மக்கள் சீனத்தில்
பத்து நாட்கள்
பேரா.
ஆர்.சந்திரா
தோழர்
தாமஸ் ஐசக் தலைமையில்
கட்சி உறுப்பினர்கள்
10 பேரைக் கொண்ட
குழு ஜூலை 9-18 வரை
மக்கள் சீனத்திற்கு
சென்றது. மல்லாரெட்டி,
நாகராஜ், கோபிகாந்த்
பக்ஷி, சுஜன் சக்ரவர்த்தி,
குர்மேஷ் சிங்,
லலன் சௌத்ரி, ஜக்மதி
சங்வான், மம்தா
மற்றும் ஆர்.சந்திரா
ஆகியோரைக் கொண்ட
இக்குழு, சீனப்
பொருளாதாரம், சீர்தியருத்தங்
கள், மாற்றங்கள்,
சவால்கள் ஆகியவற்றைப்
பற்றி பல மட்டங்களில்
அங்கு பொறுப்பு
வகிப் பவர்களுடன்
உரையாடி, விவாதித்தது.
சோ சலிச நிர்மாணம்,
சந்தைப்பொருளாதாரம்
பற் றிய பல வினாக்களுக்கு
விடை கிட்டியது.
ஹீனான் (விவசாயம்),
ஷாங்காய் (தொழில்
வளர்ச்சி), பெய்ஜிங்
ஆகிய மூன்று முக்கிய
மான இடங்களுக்கு
பயணம் செய்தோம்.
சீனப்பயணம் ஹீனான்
மாநிலத்தில் துவங்கியது.
இம்மாநிலம் வேளாண்
வளர்ச் சிக்கு
முக்கியத்துவம்
வாய்ந்த மாநிலமாகும்.
அரிசி, ஆரஞ்சு
போன்ற பழங்கள்,
எண்ணெய் வித்துக்கள்
என இம்மாநிலம்,
வேளாண் உற் பத்தியில்
முன்னிலை வகிக்கிறது.
ஹீனான் மாநிலத்திலுள்ள
ஷாஷன் என்ற இடத்தில்
தான் சீன தேசத்தின்
மகத்தான தலைவர்
மாசேதுங் பிறந்தார்.
நீர்வளம் மற்றும்
வனப் பகுதி நிறைந்த
செழிப்பான பூமி
இது. ஹீனான் மாநில
மக்கள் அரசின்
வெளியுறவுத்துறை
அதிகாரியுடன்
எங்கள் சந்திப்பு
நடந்தது. கடந்த
ஐந்தாண்டுகளில்
ஹீனான் வெகு வேகமாக
முன்னேறியுள்ளது
என்பதை புள்ளி
விபரங்களுடன்
விளக்கினார்கள்.
இம்மாநிலத் தை
நவீன தொழில்நுட்பத்தின்
மூலம் மேலும் வளர்ச்சி
பெறச் செய்ய நிறைய
திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதைக்
குறிப்பிட்டார்கள்.
‘யுவன் லாங்பிங்
ஹைடெக் மையத்திற்கு’
அழைத்துச்சென்றார்கள்.
வேளாண் புரட்சி
யின் தந்தை என
அழைக்கப்படும்
‘லாங் பிங்` ஏராளமான
நெல் வகைகளை கண்டுபிடித்
துள்ளார். உயர்ரக
வீரிய விதைகளை
பயன் படுத்தி,
நெல் உற்பத்தியில்
சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
சமீபத்திய புள்ளிவிபரப்படி,
மொத்த நெல் சாகுபடி
பரப்பளவில் 57 சத
வீதம் இத்தகைய
நவீனரக விதைகள்
பயன் படுத்தப்படுகின்றது.
ஹெக்டேர் ஒன்றுக்கு
சராசரியாக 7.2 டன்
நெல் விளைச்சல்
கிடைக்கிறது. இதை
13.5 டன் என்று அதிகப்
படுத்துவதே தனது
கனவு என லாங்பிங்
கூறி யுள்ளார்.
நெல்லைத் தவிர
லாங்பிங், ஹைடெக்
மையம், சோளம், கோதுமை,
பழங்கள், காய்
கறிகள், கடுகு,
பருத்தி, மிளகு
போன்ற பொருட்களின்
உற்பத்தியிலும்
கவனம் செலுத்துகிறது.
இந்நிறுவனத்தின்
பொருட் களுக்கு
உள்நாட்டு, வெளிநாட்டு
சந்தைக ளில் நல்ல
கிராக்கி உள்ளது.
