும்பாலான
காலப்பகுதி
நாடு அவசரகால
சட்டவிதிகளுக்கு
உட்படுத்தப்பட்டே
ஆளப்பட்டிருந்தது.
இதனால் நாட்டு மக்கள் அரச படையினருடன்
தொடர்புபட்டு
செயற்பட வேண்டியபோது,
அவர்கள் அளவுக்கு மீறிய பலத்துடன்
மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும்
வகையில் நடந்துகொள்ள
இடமளிக்கப்பட்டிருந்தது.
சர்வதேச தரங்களில்
மனித உரிமைகள்
பேணப்படுவதில்
காணப்படும்
பல்வேறு குறைபாடுகள்
காரணமாக அரசாங்கத்தின்
மீது ஏற்படும்
சர்வதேச அழுத்தங்களால்
இப்போது அரசாங்கம்
அவசரகால சட்டத்தை நீக்கப்படுவது
போன்ற சனநாயக உரிமைகள் பற்றி சிந்தித்து
செயற்பட முன்வந்துள்ளது.
ஒரு சில
அபிவிருத்தியடைந்து
வரும் நாடுகளுக்கு
மட்டுமே வழங்கிவந்த
ஜி.எஸ்.பி.பிளஸ்
வரிச்சலுகையினைக்
கடந்த வருடம் ஐரோப்பிய யூனியன் மேற்குறிப்பிட்ட
காரணங்களான
மனித உரிமைகள்
மீறப்படல்
நிமித்தம்
இலங்கைக்கு
வழங்குவதனைத்
தடைசெய்துவிட்டது.
கடந்த இரண்டு
வருடங்களுக்கு
முன்னர் யுத்தம் முடிந்துவிட்டதன்
காரணமாக அவசரகாலச்
சட்டங்களை
முற்றாக நீக்கிவிடுமாறு
மேற்கத்திய
நாடுகள் இலங்கைக்கு
அறிவுறுத்தி
வந்தன. அக்காலப்பகுதியில்
அரசாங்கம்
அவசரகால விதிகளை ஓரளவுக்கு
தளர்த்தியிருந்த
போதிலும்
பாதுகாப்புப்
படையினர்
மக்களை எதுவித குற்றச்சாட்டுகள்
இல்லாதும்
கூட கைது
செய்து தடுத்து நிறுத்திவைக்கக்கூடிய
அதிகாரங்களுடனும்
செயற்பட்டே
வந்தனர். ஐரோப்பிய யூனியன்
இலங்கைக்கு
வழங்கும்
வர்த்தக சலுகைகளைப்
பற்றி பரிசீலித்து
தீர்மானம்
செய்யும்
காலப்பகுதியுடன்
இது தொடர்பான
நடவடிக்கைகளும்
எடுக்கப்பட்டன.
அரசாங்கத்தின் சில அமைச்சர்கள்
அவசர காலச்
சட்டங்களில்
75 வீதமானவை
நீக்கப்பட்டுவிட்டதாகக்
கூறிவந்தனர்.
அது சர்வதேச
சமூகங்களின்
நல்லெண்ணங்களைக்
கவர்வதற்காக
இருந்திருக்குமே
ஒழிய இலங்கை
வாழ் மக்கள்
அவசர காலச்
சட்டங்கள்
நீக்கப்பட்டதாகக்
கூறப்படும்
கருத்தை தமது வாழ்வில்
கண்டறிந்தவர்களாக
இல்லை. அரசாங்கப்
பேச்சாளரது
கூற்றின்படி
அவசரகால விதிகளை முற்றாக நீக்கப்போவதாக
கூறுவது என்பது இப்போதைய யதார்த்தத்தை
அரசாங்கம்
ஏதோ அளவிற்கு
உணர்ந்துள்ளது
என்பதனை குறிப்புணர்த்தும்
செயல் என்றும் நம்பலாம். 1971 ஆம் ஆண்டு முதலாகவே
அடுத்தடுத்து
வந்திருந்த
அரசாங்கங்கள்
நாட்டில்
அமைதியின்மையினை
கட்டுப்படுத்துவதற்காக
அவசரகால விதிகளைப்
பயன்படுத்தி
வந்திருக்கின்றன.
ஆனால், இப்போதுள்ள
அரசாங்கமோ
அவசர கால
விதிகளை தேர்தல் காலங்களிலும்
தொடர்ந்தும்
பயன்படுத்தி
வந்துள்ளது.
