அத்தனை
சினிமாக்களும் அரசியல் சினிமாக்கள்
தான்
(முனைவர் சு.இரவிக்குமார்)
அரசியல் சினிமா
என்ற இரண்டு
வார்த்தை
களைக் கேட்கும் போது நமது
மூளைக்குள்
சட்டென்று
எம்.ஜி.ஆர்.,
என்.டி.ஆர்.,
ஜெய லலிதா,
விஜயகாந்த்
என்று உள்ளூர் சினிமா, அரசியல் பிரபலங்கள்
முதல் கலிபோர்னியாவின்
கவர்னராகத்
தேர்ந் தெடுக்கப்பட்ட
அர்னால்டு
ஸ்வாஸ்நேக்
கர் வரை
நம் கண்
முன் விரிவார்கள்.
அரசியல் என்பது
அதிகாரத்துக்கான
போட்டி என்பது அரசியல் வல்லுநர்க
ளின் கருத்து.
அரசென்பது ஒருங்குபடுத்
தப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட
வன் முறை
என்பார் தோழர் லெனின்.
துப்பாக் கிக் குழலிலிருந்து
அதிகாரம்
பிறக்கிறது
என்றார் தோழர் மாவோ.
அரசியல் என்பது
மனித சமூகம்
வர்க்கங்களாகப்
பிளவுண்ட
காலத்திலிருந்து
தொடருகின்ற
ஒரு சமூ
கவியல் யதார்த்தமாகும்.
சமூகத்தின்
வன்மையுள்ள
ஒரு பிரிவினர்,
ஒருங்கு திரண்டு, திரட்டப்பட்டு,
முறைப்படுத்தப்
பட்டு, சட்ட திட்டங்கள்
வகுக்கப்பட்டு,
சட்டமியற்றுகின்ற
ஏற்பாடுகள்,
சட்டத் தைப் பாதுகாக்கிற
ஏற்பாடுகள்,
சட்டத்தை
நிர்வகிக்கின்ற
ஏற்பாடுகள்
என்று பலவி தமாகக்
கிளைபரப்பி
வளர்ந்துள்ள
ஆலம ரம்
அரசு. சட்டமன்றம்,
பாராளுமன்றம்,
நீதி மன்றம்,
காவல்துறை,
இராணுவம்,
சிறைச் சாலை, ஆயுதக்
குவியல், வரி வசூல்,
தேர் தல்,
பிரதிநிதிகள்
என்று அரசு அதிகாரத்
தின் குவி
மையங்கள்
பலவிதமாகப்
பரந்து கிடக்கின்றன.
அரசு அதிகாரமே
இறுதியில்
எதையும் தீர்மானிப்பதாக
நடைமுறை யில் அமைந்துள்ளது.
மேலும் ஆளுகின்ற வர்க்கத்தின்
தேவைகளைச்
சரிவர உணர்ந்து, கச்சிதமாகச்
சட்டங்கள்
இயற்றி, அதற்கான ஒப்புதல் மனோவியலை உருவாக்கி,
ஆளும் வர்க்கத்தினருக்கான
சேவைக்கருவியாக
எந்த சமூகத்தின்
அரசுகளும்
விதி விலக்கின்றிச்
செயல்படு
கின்றன.
அடிமைச் சமூகக் காலத்திலும்
சரி, நிலப்பிர
புத்துவ, முதலாளித்துவ,
சோசலிச சமூகத்திலும்
அரசின் செயல்பாடென்பது,
ஆளுகின்ற
வர்க்கத்
தின் அதிகாரத்தை
நிலைநிறுத்துவதாகவே
உள் ளது.
அத்தகைய ஆளும் வர்க்கத்தின்
அதிகாரத்தை
நிலைநிறுத்துகின்ற
செயலே அரசியல் என்பதன் முழுமையான
சாரமாக உள்ளது.
ஆளும் வர்க்கம் எப்போதும்
தன்னை சட்டங் களாலும் ஆயுதங்களாலும்
மட்டுமே நிலைநிறுத்
திக் கொள்வதில்லை,
அது கலை
இலக்கியப்
பண் பாட்டுச்
செயல்களின்
வழியாகவும்
தன்னை நிலைநிறுத்திக்
கொள்கின்றது.
