Contact us at: sooddram@gmail.com

 

கலவரம் அல்ல, எழுச்சி!

லண்டன் மாநகரம் பற்றி எரியும் என்று வெளிநாட்டு மோகிகள் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். உலகக் கடன் தர வரிசையில் முதல்முறையாக அமெரிக்காவின் தரம் ஒருபடி கீழே இறங்கியதைப் போலவே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் தலையில் இடியாய் இறங்கியது லண்டன்கலவரம்.’ பர்மிங்ஹாம், மான்செஸ்டர் உள்பட பிரிட்டனின் அனைத்து நகரங் களுக்கும் அடுத் தடுத்த நாட்களில் வேகமாக பரவிய இந்தக்கலவரத்தைஒடுக்க வீதிகள் தோறும் ஆயுதம் ஏந்திய போலீஸ் படையை குவித்திருக்கிறது பழமை வாத கூட்டணியின் பிரதமர் டேவிட் கேமரூனின் ஆட்சி. கடந்த 6ம்தேதி சனிக்கிழமை லண்டனின் ஒரு பகு தியான டொட்டன்ஹாமில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 29 வயது இளைஞர் மார்க் துக்கான் என்பவர் கொல்லப்பட்டார். ஏற்கனவே கனன்று கொண்டிருந்த இளைஞர்களின் குமுறல், காவல் துறை நிகழ்த்திய இந் தப் படுகொலையை தொடர்ந்து வெடித்தெழுந்தது.

லண்டனின் புறநகர்ப் பகுதியான டொட்டன் ஹாம், அந்த நகரிலேயே வேலையின்மை மிக அதிகமாக நீடிக் கும் பகுதி. ஒட்டுமொத்த பிரிட்டனில், வேலையில்லாத் திண்டாட்டம் மிக அதிகமாக நிலவும் இடங்களில் டொட்டன்ஹாமும் முக்கிய இடம் பெறுகிறது. இந்த நக ரைப் போலவே பிரிட்டன் முழுவதும் வேலைவாய்ப்பு மறுக் கப்பட்ட 16 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர் களின் எண்ணிக்கை 2008ம் ஆண்டில் இருந்த 14 சத வீதத்திலிருந்து தற்போது 20 சதவீதமாக அதிகரித் துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் மட்டும் அல்ல; ஸ்பெயின், கிரீஸ், இத் தாலி, போர்ச்சுக்கல், பிரான்ஸ், ஜெர்மனி என ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் கடந்த 3 ஆண்டுகளில் வேலை யின்மை தீவிரமடைந்திருக்கிறது. ஸ்பெயினில் 46 சத வீதம் பேருக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அல் லது பறிக்கப்பட்டுள்ளது; கிரீஸில் 40 சதவீதம், இத் தாலியில் 28சதவீதம், போர்ச்சுக்கல்லில் 27 சதவீதம், பிரான்ஸில் 23 சதவீதம் என வேலையின்மை அதி முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக மாறியிருக்கிறது. ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் உள்பட மொத்தம் 27 நாடுகளில் சராசரியாக 20.5 சதவீதம் என்ற அளவில் வேலையின்மை விகிதம் நீடிக்கிறது. எனவே ஒட்டு மொத்த ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் வேலை யின்மைக்கு எதிரான குமுறல், இளைஞர்களிடையே வெடித்து கிளம்பக் காத்திருக்கிறது.

2008ம் ஆண்டில் அமெரிக்காவில் மையம் கொண்ட பொருளாதார நெருக்கடி-நவீன தாராளமயக் கொள்கை களை முழுமையாக அமல் படுத்திய அனைத்து நாடு களையும் மிகக் கடுமையாக தாக்கியுள்ளது. ஐரோப்பிய நாடு களையும் அது கடும் சூறாவளியில் சிக்க வைத்தது. இந்த நிலையில் மீண்டும் அமெரிக்க பொருளாதாரம் மிக ஆழமான நெருக்கடியை நோக்கி பயணித்துக் கொண் டிருக்கிறது. இது ஐரோப்பிய நாடுகளிலும், உலகின் பல நாடுகளிலும் எதிரொலிக்கிறது. இதுதான் பிரிட்டனிலும் எதிரொலித்துள்ளது.