முன்னைய அரசாங்கங்கள்
தேர்தல் காலங்களில்
அல்லது அவசரகால விதிகளை பயன்படுத்துவதிலிருந்து
விலகியே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அவசர கால சட்டங்கள்
மட்டுமே அரசாங்கத்தின்
கையிலிருக்கும்
மக்கள் எழுச்சியை
ஒடுக்கும்
சட்டங்கள்
என்பதற்கில்லை.
இது துரதிர்ஷ்டவசமானதாகும்.
நாட்டில் பயங்கரவாதம்
முற்றாகத்
தோற்கடிக்கப்பட்ட
நிலைமையிலும்
பயங்கரவாதத்
தடைச் சட்டம் இன்று தொடர்ந்து
சட்டப் புத்தகங்களில்
இருந்தே வருகின்றது.
அக்கடுமையான சட்டத்தை
நீக்குவது
தொடர்பாக
எதுவித நடவடிக்கைகளோ
அல்லது பேச்சோ கூட இருப்பதாகத்
தெரியவில்லை.
இவ்வாறாக
ராட்சத விலங்குகளை
அறையில் வைத்துக்கொண்டே
அரசாங்கப்
பேச்சாளர்
அளித்துள்ள
விதிகளின்
படி அவசரகாலச்
சட்டம் முடிவுக்குக்
கொண்டுவரப்பட்டு
இலங்கையின்
ஆட்சி முறையில் புதிய அத்தியாயம்
திறக்கப்படப்
போவதாக நம்பவேண்டியுள்ளது.
அவசர கால
சட்டங்கள்
நீக்கப்பட்டதனைத்
தொடர்ந்து
படை வீரர்களுக்கு
சமாதான கால சனநாயக
ஆட்சியில்
அவர்களது
சரியான பங்கினை எவ்வாறு ஆற்ற முடியும்
என்பது பற்றிய சிறப்புப்
பயிற்சியினை
அளித்து மீள பயிற்றுவிக்க
வேண்டிய கட்டாயத் தேவையும் உண்டு.
குற்றவாளிகள் தண்டிக்கப்படாது
விலக்கு பெறும் நிலைமைகள்.
அரசாங்கம் அதன் பேச்சாளர்
அளித்த வாக்குறுதியினை
எந்தளவுக்கு
அக்கறையுடன்
கவனத்தில்
கொள்கிறது
என்பது பெரும் வினாவாகும்.
ஐரோப்பிய
யூனியன் ஜி.எஸ்.பி.பிளஸ்
வரிச் சலுகையைத்
தொடர்ந்தும்
இலங்கைக்கு
வழங்குவதா
அல்லது தடை செய்யலாமா
என தீர்மானம்
செய்ய எண்ணிய போது அரசாங்கம்
தான் அவசர
கால சட்டங்களைத்
தளர்த்தப்
போவதாகக்கூறியபோது
அவ்வாறாகத்
தளர்த்தல்
என்பது இன்னும் செய்யப்படாதே
உள்ளது. இந்த அழுத்தங்களுக்கு
ஏற்ப செயற்பட
எண்ணிய அவசரகால சட்டங்களின்
தளர்வு பற்றி அப்போது
பேசப்பட்டது.
இருந்த போதும்
இன்றுவரை
நடைமுறை நிலைமைகளில்
எதுவித மாற்றங்களையும்
காணக்கூடியதாக
இல்லை. அரசாங்கம் தனது எதிரணியினரைக்
கையாளுவது
தொடர்பாக
நிலவும் நிச்சயமற்ற
நிலைமைகள்
தொடர்கின்றன.
சில வாரங்களுக்கு
முன்னர் சுதந்திர வர்த்தக நிலையத்தில்
இடம்பெற்ற
தொழிற்சங்க
நடவடிக்கைகளுக்கு
எதிராகக்
கிளர்ச்சி
செய்த தொழிலாளர்கள்
மீது துப்பாக்கிச்
சூடு அளவுக்கு
கடுமையாக
நடந்து கொண்டமை ஏற்றுக்கொள்ள
முடியாததாகும்.