கிராம்சியின் வார்த்
தைகளில் சொல்வதானால்
அது தான்
ஆளுவ தற்கான
ஒப்புதலை
தான் ஆளப்படுவதற்கான
ஒப்புதலை
வெகுமக்களிடமிருந்து
பெற்றுக்
கொள்கின்றது.
கலையும் விஞ்ஞானமும்
இணைந்து பெற் றெடுத்த
கலைத் தொழிலான சினிமா வேறெந்தக்
காலத்தின்
மக்களையும்
விட, தான்
தோன்றிய காலத்திலிருந்து
ஆகப்பரவலான
வெகுமக்களைச்
சென்றடைகின்ற
ஒரு கருத்தியல்
ஊடகமாகத்
திகழ்கின்றது.
சினிமா முதலாளித்துவக்
காலத் தின் உற்பத்தி.
அதே நேரம்,
சினிமா அதற்கு முன் னிருந்த
மற்ற கலைகள்
எல்லாவற்றையும்
விட மனித
சமூகத்தின்
ஒட்டு மொத்தத்தையும்
கவ் விப்
பிடிக்கின்ற
கருத்தியல்
ஊடகமாகப்
பிறந்த சில காலங்களிலேயே
தன்னை நிலைநிறுத்திக்
கொண்டது. மனித குலத்தின்
உலகளாவிய
கருத்தியல்
ஆயுதமாகவும்,
உலகளாவிய
தொழில் நிகழ்வாகவும்
நிகழ்ந்து
கொண்டிருக்கின்ற
மாபெ ரும்
கலை அற்புதமாகத்
திகழ்கின்றது.
ஒவ்வொரு தேசத்தின்
அரசுகளும்
சினி மாவை
உற்று நோக்குகின்றன.
சினிமாவைத் தன் வயமாக்க முயல்கின்றன.
தணிக்கைச் சட்டங்கள்
வகுத்துள்ளன.
நம் பார்வைக்கு
வருகின்ற
கிட்டத் தட்ட அத்தனை
சினிமாக்களும்
அரசுகளின்
சட் டங்களின்
வழியாக வடிகட்டப்பட்டு
வருகின்ற
வையே. அரசின் அனுமதியின்றி
எந்தந் திரையரங் கிலும் படங்களைத்
திரையிட முடியாது.
அதற் கான விளம்பரப்
போஸ்டர்கள்
ஒட்ட முடியாது.
அர சுக்குச்
சினிமா வரி வருவாய்
பெற்றுத்
தருகின்ற
ஒரு வழிமுறையாகவும்
உள்ளது. சினிமாக்களை இன்று வரை அரசு
கேளிக்கைப்
பட்டியலிலேயே
வைத்துள்ளது.
கேளிக்கை வரியே அதற்கு விதிக் கப்படுகின்றது.
இந்த நேரத்தில்
வரலாற்றின்
பக்கங்கள்
சில வற்றை
நினைவுபடுத்திக்
கொள்வது சுவாரசியமா
னது. உலகின் புகழ் பெற்ற இரண்டு
சினிமாத்
துறையைச்
சாராத எதிர்நிலை
மனிதர்கள்,
சினி மாவின்
முக்கியத்துவத்தை
உணர்ந்து
அதனைத் தேசஉடமை ஆக்கினார்கள்.
ஒருவர் முதல் உலக யுத்தக்
காலத்தில்
உலகின் புதுமையாய்
உருவான சோவியத் நாட்டின் மாபெரும் மக்கள் புரட்சிகரத்
தலைவரான தோழர் விளாடிமிர்
இலியிச் லெனின். மற்றொருவர், இரண்டாம்
உலக யுத்தக்
காலத்தில்
உலகை அஞ்சி
நடுங்க வைத்த மனித
குலத்தின்
அவமானச் சின்னங்களுள்
ஒருவராகிய
அடால்ப் ஹிட்லர். லெனின் புரட்சிகர
சினிமாவுக்கான
தளத்தை புரட்சிகர
மக்கள் அரசாங்கத்தின்
மூலம் அமைத்தார்.
வலதுசாரித்தனமான நாஜி சினிமாக் களுக்கான தளத்தை ஹிட்லர் உருவாக்கினார்.
சினிமாவும் இன்ன பிற கலைகளும்
இருபுறமும்
கூரான கத்தி போன்றவையே.
பயன்படுத்துபவ ரின் நோக்கங்களே
அதன் உள்ளடக்கத்தையும்
வடிவத்தையும்
அரசியலையும்
தீர்மானிக்கின்றன.