இதன் கிளை நிறுவனங்கள்
ஆசிய நாடுகளில்
செயல்படு கின்றன.
2010ல் எண்ணெய் வித்துக்களின்
உற்பத்தி 31 மில்லியன்
டன்னை தொட்டுவிட்
டது. 2006ம் ஆண்டிலிருந்து
உலக உணவுத் திட்டம்
மூலம் எந்த விதமான
இலவச உணவுத் பெறும்
உதவியையும் சீனா
பெறவில்லை என்பது
குறிப்பிடத்தக்
கது. அதுமட்டுமின்றி,
உலக உணவுத் திட்டத்திற்கு
உணவு அளித்து உதவும்
நிலைக்கு வளர்ந்துவிட்டது
என்பது பெருமைகொள்ளத்
தக்கது என்றனர்.
உணவு உற்பத்தியை
அதிகரிப்பது மட்டு
மின்றி, சீன அரசு
தரத்தை உறுதிப்படுத்தவும்
நிறைய நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்
ளது. எடுத்துக்காட்டாக,
அரிசியைப் பொறுத்
தவரை, வடிவம், ஈரப்பதம்,
நிறம், எடை என கிட்டத்தட்ட
11 அளவுகோல்களை
நிறைவு செய்தால்
மட்டுமே சந்தையில்
விற்பனைக்கு அனுமதி
வழங்கப்படுகிறது.
சீன தேசிய தரக்கட்டுப்பாடு
என்ற அமைப்புதான்
உரிமம் வழங்கும்
அதிகாரம் பெற்றது.
தரக்குறைவான விதைகள்-தானியங்கள்
உற்பத்தி செய்தால்,
அரசு தலையிட்டு
நடவடிக்கை எடுக்கிறது.
தனியார் கம்பெனிகள்
அனைத்து வேளாண்
பணிகளிலும் பெருமளவு
நுழைந்திருப்பதால்,
ஒவ்வொரு ரகத்திற்கும்
எண் தரப்பட்டு,
பதிவு செய்து,
உரிமம் வழங்கப்படுகிறது.
தரக்குறை வாக இருந்தால்,
உரிமம் ரத்து செய்யப்படு
கிறது. தனியார்
நிறுவனங்கள் வேளாண்
துறை யில் நுழைந்து,
உற்பத்தி செய்து,
லாபம் ஈட்ட வழிவகை
உண்டு. ஆனால் சட்டத்திட்டங்
களுக்கு உட்பட்டு
செயல்படாவிடில்
அரசு தலையிடுகிறது
என்பது குறிப்பிட
வேண்டிய அம்சமாகும்.
இதர நாடுகளுடன்
(எகிப்து, கயானா
மற்றும் பல) வேளாண்துறை
ஆராய்ச் சியில்
கூட்டு முயற்சிகளை
வரவேற்கின்ற னர்.
கம்பெனிக்கு சொந்தமான
ஆய்வுக்கூடங்
களில், ஆண், பெண்
என 500க்கும் மேற்பட்ட
தொழில்நுட்ப அறிஞர்கள்
அயராது பணியாற்
றுகின்றனர். மரபணு
உணவுப் பயிர் தடை
செய்யப்பட்டுள்ளது
என்றும் மரபணு
பயிர் தொடர்பான
ஆய்வுகள் நடக்கின்றன
என்றும் கூறினர்.
10.7.2012 அன்று சீன ஊரக
வளர்ச்சித் திட்டத்தின்
கீழ் ‘முன்மாதிரி’
கிராமம் என அழைக்கப்படும்
குவாங்மிங் கிராமத்திற்கு
சென்றோம். நவீன
வேளாண்மையையும்,
வளம்மிக்க விவசாயிகளையும்
கொண்ட கிரா மம்.
சீர்திருத்தங்கள்
ஏற்படுத்தியுள்ள
மாற்றங் களை கண்ணாடி
போல் பிரதிபலிக்கும்
கிரா மம் இது. இக்கிராமத்தின்
மக்கள் தொகை 3533 ஆகும்.