யுத்தத்தின்
இறுதிகாலக்
கட்டத்தில்
இடம்பெற்ற
போர்க்குற்றங்கள்
பற்றி இரக்கமற்ற
செயல்களைப்
புரிந்ததாக
எடுத்துக்
காட்டும்
பிரித்தானிய
அலைவரிசை4 தொலைக்காட்சியில்
காட்டப்பட்ட
செய்தித்
தகவல்கள்
அரசாங்கத்தின்
மீது பெரும்
அழுத்தத்தை
ஏற்படுத்தி
வருகின்றன.
அதேநேரத்தில்
சில நாட்களுக்கு
முன்னர் யாழ்ப்பாணத்தில்
உள்ள சிரேஷ்ட
பத்திரிகையாளரை
பயங்கரமாகத்
தாக்கிய சில நாட்களின்
பின்னர் அரசாங்கம்
அவசரகால சட்டங்களை
முடிவுக்குக்
கொண்டுவரப்போவதாக
அதிகரித்திருப்பது
ஒருவகையில்
அது பாசாங்கோ
என எண்ணத்
தூண்டுகிறது.
ஞானசுந்தரம் குகநாதன்
உதயன் பத்திரிகையின்
செய்தி ஆசிரியராவார்.
அவருடைய தலையில் இரும்புக்
கம்பிகளால்
தாக்கியதால்
ஏற்பட்ட தலைக் காயங்களுக்காக
யாழ்ப்பாண
மருத்துவமனையில்
தீவிர சிகிச்சைப்
பிரிவில்
இப்போது மோசமான நிலையில் இருந்துவருகிறார்.
2006 ஆம் ஆண்டு மே மாதத்திலும்
முன்னொருமுறை
இவர் இவ்வாறாகத்
தாக்குதல்களுக்கு
உள்ளாக்கப்பட்டார்.
அப்போது இவரது
பெயரைக் கூறி தேடிவந்தவர்கள்
இவரைக் காண முடியாது
போகவே வேறு இருவரைக்
கொன்றுவிட்டு
சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில்
பாதுகாப்பு
நிலைமைகள்
மேம்பாடடைந்துள்ளதென்றும்
குற்றமிழைத்தவர்களுக்கு
தண்டனைகளிலிருந்து
விலக்களித்தமை
இனிமேலும்
இருக்காதென்றும்
ஏற்படுத்திக்
கொண்ட நம்பிக்கை
காரணமாகவே
அண்மைக்காலங்களில்
அவர் உதயன்
அலுவலகத்திலிருந்து
அருகாமையில்
உள்ள உதயன்
வெளிப்பகுதியில்
தங்கி வாழ ஆரம்பித்திருந்தார்.
ஆனால், அவருடைய
நம்பிக்கைகள்
தவறானவை என்பது புலனாகிறது.
அத்துடன்
அதிகாரத்தில்
இருப்பவர்களுக்கு
கோபம் ஏற்படும் வகையில் தானே அறியாத
ஒரு எல்லையை
ஊடகவியலாளர்கள்
தாண்டுவார்களேயானால்
என்ன நடக்கும்
என்பது அனைத்து பத்திரிகையாளர்களும்
குகநாதன்
மேல் ஏற்பட்ட
தாக்குதல்
எச்சரிக்கையாகக்
காணப்படுகிறது.
யாழப்பாணத்தில்
மீண்டும்
ஒருமுறை இராணுவப் படையினர் பிரசன்னமாகியிருக்கும்
அவர்களது
பாதுகாப்பு
சாவடிக்கு
அருகிலேயே
பத்திரிகையாளர்
ஒருவரைத்
தாக்கிவிட்டு
தப்பியோடியிருக்கிறார்கள்.
இத்தாக்குதல்
சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை
2009 ஆம் ஆண்டு
கொழும்பில்
உள்ள பிரதான
வீதியில்
அதுவும் இராணுவ சோதனைச் சாவடிக்கு
அருகாமையில்
வைத்து கொலை செய்தமையையும்
2010 ஆம் ஆண்டு
"மின்செய்தி
லங்கா' மீது தீயிட்டு
கொழுத்தியமையையும்
எமக்கு நினைவுபடுத்துகின்றது.