நெருக்கடியில் இருந்து தற்காத்துக் கொள்கிறோம் என்ற பெயரில், மேற்கண்ட நாடுகளின் அரசுகள்-பெரும் பாலும் பழமைவாத, வலதுசாரி, பிற்போக்குவாத, கிறிஸ் தவ மத அடிப்படை வாத, இனவெறிச் சிந்தனை கொண்ட அரசுகள்- ஆளும் வர்க்க முதலாளிகளின், அவர்களது கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனைக் காக்க, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கல்வி, சுகா தாரம், ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக நலத்திட்டங் களை சூறையாடி வருகின்றன. ஏற்கனவே வேலையில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூலி யில் கைவைத்துள்ளன. இதற்கு எதிரான மனக் கொந் தளிப்பின் உச்சக்கட் டமே, கடந்த ஒரு வார காலமாக அரசுக் கட்டடங்கள் சூறையாடல், தீவைப்பு, பேருந்து கள் எரிப்பு, வங்கிகள் உடைப்பு என லண்டனில் நடந்த நிகழ்வுகள்.

தற்போதைய பழமைவாத கூட்டணி அரசும் சரி, முந்தைய புதிய தொழிலாளர் கட்சியின் கோர்டன் பிர வுன் அரசும் சரி, அதற்கு முந்தைய டோனி பிளேரின் அரசும் சரி, இவர்கள் பின்பற்றிய நாசகர கொள்கை களால் சமூக ஏற்றத்தாழ்வு தீவிரமடைந்துள்ளது. பிரிட்டனில் மொத்தமுள்ள மக்கள் தொகையில் பெரும் பணக்காரர்களாக இருக்கும் 10 சதவீதம் பேரின் மொத்த வருமானம், ஏழைகளிலும் ஏழைகளாக இருக் கும் 10 சதவீதம் பேரின் மொத்த வருமானத்தை விட 100 மடங்கு அதிகம் என்று சமீபத்திய ஒரு புள்ளி விப ரம் தெரிவிக்கிறது. மொத்தமுள்ள மக்களில் 8 சதவீதம் பேர் வெள்ளை இனம் அல்லாதவர்கள். வறுமையும், வேலையின்மையும் மிகக் கொடூரமாக தாக்கும் மக்களாக இவர்கள் இருக்கிறார்கள்.

எனவே தான் லண்டனில் வெள்ளை இனம் அல் லாத, வேலையில்லாமல்திரிகிறஇந்தக்குற்றவாளி கள்’, ‘கயவர்கள்தான் பெரும் வன்முறைக் கலவரத்தை நடத்திவிட்டார்கள் என்றும், அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி லண்டனின் அமைதியை மீட்க வேண்டுமென்றும் இந்திய ஊடகங்கள் உட்பட உல கெங்கிலும் உள்ள ஆளும் வர்க்க ஊடகங்கள் ஊதித் தள்ளிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இடதுசாரிகளின் பலம் குன்றி இருக்கக் கூடிய பிரிட்டனில், வேலையின்மைக்கு எதிராக வெள் ளையர் -கருப்பர் என்ற இன பேதம் இல்லாமல் அனைத்துத் தரப்பு உழைக்கும் வர்க்க இளைஞர் களின் உள்ளத்திலும் தகிக்கும் நெருப்பு, தற்சமயம் ஆங்காங்கே குழுக்களாக சேர்ந்திருக்கும் வாலிபர்கள் அரசியல்ரீதியாக சரியாக வழிநடத்தப்படாததால் வன் முறையாக, கலவரமாக வெளிப்பட்டிருக்கிறது.

உண்மையில் இது முதலாளித்துவ ஊடகங்கள் சொல்வது போல கலவரம் அல்ல; பிரிட்டன் இளை ஞர்களின் எழுச்சி!

(எஸ்.பி.ராஜேந்திரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com