7.5 சதுர கி.மீ பரப்பளவைக்
கொண்டது. 3482 மூவில்
நெல் சாகுபடி,
400 மூ காடுகள், 900மூ
நீர்ப்பகுதி
(15மூ=1 ஹெக் டேர்) என
வளம் கொழிக்கும்
கிராமம். புதிய
சோஷலிஸ்ட் கிராமம்
என்றார்கள். கிராமத்
திலுள்ள நிலத்தை
சாகுபடி செய்யும்
உரிமை அம்மக்களுக்கு
உண்டு. கிராமத்திற்கு
இரு தலைவர்கள்
உண்டு. ஒருவர்
கட்சிக் கமிட்டி
(சீன கம்யூனிஸ்ட்
கட்சி) தலைவர்.
கட்சி உறுப்பினர்களால்
தேர்ந்தெடுக்கப்படுபவர்.
மற்றவர் கட்சி
உறுப்பினர் அல்லாதவர்களும்
சேர்ந்து, கிராமத்
தலைவராக தேர்ந்தெடுக்கப்
படுபவர். நிலம்
தொடர்பான முடிவுகள்
கூட் டாக எடுக்கப்படுகின்றன.
கிராம கமிட்டிகள்
முடிவு செய்து
நிலம் தனியார்
கம்பெனிக்கு குத்தகைக்கு
விடப்படு கிறது.
எந்த பயிர்சாகுபடி
செய்வது என தீர்மா
னித்து பயிரிடப்படுகிறது.
கம்பெனிக்கு குத்த
கைக்கு விடாமல்,
கூட்டாகவும் விவசாயம்
செய்து, கிடைக்கும்
லாபத்தை பங்கிட்டுக்
கொள்கிறார்கள்.
கம்பெனி குத்தகைக்கு
எடுக்கும் நிலத்தில்
கூலிக்கு வேலைசெய்ய
விரும்புவோர்
செய்யலாம். ஆனால்,
அவர்கள் எண்ணிக்கை
குறைவு என்றார்கள்.
நெல் சாகுபடி முற்றிலும்
இயந்திரமயமாகிவிட்டது.
வேளாண் பன்முகத்தன்மைக்கு
முக்கி யத்துவம்
அளிக்கப்படுகிறது.
சாங்ஷா நகரத் துடன்
நன்கு இணைக்கப்பட்டு,
வேளாண் சுற்றுலா
ஊக்குவிக்கப்படுகிறது.
ரசாயன உரம், பூச்சிக்கொல்லி
ஏதுமின்றி, பழங்கள்,
காய்கறிகள், தானியங்கள்
என அனைத்தும் இயற்கை
வேளாண் முறையில்
உற்பத்தியா கின்றன.
சுற்றுலாப் பயணிகள்
தங்களுக்கு வேண்டியவற்றை
வாங்கிச்செல்கின்றனர்.
எதுவும் வீணாக்கப்படாமல்,
மறு சுழற்சிக்கு
உட்படுகிறது. மழைநீர்
சேகரிக்கப்படுகிறது.
தாமரை ஒரு சாதாரணப்
பயிர் போல விளை
கிறது. விவசாயிகளின்
வாழ்க்கைத்தரம்
வெகுவாக முன்னேறியுள்ளது.
புதிய திட்டம்
அமலாகும் முன்பு,
நீர்ப்பாசன வசதி
நிரந்தரமாக இல்லை.
தற்போது, குழாய்கள்
அமைக்கப்பட்டு,
ஆண்டு முழுவதும்
சாகுபடிக்கு நீர்
உத்தரவா தம் செய்யப்பட்டுள்ளது.
எரிபொருளைப் பொறுத்தவரை,
சூரிய ஒளி மூலம்
மின்சாரம் கிடைக்கிறது.
ஒவ்வொரு வீட்டிலும்
அதற் கான ஏற்பாடுகள்
உள்ளன.
இந்த கிராமத்தில்
உள்ள காடுகள் கிராமம்
முழுவதற்கும்
சொந்தம். முதலில்
உற்பத்தி யை அதிகரிக்க,
வன நிலங்கள் உள்ளாட்சி
அமைப்பால் கையகப்படுத்தப்பட்டது.
தற் போது மீண்டும்
அப்பகுதிகளை வனப்பகுதி
களாக மாற்றி வருகின்றனர்.
பலவகை மரங் களை
அடர்த்தியாக நட்டு,
பராமரிக்கின்றனர்.
இந்த கிராமத்தின்
சூழல் மிகவும்
ரம்மியமாக இருப்
பதால், ஏராளமான
சுற்றுலாப் பயணிகள்
வருகின்றனர். கடந்த
மூன்று ஆண்டுகளில்
சுற்றுலா மூலமாக
மட்டும் கிராமத்திற்கு
1000 மில்லியன் யுவான்கள்
(1 யுவான் - 9 ரூபாய்)
வருவாய் கிட்டியது
என்றும் 28 நாடுகளி
லிருந்து சுற்றுலாப்
பயணிகள் வந்ததாகவும்
கூறினார்கள்.