சட்டத்தை
நடைமுறைப்படுத்தும்
அதிகாரப்
பிரிவினர்
கொலை செய்தவர்களைக்
கைது செய்யத்
தவறியமையும்
அவசரகால அதிகாரங்களையும்
ஆயுதங்களையும்
வைத்துக்கொண்டு
பிரஜைகளைக்
காப்பாற்றத்
தவறி வருகின்றமையும்
அதனால் குறிப்பாக
அரசாங்கத்தின்
மீது விமர்சனம்
செய்யும்
ஊடகவியலாளர்களைப்
பாதுகாக்கத்
தவறியுள்ளமையினால்
அரசாங்கத்தைக்
குற்றம் இழைத்துள்ளதாகவே
காண முடிகிறது.
பத்திரிகையாளர்களின்
மீதான தாக்குதல்கள்
தொடர்பில்
குறிப்பாகக்
கண்டிக்கத்தக்க
வேண்டியது
யாதெனில்
இவ்வாறு குற்றமிழைத்தவர்கள்
தண்டனையிலிருந்து
விலக்களிக்கப்பட்டு
வருவதாகும்.
அமைதி காத்தலும்
வெளித்தோற்றத்திற்கு
குற்றங்கள்
தொடர்பாக
புலனாய்வு
செய்வதாகக்காட்டிக்
கொண்டுசந்தேக
நபர்கள் மீது வழக்குத்
தொடராது விடுகின்றமையுமே
குற்றவாளிகளுக்கு
தண்டனையிலிருந்து
விலக்களிக்கப்பட்டு
வருவதன் பிரதான பண்புகளாகும்.
இவ்வாறு ஏற்பட்டுள்ள
அச்ச சூழல்
காரணமாக பத்திரிகையாளர்கள்
தமது ஆக்கங்களை
சுயமாக தணிக்கை செய்து கொள்வதுடன்
முழு சமூகமும்
அச்சத்துடன்
செயற்படுவதுமான
ஒரு நிலைமையினைத்
தோற்றுவித்துள்ளது.
அடிப்படை
சுதந்திரங்களை
அரசியலமைப்பினால்
(யாப்பினால்)
உத்தரவாதப்படுத்தப்பட்டு
ஆட்சியிலுள்ள
அரசாங்கத்தினால்
பாதுகாக்கப்படும்
சனநாயகம்
இதுவல்ல. எனவே மக்களது
சனநாயகம்
உரிமைகள்
பாதுகாக்கப்படுவதற்காக
ஆட்சியிலிருக்கும்
அரசாங்கம்
உடனடியாக
நம்பிக்கையினை
ஊட்டும் வகையிலான நடவடிக்கைகளை
மேற்கொண்டு
ஊடகங்களைப்
பாதுகாக்க
ஆவன செய்தல்
வேண்டும்.
இன்றியமையாத நடவடிக்கை
அவசர கால சட்டங்களும்,
பயங்கரவாத
தடைச் சட்டமும் நடைமுறையில்
இருப்பதனால்
மட்டுமே சட்டத்தை மதியாத நடவடிக்கைகள்
இடம்பெறுவதனை
இல்லாதாக்கி
விடமுடியாது.
பொலிஸும் மற்றும்
பாதுகாப்பு
படையினரும்
தமது கடமைகளை
சரிவர செய்தல் வேண்டும்.
அதுவே முக்கியமாகும்.
அரசியல் தலையீடுகள்
காரணமாக படையினர் தம்மை முடமாக்கிக்
கொள்ளக்கூடாது.
அரசாங்கம்
சர்வதேச சமூகத்தையும்
நாட்டில்
எதிரணியினரையும்
நம்ப வைக்க
வேண்டுமானால்
அது விடும்
மனித உரிமைகள்
பாதுகாப்பு
மற்றும் நல்லாட்சி
தொடர்பான
தவறுகளைப்
பற்றி எழும் விமர்சனங்களைத்
தடை செய்வதனையும்
நிறுத்த வேண்டும். அத்துடன் சம நிலைத் தலையீடு (இடஞுஞுடுண்
ச்ணஞீ ஆச்டூச்ணஞிஞுண்)
மற்றும் நிறுவன நேர்மைப் பண்பையும்
மேம்படுத்திக்
கொள்ளுதலும்
வேண்டும்.
நேர்மையற்ற நிறுவனங்களால்
தமது கடமைகளை
செவ்வனே ஆற்ற முடியாது.
பத்திரிகையாளர்கள்
தாக்குதல்களுக்கு
உள்ளாகியபோது
சட்ட அமுலாக்கத்திற்கு
பொறுப்பானவர்கள்
தமது கடமையிலிருந்து
தவறியுள்ளமை
அரசாங்கம்
தோல்வியுற்றமைக்கான
சான்றாகும்.