ஆனால், வரலாறு
ஆள்பவரின்
வரலாறு மட்டு மல்ல,
ஆளப்படுவோரின்
வரலாறும்
தான். ஆள்ப வரால் நெருக்குறுபவர்கள்,
அவர்களின்
அதிகாரத்
தால் நசுக்குறுகின்றவர்கள்,
ஆளுகின்ற
அதிகா ரத்தை மாற்றி
அமைக்கின்ற
எதிர் அரசியலை முன்னெடுக்கிறார்கள்.
ஆளுகின்ற அரசுகளின்
இடைவெளிகளில்
தங்களுக்குக்
கிடைக்கின்ற
இயங்கு தளங்களிலிருந்து
தங்களது செயல்பாட்
டைத் தொடருகின்றார்கள்.
ஆளுகின்ற அரசின்
வரம்புகளுக்குள்ளேயே
நின்று கொண்டிருந்தா
லும் அதனை
எதிர்த்த
செயல்பாட்டின்
துவக்கப்
புள்ளிகளை
அதற்குள்ளிருந்தே
துவக்குகிறார்
கள். தமக்குச் சாத்தியப்பட்ட
ஊடக, தகவல்
பரப்பு வழிகளிலெல்லாம்
தம் அதிகாரத்துக்கான
எதிர் அரசியலை முன்னெடுக்கிறார்கள்.
அந்த வகை யில் சினிமாக்கலையையும்
தங்கள் கைகளில் ஏந்துகின்றார்கள்.
இவ்வாறாகத்தான் எதிர் அரசி யல்
சினிமாக்கள்
தோற்றம் கொண்டன. எதிர் அரசியல்
எனும் போது அதனைப்
புரட்சிகரமான
அர்த்தத்துடன்,
குறிப்பாகப்
பொதுவுடமை
சார்ந்த அல்லது இடதுசாரிப்
புரட்சிகர
அர்த்தத்துடன்
மட்டுமே தொடர்புபடுத்திப்
பார்க்கிற
உளவியல் பொதுவில் உள்ளது. எதிர் அரசியலில்
வலதுசா ரித் தன்மையும்
உண்டு. எனவே எதிர் அரசியலை யும் நாம்
வகைபிரிக்காமல்
பார்த்தால்
மாற்று சினிமா என்பதைக் கோளாறான கண்ணோட்டத்
துடனேயே காண நேரிடும்.
வலது சாரிகள்
வலது மாற்றத்துக்காகப்
போராடுகிறார்கள்.
இடதுசாரிகள் இடது மாற்றத்துக்காகப்
போராடுகிறார்கள்.
ஆனால் பொதுவில் அதிகாரத்துக்கான
போராட் டங்களை முன்னெடுக்கும்
அல்லது அதைத் தடுக்க
நினைக்கும்
அத்தனை செயல்பாடுகளும்
அரசியல் என்கிற ஒற்றை வார்த்தையிலே
புரிந்து
கொள்ளப்படுகின்றன.
பிற சினிமாக்களுக்கும்
அரசியல் சினிமாக்க
ளுக்கும்
என்ன வித்தியாசம்?
என்கிற கேள்வி
எழுவது இயல்பு. இப்படித்தான் புனே திரைப்படக்
கல்லூரியில்
திரைப்படத்
திறனறிதல்
வகுப்புக்
குச் சென்றிருந்த
சமயத்தில்
எனது பேராசிரியர்,
மறைந்த சதீஷ் பகதூரிடம்
கேட்டேன்.
அவர் மிக அழகாக, சாராம்சத்தில்
அத்தனை சினிமாக்க
ளுமே அரசியல்
சினிமாக்கள்
தான். அவை ஆளு கின்ற அரசியலைப்
பற்றிப் பேசவிடாத, அல்லது அவற்றைப் பேசாமல் திசை திருப்புகின்ற
சினி மாக்கள்.
மற்றொரு வகை அரசியலை நேரடியாகப்
பேசுகின்ற
சினிமாக்கள்
என்று சொன்னார்.
பொதுவாக அரசியல் சினிமா என்கிற போது, நமது
வெகுஜனப்
படங்களில்
வரும் வெள்ளை வேட்டி, வெள்ளைச்சட்டை,
வெள்ளை ஜிப்பா, கதர்க்குல்லாய்
அரசியல் வாதிகள் நினைவுக்கு
வருவார்கள்.