எதிர்காலத்திட்டத்தில்
காற்றாலைகள் நிறைய
அமைத்து எரிசக்தியாக
பயன்படுத்து தல்,
இயற்கை வளங்களை
கவனத்துடன் பயன்படுத்துதல்,
சுற்றுச்சூழல்
பாதுகாப்பு போன்றவற்றிற்கு
முன்னுரிமை அளிக்கப்ப
டும். வீடுகளின்
கூரைகள் மீது புல்தரைகள்
அமைப்பது, ஹீனானின்
பாரம்பரியத் தொழி
லான பட்டாசுத்
தொழிலை ஊக்குவிப்பது
(பெய்ஜிங் ஒலிம்பிக்
நடந்த பொழுது ஹீனான்
வாண வேடிக்கைத்
தேவைகளை பூர்த்தி
செய்தது). கிராம
- நகர இணைப்புகளை
வலுப்படுத்துவது...
என சோஷலிச நிர்மா
ணத்தை நிறைவேற்றுவோம்
என்று கூறி னார்கள்.
அன்று மாலை ‘ஆரஞ்சு
தீவு’ க்குச் சென்
றோம். ஆரஞ்சு
உற்பத்திக்கு
பிரபலமான இடம்.
தீவின் முக்கிய
அடையாளம் 32 அடி
உயரமுள்ள மாவோ
சிலை. மாவோ அங்குள்ள
ஆற்றை நீந்தி கடப்பது
உண்டு என்றனர்.
மறுநாள் மாவோ
பிறந்த ஊரான ‘ஷாஷன்`
கிராமத்திற்கு
சென்றோம். வயது
வித்தியாச மின்றி
ஏராளமான மக்கள்
கைகளில் செங் கொடியை
பிடித்துக்கொண்டு
மாவோ பிறந்து,
வளர்ந்த இடத்தை
ஆர்வத்துடன் கண்டு
களித்தனர். பசுமையான
கிராமம். சுற்றிலும்
மலைகளும், பச்சை
பசேலென்ற வயல்வெளி
களும் ரம்மியமாக
இருந்தன. அன்று
மாலை மிகவும் பழமைவாய்ந்த
ஹீனான் பல்கலைக்
கழகத்திற்கு சென்றோம்.
கன்பியூசியஸ்
கோவில் அதற்குள்ளேயே
இருந்தது. ஏராள
மான மூங்கில் மரங்கள்
சீனாவில் மூங்கில்
கள் ஒழுக்கத்தையும்
உண்மையையும் வெளிப்படுத்துகிறதென
கருதுகிறார்கள்.
சிவப்பு-மஞ்சள்
நிறம் அங்கு பிரதானமாக
இருந்ததைப் பற்றி
கேட்டபொழுது, அவை
மன்னர்கள் பயன்படுத்தும்
நிறமென்றும் சாதா
ரண மக்கள் இந்த
நிறங்களை பயன்படுத்த
மன்னர் காலத்தில்
தடை இருந்ததாக
கூறினார்கள். பல்கலைக்கழகத்தை
பார்த்து விட்டு
ஷாங்காய் நகருக்கு
பயணமானோம்.
ஷாங்காய் பயணம்
11.7.12 அன்று இரவு ஷாங்காயில்
உள்ள தேசிய கட்சி
பள்ளியைச் சென்றடைந்தோம்.
பல நாடுகளைச் சேர்ந்தோர்
அங்கு வந்து சீன
கம்யூனிஸ்ட் கட்சி
தொடர்பானவற்றை
கற் றுக்கொள்கின்றனர்.
கம்யூனிஸ்ட் கட்சிகள்
மட்டுமின்றி, உயர்
அதிகாரிகள், பன்னாட்டு
நிறுவனங்களின்
இயக்குநர்கள்
உட்பட நிர்வாகம்
தொடர்பானவற்றில்
பயிற்சி அளிக்
கப்படுகிறது. நான்கு
நாட்களும் கட்சிப்
பள்ளி யிலேயே தங்கினோம்.
சீனா பற்றிய பொது
வான பார்வை, சீனாவில்
உள்ள சிவில் சர்
வீஸ் முறை, கட்சி
உறுப்பினர்களுக்கு
கல்வி அளிக்கும்
விதம் ஆகியவற்றைப்
பற்றி பல் கலைக்கழக
பேராசிரியர்கள்
வகுப் பெடுத் தனர்.