சட்ட அமுலாக்க
துறையினருக்கு
போதிய சுதந்திரமும்
அவர்கள் நேர்மையான
முறையில்
செயற்படுவதற்கான
மனப்பான்மையின்
விருத்தியுமின்றி
தனியே அவசரகால சட்டங்களை
மட்டும் ஒதுக்குவதால்
சர்வதேச சமூகங்களின்
மனித உரிமைக்
காவலர்கள்
அரசாங்கத்திடம்
இருந்து எதிர்பார்க்கும்
உண்மையான
எதிர்மறையற்றதான
வழிவகுத்து
விடும் எனவும் கூறுவதற்கில்லை
எனவே அரைமனதுடனான
அரசாங்கத்தின்
நடவடிக்கைகளால்
தான் நல்லாட்சி
புரிவதாக
தன்னைப் பற்றிக் கூறி காட்டிக்கொள்ள
செய்யும்
முயற்சிகள்
ஏதும் சார்பான விளைவுகளை
ஏற்படுத்தும்
என்றும் கூறுவதற்கில்லை.
எவ்வாறாயினும் அரசாங்கத்திற்கு
நேர்மையான
முறையிலும்
சில மாற்று
நடவடிக்கைகளை
மேற்கொண்டு
செயற்படுவதற்கு
வாய்ப்புகள்
இல்லாமல்
இல்லை. ஆனால், இதற்காக
அரசாங்கம்
எதிரணியினருடன்
அதிகாரத்தைப்
பகிர்ந்துகொள்ள
வேண்டியிருக்கும்.
ஆனால், இதுவரை
அத்தகைய சிந்தனையில்
எதுவித விருப்பையும்
காட்டிக்கொள்ளாதே
அரசாங்கம்
இருந்து வந்துள்ளது.
2001 ஆம் ஆண்டின்
17 ஆவது அரசிலயமைப்புத்
திருத்தச்
சட்டம் மூலமாக நாட்டில் நல்லாட்சியினை
உறுதி செய்வதற்காக
பல கட்சிகளையும்
உள்ளடக்கிய
அரசியலமைப்பு
(யாப்பு) பேரவை மூலமாக
நாட்டில்
அதிகாரம்
கூடிய பதவிகளுக்கு
அதிகாரிகளை
நியமிக்க
அதிகாரம்
வழங்கப்பட்டது.
அதன் மூலம்
சமநிலைத்
தலையீடு (இடஞுஞிடுண்
ச்ணஞீ ஆச்டூச்ணஞிஞுண்)
செய்யப்படும்
அமைப்பு உறுதி செய்யப்படும்
என நம்பப்பட்டது.
ஆனால், பாராட்டுக்குரிய
அரசியலமைப்புச்
சட்டம் பின்னர் 2010 ஆம் ஆண்டின்
18 ஆவது திருத்தச்
சட்டத்தினால்
இவ்வாறு ஒழிக்கப்பட்டுவிட்டது.
இதன் வாயிலாக
பிரதம நீதிபதி பதவிக்கு மாத்திரமன்றி
தேர்தல் ஆணைக்குழு
அரச சேவைகள்
ஆணைக்குழு,
தேசிய பொலிஸ் ஆணைக்குழு
ஆகிய அனைத்திற்குமான
தலைவர்களையும்
நியமிக்கும்
அதிகாரம்
ஜனாதிபதியிடம்
கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஜனாதிபதி
பதவியில்
மேலும் பல அதிகாரங்கள்
மையப்படுத்தப்பட்டுள்ளன.
அரசாங்கம்
உண்மையாகவே
உலகினை தான் நல்லாட்சி
தொடர்பான
புதிய பாதையில் செல்லவிரும்புவதாக
நம்பவைக்க
வேண்டுமானால்,
அதற்காக அரசாங்கம்
தான் 17 ஆவது
திருத்தச்
சட்டத்தை
செல்லுபடியற்றதாக்கி
விட்டு புதிதாக அறிமுகம் செய்துள்ள
18 ஆவது திருத்தச்
சட்டத்தை
பற்றி மீண்டும் பரிசீலிக்க
வேண்டியது
அவசியமாகும்.
(தினக்குரல்)