அவர்கள், ஆசைநாயகிகளை
வைத் திருத்தல்,
ஆசைப்பட்ட
பெண்களை வன்புணர்ச்சி
செய்தல், சில கொலைகள்
செய்தல், ரவுடிகளோடு
கூட்டணி வைத்திருத்தல்,
காவல்துறையைத்
தவறாகப் பயன்படுத்துதல்
எல்லாம் செய்து தம் செல்வ
வளத்தை விருத்தி செய்கிறவர்களாயிருப்
பார்கள். குறிப்பாகக் கதாநாயகனின்
குடும்பத்திற்கு
அளப்பரிய
பாதிப்பை
உண்டாக்கி
இருப்பார்கள்.
அதனை எதிர்த்துக்
கதாநாயகன்,
தன் புஜ
பல பராக்கிரமத்தைக்
காட்டி, அரசியல் வாதி வில்ல
னின் அடியாட்களைத்
துவம்சம்
செய்து, கடைசி யில்
தன் காதலியாக
உள்ள வில்லனின்
மகளையே கைப்பிடிப்பார்.
அல்லது நவீன காலத்தின்
சகுனி படக் கதாநாயகன்
மாதிரி புத்திசாலித்
தனமாகக் காய் நகர்த்தி,
அதோடு காதலியோடு
கானங்கள்
பாடி, வில்லன்
அரசியல் வாதியின் செல்வாக்கை
முறியடித்து,
தன் சொந்த
வீட்டைக்
காப்பாற்றுவார்.
அதே நேரம்
உலகளாவிய
அளவில் புகழ் பெற்ற
ஜேம்ஸ் பாண்ட் படங்கள் தம் எதிர்
நிலை நாயகர்களாக
வரித்துக்
கொண்டவை முதலாளித்
துவ அரசின்
இருத்தலுக்குச்
சவாலாக விளங்கிய சோசலிச நாடுகளைப்
பிரதிநிதித்துவப்படுத்தும்
எதிர் நாயகர்கள்.
புகழ்பெற்ற ரோம்போ
படங்களின்
உள்ளார்ந்த
அரசியல் புகழ்பெற்றதாகும்.
ஆனால், உலகளாவிய
அளவில் அரசியல் சினிமாக்கள்
வேறு தளத்தில்
இயங்குகின்றன.
அவற்றில்,
அரசியல் சார்ந்தவர்களின்
வாழ்க்கை
வரலாற்றுப்
படங்கள், அரசியல் நிகழ்வுகளை
மையப்படுத்திய
படங்கள், அரசியல் சம்பவங்க ளைச் சித்தரித்ததனால்
அதன் சார்பியல்
தன்மை யிலிருந்து
வெளிப்படும்
சமூகக் கொந்தளிப்பு
களை ஏற்படுத்திய
படங்கள், வெகுஜனக் கேளிக் கைத் தனத்திலும்
பட்டவர்த்தனமாக
உலக அரசி
யலை உள்ளடக்கிய
படங்கள், யுத்த காலப்
படங் கள்,
அரசியல் அமைப்பைக்
கேள்விக்குள்ளாக்
கிய படங்கள்
என்று பலவகையான அரசியல் படங்கள் சினிமாவின்
வரலாறு நெடுகக் காணக் கிடைக்கின்றன.
இங்கிலாந்து,
அமெரிக்கா,
பிரான்ஸ்,
இத்தாலிய,
ஜெர்மனி, ருஷ்யா, ஜப்பான், சீனா, கியூபா,
கொரியா, ஈரான், லத்தீன்
அமெரிக்கா,
ஆஸ்திரேலியா,
இந்தியா என்று பலவகையான
நாடுகளின்
திரையுலகப்
படைப்பாளிகளும்
அற் புதமான
அரசியல் கருத்தியல்களை
உள்ளடக் கிய சினிமாக்களை
உலகத்துக்குத்
தந்துள்ளார்
கள். அவற்றைப் பற்றிய
அறிமுகம்
செய்கின்ற
தோடு, நமக்கான
அரசியலை உள்ளடக்கிய
சினி மாக்களுக்கான
கருத்தியல்
தேடல்களையும்,
இயங்கியல்
தேடல்களையும்
தொடர்வதே
இத் தொடரின்
நோக்கம்.
(தொடரும்)