கேள்வி-பதில் நேரம்
சுவாரசியமாக இருந்தது.
கட்சிப் பள்ளி
இயக்குநருடன்
சந்திப்பு ஏற்பாடு
செய்திருந்தனர்.
அன்று மாலை அருங்காட்சியகம்
சென் றோம். கட்சியின்
முதல் மாநாடு நடைபெற்ற
இடத்தைப் பார்த்தோம்.
மாநாடு நடந்து
கொண்டிருந்த பொழுது,
பிரெஞ்சு ராணுவ
தாக்குதலைத் தொடர்ந்து
தப்பித்து ஓடி,
ஒரு படகில் ஏறி,
மாநாட்டு நிகழ்வுகள்
நடந்ததை நினைவு
கூர்ந்த பொழுது,
மெய் சிலிர்த்தது.
தலைவர் மாவோ மற்றும்
இதர தலைவர்கள்
கூடி பேசி முடிவெடுத்த
இடம்... (13 கட்சி உறுப்பினர்களை
பிரதிபலிக்கும்
வண்ணம் 13 நாற்காலிகள்
இருந்தன.) சிபிசி
பற்றி நாம் படித்தவற்றை
நினைவுகூர உதவியது.
23.7.1921-30.7.1921 வரை கட்சி காங்கிரஸ்
நடைபெற்றது. கடைசி
நாள் நிகழ்வு மட்டும்
படகில் நடந்தது.
மாநாடு நடந்த இடம்
1920ல் கட்டப்பட்டது.
ஒரு தோழரின் வீடு.
இன்று அது மியூசியமாக
மாற்றப்பட்டு,
சீன கட்சி உருவாகி,
வளர்ந்ததை கண்முன்
கொண்டு வந்து நிறுத்துகிறது.
மிகவும் அழகான
வரை படங்கள். சீனாவை
ரஷ்யா (கரடி), ஜப்பான்
(சூரியன்), பிரான்ஸ்
(தவளை), இங்கிலாந்து
(புலி) என சுற்றி
வளைத்ததை தத்ரூபமாக
வரைந்துள்ளனர்.
1950ல் துவக்கப்பட்ட
‘ஹெவன்லி கிங்டம்
இயக்கம்` விவசாயிகள்
கிளர்ச்சி (14 ஆண்டுகள்
நடந்தது), 1911 சன்யாட்
சென் புரட்சி...
என சீன வரலாறு
கண்முன் விரிகிறது.
சென் துக்சு (1-5வது
கட்சி மாநாடு முடிய
சி.பி.சியின் பொதுச்
செயலாளர்) மற்றும்
பஸாவோ (38வயதில்
கொல்லப்பட்டார்)
இணைந்து பெய்ஜிங்கில்
கட்சி கிளையைத்
துவங்கியுள்ளனர்.
மே 4, மாணவர் போராட்டம்
மற்றும் இதர போராட்
டங்கள் வரைபடங்கள்,
புகைப்படங்கள்
மூலம் விளக்கப்பட்டுள்ளன.
அருங்காட்சியக
‘விசிட்` மறக்க
இயலாத ஒன்று.
மறுநாளும், கட்சிப்
பள்ளியில் சீன
கட்சி கட்டப்பட்ட
விதம், அடித்தள
நிர்வாகம், சீனாவில்
சமூக அமைப்புகள்
பற்றிய வகுப்பு
களும் அதைத்தொடர்ந்து
விவாதங்களும்
நடந்தன. மதியம்
டாங்க்யோ வீதியிலுள்ள
கட்சிக்கிளை செயல்படுவதை
காணச்சென் றோம்.
குழந்தைகள், இளைஞர்கள்,
முதியோர் என அனைவருக்கும்
அவரவர் பங்கேற்கும்
வண்ணம் நிகழ்ச்சிகள்
அமைக்கப்பட்டதைக்
கண்டோம். இரவு
ஹீவாங் பூ ஆற்றில்
படகு சவாரி செய்தோம்.
பழைய ஷாங்காய்
- புதிய ஷாங்காய்
இரண்டு பகுதிகளையும்
பிரிக்கும் இந்த
ஆற்றில் சவாரி
செய்த பொழுது வண்
ணமயமான ஷாங்காயை
இரவில் காண முடிந்தது.
. . . . . . . . . . (நாளை முடியும்)